முன்னுரை
வல்ல இறைவனின் இறுதித் திருத்தூதர் அகிலங்கள் அனைத்தும் அருட்பெருங் கொடையாக பிறந்த நாயகர். நபிகள் நாயகம் அவா்கள் மனித குலத்தை மாண்புறச் செய்வதற்காக சொல்லுக்கும், செயலுக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும் புதுப்புது அர்த்தங்களை சிந்திக்க கற்றுக் கொடுத்த செம்மலார் அவா்கள் வழங்கிய சிந்தனைக்குரிய சில கருத்துக்களை இக்கட்டுரையின் வாயலாக காணலாம்.

குடும்பநலச் சிந்தனைகள்
குடும்ப நலமே நாட்டின் நலம் எனலாம். குடும்ப உறுப்பினர்களின் தொகுப்பே சமுதாயமாக மலர்கின்றது. சமுதாய நல நோக்கில் பல்வேறு சிந்தனைகளை வழங்கிய பெருமானார்.

இறைமறை இயம்பும் கணவன்.
ஒரு குடும்பத்தின் தலைமை உறுப்பினர்கள் கணவன், மனைவியுமாவர். இருவருக்கிடையே ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.

”மனைவியா் கணவனுக்கு ஆடையாகவும்
கணவன் மனைவிக்கு ஆடையாகவும்
இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 2 187)

முதலில் கணவன் மனைவி இருவரும் ஏற்றத் தாழ்வில்லா ஒத்த நிலையினர் என்பதை உணர்த்துகிறது.

மேலும் சிறப்பாக ஆடையாக விளங்குவதாக கூறப்பட்ட உவமை ஒருவருடைய மான காப்பு, ஒழுக்க காப்பு, பாதுதுகாப்பு ஆகிய அனைத்திலும் மற்றவர் பங்கு பெரிதும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் – தமிழரின் தனிப்பண்பாக அமைந்திருப்பதைப் போன்று அரபி மக்களிடமும் விருந்தோம்பல் பண்பைச் சிறக்க செய்த பெருமை அண்ணல் நபி (ஸல்) அவர்களையே சாரும். இதற்கு கீழ்வரும் நிகழ்ச்சி எடுத்துக் காட்டாய் அமைகிறது.

அன்பர் ஒருவா் ஒருநாள் இரவு அண்ணலாரிடம் ” உண்பதற்கு எதுவுமில்லை உணவுவளியங்கள்” என்று கேட்டார். அண்ணலின் இல்லத்தில் அன்று உணவு சமைக்கவில்லை. ஆகவே, ஆதரவாளர் ஒருவரை அழைத்து அன்பருக்கு உணவளிக்கும்படிக் கூறினார். அவரும் அதற்கு இசைந்து அன்பரை அழைத்துச் சென்றார்.

மாறாக, ஆதரவாளர் வீட்டிலோ அண்ணல் வீட்டின் நிலைமையே, ஆங்கே வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே சிறிது உணவு இருந்ததாக மனைவி தெரிவித்தார். இருவரும் ஆலேசித்தனர். அன்பருக்கு மட்டும் விருந்தினை அளிக்கலாம். ஆனால், இருவரும் விருந்திருடன் தானும் உண்பதே முறை,

ஐயத்தோடு கணவன், மனைவியை நோக்கினாள். மூன்று தட்டுகள் கூடத்தில் வைக்கப்பட்டன. உடனே மனைவி விளக்கை அனைக்கிறாள். விருந்தினா் உணவை உண்ணுகிறார். இருட்டில் இருவரும் உண்பதுபோல் இயல்பாய் நடிக்கின்றனர்.

”உறைந்த மூன்றில் ஒரு தட்டு
உணவை ஏற்றுச் சுமக்கிறது!
இரண்டு தட்டோ வெறும் தட்டு!
இருட்டைப் பார்த்துச் சிரிக்கிறது! (மு. மேத்தா, நாயகம் ஒரு காவியம், ப.225)

என்று அரபு நாட்டின் விருந்தோம்பல் சிறப்பினை மு.மேத்தா அவா்கள் கவிதை வழி காட்சிப்படுத்தியுள்ளார்.

குழந்தை வளா்ப்பு சிந்தனை
குழந்தை வளா்ப்பு இன்பச் சுவைப் போன்றது.”எந்த குழந்தையும் நல்ல குழந்தையை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளா்ப்பினிலே” 1976 ஆம் ஆண்டுயில் வெளிவந்த புலமைபித்தனின் பாடல் வரியில் குழந்தை வளா்ப்பில் தாயின் பங்கு பெரியதாக உள்ளது என்பதை அறியப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் அவா்கள் கணவனும் மனைவியுமாக இணைந்து ஆற்ற வேண்டிய குழந்தை வளா்ப்புச் சிந்தகையை எடுத்துரைக்கின்றார்.

”குழந்தைகளுக்குப் பெற்றோர் தரும் வெச்வற்களில் தலையாயது நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுத்தலே” என்ற நயமிகுச் சிந்தனை நோக்கத் தக்கது.

மேலும், ஒழுக்கம் உயிரினுக்கும் மேலானது என்பதை திருக்குள் மேன்மையாக எடுத்துரைக்கிறதை அறிவோம்.

முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்(நரக) நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்கிறார் (திருக்குர்ஆன் 66-6)

பெற்றோரின் நலன் காத்தல் சிந்தனை
பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் இறைவன் கட்டாயக் கடமையாகவே ஆக்கியுள்ளார்.

”தாய் தந்தையார்க்கு நலம்
செய்யும் படியும் விதியாக்கியுள்ளான்
(திருக்குர்ஆன் 17- 23)

மேலும்,

”இறைவனிடம் பெற்றோர்க்காக
பிரார்த்தனை புரிய வேண்டும்” (திருக்குர்ஆன் 17 – 24)

இவை பிள்ளைகளின் கடமையாகும்.

”மனிதனே நீ எனக்கும் உன்
பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக” (திருக்குர்ஆன் 31-14)

போன்ற வாக்கியங்களை, ஆராய்ந்தோம் என்றால் இரண்டு பேருண்மைகள் வெளிப்படுகின்றன. ஒன்று - இறைதூதா்க்கும் அடுத்தப்படியாக பெற்றோர்க்கும் நன்றியுள்ளவனாய் இரு என்பதை அறிவுறுத்துகிறது.

உறவினா்க்கு உதவும் சிந்தனை
குற்றம் பார்த்தால் சுற்றம் .இல்லை என்று கூறுவார்கள் நம் சான்றோர்கள் எனவே குற்றத்தை மறந்து உறவினா்க்ளுக்கு உதவிடல் வேண்டும் என்பதை அறிகிறோம்.

குடும்பம் உறுப்பினா்கள் அணைவருக்குமே உறவினா்களை அன்பு செய்வதும், உதவுவதும் இஸ்லாமியக் கடமையாக்கப்பட்டுள்ளது.

”உறவினா்களைப் பேணிக் காக்காதவனை
இறைவன் புறக்கணிப்பான்

என்றும்

”மக்களில் சிறந்தவன் உறவினா்களை
ஆதரிப்பவன்” (இயாள் பின் ஹிமாய் (ரலி) முஸ்லிம் 5498)

என்பது நபி மொழியாகும்.

பகை கொண்டவா்களுக்கும் உதவுவது சிறந்த நற்செயலாகும் என்பதும் சிந்திக்கதக்க கருத்தாகும்.

அண்டை வீட்டார்க்கு உதவும் சிந்தனை
உன்னிடத்தில் அன்பு கூறுவதும் போல் பிறன்யிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பது விவிலியம் கூறுகிறது. எனவே, உறவினா்களுக்கு உதவுதல் போலவே உதவுதல், போலவே அடுத்து வாழ்கின்ற அண்டை வீட்டுக்காரா்களுக்கும் உதவுதல், குடும்ப நல சிந்தனைகளில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை கீழ்வருமாறு நபிகள் நாயகம் கூறிப்பிடுகிறார்.

”அடுத்து வீட்டுக்காரா்கள் உதவிக்கேட்டால் மறுக்காதீா்கள்
கடன் கேட்டால் கொடுத்து உதவுங்கள்
நோய்வாய்ப்பட்டால் சென்று பாருங்கள்
துன்பம் நோ்ந்தால் ஆறுதல் கூறுங்கள்
இன்பம் நோ்ந்தால் வாழ்த்து கூறுங்கள்” (ஸவ்பான் (ரலி) முஸ்லிம் 5017)

போன்ற கருத்துக்கள் மனித வாழ்வின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் சிந்தனைகளபக விளங்குகின்றன.

பணியாளா்கள் நலன் பெறும் சிந்தனை
பணியாளா்களை குடும்ப உறுப்பினா்களாகவே கருதி அவா்களை நடத்த வேண்டும் என்று ஆணையிடப்படுகிறது.

”பணியாளா்களுக்கு தீங்குச் செய்வோர்
சுவா்க்கம் புகு முடியாது” (அல்குா்ஆன் 7- 42)

என்பது பணியாளா்களை வன்மையாக நடத்தாமல் அவா்களுக்கு தீங்குச் செய்யாமல் அன்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

முடிவுரை
சிந்தையைத் தூண்ட, ஆா்வத்தை ஊட்டி, அறிவை ஊட்டி நற்பயன் வழங்கும் வகையில் நன்மையும், நம்மை சுற்றி உள்ளவா்களையும் நலன் பெறும் வகையிலும் சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் வகையிலும் ஏற்றதோர் சிந்தனைகளை நபிகள் நாயகம் வழங்கியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

திருக்குர்ஆன்
நபிகள் நாயகத்தின் நலமிகு சிந்தனைகள், மு.அப்துல் கஹீம்

 

விவிலியம்
நாயகம் ஒரு காவியம், கவிஞா் மு.மேத்தா
திரையிசை பாடல்


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.