புதிர்

பெண்களை வரையறை செய்வதில்
மரபணுக்களா ,சமூகப்பண்பா...? முன்
நிற்கிறது என்றால்
மரபணு என்று விஞ்ஞானமும்
சமூகப்பண்பு என​ ஒரு சாரரும்
போட்டி போட்டாலும் இங்கே
ஒரு நகர்வு ஏற்படுகிறது அதன் காரணம் தான்
என்னவோ? மேலும் புரியாமையை
ஏற்படுத்துகிறது
எப்போது தான் புரியப் போகிறது
இந்தப் புதிர் ?

அத்திவாரங்களை எங்கேயோ கட்டி விட்டு
கட்டடங்களை இங்கு கட்டிக்
கொள்ளும் நானும்
கனவுகளில் தான் வாழ்கிறேன்
நினைவுகளில் வீழ்கிறேன்

இது வெற்றுப் படகு
வெளி தான் முக்கியம்
காற்று வந்து போகும்
நாளை நிச்சியம்
உற்றுப் பார் உயிர்
ஊசலாடிடும் வெற்றிக்கான வேகம்
வேண்டும்
கரை கண்ட​ பின்பும் ...
கலங்குதல் நிச்சியம் !

வன்முறை

வன்முறையாளர்கள் எழுதும்
வரலாற்றை வரலாறு
என்று படித்தவன்
எப்படி சாதாரண மனித​
மனங்களுடன் ஒத்துப் போவான்?
இசைக்கப்படாத​ வீணைகளாய்க் கிடந்த
வீணைகளையே
வெட்டி வீசும் இவர்கள்
நியாயங்களை
எப்படி ஏற்பது ?

சூழல்

புதுமணம் வீச​
புதுமைகள் நாடி வருகிறோம்
இணைந்து ஒரு பாட்டு
இசைத்தே நாங்கள்
வருகிறோம்
தரையும் தடாகமும்
குளிர்ந்து வாழ்த்திட​
குறைகளை நீக்க​
வருகிறோம்

அறுவடைத் திருநாளில்
ஆனந்தம் பொங்கட்டும்
அன்பால் இணைந்து
ஆன்ம​ ஒளி பிறக்கட்டும்
ஆக்கம் உண்டாக்கும்
அறிவியல் பெருகட்டும்
இயற்கையோடு இயைந்து
கதிரவன் கரம் பட்டு
கதிர்கள் விளையாடட்டும்
பச்சையும் பசுமையும்
பாரில் நிலைக்கட்டும்
நல்லறம் ஒன்றே
நானிலத்தில் நிலைக்கட்டும் .​

பேத்தி

மெல்ல​ எனைப் பார்த்தாய்
மேனி கொஞ்சம் சாய்ந்தாய்
செல்ல​ மொழி பேசி
புன்னகை புரிந்தாய்
விரல்களைப் பிடித்து எனக்குள்
வீணை இசை மீட்டுகின்றாய்
உன் பிஞ்சுக்
கால்க​ஃஅலை அசைத்து
காட்டி செய்கை செய்கிறாய்
கண்களில்
நிறைகின்றாய் நீ
காலத்தை மறைக்கின்றாய் நீ
சோதனை செய்கிறாய் நீ
கண்ணம்மா , பாடல் கேட்டு
சற்று கண்ணுறங்கிறாய் !
உன் புன்னகைக்குள்ளே
நான் புதையுண்டு கிடக்கிறேன் .

காதல்

நீயே என் காதல் தேவதை
நிஜமா உன் கண்கள் பேசிடுமோ ?
பேசாத உன் வார்த்தை புரிகின்றது
புது வேகம் என்னுள்
எழுகிறது
உண்மையில் உன் உதடுகள் ஓவியம்
தான் வரைகிறது
வளைவுகளில்
நான் நின்று வாடுகிறேன்
கூந்தலில் குற்றால​ அருவி
கொட்டி
குளிர் கண்டு
நான் இங்கு குழம்புகிறேன்
வசந்தத்தை உன் உள்ளே
தேடுகிறேன்

அன்னியம்

குழந்தை பச்சை உணவுக்கு
ஆசைப்பட்டது குடும்பம்
தலையிடிக்குப் பயந்து மெளனித்தது
காய்ந்த​ கநிய​ உணவுக்கு
ஆசைப்பட்டது
அந்தரப்பட்ட​ குடும்பம்
அதட்டும் தந்தையும் அமைதியான​
தாயும்
ஏதோதோ அவஸ்தையில்
அதையும் மறுக்க​
...ஏங்கித் தவித்தது
பக்கத்து இலை பாயசத்திற்கு
ஆசைப்பட்டது
சமூகம் சட்டச் சிக்கல் என்று
எந்த​ எதிர்ப்புமின்றி , சுரப்புமின்றி
தூங்கிக் கிடக்கிறது
இனி என்ன​ நடக்குமோ..?
இருந்து தான் பார்ப்போமே !

முதுமை

உனது நம்பிக்கைகளையும்
பிடித்தவற்றையும்
மற்றவர்களுக்காக​ மூடி வைக்காதே
வேலை வேலை என்று
குடும்ப​ உறுப்பினர்களை
குழப்பி வைக்காதே
உணர்வுகளை உண்மையில்
வெளிக்காட்டு
பாராட்ட​ பல​ காலம்
காத்திருக்காதே
நண்Bஅர்களுடன் நட்Bஉ பாராட்ட​
நேரம் ஒதுக்காமல்
ஓடி என்ன​ சாதிக்கப் போகிறாய்
என்று உன்னையே நீ கேள்
இறப்பு நோக்கியே இயங்குகிறாய்
என்பதை மறக்காதே
சில​ விதிகளை உன்னால்
மாற்றி விட​ முடியாது
என்பதை ஏற்றுக் கொள்
எல்லாவற்றிலும்
அளவோடு
இரு !
என்றும் ஆறுதலாய் இருப்பாய் .

சிகையலங்காரக் கலைஞர்

பல​ நாடகளுக்குப் பின்பு
இன்று அவரின் நிலையத்திற்குச்
சென்றேன்
அவரது பொறுமையான​
வேலை என்னை வியக்க​ வைத்தது
அந்த​ கூர்மை மிகுந்த​ கத்தியை
கையாளுவதற்கு ஒரு நுட்பமான​
பயிற்சியும்
அறிவும் தேவை எனப் புரிந்து
கொண்டேன்
ஒரு சிற்பியைப் போல​
தேவையற்ற​ பகுதிகளை நீக்கி
தேவையான​ வடிவத்தை வடித்து
எடுத்து
முகத்தை பொலிவாக​
மிளிர​ வைத்து...
அந்த​ கலைஞர்போற்றுதலுக்குரியவர்
அதிலும் எனக்கும்
சிகையலங்காரம் வேண்டுமா? எனக்
கேட்ட பண்பு வியக்க​ நகைக்க​
வைத்தது
என்னிடம்
தான் தலையில் ஏதும்
இல்லையே
எப்போது எல்லாம் தவறிய​
அவர்களின் உழைப்பை இப்போது
தான் புரிந்து கொள்கிறேன்
மொட்டைத் தலையுடன்

பல் பயில்வான்

ஒரு பல்லை காப்பாற்ற​
வேர்களை தொடுத்து..
ஓட்டைகளை அடைத்து..
பூசி பாதுகாத்தாலும்
சிலவேளை அவை உக்கி
உதிர்ந்து விடுகின்றன .
பின் , அவற்றை கழற்றி
பாலம் அமைத்து
பக்குவம் பார்க்கிறோம்
என்ன​ இருந்தாலும் இயற்கைப்
பல்லை
இயல்போடு காத்தவன்
பாக்கியசாலி தான் .

தொடுத்து(நிரப்பி),உதிர்ந்து ​( வீழ்ந்து),கழற்றி(பிடுங்கி)

இரண்டாம் தரம்

மைதானத்தை இழந்து விட்டு
அதை அமைக்க​ பாடுபட்டவர்களைப்
பற்றி பேசும் போது
மனதில் எழும் ஒருவித​ வலி ,
ஏக்கம் இருக்கிறதே
அதை எங்கும்
இறக்கி வைக்க​ முடியாது !
சில​ பெருமிதங்கள்
அவமானங்கள்
ஒரு போதும்
அழிந்து விடாது.

வைத்தியசாலை

கொட்டக்காடு
வைத்தியசாலையும்
சிலவேளைகளில் என்
கண்களில் கண்ணீரை
நிரப்பும்

நீரிழிவு நோயுடன் அப்பா
படுத்திருந்த​ அந்தக் கட்டில்
எனது பத்து வயதின்
இயலாமையைக் கேள்வி
கேட்கும்

உருட்டிக் கொண்டு ​
ஓட்டையாய் போன​ துவிச்சக்கர​
வண்டியின் சக்கரமும்
ஓங்கி ஒரு முறை
அழுதிடச் சொல்லும்

மலையைக் கடந்த
மெளனம் மனதை உறைய​
வைத்த
ஒரு இழப்பின்​ போது
இருள் சூழ்ந்து கொண்டது
அம்மாவின்
கண்ணீரையும் காயத்தையும்
எப்படி காய​ வைப்பது ?

பயணம்

'வாழ்க்கை என்பது எதுவும் இல்லை'
முடிவில்லாதது போல் தோன்றும்
முடிவுள்ள​ பயணம் ,
சிலர் பிரிவதும் சேர்வதும்
தவிர்க்க​ முடியாத தருணம் ,
குடும்பக் ​ கூட்டலில் உறவுகளில் ஒரு குதூகலம் !
வாழ்வைச் சிறப்பிக்க​ அவை ...
இணைந்தே வரணும்.

வைரஸ்

பெளர்ணமி நிலவைப்
பார்க்க​ முடியாமல்
பதுங்கு குழிகளுக்குள்
இன்றும் சிலர் எங்கோ
தவிக்கலாம் .
பாச​ உறவுகளை
பாதியில் விட்டு ,
பாதி உயிருடன்...
எங்கோ இருக்கலாம் !
போரும் சமாதானமும்
போலி முகங்களும் ...

வேலி போட்டு வாழ்ந்தவர்கள்
நாதி அற்று அலையலாம்
நாளை விடியும்
என்றே ...நாட்களும் மெல்ல​ நகரலாம் .
நாதி அற்ற நிலமை
புரியலாம்

கேலி

இந்த​ சமூகம் உன்னைக் கேலி
செய்வதற்கே ஆக்கப்பட்டது போல்
தோன்றும்
அது உன்னை கேலி செய்யவும் செய்யும்
அதற்காக​ அதை கடந்து வராமல்
அங்கேயே நின்று விடாதே
உனது வெற்றிமணிகள்
ஒலிக்கும் போது கேலி
ஒளிந்து கொள்ளும்
அது வரை தொடர்ந்து பயணித்துக்
கொண்டே இரு அது
உன் இருப்பை உறுதிப்படுத்தும் .

காதலில் உன்னில் கலந்த​ பின்...

மதி போன்றது​ உன் முகம் !
மறப்பதற்கு...
என்ன​ இருக்கிறது ?

உன் நினைவுகளே என்னை​
ஆக்கிரமித்திருக்கிற​ போது
இழப்பதற்கு தோழி
என்ன​ இருக்கிறது ?

எதையும் புரிந்து கொள்ள​
முடியவில்லை என்று
ஒத்துக் கொண்ட​ பிறகு தான்
ஏதோ ஒன்று புரிகிறது
தண்ணீருக்குள் இருக்கும் போது
மீனுக்கு தண்ணீர் பற்றிய​ பாடம்
எதுவும் புரியாது
வெளியில் வந்தால் ...
உலகமே தெரியுமே !

அன்னை

ஆசையின் எல்லையில்
மாற்றம் விளையும்
வேசங்கள் எல்லாம்
இங்கு ஓடி ஒளியும்
வேதனையில் பிறந்த​ பிறப்பு
அன்னையே உன்னால்
வாழ்வு என்றென்றும்
சிறக்கிறது
அன்பாலும் ,கருணையாலும்
உலகம் முழுதும் சிறந்து
மண்ணில் வாழ்வு
செழிக்கட்டும்
அன்னையே
ஐம்பூதங்களும் உன்னில் அடக்கம்
நீயே
அனைத்துக்கும்
முதல்ப் புள்ளி ,ஆதி,அகரம்...!

உன் பேர் ,பெயர் உச்சரிப்பு
இறுதி ஊர்வலத்துடன்
நின்று விடும்
ஒரு படமாகுவாய்
பின் மாலை போடலாமா, இல்லையா?
என​ நாகரீக​ம்
சர்ச்சைபோடும்
வீடு மாறுகிற​ போது
ஒரு பெட்டிக்குள் அதுவும் அடக்கப்படும்
ஆணி அடிக்கக் கூடாது என்று
மீண்டும் மாட்டப்படாமல்
விட்டு விடுவார்கள்
நீ தப்பித்துக் கொண்டாயோ?
தெரியவில்லை .

அவலம்

காலம் உனக்கு எதையோ சொல்லி
விட்டுப் போன​ பின்
காந்தியிடம் என்ன​ கணக்கு கேட்கப்
போகிறாய் ?
வாசு மேல் என்ன​
வழக்கு போடப்போகிறாய் ?
எல்லாம் மீண்டும்
கரும் துகள்களாக​ மாறிய​ பின்
மீன்களுக்கு தன் கண்களை இரை
கொடுத்து விட்டு மிதந்து கரை
ஒதுங்கியது
வெற்றுடல் !
இவன் மரணத்துக்கு எந்த​ தோட்டா
பதில் சொல்லியதோ?
இப்போது எல்லாம்
நிறமூர்த்தங்களில் பரம்பரை தேடுவது
ஒரு பழக்கமாகி விட்டது ,
அதில் பல​
இனக் கூறுகள்
காணப்படுவதை...
மூடி மறைப்பு முடிவாகி
விட்டது !
உறைந்த​ குளிரில்
உதடுகள் ஒட்டிக் கொண்டதால்
சூடேறி சற்று இறுகியது
உதட்டுத் திண்மை

இல் வியட்னாமில் , சாட்சியமற்றப்போர்
(1968, 9-10 பகலில்...)

பச்சை வயல்களுக்குள் நடந்த​ பாதகம்
வான​ ஊர்திகளில் வந்த​ ராணுவம்
இயந்திர​ துப்பாக்கிகளின் இயக்கத்தை
சரி பார்த்துக் கொண்டது ,
நாலுமணி நேர​ வேட்டை
உயிர்களை அழித்து
இரண்டு ஆண்டுகள்
இழப்பை மறைத்தது
எங்கோ ஒரு வித​ ஒளிக்கீற்று...
இருளில் ஒளிர​
செய்தி வெளியாகியது
அவலங்களை ஏற்றியவர்கள்
அம்பலம் ஆகின்றனர்
எனினும் என்ன​
கண்துடைப்புகளுடன்
சிலர் கடமை முடிகிறது
துயரம் தான் இடமும் நேரமும் மாறித்
தொடர்கிறதே

நிக் வுஜிசிக்
(Nick Vujicic)

நிக் நிமிர்ந்து நின்றான்
எம்மைப் போல் எழும்பி
நிற்க​ முடியாவிட்டாலும்...
அவுஸ்ரேலியா
அவனுக்கு கல்வியை கொடுத்தது
அவன்
உலகிற்கு நம்பிக்கையை
கொடுத்தான்
அவனது பேச்சின் மூலம் இன்று
கால்கள் முளைக்கும் என்ற​ நம்பிக்கையில்
காலணிகளுடன் காத்து நிற்கிறான் .

போர் நாடகம்

போர் இரு தரப்பினரையும் இழப்புக்களையும்
காயங்களையும் பட​ வைத்தாலும்
ஒரு தரப்பு வெற்றி பெற்றதாக​
மார் தட்டிக் கொள்கிறது .

எனக்குல் நூறு சாமிகள் இருந்தும்
என்ன​
நிதம் சில​ ஆசாமிகள் நேயத்தை
களவாடி விட்டுத் தானே போகின்றனர்
சிதைந்து போன​ என்னிடம்
நீ சிரிப்பை எதிர் பார்த்து
என்ன​ பலன் ?


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்