- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி.  இத்தொடரின் இறுதிப்பகுதியிது. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துக்ளை எழுதுங்கள். அவை பதிவுகளில் வெளியாகும். - பதிவுகள்.காம் -


15
பாரதி, தன் தேடல்களுக்கூடு, தன் வாழ்க்கை தரிசன பரப்பெல்லையை, நாளும் நொடியும், விஸ்தரித்து செல்வதை, அவனது வாழ்வும் வரிகளும் எமக்கு எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. இருந்தும் மஹாகவி, குறித்த ஓர் சித்தாந்த சார்பினை தேடிச் செல்லாதது அவரது பலம் என்ற வகையில் போற்றப்படுவதைப் பின்வரும் வரிகள் எதிரொலிக்கின்றன:

“மஹாகவிக்கு இத்தகைய இடர்பாடுகள் இல்லை. அவர் (முருகையன் போல்) ஒரு தத்துவத்தை மட்டும் தமக்குரியதாக வரித்து கொண்டவருமல்லர். எல்லாவற்றுள் இருந்தும் ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொண்டு மானுடம் பாடியவர் அவர்…” ப-320
மறுபுறம், கைலாசபதியின் கூற்று வருமாறு:

“சித்தாந்த சார்பொன்றினை தேடிச்செல்லும் ஆத்ம துடிப்பின் எல்லையிலேயே அவரது (முருகையனது) கவிதைகளில் பெரும்பாலானவை பிறக்கின்றன…”து குறித்து கருத்துகூறும் பேராசிரியர் பிரசாந்தன், “இத்தகைய ஒரு சித்தாந்த சார்பு, படைப்பாளியின் பிற சிறகுகளை வெட்டி விடக்கூடிய தன்மையுடையது… தத்துவ சார்பு (என்பது), அச்சித்தாந்த சார்பு குழுமத்துக்குள் முதன்மை வழங்குமே தவிர முழு இலக்கியப் பரப்புள்ளும் முதன்மையை வழங்காது. பதிலாக, கேள்விக்குள்ளாகும்…” என்பார்.

இது யாருடைய கேள்வி –எவருடைய கேள்வி என்பதே இங்கு பிரதானமான கேள்வியாகின்றது.

அதாவது, இங்கே, ‘கேள்விக்குள்ளாகும்’ எனும் கூற்றே மிகவும் சிக்கல் வாய்ந்த கூற்றாகும். எவ்வட்டத்தினரின் கேள்விகள் இவை? ஏனெனில், முதலில், மயிலுமில்லை, குருவியுமில்லை என்பது போன்றதான குறித்த வட்டத்தினரின் கேள்வியையா இவ்வரிகள் “கேள்வி” என நிர்ணயம் செய்து கொள்கின்றன?

மேற்படி சூழலில், சித்தாந்த சார்பு நோக்கிய ஒரு தேடல் என்பது எக்காரணம் நிமித்தம் ஒரு மனிதனில் எழக்கூடும் என்பதும் அவனது ஆத்ம துடிப்பினது அல்லது தேடுகையின் சாரம் என்ன என்பனவையும் இங்கே தொடர்புபட்ட வினாக்களாகின்றன. அவரவர்க்கு ஒரு பெயர் இருப்பது போல அல்லது அவனவன் தனது பிறவிப்பெருங்கடலை நீந்தி முடித்துக்கொள்ள, ஓர் சித்தாந்த சார்பு பெயரளவிலேனும் இருத்தல் அவசியம் எனக் கருதிக் கொள்வது போல இராது ‘மனிதன் தன்னைக் கட்டியுள்ள தளையெல்லாம் சிதற’ வேண்டும் என்பது போன்ற அவாக்களின் நிமித்தமா இந்த சித்தாந்த தேடல் இடம் பெற்றுள்ளது – முருகையனைப் பொறுத்தமட்டில் என்பது முதலில் கணிக்கப்பட வேண்டியதாய் இருக்கின்றது. கூடவே, மனிதர்களில், இத்தகைய, வகைவகையான தேடல்களைத் தோற்றுவிப்பதும் அவற்றை எல்லைப்படுத்தும் காரணிகளாகத் திகழ்பவையும் எவையெவை?

நிர்வாக சேவை தொடர்பிலான தேர்வுகளின் கட்டாயங்களா? நிலத்தின் ஆதிக்கமா? அல்லது சமூகக் கட்டுமானங்களில் இருந்து இயங்கும் நுண் அரசியலின் தொடர்பாடல்களா? எவை இங்கே இத்தேடல்களை எல்லைப்படுத்தியும் கட்டுப்பாடுகளை மனிதன் மேல் விதைப்பதாயும் உள்ளன, என்ற சிக்கல் மிகுதியான கேள்விகளும் தொடர்ந்தாற் போல் இங்கே எழத் தவறுவதில்லை.

16


“மனிதன் தன்னை வென்றாளும் போதிலே
விண்ணை அளக்கும்
அறிவுத்தான்”

என்பது, மேலே நாம் கண்ட பாரதியின் கூற்று.


இவ்வரிகளில் எதிரொலிக்கும் தேடல் யாது என்பதே இப்போது நாம் முகங்கொடுக்க வேண்டிய வினாவாகின்றது. “தேடி, தேடி சோறு தின்று” போன்றதின் வாழ்க்கை குறித்த தேடலா அல்லது, “சுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய்”… என்ற வல்லமை குறித்த தேடலா அல்லது, ‘தசையினை தீச்சுடினும்’ என்னும் தவம் குறித்த தேடலா அல்லது, ‘காக்கை சிறகினில் நீ கண்டது என்ன’ என்று அதிசயித்து மேற்கொள்ளும் தேடலா – அல்லது, ‘காலத்தின் விதி மதியை கடந்திடும் என்றால்’ என்பது குறித்த அறிவின் தேடலா - இப்படி எண்ணற்ற வாழ்வியல் கூறுகளை சீர்தூக்கி பார்க்கும் ஒருவனது தேடல்களின் சாரமும், வகைப்பாடுகளும், அவன் பெற்றிருக்க கூடிய வாழ்க்கை தரிசனங்களை “ஓரளவில்” எமக்கு இங்கே எடுத்துரைக்கப்படுவதாகவே இருக்கின்றது. அவன் தனது பாடல்களில் ஒன்றில் தாயுமானவரின் பின்வரும் வரிகளை கோடிடுகின்றான்:

“…நானெனும் ஈனப் பாழ்கெட என்று மிருப்பனே…” (இறவாமை – ப- 492)

மறுபுறமாய், ‘மனித அறிவானது விண்ணை அளக்கத்தக்கதுதான்’ எனும் இவனது கணிப்பும் அவதானிப்பும் கூட ஆழ நோக்கத்தக்கதே– கார்க்கியின் எண்ணப்பாடுகளுடன் பயணிக்கத்தக்கதே. தன் ஆன்மாவையும் ஆவியையும் ஒப்படைத்து (அர்ப்பணித்து) மனிதன் நடாத்தும் தேடல், அவனை, அத்துறையின் ஒரு விடுபடாத கண்ணிகளை விடுபட செய்து விடுகின்றன. இது சிந்தனை பாற்பட்டதா அல்லது சித்தத்தின் பாற்பட்டதா, மூளை சம்பந்தமானதா அல்லது அவனது ஆன்மா சம்பந்தமானதா என்பதெல்லாம் அவ்வப்போது சிதறக்கூடிய வினாக்களாகலாம்.
ஆனால், சுருக்கமாகக் கூறுமிடத்து, தன்னை வென்று, தான் தேர்ந்த சித்திரங்களினுள் முற்றும் முழுதாய் அமிழ்ந்து தன்னை மறந்துவிடும் போது, அத்தகைய தேடலில், இவை சித்திக்கின்றன என்றாகின்றது. (சிந்தனையும் நீயே, சித்தமும் நீயே எனும் பாரதியின் கூற்றும் இக்கணத்தில், ஒருமுறை மீட்டிப் பார்க்கத்தக்கதே).

தவில் வித்துவான், தட்சணாமூர்த்தியின் மகன் கூறுவார்:

“அப்பா சில இரவுகளில் தூக்கம் வராமல் புரள்வார். எழுவார். கேட்டால்,‘அவள் என்னை தூங்கவிடமாட்டேன் என்கிறாள்’ என்பார். அதை பாடமாக்கு, இதை பாடமாக்கு என்று தொல்லைப்படுத்துகிறாள் அப்பா… என்னை தூங்கவிடாமல்” என்பார். தமிழ்நாட்டின் தமிழ் மேதைகள் என அடையாளம் காணப்படுபவர்கள் தட்சிணாமூர்த்தியைப் பின்வருமாறு வர்ணிக்கத் துணிவர்: “அவன் ஒரு ராட்சசன்-அசுரன் -இவனொரு எட்டாவது அதிசயம்” (மணி ஐயர்). தமிழ்நாட்டின் தவில் மேதைகளில் ஒருவர் என போற்றப்படும் பழனிவேல் கூறுவார்: இதை அடிப்பது ஒரு மனித கரமா அல்லது தெய்வத்தின் கரங்களா என்பது தெரியவில்லை” “ஒருமுறை… ஒரு கிராமம்… தெப்பக்குளத்தில் அடிக்க நேர்ந்தது. குளத்தை சுற்றி மக்கள் வெள்ளம். தண்ணீரில், தொனி தெளிவாக கேட்காது. சூழலை பார்த்த தட்சிணாமூர்த்தி, இன்று சதுர்சரத்த சதுர்சரத்தமா வாசிக்க போகின்றேன் என்றார். எனக்கு புரியவில்லை. வாசித்தார். குளத்தை சுற்றியிருந்த இசைஞானமற்ற மக்கள் கரையிலிருந்து… ஒ..ஓனு கத்தினிச்சி… எனக்கே உடம்பெல்லாம் சிலுத்து போச்சு… ‘அடி’யோட சேர்ந்து குரலெழுப்புகிறார்கள்”. அந்த மக்கள் இசைஞானம் கொண்டு ஒரு தவில் மேதையின் நுணுக்க வேறுபாடுகளை அறிந்து அதனை போற்றவில்லை… அதற்குரிய இசைஞானம் அவர்களிடம் இல்லை… இருந்தும் தட்சிணாமூர்த்தியின் வாசிப்புடன் ஒன்றி அவருடன் நின்று, அவர்கள் இப்படியாய் பேரொலி எழுப்பினர், என்பார் அவர். ஒர் கலைஞனின் ‘தேடல்’ அவனை எங்கு கொண்டு சென்று நிறுத்தியது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

“ பதினொன்ன வாசிக்க ஆரம்பிப்பார்…. இதுத்தான் பதினொன்னு, இதுத்தான் பதினொன்னு அப்படின்னு காமிச்சிக்கிட்டே இருக்கும்….பெறகு பதினொன்னு இருபத்தொன்னாகும். ஒரு எடத்துல, இது பதினொன்னு – நாந்தான், நாந்தான்னு காமிச்சிக்கிட்டே இருக்கும். பெறகு பாத்தீங்கனா… வேறொன்னா இருக்கும்… திருப்பி நான் பதினொன்னுதாங்கும்… பெறகு சந்திரமண்டலம் போகும்… செவ்வாய் கிரகம் போகும்… அவரது கற்பனையும் கையும் அப்படியே ஒன்னா இயங்கும்…” என்பார் பழனிவேல். இது போலவே, தஞ்சாவூரில், தனது மேல்மாடியை தட்சிணாமூர்த்திக்கு வழங்கியிருந்த இசை மேதையாக அறியப்படும் பி.எஸ். சுந்தரம் கூறுவார்:

“ராத்திரி பதினொன்று பதினொன்று முப்பதுக்கு கையில் சிகரட்டுடன் என் வீட்டு கதவை தட்டிக்கிட்டு நிப்பார்… என்ன? இந்த நேரத்துல என்று கேட்டால், மாமா வாங்க… ஒரு நட - இப்பதா தோணுச்சி – வாங்க எழுதுவோம் - என்று கெஞ்சுவார். நாங்கள் இருவரும் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதபடி தூர சென்று அமர்ந்து கொண்டு எழுதத் தொடங்குவோம்… இப்படி எத்தனை நடைகள்…”

“என் வீட்டுல நாலு வருசம் குடியிருந்தார். என்னுடன் இருக்கும் வரை ஒருநாளும் அவர் மதுவை தொட்டதில்லை. தன் வாக்கை காப்பாற்றினார் அவர். நான் அவரிடமே கேட்டிருந்தேன்: - கடவுள் ஒங்களுக்கு மாத்திரம் ஒரு விரல எக்ஸ்ட்ராவா தந்துருக்கானா, என்று…”. இசை மேதை சுந்தரத்தின் மேற்படி கேள்விகளில் விடயம் இல்லாமல் இல்லை. ஏனெனில், “இவ்வளவு சன்னமாய் தவில் வாசிக்க முடியாது – தாளத்தை தொடர்ந்து ஒலிக்க செய்ய முடியாது” என்பது அவரது துணிபு. மறுபுறம் பழனிவேலின் கூற்றுப்படி தவில் அவரது கரங்களில் சமயங்களில் உருமாறியது. உர்..உர் என்ற ஒலிகளையும் எழுப்பச் செய்தது. மற்றுமொரு இசை மேதையான கிளிவ் லேன்ட் சுந்தரம் கூறுவார்:
“ஒன்றும் அதிசயமுறுவதற்கில்லை என்று எண்ணி முடித்திருந்தேன். பின்பு, அவரது தனி ஆவர்த்தனம் கேட்டேன். இவ்வளவு சக்தி, எப்படி - இந்த மனிதனில் - ஒரு அனுமானுக்கு வந்தது போல. இது போன்ற மகா வித்துவான் இனி தோன்றவே முடியாது என்று நிச்சயித்துக் கொண்டேன்… லய வளர்ச்சி என்றால் அது அவர்தான்…”. தட்சிணாமூர்த்தியின் இசையில், எவ் அம்சம் மக்களை ஈர்த்தது என்பது தனித்து ஆயத்தக்கதே. பீத்தோவனின் இசை, லெனினையும் எங்கெல்சையும் வெகுவாக அசைத்தது என்பதனை நாம் அறிவோம். ஆனால் எந்த அம்சம்?
தட்சிணாமூர்தியின் நண்பர் ஒருவரின் கூற்று: “ரவிசங்கர், மாலி என்றெல்லாம் அவர் பேசுவார்… விபூதி பூச மாட்டார்… சந்தனத்துல ஒரு இழுப்பு…கோடுமாதிரி… நெற்றியில… அவ்வளவுத்தான்…”

அண்மையில் கவிஞர் ஆதவன் தவில் மேதையிடம் தாம் பெற்ற ஆசிர்வாதம் குறித்து தன் நினைவேடுகளில் எழுதியிருந்தார்: “என் அம்மா கூறுவாள்…. உன்னைப் போல் ஒரு பொடியன் வந்தான். மேடையில் தவ்வி ஏறினான். மேளத்தை விட அவன் சின்னன்…”. “பின் என் மாணவ பருவத்தில், மிகுந்த மரியாதையுடன் சுகம் விசாரிப்பார்…”. “ஒரு நாள், அவர் கைத்தாங்கலாய் காரில் ஏறும் போது ஓடினேன். காரின் ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து ஆசிர்வாதமாய் கூறினார்: “நல்லாயிரு தம்பி….”

இதே போன்று இன்குலாப்பின் மகள் கூறுவாள்: “அப்பா சொல்லுவாங்க… ஒரு கவிதை மனசுல உருவாகத் தொடங்கி மங்கலாய் வடிவம் பெற தொடங்கிய உடனேயே… ஒரே அதிர்வா இருக்குமா… தூங்க முடியல… பின் இரவெல்லாம் தூக்கம் வராமல் நடந்து திரிந்து அலைந்து எழுதிய பின்னரே உறங்கத் தொடங்குவார்…”. குறிப்பாக, இன்குலாப்பின் இறுதிக் காலத்துக் கவிதைகள் மேற்படி விவரிப்பினை அதிசயமாக ஆக்காது.
இது போலவே, குறித்த கவிதைகளுடனும், சிலர் ஒன்ற முடியவில்லையே என்று குறிப்பிட்டுக் கொள்வது கூட, அதியசமான ஒன்றல்ல என்பதனையும் சேர்த்தே கூறி விடலாம். இதுபோலவே, தனது 37வது வயதில் சுட்டுக்கொண்டு இறந்துபோனதாகக் கூறப்படும், உலகப் புகழ் பெற்ற ஓவியன் வான்கோ தனது ஓவியம் ஒன்றைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பான்: “எனது ஓவிய நண்பன் ஒருவனின் உருவப்படத்தைத் தீட்ட ஆர்வம் கொண்டுள்ளேன்…. பெருங்கனவுகளை, கனவு காணும் மனிதன் அவன்…. ஒரு இரவு பட்சியின் இதமான பாடலை போல் உழைப்பில் ஈடுபடக் கூடியவன் அவன்…. அவனுக்கான என் அன்பை, என் பாராட்டை, இவ்ஓவியத்தில் பொதித்து வைத்துவிட விரும்புகிறேன்….” “தலையின் பின்னே, அறையின் சுவரை தீட்டி விடுவதை விட, முடிவிலியை இருத்தி விட முயற்சிக்கின்றேன்….மிக செறிவான, செழுமையான நீலநிறத்தில்…”
“இவற்றில் ஓர் மர்மமான தாக்கம் உள்நின்று செயல்படுகின்றது…. தெளிந்த, தெய்வீக நீல வான் பரப்பில் - அதன் அடியாழத்தில் - அரிய நட்சத்திரம் ஒன்றின் தோற்றுகையையும் இருத்திவிட்டால்….”

மேலும் கூறுவார்: “மிலே (Millet), விவசாயியினது சாரத்தை தர முயற்சிக்கின்றார்…  பின்னர் Lhermitte மேலும், இன்னும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்… பின் Meunier…. ஆக விடயம் இதுதான் எனில், பொதுவில் விவசாயியை நாம் பார்த்தறிய கற்றுவிட்டோமா என்றால், இல்லை… கிடையவே கிடையாது…இவ்விடயத்தை வெற்றிக்கொள்வது எப்படி என்பது யாருக்குமே பிடிபடாத விடயமாய்த்தான் இருக்கின்றது....”.

“Mcknight ,… Bock… இவர்கள் பொதுவில் எதைத்தான் பார்க்க விழைகின்றார்கள்? சூட்டின் வெம்மையை தவிர?..”

“ சரி. நான் இப்போது ஓரளவிற்கு விடயங்களை சிறிதளவு தெளிவாகப் பார்க்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என்றாலும் இது நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய சங்கதிதான்.”

“புயரபரin இச்சிக்கலை வெற்றிக்கொள்ளவில்லை என்றால், நானாகத்தான் இதனை சமாளித்தாக வேண்டும் என்றாகின்றது…நல்லது. விடயம் அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்றால், அது அப்படியே இருந்தாகட்டும். ஆனால், அதற்காய், நான் இங்கே, விவசாயிகளின் மத்தியில் இருந்தாக வேண்டி உள்ளது.”

மேலே காணப்படும் வான்கோவின் வரிகள், வான்கோ முன்னெடுத்த தேடல்களின் ஒரு துளியை எதிரொலிப்பதாக இருக்கின்றது.
(இருந்தும், கார்க்கி-டால்ஸ்டாய் - இவர்களின் விவசாயி பொறுத்த புரிதல் வேறு வகையாக கிளைபிரிவதாக இருப்பதும் மனதில் இருத்தத்தக்கதே- இவை ஒரு புள்ளியில் இணையலாம் என்றாலும்).

இவை அனைத்தும், அவ்வவ் மனிதர்களின் தேடலின் உக்கிரம், எப்படி எப்படி உருப்பெற்று, அதற்கூடு, அவை கிளைபரப்பி உருவாக்கி தரக்கூடிய அந்த நிர்ணயமான கணங்கள், எவையெவற்றை உருவாக்கித் தருகின்றன என்பதனை எல்லாம் சுட்டுவதாக இருக்கின்றன. இதனை போலவே மயோக்வாஸ்கி தொடர்பிலான ஒரு சம்பவத்தையும் இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். தன்னைத்தான் சுட்டுக் கொண்டு இறந்ததாய் கூறப்படும், மேலும் ஒரு கலைஞனான, மயோக்வாஸ்கியும் லெனினின் மீது அளப்பறிய பற்றையும் காதலையும் மரியாதையையும் வைத்திருந்தவர் தான்.

உதாரணமாக, ஒருமுறை, மண்டபம் நிறைந்த ஒரு கூட்டத்தின் முன், தன் கவிதைகளில் ஒன்றை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

“கையில் பீரங்கியுடனும்
தலையில் லெனினுடனும்
நாங்கள் முன்னேறுவோம்…”

அவரது கவிதையை இடைமறித்து, கூட்டத்திடை எழுந்து நின்ற ஒருவன், அவரது வரிகளை, ஒரு சிறு திருத்தத்துடன் மீள ஒப்புவித்தான்:
“தோழரே உண்மை. கையில் பீரங்கியுடனும், தலையில் லெனினுடனும், ‘இதயத்தில் உங்கள் பாடலுடனும்’ - நாங்கள் முன்னேறுவோம்…”
ஏற்பட்ட அதிர்வு புரிந்து கொள்ளக் கூடியதே. இருந்தும் கார்க்கி கூறுவார்:

‘மயோகுவாஸ்கியை லெனின் மதித்தார் இல்லை. சற்று எரிச்சலுக்குள்ளானார் என்றும் கூட கூறலாம். அவரது அபிப்பிராயத்தில் இளம் வயதினர் புஷ்கினை கற்பது நல்லது”

லெனினின் மேற்படி நிலைப்பாடு பலருக்கும் பிரச்சினைக்குரியதுதான் என்பதில் ஐயமில்லை. பெயரளவில் இயங்;கக்கூடிய, இயக்க சார்புகளைக் கடந்து அல்லது ஆழமற்ற இயக்க சார்புகளைக் கடந்து, தன் வர்க்கத்தின், இலக்கிய அல்லது மனுக்குலத்தின் பின்னணியில், முக்கியமாக இளைய தலைமுறையினரின் செழுமைகளை இலக்காக்கி, அவரது தேடல் பரிணமிப்பதை இங்கே நாம் காண்கின்றோம்.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் கேட்பார் கார்க்கியிடம்: “கூறுங்கள் நண்பரே.. இவ்வகை இலக்கியங்கள் எம்மை எங்கு கொண்டுபோய் சேர்க்க கூடும்”

மனித தேடல்கள் குறித்த அணுகுமுறைகள் லெனினிலும் கார்க்கியிலும் சற்று வித்தியாசமுற்றே அல்லது அவரவர் இயங்குதளங்களில் சற்றே வேறுபட்டு செயல்படுபவனவாகவே இருக்கின்றன. (இறுதி கணிப்பில் ஒரே வேர் கொண்டு இயங்க முயற்சித்திருப்பினும்).
லெனின் சிற்சில தேடல்களை பகுத்து அவற்றை முதலாளித்துவத்தின் செழுமைகள், என வேர்பிடித்து வைத்திருப்பது போல், கார்க்கி, தனது தேடல்களை, ‘மனிதன்’ தொடர்பிலான ஆய்வின் பின்புலத்தில் நிகழ்த்துவதாக காணக்கிட்டுகின்றது. தேடல்களானது, குறித்த மனிதனில், குறித்த உக்கிரத்துடன் ஆற்றப்படுமாயின் அவை ‘தளைகளை அகற்றும்’ நிகழ்வு நோக்கி அவனை இட்டுச் செல்லக் கூடியவை என கார்க்கி அபிப்பிராயப்படுவதாகத் தெரிகின்றது. உதாரணமாக, பௌதீகவியலில் கொதிநிலை, எரிபற்றுநிலை எனச் சடப்பொருள்கள் எட்டிக் கொள்வது போல எனலாம். ஜெயகாந்தன், புல்லாங்குழல் இசைக்கலைஞன் மாலி பொறுத்துக் கூறுவார்: “கலைஞன் அவன்… ஆரம்பிப்பார்…… பத்திகிச்சினா….”.

மனிதர்களில், ‘இப் பத்திக் கொள்ளும்நிலை’ குறித்து கார்க்கி பெரிதும் அக்கறைக் கொள்பவராய் இருக்கின்றார் எனப்படுகின்றது.
இக்கணத்தை, அதாவது அவன் தன்னை மறந்த நிலையில் எட்டிப்பிடித்துக் கொள்வதும், அப்புள்ளியை நோக்கி அவனை இட்டுசெல்லக் கூடிய அவனது பங்கேற்புகள் - தயாரிப்புகள் - இவை அனைத்தும் வாழ்வில், எவ்வௌ; விதங்களில் நடந்தேற்றுகின்றன என்பனவையெல்லாம் அவரது அக்கறைகளில் ஒரு துளி. இது போன்ற கேள்விகளே, அவரது பண்பாக உள்ளிருந்து இயக்கி அவரது தேடல்களை மனிதர்பால் அளவுகடந்த இரக்கத்துடனும் நேசத்துடனும் நோக்க வைக்கின்றது. இது டால்ஸ்டாய் பொறுத்த அவரது அக்கறையிலும் சரி அல்லது அவரது அனந்த வேறுபட்ட அக்கறைகளிலும் சரி, பிரதிபலிக்கத் தவறவில்லை.

இதனாலோ என்னவோ, லெனின் கார்க்கியிடம் கூறுவார்: “ஓ…நீங்கள் இலக்கியத்தில் ஓர் யதார்த்தவாதியாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களின் நடைமுறை வாழ்வில் ஓர் கற்பனாவாதியாகவே (Romanticist) இருக்கின்றீர்களே..” என்று சிரித்தபடி!
விடயம், லெனினது தேடல்கள், மனுகுலத்தின் உண்மை பரிணமிப்புகள் என்ற ஓர் பின்னணியில், எவ்வளவு கட்டற்றவைஇ சுதந்திரமானவை என்பது பொறுத்து மேற்படி சித்திரங்கள் எமக்குக் காட்டி நிற்பதாய் உள்ளது. (தன் வர்க்கத்து கவிதைகள் எனப்பட்டவற்றை தானே சுதந்திரமான சிந்தையுடன் அணுக துணிந்தவர். அதாவது தனது வர்க்கத்து கவிதை எனச் சொல்லப்படுபவற்றையும் தாண்டி ஒரு வரலாற்றுக்க கணிப்புடன் விடயங்களை அவர் கேள்விகளுடன் அணுக முற்படுவதை நாம் அவதானிக்கலாம்).

இதேபோன்று, லெனினின் தேனீக்கள் பண்ணைக்கான விஜயமும் குறிப்பிடத்தக்கதுதான். தேனீக்களின் சமூகம் குறித்தும், தேனீக்களின் எண்ணப்பாடுகள் குறித்தும் அவர் காட்டிய சீரிய அக்கறை–நூலகங்களைக் கடந்தது.

அவரது தேசத்து சமூகம், ஓர் புதிய நிர்மாணிப்பை தொடங்கியிருந்த வேளையில், தனது, சைபீரிய சிறைவாழ்வு, தன் சகோதரன் தூக்கில் போடப்பட்ட நிகழ்வு தந்திருக்க கூடிய வாழ்க்கை தரிசனம், தன் அன்பான தாயை பிரிய நேர்ந்த முடிவுகள் - இவையெல்லாம் போக – தேனீக்களை கற்றறியத் துடிக்கும் அவனது தேடல் தனது தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளை கடந்ததாகின்றது. கூடவே, லண்டனில் வசித்த காலக்கட்டங்களின் போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம், லெனின், மார்க்சின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பதிவும் இவ்வகையில் முக்கியமானதே – (அவரது தேடல்கள் இயங்கிய தளம் பொறுத்த ஓர் பின்னணியில்).

அதாவது, ‘மனிதனை கட்டிய தளைகளெல்லாம் சிதறுக’ என்ற அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு, மனிதன் மேற்கொள்ளும் தேடல்கள், எவ்வௌ; வெளிகளை ஊடறுத்து எவ்வௌ; தளங்களுக்குள் பிரவேசிக்கின்றன–அத்தகைய மனிதர்களின் ஆன்மா எப்படியெப்படி எல்லாம் விகசிக்க முற்படுகின்றது – இதற்கு நேரெதிரான வாழ்க்கையின் அர்த்தப்பாடுகள் எப்படி உருப்பெறுகின்றது, ஏன் - என்பதெல்லாம் கார்க்கியின் தேடல்களில் உள்ளடங்கிப் போன ஒரு துளி. இதன் அடிப்படையிலேயே அவரது லெனின் பொறுத்த தேடல்களும், டால்ஸ்டாய் பொறுத்த தேடல்களும் இன்னும் நூற்றுக்கணக்கான தேடல்களும் அமைந்து போவதைக் காணலாம் - கிளிம் சாம்கின் உட்பட. (இதுபோக அவரது புறஉலகுடன் தொடர்புடைய அகஉலக தேடல்களுக்கான அனந்த சான்றுகளும் அவர் எழுத்துக்கள் முழுவதுமாய் விரவி கிடக்காமலும் இல்லை).
மொத்தத்தில் தேடல்கள் என்பது மகனில் அப்பனைக் காண்பது அல்லது அப்பனில் மகனைக் காண்பது என்பது போன்ற சில்லறைத்தனமான விவகாரங்கள் அல்ல. மாறாக, அவை, மனுகுலத்தின் சிரு~;டிகளை உருவாக்கி முடிப்பது அல்லது உருவாக்கத் தளம் அமைக்கும் பாரிய அடியெடுப்புகளைத் துவக்கி வைப்பது சம்பந்தமானதாகும். இதனைவிடுத்து மகனில் அப்பனைத் தேடுவது என்பது பொதுவில் மனித சுவாபம் என்று வேண்டுமானால் கருதிக் கொள்ளலாம். வீட்டுக் கிழடுகளுக்கும் இது சந்தோசம் தரக்கூடிய செய்தித்தான்.

இருந்தும், மனிதனின் இந்த சுபாவத்திற்கும் (அதாவது மகனில் அப்பனை தேடும் சராசரி சுபாவத்திற்கும்) அல்லது இயல்புக்கும் தத்துவத்திற்குமிடையே தொடர்பாடல்கள் இல்லை. வேண்டுமானால் ஒரு சிலர் தத்தமது வாழ்க்கைக்குத் தோதாக, தத்துவம் எனப்படுபவற்றை ‘அப்பன்-மகன்’ விடயமாக மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பலாம். ஆனால் இதிலும் மறைந்து நிழலாடும் வேர்கள், அவரவர் நலன்களே என்றாகக் கூடும்.

இவை அனைத்துமே கைலாசபதி அறிந்திரா அந்நியங்கள் எனவும் கூற முடியாது. எனவேதான், முருகையன் தொடர்பிலான அவரது (கைலாசபதியின்) ‘தேடல்’ பொறுத்த படிமம், அர்த்தப்பாடு, அனைத்தும், மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ வகைப்பட்டதாய் இராது, என்பது உறுதி. வேண்டுமானால், முருகையனின் மேற்படி தேடலானது, பாரதி போன்றோரில் இருந்து வேர் வழி பிறந்ததாய் இருத்தல் வேண்டும் என்று ஒரு வசதி கருதிக் கூறி செல்லலாம் - மட்டுப்படுத்திக் கொள்ளலாம். தவிர, மீண்டும் கூறுவதானால் இது சண்முகம் சிவலிங்கம் பிரேரிக்கக் கூடிய ‘கட்டற்ற தேடல்’ வகைப்பட்டதல்ல.


17

பேராசிரியர் மணிகண்டன், சாலை இளந்திரையன் போன்ற வட்டத்தினரை போலவே, குறும்பா போன்ற பாடல்களில் கூட, மூழ்கி திளைத்திருக்கக் கூடிய ஒரு மஹாகவியை, இறுதியில், ஓரளவில் மக்கள் திரளிடம் கொண்டுவந்து சேர்ப்பித்த பெருமை ஒன்று உண்டெனில் அது முற்றும் முழுதாய் தாஸிஸியஸ{க்கே உரித்தானதாகின்றது. தாஸிஸியஸின் கூற்றுப்படி அவர் மஹாகவியை பல்வேறு மீனவ சமூகங்களிடை கூட்டி செல்கின்றார். யாழ்பாணத்திலிருந்து மன்னார் வரையிலான அவரது தொடர்பாடல்கள் நெருக்கமாய் இருந்த போதிலும் மன்னாரில் தாழ்வுபாடு கிராம விஜயத்தில் இவை தமது உச்ச நிலையைத் தொடுவதாய் இருந்தன. படகில் பயணிக்கும் அவர்கள், மீனவர்களுடன் ஓரிரவை, கடலில் கழிக்கின்றனர். அலைகளும் பாடல்களுமாய் அவர்களது கும்மாளம் முழு இரவையுமே அதிர வைக்கின்றது. அவர்களில் ஒருவர் அண்ணாவி. மீனவ பாடல்களை மஹாகவி உட்பட அனைவருமே பாடுகின்றனர். தாஸிஸியஸின் வார்த்தைகளில் கூறுவதானால் மேற்படி மாந்தர்களின் ஒன்றுசேர்க்கை - கடலலைகளை எதிர்த்து நீந்தும் மனிதர்களின் ஒன்று சேர்க்கை - இவை அனைத்தும் ஒரு “குழப்படி நிலையை” தோற்றுவித்து விடுகின்றது. இதனையே பாரதியின் வார்த்தைகளில் கூறுவதானால்: “விட்டு விடுதலையாகி...” என்ற நிலைமை கிட்டத்தட்ட அங்கே அரங்கேற்றப்படுகின்றது. அல்லது கார்ல் மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதானால் “மூலதனமும் உழைப்பும் ஒன்றையொன்று சந்தித்து கொள்ளும் ஒரு புள்ளியாக–அங்கே உழைக்கும் மனிதன் தன்னை இதுகாறும் பிணித்திருந்த அவனது தளைகள் எல்லாம் அல்லது அத்தளைகளின் பெரும்பகுதியை சிதறடித்து கொண்ட கணங்களாய் அது வாழ்வில் எழுவதாயும் தோன்றுகிறது”. இப்பின்னணியிலேயே, மஹாகவி ‘சராசரி மனிதனில்’ இருந்து ‘புதியதொரு வீட்டை’ நோக்கி புறப்படுவதாயும் இருக்கின்றது. “தாஸிஸியஸின் வார்த்தைகளில் கூறுவதானால்: “கோடை அவர் நிலையை நாடக ஆசிரியராக, கற்றார் மத்தியிலும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் அவரை ஏற்றி வைத்தது…‘புதியதொரு வீடு’ பலபடி மேலே சென்று அவரை அடிநிலை மக்கள் மத்தியிலும் ஒரு மக்கள் இயக்க நாடக ஆசிரியராக கொண்டு போய் சேர்த்தது” (பௌசர் ணுழழஅ ஆநநவiபெ)

மஹாகவி, தன் பிந்தைய காலக்கட்டங்களில் ஒரு மக்கள் இயக்க நாடக ஆசிரியராக, தாஸிஸியஸ் கூறுவது போல பரிணமித்திருந்தால், அதற்கான முழு பொறுப்பும் தாஸிஸியஸையே சாரும் எனலாம். இது தொடர்பில், மேலே குறிக்கப்பட்ட ணுழழஅ சந்திப்பின் போது, திரு. தாஸிஸியஸ் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. பல உண்மைகளை வெளிக்கொணர்வதாக உள்ள இவ்உரையை, நுண்சிரத்தை மிக்க தேடல் உள்ள இலக்கிய மாணாக்கர்கள், தேடி கேட்டு வைப்பது இன்றியமையாதது. மன்னாரின், தாழ்வுபாடில், குறித்த ‘குழப்படி கணங்கள்’ நிறைந்த மாலையை அடுத்து, நாடக பிரதியை, பார்வையிடும் தாஸிஸியஸ், மேலும் வேகத்தை ஏற்றவும், அதற்கேற்ற இசையை தேடி கண்டுணரவும், பின் மாறிய இவ்விசைக்கேற்ப சிற்சில சொற்களை பிரதியில் மாற்றியமைக்கவும்-சேர்க்கவும் முடிவு செய்கின்றார். இதற்கு ஏற்றவகையில், மஹாகவியும், பிரதியின் சொற்களை சிற்சில இடங்களில் தேர்ந்து கொடுக்கின்றார். இசையை இப்படியாக, தேடி அலையும் தாஸிஸியஸ், தன் குரு மக்கின்டாயரைச் சந்திக்க முடிவு செய்கின்றார் - ஓர் தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில். ‘லயனல்வென்ட்’டில் சந்திக்கும் போது அவ்வேளை அவர் வாயிலாக ஆங்கில - ஐரி~; கிராமிய இசை உலகில் வலம் வரும் சமரகோனையும் சந்திக்க நேர்கின்றது. ‘சமரேயும்’, தாஸிஸியஸ{ம் ஒன்று சேர்ந்து, சமரே, பியோனாவில் தட்டி சுதி எழுப்ப, தாஸிஸியஸ் அதனுடன் இணைந்து பாட எத்தணிக்கையில், அவரை அறியாமல்,‘புதியதொரு வீடுக்கான’ இசை –“சிறு நண்டு – மணல் மீது – படம் ஒன்று கீறும் – இதை வந்து – சில நேரம் – கடல் கொண்டு – போகும் ” வந்து சேர்கின்றது.

இவ் உண்மைகள், தாஸிஸியஸ், மஹாகவியை, மக்கள் திரளுடன் கொண்டுப்போய் சேர்ப்பதுடன், அவரது கருமமும் பங்களிப்பும் முற்றுப் பெற்றதாயில்லை, என்பதனை மிக அழுத்தந் திருத்தமாகத் தெரிய தருகின்றது. பிரதிக்கான ‘இசை’,அவ் இசைக்கு பரிமளம் சேர்க்கும் ‘வார்த்தைகள்’- இவை போக, பிரதியை நாடகத்துக்கு ஏற்ற வகையில் சீரமைத்தல் - இன்னும் ஆயிரக்கணக்கான ஒழுங்கமைப்புகள் - நடிகர் தேர்வு – நவீன நாடகத்தை, நாடக வளர்ச்சியை ஒட்டி கட்டமைத்தல் - இவை அனைத்தும் தாஸிஸியஸ் எனும் மனிதன் கொணர்ந்து சேர்க்கும் பொக்கி~ங்களாகின்றன. தாஸிஸியஸின் இப்பங்களிப்பு எப்படி சாத்தியமாகின்றது எனும் கேள்வி தர்க்கரீதியானது. அவரது உரை வெளிப்படுத்துவதாவது: “கூத்துபாடல்கள், கிராமிய பாடல்கள், நாட்டுபுற பேச்சுவழக்குகள் - இவற்றை திரட்டும் முயற்சியில் நாட்டின் வடக்கில் இருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்குவரை, மலையகத்தின் ஹட்டனில் இருந்து பதுளை வரை நாலாண்டுகளுக்கு மேலாக தமிழ்-சிங்கள-முஸ்லீம் கிராமங்களுக்கூடாக நடைநடந்து கலைபொக்கி~ங்களை சேர்த்தேன்…”

இந்நிலையில் மீனவ களத்தில், அக்களத்தின் பொருத்தபாட்டுக்கு இசைவாக அந்த மக்களுடைய பேச்சுவழக்கு, மீனவர்களுடைய கிராமிய பாடல் ராகங்கள் - இவை உள்புக வேண்டியிருந்தது. தாஸிஸியஸின் கூற்று:

“ஏற்கனவே தாம் எழுதி வைத்திருந்த பிரதியை பிரித்து வேலிகளை அகலமாக்கி புதிய ராகத்தை இட்டார் மஹாகவி. மீனவ களத்தை மீனவ ஆடல்களாலும் மீனவ பாடல்களாலும் நொய்து நாடக பிரதியை செப்பனிட தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல நான் கடல் மீது தவழும் காற்றின் ராகங்களை – கடல் மீது சீறும் காற்றின் ராகங்களை, - கடல் மீது ஓங்காரமிடும் காற்றின் ராகங்களை – ஒவ்வொன்றாக எடுத்து கொடுத்தேன். மஹாகவி கவிதைக் கடலுக்குள் மூழ்கி எழுந்து, மூழ்கி எழுந்து கவிதை முத்துக்களை ஏந்தி வந்து அம்பாரியாக என் முன்னே குவித்தார் - நாடகப் பிரதி அவரது கைவண்ணத்தில் நீளமும் அகலமும் பெற்றது. அது அசையத் தொடங்கியது.”

தொடர்ந்தும் கூறுவார் தாஸிஸியஸ்:

“சிறிது நாள் செல்ல மஹாகவியை, சில மீனவ கிராமங்களுக்குக் கூட்டிச் சென்று அனுபவம் பெற வைக்க விரும்பினேன். பல நூற்றாண்டுகளாக கப்பல் பாட்டு தேங்கிக் கிடக்கும் யாழ்பாணம், நாகர்கோவில், கட்டைகாடு, மன்னாரில் சூரிய கட்டைகாடு, சிலாபத்தில் உடப்பு…”
“அங்கே கற்ற ஒவ்வொரு ராகத்தையும் நாடகத்தில் எங்கே பொதியலாம் எனத் தேடினார் மஹாகவி… கட்டுமரம்…ஏலே ஏலோ…”
“கோயில் சடங்கில் காலம் காலமாக பாடப்பட்டு வந்த கப்பல் பாட்டை… சிறிது மாற்றி நவீன மேடைக்கு ஏற்ப புதுவேகம் கொடுக்க விரும்பினேன்… என்ன செய்யலாம் என்ன செய்யலாம்… ஒரு நாள் மாலை, என் நாடக குரு மக்கின்டயர் நினைவுக்கு வந்தார். அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு வருவோமே – மனம் தெளிவடையுமே என்ற எண்ணத்துடன் ‘லயனல்வெனட்’ போனேன்... கப்பல் பாட்டை எப்படி சீரமைப்பது என்பதே என் சிரத்தை – கோயில் பாரம்பரியத்தில் பாடுவதென்றால், சரி வராது…”
“இதேபாடலை சோகமாகப் பாடவும் வேகமாகப் பாடவும் இசை கோர்த்தேன்… இதைப் பாடிக் காட்ட (மஹாகவியிடம்) மட்டக்களப்பு சென்றேன்.”
இவை அனைத்தும் எத்தகைய ஒரு மனிதன், எப்படிப்பட்ட வழிகளில், மஹாகவியை, அவரது இறுதிக் காலங்களில், நகர்த்த முற்படுகின்றான் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன.
இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, கைலாசபதியின் கூற்றான, நாடக வெற்றியின், அரைப்பங்கு மஹாகவியைச் சேரும் என்றால் அடுத்த அரைபங்கு தாஸிஸியஸைச் சாரும் என்பது புரியத்தக்கது.
ஆனால், இதைகேட்டு அதிருப்தியுற்று, நாணத்;தால் கூனி குறுகி சாம்பி போகும் தாஸிஸியஸ் கோபத்துடன் ஆட்சேபிக்கையில் கைலாசபதி பின்வரும் கருத்துப்படக் கூறுவார்: “நாடகம் பார்ப்பதற்கு முன்னரும், முருகையன் தந்த இந்நாடகப் பிரதியை ஒரு முறை பார்த்துவிட்டுதான் நாடகம் பார்க்க அரங்குக்கு வந்தேன். ஏழெட்டு பக்கங்களே கொண்ட அந்நாடக பிரதி, 30-35 நிமிடங்களே தாக்குபிடிக்கக் கூடியது - இதனை நீ இரண்டு மணி நேர நாடகமாக மாற்றியிருந்தாய்…” (தாஸிஸியஸ் உரை:1.38.48)

மஹாகவி இறந்த போது கைலாசபதி தாஸிஸியஸின் தோள் மீது கைவைத்து கூறுவார்:

“நீங்கள் இருவரும் இணைந்து மேலும் பத்து பதினைந்து நாடகங்களைத் தமிழுக்கு அளிப்பீர்கள் என்று எண்ணியிருந்தேன்” - இவை அனைத்தும், தாஸிஸியசின் கூற்று. (20.03.2021: மஹாகவி ணுழழஅ ஆநநவiபெ)

மறுபுறத்தில், இது, கைலாசபதியின் பார்வையை, அவரது ஆளுமையை, அவரது தேடல்களை – அவை அனைத்தினதும் ஓர் துளியைக் குறிப்பதாய் உள்ளது. மஹாகவியன் ஆன்மா–அவரது படைப்பின் உருவம், உள்ளடக்கம், நடை - இவை அனைத்தும், ‘குறும்பாவில்’ இருந்து ‘புதியதொரு வீட்டை’ நோக்கி நகர்ந்ததென்றால் - அதன் முழு பொறுப்பும் தாஸிஸியசினை சேரும் எனக் கூறுதல் மிகையாகாது.
இந்நகர்வின், வரலாற்று முக்கியத்துவத்தை இலக்கிய மரபு ரீதியிலும் சரி, நாடக வளர்ச்சியின் அடிப்படையிலும் சரி அல்லது மனித ஆளுமைகளின் பரிணமிப்பு என்ற ரீதியிலும் சரி அல்லது மனித திரள்களுடனான ஒட்டுறவாடல் என்ற கோணத்திலும் சரி – அவையவற்றையும் சுரம் பிரித்து வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தன் தேடல்களின் முற்றிய வடிவத்தை ஏந்தியவராய் இருந்தவர் கைலாசபதி.
ஆனால் இதைவிட, மிக முக்கியமான ஒரு கூற்றினையும் தாஸிஸியஸ் தன் உரையின் போது வெளிப்படுத்தத் தவறவில்லை:
“தாழ்வுபாடில், மஹாகவியின் உடல் நிலையை யோசித்து அவரை படகில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்… அவரின் வருகைக்கு ஒட்டுமொத்தமாய் மறுப்பு தெரிவித்துவிட்டேன்…”ருந்தாலும், மஹாகவி, தாஸிஸியஸ{க்குத் தெரியாமல் மூட்டையுடன் மூட்டையாய் படகில் ஏறி விட்டார். மாலை–இரவு –முழுவதும் பாடல்களாய் நிரப்பப்பெற்றது – மீனவர்களுடன். இருந்தும் பிரதியாக்கத்தின் போது, மஹாகவியின் குறித்த படகு பயணத்திற்குத் தாஸிஸியஸ் மறுப்பு தெரிவித்ததை எண்ணத்தில் கொண்டு, பிரதியில் நலினமாக, அதற்கான கண்டனத்தையும் மஹாகவி ஒளித்து வைத்துவிடத் தவறவில்லை. அது அவரது தனித்திறன். இது குறித்து குறிப்பிடும் தாஸிஸியஸ், “பாடலின் மூன்றாம் நான்காம் வரிகளில் ‘எனக்கான அடி’ இருந்ததை கண்டுகொண்டேன்” என்பார். பிரதியில் (புதியதொரு வீடு) காட்சி ஏழில் பின்வரும் வரிகள் வருகின்றன:

“கட்டுமரம்…… தோணியுண்டு
………
கடல்நிறைய…. … வேலையுண்டு
………
பட்டமரம்…… போல நின்று
பயன் இழக்கும்…… எண்ணம் இல்லை…”

“பட்டமரம், போலநின்று, பயன் இழக்கும் எண்ணம் இல்லை” என்ற மூன்றாம் நான்காம் வரிகள், தான், படகு பயணத்தைத் தடுத்ததை மனதில் கொண்டு மஹாகவியால் எழுதப்பட்ட வரிகள் என்பது தாஸிஸியஸின் கூற்று. தாஸிஸியஸின் வார்த்தைகளில் கூறுவதானால்: “படகேற கூடாது என்று நான் தடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு எனக்கும் மறைமுகமாக தந்த அடி என்று எனக்கு புரிந்தது… நடிகர்களின் முன்னிலையில் நான் இதை கூறாமலும் விடவில்லை… வெண்ணை திருடி அகப்பட்ட குழந்தை கண்ணனை போல் விழித்தார்… விழி பிதுங்கியது… பார்க்க சிரிப்பாக இருந்தது… மஹாகவியும் சிரித்துக்கொண்டார்” (உரை மேலது: 1.44.08 – 1.47.58)

சுருக்கமாய் கூறினால், தன்னையும் மீறி, பிரதிக்குள் கலைஞனின் ‘தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள்’ புகுந்து விடுகின்றன எனலாம்.
ஒரு மாலைக்குள், மீனவ சமூகத்தின் வாழ்வை அறிந்து தெளிவது என்பது முடியாத காரியம். இதனாலோ என்னவோ ‘புதியதொரு வீடு’ம் ஓர் மீனவ வாழ்வின் அன்றாட கதைகளை மீறி ‘செம்மீன்’ வடிவிலான கதையையே நாடுவதாய் உள்ளது. கதையானது மிகவும் சிறியது. நேரடியானது: ஒரு மீனவன் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றான். புயல் அவனை உலகில் எங்கோ ஒரு மூலையில் கொண்டு சென்று இருத்தி வைக்கின்றது…

இப்;படியாக கதையை நகர்த்த முனையும் கவிஞன், கூடவே தாஸிஸியஸை எண்ணி, தனது மேற்சொன்ன, மூன்றாம் நான்காம் வரிகளை திணித்து வைக்காமல் இருப்பதும் அவனுக்கு முடியாத காரியமாகப்போய்விடுகின்றது. மீனவ வாழ்வுக்கும், இப்படி ‘அடி கொடுப்பதற்கும்’ எவ்வித சம்பந்தமும் ஒட்டுறவும் இல்லை என்றாலும், சமயங்களில் ‘பேரொலியை’ கேட்க அவாவுறும் கலைஞனொருவனில் இப்படியான போக்குகள் காணக்கிட்டுவது சகஜமாக இருக்ககூடிய ஒரு நடைமுறையே என்பதில் சந்தேகம் இல்லை.

இவற்றை ஒரு மீனவ வாழ்வுடன் ஒட்டிப்பார்க்குமிடத்து (முரண் தென்படா வகையில் அவை இணைக்கப்பட்டிருப்பினும்) தான் பாட வரும் ஒரு மீனவ வாழ்க்கையை அல்லது ஒரு மீனவ வாழ்வியலை தூக்கி நிறுத்துவதில் அல்லது காட்சிப்படுத்துவதில், இவை ஒரு கலைஞனின் கவனத்தை, அல்லது அவனது எண்ணக்குவிப்பை திசைதிருப்பி விடுமா அல்லது மட்டுப்படுத்தி விடுமா என்பது கேள்வியாகின்றது. அதாவது ‘கிளைப்பல தாங்கேல்’ என்பதனையும் தாண்டி, குறித்த கலையாக்கத்தில் தேவையுறும் கவனக்குவிப்பு இங்கே சிதறடிக்கப்படுகின்றதா – அல்லது, வாழ்வின் வௌ;வேறு நிலைப்பட்ட நலன்களின் மறைமுகமான முரண்கள் இங்கே தம்மை அரங்கேற்றி கொள்கின்றனவா என்பவையெல்லாம் கூட இங்கே தொடர்புபட்ட வினாக்கள்தாம் என்பது தெளிவு. இதுவே அவனுக்கும் (கலைஞனுக்கும்) மீனவ சமூக வாழ்வியலுக்கும் இடையே எழக்கூடிய முரண்பாடாகவும் முகிழ்க்க கூடும் - அதன் உள்ளடக்கத்தை பொறுத்தமட்டில். (குறைந்தபட்சம், மீனவ வாழ்வினது முற்றும் முழுதான அல்லது ஒட்டுமொத்தமான, வாழ்வியல் சாரத்தை படம் பிடிக்க முனையும் ஒரு தருவாயில்). ஒரு வேளை, இத்தகைய பாரிய ஒரு முயற்சிக்கான எண்ணப்பாடே அங்கு இருந்திருக்காமலும் போயிருக்கலாம் என்பது வேறு விடயம். ஆனால், திரு.சண்முகம் சிவலிங்கம் போன்றோர் கோரும், ‘யதார்த்தவாதம் இதுவே, இத்தகைய முனைப்புகளே’ என்றால் யார்தான் என்ன செய்ய கூடும்.

தமிழ் இலக்கிய உலகில் கிராமிய வாழ்வு முன்கொணரும் பல்வேறு அம்சங்களை தத்தமது சொந்த கம்பீரத்துக்காக அல்லது தத்தமது செந்த நலன்கள் பழுதுபடாமல் இருந்து விடுவதற்காக, லயத்துடன் தூக்கிப்பிடிக்கும் சங்கதிகள் நாம் அறிந்த ஒன்றே. இது போலவே அக்குறித்த கிராமிய வாழ்வு கோரக்கூடிய சமூக நீதியும் இவர்களைப் பொறுத்த வரையில் பக்கச்சார்பாக மாறுவதும் புரிந்துக்கொள்ளக் கூடிய ஒன்றே. மிக அண்மையில் பேராசிரியர் நுஃமான் அவர்களின் கூற்று பின்வருமாறு இருக்கின்றது:

“…கிராமபுறத்து விவசாயிகள், நகர்புற வாழ்க்கைக்கு பலியான ஏழைகள், மத்திய தர வரக்கத்தினர் போன்ற ‘சாதாரண மக்கள் வாழ்க்கை மீதே’ மஹாகவியின் பார்வை விழுந்திருப்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன…” (2021).

இருக்கலாம். ஆனால் ‘சாதாரண மக்களின் வாழ்க்கை மீது பார்வை விழுவது’ என்பது அப்படி ஒன்றும் பிரதானமான ஒன்றல்ல. ஏன் விழுகிறது, எதற்காக விழுகிறது, எந்த அடிப்படையில் விழுகின்றது என்பதே முக்கியத்துவப்பட்டு போகும் கேள்விகளாகின்றன.

அதாவது, தனது கம்பீரத்தை தக்கவைத்து முன்னிறுத்திக் கொள்ளவா அல்லது அம்மக்கள் சிந்தக்கூடிய கண்ணீரை முன்னிறுத்தவா என்பதெல்லாம் தொடர்புபட்ட வினாக்களாகி போகின்றன. உதாரணமாக கிராமத்து பாலியல் கதைகள் அல்லது நாட்டார் பாலியல் கதைகள் என்பதெல்லாம் நாம் ஏற்கனவே கேள்வியுற்ற விடயங்கள்தாம்.

இவ்வகையிலேயே, கைலாசபதியின் அணுகுமுறை வித்தியாசப்பட்டு காணக்கிட்டுகின்றது.

இத்தகைய ஓர் பின்னணியிலேயே, மஹாகவி எனும் ஒரு தனிமனிதனை, அவரது இறுதி காலத்தில், தாஸிஸியஸ், மக்கள் திரள் நோக்கி அசைத்தார் என்பதும் நன்றே. இது போலவே, கைலாசபதி எனும் ஆளுமையோ, மறுபுறத்தில், முற்றும் முழுதாய் தமிழ் இலக்கியத்தையே மக்கள் திரள் நோக்கி அசைப்பதில் கவனம் செலுத்தியது, (பாரதி போன்றே), என்பதும் அவதானிக்கத்தக்க ஒன்றே.

ஒரு தனிமனிதன், தன் இறுதிகாலத்தில், மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில், மக்கள் திரளை நோக்கி அசைவதற்கும், மகத்தான இலக்கிய ஆளுமைகள், ஓர் இலக்கிய மரபையே, மக்கள் திரள் நோக்கி அசைப்பதற்கும் இடையிலான இந்த வேறுபாடுகள் சுவாரசியமானது – பிறிதொரு தளத்தில் வாதிக்கதக்கது. இருந்தும், தாஸிஸியஸின் மேற்படி பதிவு, இவ்வகையில், அதிமுக்கியமானது என்பதை மீண்டும் குறித்தாக வேண்டும். ‘மக்கள் திரள்’ பொதிந்து கொண்டுள்ள மூல வளங்கள் – அவற்றின் முக்கியத்துவங்கள், ஓர் கலையில் அல்லது கலைஞனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் எத்தகையானவையாக அமைகின்றன என்பதனையும் மேற்படி சம்பவங்கள் எடுத்து காட்டுவதாக உள்ளது.

வேறு வார்த்தையில் கூறுவதானால் ஒரு காலக்கட்டத்தில், மருதமரங்கள், தமது கொம்பர்களை வளைத்த பின்னணிகளையும் எமக்கு சுட்டுவதாகவும் இவை அமைந்து போகின்றன எனலாம்.

18

சாதாரண மனிதர்களில் இருந்து வித்தியாசப்படும், அசாதாரண மனிதர்கள் குறித்த கருத்துக்கள், பல்வேறு வகையாக ஆற்றப்பட்டுள்ளன.
தனது முதலாவது உத்தியோகத்துக்காய், அதிகாலை மூன்று மணியளவில், நடுங்கும் குளிரில் டில்லியில் ஒரு பிரமாண்டமான விடுதியின் வரவேற்பறையில், பொழுது போகாமல், அருகே கிடக்கும் ஒரு சிறிய நூலை புரட்டும் இளைஞன், அப்துல் கலாம், அந்நூலில் ஓரிடத்தில் காணக்கிட்டும் பின்வரும் கூற்றைக் குறித்து கொள்வார்:

“சாதாரண மனிதர்கள் உலக நடப்புகளுக்கு ஏற்ப தம்மைத்; தகவமைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் அசாதாரண மனிதர்களோ உலகின் நடப்புகளைத் தமக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்வதில் ஈடுபடுகின்றனர். இந்த அசாதாரண மனிதர்களின் நடத்தைகளினாலேயே, உலகம், தான், இதுவரை கண்டிருக்கும் முன்னேற்றங்களை எல்லாம் அடைந்திருக்கின்றது. இவ் அசாதாரண மனிதர்களே, இதன் காரண கர்த்தாக்கள் ஆகின்றார்கள்”

மேற்படி கூற்றை ஆழ்ந்து அவதானித்து வைத்துக்கொள்ளும், அவ் இளைஞன், அப்துல் கலாம், முதிர்ந்த தன் இறுதி நாட்களில், பலவற்றையும் நிதானித்து, மீள் வாசிப்பு செய்து, பின் இறுதியாக, மக்கள் திரளை நோக்கி – முக்கியமாக இளந் தலைமுறையினரை – (மாணவர்களை) நோக்கி அசைய முற்படுகின்றார். இவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க பக்கங்களை ஷமுதலாளித்துவம்’ கோரக்கூடிய, தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான முன்நிபந்தனையான, ‘செழுமைகள்’ என லெனின் பொருள்கோடல் செய்யக்கூடும். மறுபுறம், கார்க்கி, இது தொடர்பில், ‘மனிதனிடம்’ இருக்கக்கூடிய ‘தேடல்கள்;’ அவனை எங்கெங்கு நகர்த்தி சென்று நிறுத்துவதாய் அமையும் என்ற விடயம் குறித்து தனது சொந்த தேடல்களை நடத்துவதாக இருக்கக்கூடும். அதாவது லெனினது பார்வை சமூக அமைப்புகள் என்ற அடிதளத்தில் இருந்து தொடங்குகையில், கார்க்கியின் பார்வையானது, மனிதன் என்ற அடித்தளத்திலிருந்து தொடங்குதலாய் இருத்தல் கூடும். (இருந்தும் கார்க்கியின் இறுதி நூலான கிளிம்மில் ஒரு பாத்திரம் கூறும்: “மனிதனா? அது பிறகு. இப்போது உள்ளவர்களெல்லாம் சா~;டாங்கமாய் காலில் விழத் தெரிந்த அடிமைகளே” என).
இருந்தும், இவ்வித்தியாசங்கள் ஒருபுறமிருக்க, கலாமில் நடந்தேறும் மேற்படி மாற்றங்களை, மிக கறாராக பிரதிபலிக்கும் அவரது இறுதி நூலான ஆல துழரசலெ எமது அனைவரினதும் கவனத்தையும் கோரக்கூடியதே.\

விஞ்ஞானம் என்பது எப்படி அதனுடன் எதுவித சம்பந்தமும் இல்லாத அதிகாரம் கொண்ட மேலாதிக்க குழுமத்தால் அரிக்கப்படுகின்றது அல்லது தின்று தீர்க்கப்படுகின்றது என்பதும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், தமது உயிரைப் பணயம் வைத்து கட்டியெழுப்பப்படும் ஒரு மேலான விஞ்ஞான துறையை, எப்படி தம் தம் பொருளியல் மேம்பாட்டிற்காய் பேராசையுடன் அணுகுகின்றார்கள் என்பதுவும் - இப்பின்னணியில், ஓர் துறையின் நலனுக்காக (அல்லது அத்துறையின் உயிர் மூச்சுக்காக), தான் விட்டகன்ற, அல்லது விட்டுப்பிரிந்த தனது குடும்பம், தன் எளிமையான அன்னை அல்லது சாதாரண – ஏழ்மைப்பட்ட மனிதர்கள் அல்லது மக்கள் சாரிகள் என்ன பயனைத்தான் இறுதிக் கணிப்பில் பெற்றனர் -போன்ற கேள்விகளை, கலாமின் ஆல துழரசநெல மறைமுகமாக முன்வைப்பதாகின்றது.
அதாவது, மனிதர்கள் சாதித்த இத்துறையின் வளர்ச்சி அல்லது இத்துறைச்சார்ந்த சாதனைகள் சாதாரண மக்களைச் சென்றடைந்ததா என்பதே இங்கே அடிப்படை கேள்வியாகின்றது.

வேறு வார்த்தையில் கூறினால், தன் இறுதி காலங்களில், கலாம், இரண்டு அம்சங்களை புரிந்து வைத்துக் கொள்கின்றார். ஒன்று, தன் வாழ்க்கை அர்ப்பணம் முழுவதும் தற்போது யாரால் - எச்சக்திகளால் பாவித்துக் கொள்ளப்படுகின்றது என்பதனையும், அது அடிப்படையில் தன்னை உருவாக்கிய மக்கள் திரளுக்;கு இழைக்கப்படும் துரோகங்களின் அடக்கம் தான் என்பதனையும் அவர் கண்டுக் கொள்ள முனைகின்றார். இதுவே அவரை அவரது இறுதிக் கணங்களில் அவரை மக்கள் திரள் நோக்கி நகர்த்துவதாக அமைகின்றது.(முக்கியமாக இளம் தலைமுறையினரை நோக்கி).

கலாமின் மேற்படி நகர்வுகளின் பின்னணியில், அதாவது அசாதாரண மனிதர்கள் தொடர்பிலான மேற்படி கோட்பாட்டில் இருந்து, சாதாரண மக்கள் திரள் நோக்கி, சாதாரண மனித சாரிகள் நோக்கி இறுதியாய் கலாம் இப்படியாய் அசைந்த ஓர் பின்னணியில், மேற்படி கோட்பாடுகள் பார்க்கத்தக்கவைதாம்.

ஆல துழரசலெ யில், அருண் திவாரி, கலாமிடம் கேட்பார்: “கலாம்ஜீ… உங்கள் வாழ்வு முழுவதனையும், ஒரு வரியில் தொகுத்துக் கூற முடியுமா...?”

“… அன்பு”… “குழந்தைப் பருவத்தில், என்மீது கொட்டப்பட்ட அளவற்ற அன்பு”… “பின், வாழ்வுக்கான போர்”… “சவால் மிக்க போர்”… பின் கண்ணீர், கண்ணீர், கண்ணீர்…வலிகள் மிகுந்த கண்ணீர்… பின் இனிப்பூட்டிய கண்ணீர்… பின்னர், அனைத்தையும் முழுதாய் பார்க்குமிடத்து… வாழ்வு… அழகுற… பூரணம் பெறுவதாய்… வட்டநிலா போன்று…”

இவ்வரிகளில், கலாம் என்ற மனிதன் உருவெடுப்பதற்கான மூலங்களை நாம் காணலாம். மனிதர்கள், தம் அர்ப்பணிப்புகளைக் கொட்டி ஓர் ஆளுமையைக் கட்டியெழுப்பும் விந்தையைக் காணலாம். இதனாலோ என்னவோ, இவ்உண்மையை உள்வாங்கும் கலாமின் இறுதி நூல்களும் நகர்வுகளும் கலாம் என்ற மனிதன், சாதாரண மக்கள் சாரிகளை நோக்கி அசையத் தொடங்குவதைக் காட்டுவதாக இருக்கின்றது. அதாவது, தனது செழுமைகளுக்கு ஏதோ ஒரு வழியில், காரணக்கர்த்தாவாகும் மக்கள் திரள், அச்செழுமைகளின் பெருபேறுகளில் இருந்து முற்றாய் அந்நியப்படுத்தி எத்தித் தள்ளப்படுவதையும் பெறுபேறுகள் எங்கெங்கோ சென்றடைந்து கொள்வதனையும் கலாம் என்ற மனிதன் தன் நீதி நியாய அடிப்படையில் கண்டு கொள்கின்றான்.

இதுவே அவனையும் ‘அசாதாரண மனிதர்’ பொறுத்த கோட்பாட்டினையும் வேறுபிரித்தறியும் எல்லைக்கோடுவுமாகின்றது.
அசாதாரண மனிதர்கள் சம்பந்தமான கோட்பாட்டின் சொந்தகாரர்களாக இருப்பவர்கள் பேர்னாட்~hவும் நீட்சேயும் என்பதும் குறிக்கத்தக்கது.
பேர்னாட்~h, ஹிட்லரையும் நாசிகளையும் தனது மேற்படி கோட்பாட்டின் உச்ச உதாரண புரு~ர்களாய் கண்டுக்களித்த போது, ஹிட்லரும் நாசிகளும், தமது ஊட்டச்சத்தை நீட்சேயிடம் இருந்தே பெற்றதாக கூறி நின்றனர்.

அதாவது, ‘நீட்சே – அசாதாரண மனிதர் - ஹிட்லர் - பேர்னாட்~h’ என்ற சங்கிலி கோர்வை வரலாற்றின் ஒரு கட்டத்தில் மேலெழும்புகின்றது.
இப்பார்வைக்கு நேரெதிரான பார்வையாய் மார்க்ஸிஸ்டுகளின் பார்வை முன்னகர்த்தப்படுகின்றது. உலகம் அடைந்த அனைத்து முன்னேற்றங்களுக்கும், நேரடியான அல்லது மறைமுகமான பங்களிப்புகள், மக்கள் திரளின் பங்கேற்பால் அல்லது அவர்களது அனுபவ பகிர்வால்தான்; சாத்தியமுறுகின்றது எனும் கோட்பாடு முன்னிறுத்தப்படுகின்றது. நீட்சே தொடர்பிலான கார்க்கியின் கூற்று வருமாறு:
“நீட்சேயின் சமுதாய விஞ்ஞானத்தின் அடிப்படை கருத்து மிக மிக எளிமையானது. வாழ்க்கையின் உண்மையான நோக்கம் மேல் சாதிகளை – அதீத மனிதர்களை – அதாவது, அசாதாரண மனிதர்களைப் படைத்தளிப்பது தான். இதைத் தொடர்ந்து அடிமை முறையும் அவசியமான ஒன்றாக இருந்து வர கூடியதே… இந்த மெய்ஞானம் எஜமானர்களால் எஜமானர்களுக்காக ஏற்பட்டது… எஜமானர்களின் ஆட்சிமுறையை நியாயப்படுத்துவதுதான் இதன் நோக்கம்… ஜெர்மனியில் சோ~லிசம் வளர்ந்ததினாலேயே நீட்சே இதைப் பரப்பினார் என்றும் சொல்லலாம்… நம் காலத்தி;ல் இது பாசிஸ்டுகளுக்கு மிகப் பிடித்தமான ஆன்மீக உணவாகும்” ப-210

ஜெர்மனியில், சோ~லிசம் வளர முற்பட்ட ஆபத்தானக் கணங்களில், நீட்சேயின் ‘அசாதாரண மனிதர்’ பற்றிய மேற்படி தத்துவம் முன்னெடுக்கப்பட்டு, ஹிட்லரது காலம் வரை நீடிக்கச்செய்யப்பட்டது. மறுபுறத்தே, அதே அடித்தளங்களில் இருந்து, இன்று, வேறொரு பாi~யில், அசோகமித்திரன்களாலும் ஜெயமோகன்களாலும் ‘சாதாரண மனிதர்களின்’ கதை முன்னகர்த்தப்படுகின்றது. இறுதிகணிப்பில், இவ்விரண்டுமே வித்தியாசமற்றதாகின்றது.

ஏனெனில் இரண்டுமே, அடிமை முறைகள் தொடர்வதற்காக, வௌ;வேறு மொழியில் வாதிடுபவைதாம். ஆனால் வெளிப்பாடு என்னவோ,‘வாழ்வியல் அம்சங்களை’ தேடுவதாகவே அமையும் - அசோகமித்திரர்களை போல. இதே போன்றே, இதற்கு மாறான எழுத்துக்களும், பாரதி காலம் தொட்டு, தெளிவுற வரலாற்றில் முன்னகர்த்தப்பட்டே வந்துள்ளன எனலாம். இது இருவேறு பார்வைகளைப் பிரதிபலிப்பது.

19

பாரதியின் கண்முன் வாழ்க்கை விரிந்தது. இதன் பரப்பளவை ஒரு சாதாரண மனிதனோ அல்லது ஒரு சாதாரண மனிதனை பாடும் கலைஞனோ எட்டிப்பிடிப்பது சற்றே கடினமான விடயம்தான். ஒரு முள்ளிவாய்க்காலின் பரப்பெல்லையை விட, பாரதி காலத்தின் விரிப்பானது, பன் மடங்கு அதிகமானது. (திலக் முதல் ஜாலியன் வாலா பாக் படுகொலைகள், நாட்டின் மக்களை அதிரடியாக ஈர்த்தெடுத்து குலுக்கிய தேசிய விடுதலை இயக்க போராட்டங்கள் வரையிலான விரிவுகள் என ஒரு வசதிக்காய் குறுக்கிக்;கொண்டாலும் கூட அவன் காலத்து விரிப்பு அதிகமானதுதான்). மறுபார்வையில், கைலாசபதி கூறுமாப்போல் ‘சித்தாந்தங்களைத் தேடும்’ எல்லைகளையும் ‘மேற்படி’ பரப்பெல்லைகளும், அப்பரப்பெல்லைகளை குறிப்பிட்ட மனிதன் தீண்டும் பரிமாணங்களும், தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. மொத்தத்தில், இவை ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்து, ஒன்றை ஒன்று ஊக்கப்படுத்தி, தம் சுழல்வட்டத்தின் உச்சியினை நோக்கி நகரும் செய்கையாகின்றது.
இக்காரணத்தினாலேயே, யார்-எவர், எவ்வட்டத்துள் அடங்கி போனார்கள் என்பதும் யார் எவர் அவ்வட்டத்தை விட்டு வெளியே வந்து இவ்வுலகை அரவணைக்கும் விசால பார்வையை தம்முள் உருவாக்கி கொண்டார்கள் என்பதும் தொடர்புபட்ட வினாக்களாகின்றது. இவ்வகைகளிலேயே, பாரதி காலம் உருவாக்கித் தந்த மாபெரும் சித்திரமாக இருக்கின்றான். அவனைத் தாண்டுவது விருப்பத்துக்குரியதுதான் என்றாலும் சற்றே சவாலுக்குரியதுதான்.

பாரதிக்குப் பிறகு கருத்துலகும் சரி, கவிதை உலகமும் சரி தமிழைப் பொறுத்தமட்டில் எப்படி எப்படியெல்லாமோ வளர்ந்து கிளைத்திருக்கலாம்.
ஆனால் இன்னுமொரு பாரதி–அவனது உருவாக்கம்- அது இன்று வரை கேள்வியாக மாத்திரம் இருக்கின்றது - இருத்தலும் தகும்.
ஒருமுறை கவிதை மனம் பட்டு, கூறப்பட்டது போல், இன்னுமொரு பாரதி, அவன் - ஓர் பிரளயத்தில் உருவாகலாம். – அல்லது அவனே ஒரு பிரளயத்தை உருவாக்கி கொள்ளலாம் என்றாகின்றது. சுருக்கமாகக் கூறினால் பெயரளவில் வேண்டுமானால் இருக்கலாம் - ஆனால் பிரளயத்திற்கு போவதெங்கே எனும் கேள்வி மிஞ்சவே செய்கின்றது.


20

இருந்தும், மஹாகவியின், ரசிகர் வட்டம், (பேராசிரியர் மணிகண்டன் முதல் சாலை இளந்திரையன் வரை என ஒரு வசதிக்காய் கூறிவைத்தாலும்) - கிளைபிரிந்தும் பரந்துபட்டதாயும் இருப்பது ஏன் - முக்கியமாக நீலாவணன் போன்ற கவிஞர்களோடு ஒப்பிடும் போது என்பது மு. பொன்னம்பலம் போன்றோர் எழுப்பும் அழுத்தமான கேள்வியாக இருக்கின்றது. மு.பொன்னம்பலத்தின் வார்த்தைகளிலேயே கூறுவதானால்:

“நீலாவணனை விட மஹாகவி பேசப்படுவதற்குரிய காரணம் என்ன” அல்லது “மஹாகவியின் முக்கியத்துவம் எதனால் ஏற்படுகின்றது” என்பார் அவர். ப-231 – 233

பொன்னம்பலத்தின் இக்கேள்வியில் பொருளில்லாமல் இல்லை. நீலாவணன் உட்பட இன்னும் சில கவிஞர்களும் யதார்த்த பண்பும் பேச்சோசையும் மேலோங்க சிறந்த கவிதைகளை எழுதியோர் தான் என்பார் அவர். கூறுவார்: “தான்தோன்றி கவிராயர், முருகையன், நீலாவணன் போன்றோரும் யதார்த்தபூர்வமாய் பேச்சோசை பண்பு மிளிர கவிதைகள் எழுதினர்” ப-234

“தான்தோன்றி கவிராயர் மஹாகவியை போல் அல்லது அவரையும் மிஞ்சும் வண்ணம் பேச்சோசை கைவரப்பெற்றவர். ‘வாடா பொடியா, வந்திங்கால் உட்காரு, சோடா குடியன்” என்றளவுக்கு அத்தனை மலினப்படுத்தியும் போகக்கூடிய பேச்சோசைகாரர் இவர்… ஆயினும் இவருக்கு மஹாகவியின் முக்கியத்துவம் கிடைக்கவில்லை…” ப-235

சுருக்கமாகக் கூறினால் ‘சோடா குடிப்பதைத்’ தாண்டி மஹாகவியில் காணப்பட்ட ‘கலையாக்க நெறி’ யாது என்ற கேள்விக்கு அழுத்தம் தர பொன்னம்பலம் தவறவில்லை. உண்மையில் இக்கேள்வியை, பேராசிரியர் நுஃமானின் பின்வரும் கூற்றிலிருந்தே, கறாராக அவர் வரையறுத்து கொள்கின்றார் எனலாம்:

“மஹாகவி கையாண்ட ‘கலையாக்க நெறி’யே இந்த நூற்றாண்டின் பிற தமிழ்க் கவிஞர்கள் அனைவரிலும் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டும் முதன்மையான அம்சம் எனலாம்” ப-234

வேறு வார்த்தையில் கூறுவதானால், மஹாகவியின் ‘கலையாக்க நெறி’ யாது – அது நீலாவணன் போன்றோரிடமிருந்து (அல்லது முருகையன் போன்றோரிடம் இருந்து) எவ்வகையில் வேறுபட்டது - இது ‘எப்படி’ அவர் பரவலாகப் பேசப்படுவதற்கான காரணமும் ஆயிற்று என்பதுவே அவரது கேள்விகளாகும்.

மேற்படி கேள்விகளை அணுகும் போதே, மஹாகவி, செய்யுள் நடையை புதிய ஓர் கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார்É பேச்சோசையை முதன்மைபடுத்தினார்É யதார்த்த பண்பு கொண்டு கவிதைகளை தீட்டினார் - மானுடத்தை அல்லது சமத்துவத்தை பொதித்து வைத்தார் - கட்புல காட்சியை படைத்தளித்தார்…, இத்தியாதிகள் - போன்ற இவை அனைத்து பண்புகளும், ஏனைய அல்லது மற்றைய கவிஞர்களிலும் காணப்பட்ட பண்பே என்ற முடிவுக்கும் அவர் வந்து சேர்ந்து விடுகின்றார்.

இந்தப் பின்னணியிலேயே அவரது கேள்வி மீளவும் அழுத்தம் பெறுவதாகின்றது: “(இருந்தும்) நீலாவணனை விட மஹாகவி போற்றப்படுவதற்குரிய காரணம் என்ன அல்லது மஹாகவியின் முக்கியத்துவம் எதனால் ஏற்படுகின்றது என்பதுவே”
இதற்கான ‘அவரது’ பதிலை நேரடியாகவும், சுருக்கமாகவும் (சற்றே கொச்சைப்படுத்தியாயினும்) கூறுவதெனில்:

1. ஒன்று, மஹாகவி ஏனையவரை விட அதிக கவிதைகள் எழுதினார். (நீண்ட காலம் - சிறிய தனிக்கவிதைகள் முதல், வில்லுப்பாட்டு, நெடுங்கவிதை, கவிதை நாடகங்கள் என்றளவில்).

2. மற்றது, வாசித்த ரசிகர் கூட்டம் சிறுமூளை படைத்தது – அல்லது ஓரளவில் மந்த மூளை படைத்தது என்பதுவுமாகும். மேல் காணப்படும் இரண்டு காரணங்களும், பொன்னம்பலத்தாரால் விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இதில் அவர் கூறும் இரண்டாவது காரணியை அவர் பின்வருமாறு விளக்குவார்.

“மஹாகவியின் ஈர்ப்புக்குள்…விழுந்து விழுந்து…அற்ப வி~யங்களையும் நுணுகி நுணுகி மேய்ந்த … காரணம்… புரியாமையே…” ப-237
மேற்கண்ட பொன்னம்பலத்தாரின் கூற்றானது நீலாவணனின் கவிதைகளின் பின்னணியில், மஹாகவி தொடர்பாய் ஆற்றப்பட்டள்ள கூற்று என்ற போதிலும் - சுருக்கினால் விடயமானது, மேலே காட்டப்பட்டதாகத்தான் இருக்கும் – ‘மந்தபுத்தி’ அல்லது ‘புரியாமை’ என்பதாகவே ஆகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

அதாவது, நீலாவணன் போன்றோர் ‘கருத்தாழம்’ மிக்க கவிதைகளை எழுதினர் என்றாலும், இக்காரணம் நிமித்தமே அவர் பலராலும் புரிந்துக்கொள்ளப்பட முடியாமல் இருந்தார் என்பதும், இதற்கு எதிரமறையாய் மஹாகவி ‘கருத்தாழமற்ற’, அற்ப கவிதைகளை எழுதினார் என்பதும் இதனாலேயே அவர் நோக்கிய ஈர்ப்பு ஒப்பீட்டளவில் பன்மடங்கு அதிகமாய் இருந்தது என்பதும் பொன்னம்பலத்தாரின் கருத்தாக இருக்கின்றது:

“பேச்சோசை பண்பு, அதன் போக்கில் கருத்துக்கோ (அல்லது) கருத்தாழ நோக்குக்கோ - இடமற்ற சம்பவ விவரணை அல்லது யதார்த்தம் எனும் மஹாகவியின் வரையறைகளே, கவிதா சிரு~;டியின் உச்சங்கள் எனும் சரிவுக்கு இடமளித்துள்ளன…” ப – 236

மேற்படி கூற்றில், மஹாகவியில் அடங்கிய பேச்சோசை பண்பு, சம்பவ விவரணை அல்லது யதார்த்தம் - அல்லது கட்புல காட்சி - யாவும் இருந்தாலும் - அவரது கவிதை வரிகள் ‘கருத்தாழமற்றவையே’ என்ற முடிவுக்கு வந்து சேர்கிறார் பொன்னம்பலம்.

இக்கருத்தாழமற்ற தன்மை, பொதுவில் மஹாகவியின் கவிதைகளால் ‘சரிவுக்கு’ இடமளித்துள்ளன என்பதுவும், இவை சாத்தியமுற ஏதுவாகும் பிரதான காரணங்களில், தலையானது, வாசக மஹாஜனங்களின் ‘புரியாமையே’ என்பதுவும் பொன்னம்பலத்தின் முடிவாகின்றது.
இதற்கான நியாயப்பாடுகளை அவர் கூறாமலும் இல்லை.

அவரது நியாயப்பாடுகளில் முக்கியமானது பாரதியாகட்டும் அல்லது நீலவாணனாகட்டும் அவர்கள், ஆத்ம விசாரங்களில் சஞ்சரித்தார்கள் என்பதுவும் - அதனால், அவர்கள் பயணித்த தளமே வித்தியாசம் பெற்றதாய் இருந்தது என்பதுவுமாகும். மேலும், இதுவே அவர்களது பலமும், பலவீனமும் ஆகின்றது என்ற வகையில் அபிப்ராயப்பட துணிகின்றார் பொன்னம்பலம்.

அதாவது, மகாஜனங்களுக்கு புரியாத தளங்களில் பாரதியும், நீலாவணனும் தம் கவிதையை படைத்தனர் என்பதுவும் மறுபுறத்தில், மஹாகவியோ யாவரும் புரிந்துக் கொள்ளக்கூடிய அளவில் ஒரு தாழ்ந்த தளத்தில் பயணித்தார் - மேலும் அவரது கவிதைகள் ‘இதம்’ விளைவிப்பன என்றளவில் முற்று பெற்றதால், அவை பெரிதும் உவந்து வரவேற்கப்பட்டன என்பதுவே பொன்னம்பலத்தின் கூற்றின் சாரமாகின்றது.

ஒருபுறம், “மஹாகவியின் ஈர்ப்புகளில் விழுந்து அற்ப விடயங்களை நுணுகி மேய்ந்ததின் காரணம்… புரியாமையே…” என்பதும் மறுபுறத்தே, “… மஹாகவியின் கவிதை … விளைவிக்கும் சுதந்திரமே இதம் தருவதுதான்…(அவை) ‘இதமூட்டவே’ … செய்யும்” என்ற முடிவுகளுக்கும் ஒருங்கே வந்து சேர்கின்றார் பொன்னம்பலம். ப- 236, 239

மேலும் இது தொடர்பில் கூறுவார்:

“இந்த இதமூட்டலே மஹாகவியின் கவிதைகளைப் பொறுத்தவரையில் ஒரு ஆபத்துக்கும் வழிவகுத்துள்ளது. அதாவது இதம் தரும் மஹாகவியின் கவிதைகளை இலக்கியத்தின் சிகரமாகவும் சிலரால் கொண்டாடப்படும் போது இந்த ஆபத்தை தான் உணர்கின்றோம்…” ப-240

இதைவிட, “மஹாகவிக்கு முரண்கள் பற்றிய பிரஞ்ஞையோ, வாழ்வு பொறுத்த விசாரணைகள் குறித்த அக்கறைகளோ அல்லது பாரதி கொண்டிருந்தது போல் ஆத்மார்த்த பண்போ இருக்கவில்லை” என்றும் எடுத்துரைப்பார் பொன்னம்பலம். ப-248-251)

மொத்தத்தில் இப்படி வாழ்க்கை நோக்கு பற்றிய ஒரு தெளிவான சிந்தனை இருக்கவில்லை. (ப-248) என்பதாலேயே மஹாகவி “அப்பனே மகனாகி உயிர் ஓய்தலற்று உயர்வடைவதாம்” என்பது போன்ற ‘மலட்டு தனமான’ கோட்பாடுகளும் வந்து சேர நேரிடுகின்றது என்றும் முடிப்பார். இது தொடர்பில் அவர் சற்று நகைச்சுவையுடன், அப்பனே மகனாகி என்றால் குழந்தையற்ற தம்பதிகள் வி~யம் என்னாவது என்பது போன்ற நகைச்சுவை துணுக்குகளையும் தன் கட்டுரையில் சேர்த்து கொள்ள தலைப்படுகின்றார். (இவ்வகையில், முள்ளிவாய்க்கால் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுத்திய பல்வேறு வகையான அவல நிலைமைகளும் கவனிக்கத்தக்கதே). ப-256

இருந்தும், பொன்னம்பலத்தின் மஹாகவிக்கான நிராகரிப்பு இப்படியாக இருந்த போதிலும், அவர் மஹாகவி பொறுத்த சில முக்கிய விடயங்களை, முதல் தடவையாக, முன்வைப்பதாக தெரிகின்றது. மஹாகவியுடனான, அவரது தனிப்பட்ட உறவாடுகைகளின் போது எழுந்தவைகள் என்பதனாலும், ‘மஹாகவி பற்றிய புரிதல்’ என்ற ரீதியிலும் பொன்னம்பலம் கூறும் பின்வரும் கூற்றுக்கள் முக்கியத்துவப்படுகின்றன:

1. ஒன்று, மஹாகவியின் பாஞ்சாலி சபதம் குறித்த கூற்று:

“ ஒருமுறை பாஞ்சாலி சபதம் பற்றி என்னுடன் பேசும் பொழுது ‘ஆங்கொரு கல்லை’ என்று பாரதி அதற்கு அவையடக்கமாக எழுதிய இரண்டடொரு கவிதைகளே தேறக்கூடியவை…” என்று மஹாகவி தன்னிடம் கூறினார் என்பது. ப-251

2. மஹாகவி, …. பிற எழுத்தாளர்களின் தரமான ஆக்கங்களையோ, அறிவு சம்பந்தப்பட்ட நூல்களையோ, படிக்க அவாவினார் இல்லை. அப்படி படித்து கொண்டிருப்பதற்குள் எவ்வளவோ எழுதி விடலாம் என்ற ரீதியில் ஒருமுறை எனக்கு நேரடியாக சொல்லியுள்ளார்…” ப-249
(இப்படியானவர்கள் கணிசமானவர்கள்: கார்க்கியின் கிளிம் சாம்கினும் இப்படியாகவே சிந்திக்கத் தலைப்படுவது தற்செயல் சம்பவமல்ல: விளக்கத்திற்கு பின்குறிப்பை பார்க்க). ழூழூழூ

3. “அவரிடம் வழிவந்த சமய உண்மைகளின் ஆழமோ அல்லது இடதுசாரி அரசியல் பொருளாதார நோக்கின் தேவையோ வேர் கொள்ளவில்லை… இன்றைய புத்திஜீவிகளிடம் காணப்படும் இருப்புவாதம் போன்ற பிற வாதங்களும் அவரை ஆட்கொள்ளவில்லை… ஒரு வித Pயபயn நிலையிலேயே இருந்தார்…” ப-249

மஹாகவி பொறுத்த, பொன்னம்பலத்தின் மேற்படி கூற்றுகளும் அவதானிப்புகளும், மஹாகவியை புரிதல் தொடர்பில், மிக மிக முக்கியமானவை என்பதில் ஐயமில்லை.

இவற்றையெல்லாம், (அதாவது, மேல்கண்டவாறு முன்வைக்கப்படும் கருத்துக்கள் உள்ளடங்களாக யாவற்றையும்) மொத்தமாய் தொகுத்தெடுத்து, அவர், மஹாகவி தொடர்பில் பின்வரும் தீர்மானங்களுக்கு வந்து சேர்கிறார்: “மஹாகவியிடம் கருத்தாழம் இல்லை, ஆத்மார்த்தமான வாழ்க்கை முறையும் இல்லை, வாழ்க்கை நோக்கு பற்றி ஒரு தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை”.
பொன்னம்பலத்தின் ‘மெய்ஞான அடிப்படையிலான’ (அல்லது பேராசிரியர் நுஃமானின் வார்த்தைகளில் ‘நவீன ஆன்மீகவாத’ அடிப்படையிலான), மஹாகவி பொறுத்த மேற்படி நிராகரிப்புகள் ஒரு புறம் இருக்க, மறுபுறமாய் அவர், மஹாகவியிடம் கருத்தாழமோ அல்லது ஆழமான வாழ்க்கை நோக்கு பற்றிய தெளிவான சிந்தனையோ இல்லை என்ற முடிவுக்கு வருவதை நாம் கேள்விக்குட்;படுத்த வேண்டியுள்ளது.
அதாவது, மஹாகவியிடம் கருத்தாழம் இருக்கவே செய்தது. ஆனால் ‘யாருடைய’ கருத்தாழம் என்பதிது என்பதே முக்கியத்துவப்பட்டு போகும் சங்கதியாகின்றது.

அதாவது, மஹாகவியை சற்றே நிதானித்து பார்க்குமிடத்து, மஹாகவியிடம் குறித்த வட்டத்தினருக்கே உரிய கருத்தாழமும், குறித்த வாழ்க்கை நோக்கும், குறித்த அரசியலும் இருந்தது என்பது வெளிப்பட்டு விடும். இருந்தும், இவை யாவை – எவை என்பதே, இங்கு, முன்னிலை நோக்கி நகரும் கேள்வியாகின்றது.

ஒரு மத்தியதர வர்க்கத்து இருப்பை, இவர் சற்றேனும் குழப்பிவிடாமல் நாசூக்காக விடயங்களை நகர்த்துவது மாத்திரமல்ல – ஆனால் அவர்களின் சமரசம் மிகுந்த வாழ்க்கை முறைக்கு அல்லது தத்துவங்களுக்கு அல்லது தாவல்களுக்கு அல்லது அவர்களின் வாழ்க்கை பாடலுக்கு இவர் அழுத்தமான, ‘இதமான’ ஓர் அடித்தளத்தை அமைத்து தருவதில் வெற்றி காண்கின்றார் என்பதிலேயே இவரது முக்கியத்துவம் மேலெழுவதாய் அமைகின்றது. இதனை அவரது அடிப்படைகளில் ஒன்றாக நாம் கருதத் துணியலாம்.

அதாவது, இந்த, ‘தொந்தரவுபடுத்தாத’ (அல்லது குழப்பிவிடாத) ‘இதமான’ பாடல்களை தரும் நாகரீகமே, பலருக்கும் அவரில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் தலையாய காரணியாக அமைகின்றது எனலாம். மானுடம் பேசுவதாயின் - பேசட்டும் - தாமரை இலை தண்ணீர் போல – பேசிக் கொள்வோம். ஜீவகாருண்யம்? அதையும் பேசுவோம்: பூச்சி முதல் ‘மாட்டை கடிப்பவர்கள்’ வரை (கோடை) – பேசலாம். சமத்துவம் பேசுவதாயின், என்ன – அதையும் போகிற போக்கில் பேசிக் கொள்வோம். இதேபோன்று சாதீய விடயங்களை வேண்டுமானாலும் பேசுவோம்.
ஆனால் சமூக முரண்பாடுகளில், நிர்ணயமான பக்கசார்பு கொள்வதனை கோரும் அல்லது தூண்டும் வரிகள் அல்லது செயலூக்கத்தை நோக்கி நெட்டித்தள்ளும் அல்லது சமூக கடப்பாடு என்ற ரீதியில் வாசகனிடத்து ஆத்ம நெருக்கடிகளையும், விசாரணைகளையும் ஏற்படுத்திவிடும் வரிகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியன என்ற ஓர் கருத்தாழம் மிக்க அரசியல் இவரது இதமான பாடல்களின் பின்புலமாய் அமைந்து போகிறது எனலாம்.

தளர்ந்த ஒரு வாழ்க்கை நெறிமுறையை அல்லது தளர்ந்த ஒரு கொள்கை நெறிமுறையை அல்லது தளர்வுற்ற ஒரு வாழ்க்கை போக்கை முன்னிறுத்தும் மனிதனை தமது கதாநாயகனாகக் கொண்ட அல்லது தமது இலக்கிய நெறியாக கொண்ட ஒரு கலைஞன் கிடைப்பானா என ஏங்கும் ஒரு குறித்த வட்டத்தினர் அல்லது குறித்த வட்டம், மஹாகவியை நுணுக்கமாகக் கண்டுணர்ந்து கொள்கின்றது - இவர்களுக்கு மஹாகவி அல்லது மஹாகவியின் எழுத்துக்கள், இவ்வகையில், ஒரு வரபிரசாதமாகவே அமைந்து போகின்றன. சுருங்ககூறினால், நிர்வாக சேவை தேர்வு எழுதுபவர்களும் தமக்குரிய கவிதைகளை ‘எழுதவே’ செய்வர் என்பது போல் நிர்வாக சேவை தேர்வு எழுத கூடிய கூட்டத்தினரும், தமக்குரிய கவிதைகளை ‘தேடவே’ முனைவர் என்றாகின்றது.

இவ்விரண்டு பண்புகளின் ஒன்று சேர்க்கையே, (அதாவது, கலைஞனினதும், அவனது ரசிக வட்டத்தினதும் ஒன்று சேர்ந்த அகவிருப்பே) பேராசிரியர் நுஃமான் தேடும், மஹாகவியின் ‘கலையாக்க நெறி’ யில் ஒலிக்க செய்கின்றது. இதுவே, அவர் ஏனையவர்களை விட பரவலாக பேசப்படுகின்றார் என்பதற்குமான காரணமுமாகின்றது. வாழ்க்கையில், இத்தகைய ஒரு நெறியை தன் தார்மீக அடித்தளமாகக் கொண்டே மஹாகவி தன் கலையாக்க நெறியை கட்டமைத்துள்ளார் எனலாம். எனவேத்தான், அவருக்கு சமய உண்மைகளில் ஞானமோ, அல்லது பாஞ்சாலி சபதத்தின் அடிப்படைகளோ அல்லது இருப்பு வாதம் போன்ற தேவைப்பாடுகளோ இல்லாது போகின்றது. இத்தகைய ஓர் பார்வைக்கூடாகவே அவர் கவிதையையும் தீண்டினார், வாழ்வின் இருப்பு, காதல், வாழ்க்கையின் பின்னரான அர்த்தப்பாடு – உட்பட பல்வேறுபட்ட அம்சங்களையும் தீண்டினார்.

பொன்னம்பலம் மேற்கொள் காட்டும், “பஸ் கண்டக்கடர் தவறுதலாக கூடுதலாக கொடுத்துவிட்ட காசை, ஏழ்மையின் காரணத்தால் திருப்பி கொடுக்காது போகும் ஒரு பிரயாணியின் செயலை சுட்டிக்காட்டி ‘காசற்றவர் நாம். நேர்மை எமக்கு சரி வராது’ என 1955 இல் எழுதிய மஹாகவி இதற்கு பின்னர் நேரடியாக இவற்றை கையாண்டிருக்காவிட்டாலும், இவற்றில் இழையோடும், ஒரு அரசியலை அவர் இறுதி வரை கைவிட்டதாக இல்லை – தளங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம் எனலாம்.

மொத்தத்தில் மஹாகவி ‘குறித்த’ (அல்லது தேர்வு செய்யப்பட்ட) அன்;றாட வாழ்வை நோக்கித் திரும்பினார் என்றால், அதற்குரிய தலையாய காரணம் - சண்முகம் சிவலிங்கம் அபிப்பிராயப்படுவது போல – கௌரவ குறைச்சலோ அல்லது அது போன்ற வேறு காரணிகளோ அல்ல – மாறாக பாஞ்சாலி சபதத்தில், தனக்குரிய இரண்டொரு வரிகளை மாத்திரம் தேர்ந்து கொள்வது போல, தனக்கு தோதான, ஜீவித்திருக்கும் களங்களை நோக்கி அசைந்து செல்வதே அவரது போக்கிடமாகின்றது. வேறு போக்கிடம் அவருக்கில்லை.

அதாவது முழு பாஞ்சாலி சபதத்திலும், பாரதி துவக்கத்தில் அவையடக்கமாக எழுதியிருந்த பராசக்தி வணக்கமே ‘ஆங்கொரு கல்லை…’ என இரண்டாம் பாகத்தின், நுழைவாயிலில் காணக்கிட்டுகின்றது. இவை போன்ற ஓரிரண்டை தவிர்த்து, மற்றவை தேறாது என அவர் முடிவு செய்து கொள்வது, குறித்த வட்டத்தின் பண்பலைகளை காட்டி நிற்கின்றது. அதற்கேற்ப அவர்களது ஈர்ப்புகளும் அமைந்து போகின்றது.
உதாரணமாக, பாரதியின் பாஞ்சாலி சபதம் என்பது, சம்பவங்களை கட்டுவித்த முறைமை என கொண்டாலும் சரி, அல்லது பாத்திர வார்ப்பின் தர்க்கங்கள் என எடுத்து கொண்டாலும் சரி, அல்லது அன்றிருந்திருக்க கூடிய அரசியல் ஓட்டங்கள் - அரசியல் தலைமைகள் - சூழல்கள் பொறுத்த விமர்சனம் என கொண்டாலும் சரி அல்லது இவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து அவன் வெளிப்படுத்திய முறைமை – அவனது கவித்துவம் - இவற்றைக் கொண்டு அப்பாடலை அளந்தாலும் சரி – பாரதியின் படைப்புகளில், பாஞ்சாலி சபதம் - உச்சத்தை தொட்ட படைப்புகளில் ஒன்றாக நாம் கணிக்க கூடும்.

உதாரணமாக, ஒரு ‘சாதாரண’ திருதராட்டினன் கூறுவதாகக் கூறப்படும் கூற்றின் சில வரிகளைப் பாரக்கலாம்:

“நானெனும்
ஆணவந் தள்ளலும் - இந்த
ஞாலத்தை
தானெனக் கொள்ளலும்
பர மோன
நிலையின்
நடத்தலும்
ஒரு மூவகை காலங்
கடத்தலும்
நடு
வான கருமங்கள் செய்தலும்
உயிர்
யாவிற்கும்
நல்லருள் பெய்தலும்
பிறர் ஊனைச்
சிதைத்திடும் போதினும்
தனது உள்ளம்
அருளின் நெகுதலும்……”

இதுபோலவே தர்மனின் நியாயப்பாட்டை பார்த்தால்:
தோன்றி
அழிவது
வாழ்க்கைதான்: - இங்குத்
துன்பத்தொ டின்பம்
வெறுமையாம்
இவை மூன்றில்
எதுவரு மாயினும்
களி,
மூழ்கி நடத்தல்
முறைகண்டீர்!

ஆனால,; மஹாகவியின் வாழ்க்கை நெறிக்கு அல்லது அவரது தேடலுக்கு இவை அனைத்துமே அர்த்தமற்றவையாக அடங்கி போகுதல் கூடும் என்பதனையே பாஞ்சாலி சபதம் பொறுத்த அவரது மேற்படி கூற்று வெளிப்படுத்துகின்றது. இதுவே, ஏனைய கவிஞர்களிடம் இருந்து அவரை, வித்தியாசப்படுத்திக் காட்டும் எல்லைக்கோடுமாகின்றது. அதாவது, வாழ்க்கை நெறிகளோ அல்லது சமூக முரண்களோ அல்லது வாழ்வின் அர்த்தப்பாடுகளோ அவரை அசைத்ததாக இல்லை. அப்படியே வாழ்வின் அர்த்தப்பாடுகள் அவரை அசைத்திருந்தாலும் கூட அவரை அசைத்த வாழ்வு, முத்தையனுடையதை தாண்டி வேறெங்கும் சென்றதாகவும் இல்லை. அதாவது, கொம்பர்களை வளைக்கும் மருத மரங்களைப் புறக்கணித்து அல்லது தூக்கி எறிந்து, ஒரு உப்பு சப்பற்ற முத்தையனை நாடி ஓடும் ஓட்டம் தற்செயலானதல்ல. அதாவது குறித்த வட்டத்தினரிடம் இருந்து ‘வாழ்வு’ கோரியது முத்தையனாக இருக்கலாம் அல்லது ‘அவர்கள்’ தமது ஜீவிதத்தில் கோரியது அத்தகைய முத்தையன்களாகவும் இருக்கலாம். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே ஜெயமோகன் (ஓரளவில்), அசோகமித்திரன் போன்றோர் தேடி ஓடிய வெறுமையில், அர்த்தமின்மையில் அல்லது விதவைகளின் ஆன்மீக வாழ்வுகளில் எப்படி உறிஞ்சிகளின் வாழ்விற்கான மகத்தான அர்த்தப்பாடும் அரசியலும் ஒளிந்திருக்கின்றதோ – அதே அர்த்தப்பாடும் அரசியலும் இங்கேயும் விகசிக்க காணலாம்.

இதனாலோ என்னவோ, இவை அனைத்தையும் நுணுகி பார்த்திடாவிட்டாலும் திரு சண்முகம் சிவலிங்கம் அவர்கள், தெரிந்தோ தெரியாமலோ வஞ்சகமற்ற முறையில், மஹாகவி பொறுத்து கதைக்கும் போது, தன்னை மறந்து, ஓர் ‘அசோகமித்திரனை ஒரு பக்கம் வைத்தால்’ (ப- 177) என்று இழுக்குகையில் அவரது உள்ளுணர்வு அவரே அறியாது வெளிக்கிளம்புவதாய் உள்ளது என்பது தெளிவாகின்றது – அதன் உள்ளேயே மஹாகவியின் ஜீவிதமும் உறங்குகின்றது எனலாம். இத்தகைய ஒரு பின்னணியிலேயே, மஹாகவியின் “கேடுற்றவரிடை கெட்டழியாது என் இன்தமிழ்” என்ற கூற்றும் அணுகத்தக்கது. இங்கே, ‘கேடுற்றவர்’ என விளிக்கப்படுவோர் யார் என்பதனை கைலாசபதி மிக நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பார் என்றே எதிர்ப்பார்க்கலாம்.

ஏனெnனில் மஹாகவிஒரு சந்தர்ப்பத்தில் திறம்பட அறிவிப்பார்: “கட்டித்த சிந்தனையுடைய பண்டிதர்களும், கோட்பாடுகளை விழுங்கிவிட்டுச் செமித்துக் கொள்ள முடியாதவர்களும், மோப்பதற்கும் மோந்து முணுமுணுப்பதற்குமாக எழுதப்படுவதன்று கவிதை. ஒரு சாதாரண மனிதனின் பழுதுபடா உள்ளத்திற் பாயப் பிறப்பது…” இது மஹாகவியின் கவிதைக் கோட்பாடு. இதனுடன் ‘கோட்பாடுகளை’ விழுங்கி செமித்துக் கொள்ள முடியாதவர்கள் உண்டென்பதும், அதே போன்று ‘பழுதுபடா உள்ளங்கள்’ உண்டென்;பதும் மேற்படி கூற்று எமக்கு தெரியத்தரும் பிறிதொரு கோட்பாடு.

இனி கவிதைகளையும், பழுதுபடா உள்ளங்களையும் கார்க்கியும் கைலாசபதியும் மஹாகவியிடம் இருந்து கற்றறிந்தால் தான் என்றாகின்றது(!).
மறுபுறமாய், இக்கோட்பாடுகள் கிளப்பக்கூடிய இன்னுமொரு கேள்வி, யார்தான்; இந்த ‘பழுதுபடா’ உள்ளத்தினர் என்பதுவுமாகும்.
இச்சூழலில், தாஸிஸியஸின் இலக்கிய புரிதல் என்பது அவரது நாடகப் புரிதல் அளவிற்கு விசாலமானதுதானா – அவர், செல்லக்கூடிய பாதை எது என்பதனையும் கூடவே, மஹாகவி இயங்கக்கூடிய பாதை எது என்பதனையும் சேர்த்தே கைலாசபதி புரிந்து வைத்திருப்பதற்கான நிகழ்தகவுகளே, ஏராளம்.

இருந்தும், கார்க்கி கூறுமாப்போல், யதார்த்தவாதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டிச் செல்வதைத் தன் முன் நிபந்தனையாக கொள்கின்றது. மஹாகவியின் ‘கேடுற்றவரையும்’ ‘இன்தமிழினையும்’, கூடவே வாழ்வின்-எழுத்தின் மகத்துவத்தையும், தாஸிஸியஸில் உள்ளடங்கும் அளப்பறிய நாடக ஆற்றலையும்; நன்கு புரிந்து வைத்திருக்கக் கூடிய, ஒரு கைலாசபதி என்ற குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, இதற்கு சற்றும் விதிவிலக்காகாமல், மஹாகவி இறந்த போது, தாஸிஸியஸின் தோள் மீது கரம் வைத்து, “இன்னுமொரு பத்து பதினைந்து நாடகங்கள்…” என பெருமூச்செறிவது மேலும் ஆழமாய் பார்க்கத்தக்கதே.

(பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தனால் தொகுக்கப்பட்ட மஹாகவி குறித்த விமர்சன தொகுப்பு நூல், மஹாகவியியலில் இருந்து பலதுபட்ட மேற்கோள்கள், கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியருக்கு அனேக நன்றிகள்).

பின்னிணைப்புகள்:
1
கண்ணாமூச்சி

உயிர்ப்பின் போதே என்னுடன்
ஒப்பந்தம் செய்தது காலம்
“தான் விரும்பும் போது தன்னோடு
கண்ணாமூச்சி ஆட வேண்டும்”

கருவறை சுவரில்
கைச் சாத்திட்டோம்
தவழும் போதே ஆட்டம் தொடங்கியது
நான்தான் ஜெயித்தேன்.
பிள்ளைப் பருவமும் இப்படியே
தொடர்ந்தது.

இளமையில் ஒப்பந்தம்
குறித்து
மறந்தே போனோம்

என் கிளைகளில் பறவைகள்
பேசின
கருங்குயிலும் வரிக்குயிலும்
இடையறாது கூவின
செண்பகக் குயில்
கூடுகட்டிக்
குஞ்சும் பொரித்தது
வெளியும் ஒளியும்
எமக்குச் சாட்சியமாயின

காலம் என் பற்கள் சிலவற்றை
பிடுங்கியது.
ஒரு கண்ணில் ஒளியைத்
திரையிட்டது
மூக்குக்கு மணத்தை
மறைத்தது
இதயத்தை கீறிப்பார்த்தது
ஒரு காலை பறித்து
ஊனமாக்கியது
என் இளமை உதிர்த்து
விட்டது.

காலம் இன்னும் வேர்களைக்
குலுக்கி
விளையாடக் கூப்பிடுகிறது.
இத்தனைக் காயங்களுக்குப்
பிறகும்
என் இருப்பு
என் திறமையாலா?
காலத்தின் கருணையாலா

என் பற்களைப் பிடுங்கிச்
செல்லலாம்
என் சொற்கள் சிரிக்கும்

என் கண்ணொளியை மறைக்கலாம்
என் சிந்தனை சுடரும்
என் இதயத்தை நிறுத்தலாம்
என் எழுத்து துடிக்கும்
என் ஒரு காலை வாங்கலாம்
என் சுவடுகள் தொடரும்

இறுதியாக ஆடிப் பார்க்கலாம்! (இன்குலாப்)

2
மஹாகவி காலத்தின் முன்பதாகவே, 1930களில் வெளிவர தொடங்கிவிட்ட கார்க்கியின் நான்கு பாகங்களாய் விரியும், இறுதி நூலான கிளிம் சாம்கினின், தலையாய பாத்திரமான கிளிம் பின்வருமாறு சிந்திப்பதாய் இருப்பதும் இது தொடர்பில் அவதானத்தில் கொள்ளத்தக்கதே:
“வாசிப்பின்றியே வாழ்வு தொடரலாமே…” “கேள்விகள்….. நல்லது…. இவற்றுக்கும் பதில் இல்லாமலேயே இங்கே வாழ்வு தொடரலாமே…!”
“நான் எந்த வகையான ஒரு புத்தகப் பூச்சியாயும் இல்லை…ஒரு யாந்ரீக தத்துவவாதியாகவும் இல்லை…. ஆனால் எண்ணற்ற விடயங்களை நான் தெரிந்துத்தான் வைத்திருக்கின்றேன்… இருந்தும், இவற்றைக் கொண்டு யாருக்கும் போதிப்பு வகுப்புகள் நடாத்த போவதும் இல்லை…சித்தாந்தங்களைக் கண்டுப்பிடித்து கொள்ளும் எண்ணமும் என்னிடம் இல்லை….ஏனென்றால் சித்தாந்தங்கள் என்பவை என் கட்டற்ற வளர்ச்சியையும், என் சுயமான கற்பனைகளையும் கட்டுப்படுத்த கூடியவைதாம்….”

3
முதிரா மனங்களும்
முதிர்ந்த சுமைகளும்

புளிய மரத்தடியில்
புழுதி வார்த்த உடல்கள்

பு:ழுத்து போன சூரியன்
உதிரும் மேற்கு அந்தம்.

‘அடேய்’ என்ற அழைப்பாணைகளால்
புதையும் மணலில்
உதைத்து உதைத்து ஓடும்
பதறிப்போன சிறு பாதங்கள்

‘விளக்கு வைச்சால்
படிக்க தெரியாதோ…?

குடும்ப
அரியாசனத்து அரசனின்
பரிபாலனம்

முகம் கால் கழுவும்
சடங்குகள் முடித்து
குப்பி விளக்கின் முன்
குந்தியிருந்து நடாத்தும்
குடிசை இளவரசர்களின்
கல்வி யாகம்.

நீவீன் ஓவியத்தில்
சிதறி கிடக்கும்
தீந்தைகளாய்
இளவரசர்களின்
முதுகுத்திட்டுகளில்
புழுதிச் சித்திரங்கள்.

பிடறிமயிர் காலில் இருந்து
பிரிவு கொண்ட
தண்ணீர் சொட்டுக்கள்
முதுகுத் திட்டுகளின்
புழுதி சித்திரங்களில்
புதிய கோடுகளை
வரைந்து வழிந்தன.

‘யாரடா இந்த பூவரசன்
கோயிலுக்க! கோயிலுக்க!
நாங்கதான் கல்லிக்காய்
பெண்டுகள்
பாடத்தில் மனம்
பதியாத மூத்தவனின்
வாயில் இருந்து வந்த
வார்த்தைகள் உதிர்ந்தன.
‘ஓண்டா ஓணடா!
விடிஞ்சா பொழுதுபட்டா
விளையாட்டு உங்களுக்கு
நாளைய சோத்துக்கு
நானென்ன செய்யிறது….’

பட்டத்து ராணியின்
பஞ்சத்து பாடல்கள்
பொறுமையின் எல்லையை
வஞ்சித்து வெடித்தன.

புழுதியின் இளவரசர்களுக்கு
திகில் அடிக்க
புத்தகத்தின் வரிகளை
வழிகளால் மேய்ந்தனர்.

எந்த நேரமும்
உடைஞ்ச வண்டிச் சில்லாய்
உண்ட புறுபுறுப்பை
மனிசனால்
ஒண்டும் செய்யேலா
எந்த நாளும்
இந்த இழவுதான்’

குடும்ப அரியாசனத்து
அரசனின்
நெஞ்சத்து
நெருப்பு கால்கள்
வார்த்தைகளாய்
அடியெடுத்து வைத்தன.

புழுதிவார்த்த
பிஞ்சு உடல்களின்
மண்டையில் இருந்து
பூதமொன்று இறங்கி
அவர்களின்
நெஞ்சத்து தளத்தில் நின்று
நர்த்தனம் ஆடியது.

‘அப்பா பாவம்
இல்லை இல்லை!
அம்மாதான் பாவம்
இல்லை இல்லை
அப்பாவும் அம்மாவும் பாவம்.

சம்பவங்களும் சரித்திரமும்

நெற்றி வரை முட்டி
வெடிக்க நிற்கும்
சிக்கல் உணர்வுகள்

காற்றுக்கள் மயிரைக் கோதி
மண்டை ஓட்டின் சூட்டில்
ஒதுங்கிப் போயின
எங்குமொரு நிசப்தம்
அச்சத்தின் பேர்வெளி
ஆத்திரமோ குமைச்சலாய்

பத்துப் பன்னிரண்டு வாகனம்
கிராமம் பார்த்திராத படையெடுப்பு
சப்பாத்துக் கால்களின் துவையல்.

மொத்து மொத்டிதன்ற ஓசைகளும்
அதிகார மொழியின்
அருவருப்பும் சந்தடிகளும்.

முணு முணுப்பும் ஓசையுமாய்
அந்த வீடு
பிரளயமாகிக் கொண்டிருந்தது.

என்ன செய்யலாம்…
என்ன செய்யலாம்…
எல்லோரிடமும் கேள்விகள் மட்டுமே.
சாம்பல் பூத்த எரிக்கரையின்
சடைப்பிற்கு மேலாய்
என் பார்வை அவ்வீட்டில்.

தாழ்ந்த கண்களில்
சடுதித் திகைப்பு
சுதா
எப்படி இவன் எரிக்கலைக்குள்?

ஒட்டி ஒட்டி நின்றவனின்
கிட்டச் செல்லுகின்றேன்
பத்து வயசுப் பாலகனின் பதைப்பு.

‘சுதா’…
திடுக்கிட்டு அவன்
திரும்பும் முன்னரே
எனது கைகளின்
ஆதரவு வருடல்கள்
“மாமா அப்பாவை அடிக்கிறார்கள்”
திரண்டு வெடித்து விட்ட
கண்ணீர் பிரவாகம் எனக்கும்.

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்
ஊரத் தொடங்கின.
இன்னும் எங்கெங்கு
இவை எப்படி தரிக்குமோ?

அவரையும் அவர்கள்
கொண்டு சென்றனர்
ஆதாரம் காரணம்
ஆர்தான் அறிவார்.
வேலிக் கம்பியில்
நெஞ்சை வீழ்த்தி
வெறித்த பார்வையின்
சுய மறப்பில்
நின்றிருந்தான் சுதா
ஜீப்புகளை நோக்கி

தலையை வருடினேன்
அண்ணாந்து பார்த்தான்
பார்வை…
இனி இவன்
பாலகன் அல்லன். (சாருமதி தொகுப்பு: அறியப்படாத மூங்கில் சோலை)

 

4
நெடுந்தீவு ஆச்சிக்கு

அலைகளின் மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி

காலம் காலமாய் உன்னைப் பிடித்த
பிசாசுகள் எல்லாம் தோற்றுப்போயினஇ

போர்த்துகீசரின் எழும்புகள் மீதும்
தென்னந ;தோப்பு.
நானும் என் தோழரும்
செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.

தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின் மேல்
காலத்தை வெல்லுவாள் என் ஆச்சி.

என்ன இது ஆச்சி
மீண்டுமுன் கரைகளில்
நாங்கள் என்றோ விரட்டியடித்த
போர்த்துகீசரா?
தோல் நிறம் பற்றியும்
கண் நிறம் பற்றியும்
ஒன்றும் பேசாதே.
அவர்கள் போர்த்துகீசரே…

எந்த அன்னியருக்கும் நிலையில்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதை தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்
நாளையிந்த போர்த்துகீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதை தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

ஆச்சி
என் இளமை நாள் பூராக
ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்
தேடிய வாழ்வெல்லாம்
ஆமை நான் உனது கரைகள் நீள
புதைந்து வந்தேனே.
என்னுடன் இளநீர் திருட
தென்னையில் ஏறிய நிலவையும்
என்னுடன் நீர் விளையாட
மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்
உனது கரைகளில் விட்டு வந்தேனே
என் சந்ததிக்காக.

திசை காட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப்பாலைகளில்
கனவு காண்பதுன் கரைகளே ஆச்சி.

நீ நிலத்திருப்பாய் என்பதை தவிர
எதனை கொண்டு நான்
மனம் ஆற என் ஆச்சி. (வ.ஐ.ச.ஜெயபாலன்)


உசாத்துணை நூற்பட்டியல்

1. மஹாகவியியல் - மஹாகவி குறித்த விமர்சன தொகுப்பு நூல் - பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் - ப10பாலசிங்கம் பதிப்பகம் - 2008
2. நவீனத்துவத்தின் முகங்கள் -அசோகமித்திரன் - தமிழினி பதிப்பகம் - 2003
3. கவிதை நயம் - கைலாசபதி-முருகையன் - குமரன் பதிப்பகம் - 2000
4. பஞ்சமர் நாவல் - கே.டானியல் - அடையாளம் வெளியீடு - 2005
5. ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
6. தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம் - 2021
7. Lenin - On Literature and Art – Leo Tolstoy as the mirror of the Russian Revelution – Progress Publishers - 1967
8. Marxim Gorky’s Collected Works Vol – 8
9. Marxim Gorky’s Collected works - Vol -9 - 1982
10. Marxim Gorky on Literature – Progress Publishers
11. The complete Letters of Vincent Van Gogh – Vol -3 - 1958
12. Wings Of Fire – A.J.P. Abdul Kalam – University Press - 1999
13. My Journey - A.J.P. Abdul Kalam - Ruba Publication - 2015

Zoom Meetings and Youtubes

i. பௌசர் - Zoom Meeting
ii. மஹாகவி நினைவு பேருரை (20.09.2021 – சென்னை பல்கலைகழக ஏற்பாட்டில்ää பேராசிரியர் ய.மணிகண்டன் தலைமையில் இடம்பெற்றது)
iii. ஹம்சன் குமாரின் தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம்.
iv. தட்சிணாமூர்த்தி குறித்த (Youtube)
v. தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா. (Youtube)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.