ஆய்வுச்சுருக்கம்
கூகிளால் உருவாக்கப்பட்ட பல்துறை திறன் கொண்ட ஜெமினி செயற்கை நுண்ணறிவு (Gemini AI) மாதிரி, தமிழ் மொழி உள்ளடக்க உருவாக்கம், மெருகேற்றுதல் மற்றும் பல்வகைச் செயல்பாடுகளில் (Multimodal) எவ்வாறு பயன்படுகிறது என்பதை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பரந்த பயன்பாடு தமிழ் சமூகம், கல்வி மற்றும் உழைப்பின் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் (பாதிப்புகள்) மற்றும் சவால்களை ஆராய்வது இதன் பிரதான நோக்கமாகும். ஜெமினி AI-இன் தமிழ் மொழி செயலாக்கத் திறன்களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. இதில் உள்ளடக்க உருவாக்கம், கலாச்சாரச் சூழலுடன் கூடிய மொழிபெயர்ப்பு, கல்விக்கான உதவிகள் (PPT உருவாக்கம்), தரவுத் தேடல் மற்றும் படங்களை விளக்குதல் போன்ற முக்கியப் பணிகள் விளக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தத் தொழில்நுட்பத்தின் சமூகப் பாதிப்புகளை (வேலை இழப்பு, தவறான தகவல் பரவல்) மற்றும் அதன் பயன்பாட்டில் தொடரும் சிக்கல்கள் (பண்பாட்டுச் சூழல் குறைபாடு, வட்டார வழக்குகள், பயிற்சித் தரவுச் சார்பு) ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியச்சொற்கள்
ஜெமினி AI, செயற்கை நுண்ணறிவு, தமிழ் மொழி, உள்ளடக்க உருவாக்கம், பல்வகைச் செயல்பாடு, மொழிபெயர்ப்பு, கல்விக்கான உதவிகள், உழைப்பின் எதிர்காலம், சமூகப் பாதிப்புகள், பண்பாட்டுச் சூழல்.

முன்னுரை

செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தமிழில் அவற்றின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நான் சற்று விரிவாக ஆராய வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை (Gemini AI) ஜெமினி செயற்கை நுண்ணறிவு மென்பொருள் எவ்வாறு தமிழில் செயல்படுகிறது என்பதை ஆராயவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு என்பது இயல்பான மனிதன் தன் அறிவைக் கொண்டு செய்யக் கூடிய செயல்களை இயந்திரம் செயற்கையாக மனிதனால் உள்ளிடப்படும் கட்டளைகளை உள்வாக்கி அதன் அடிப்படையிலான செயல்திட்டங்களை மனிதனைவிட பலமடங்கு வேகத்திலும் துல்லியமாகவும் கொடுக்கக் கூடியது. இதனை,

மனிதரின் நுண்ணறிவுத் திறனைச் செயற்கையாக உருவாக்குவதன் வழியாக ஓர் இயந்திரத்துக்கு மனிதரைப் போலவே கற்கும் திறனும் சிந்திக்கும் திறனும் பிரச்சனைகளுக்கு முடிவுகாணும் திறனும் இருந்தால் அந்த இயந்திரம் செயற்கை நுண்ணறிவு இயந்திரமாகக் கருதப்படுகிறது. அது ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு மனிதர்களால் கற்றுக் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தும் பகுந்தறிந்தும் தமது குறிக்கோளை அடையும். (தி இந்து தமிழ் நாளிதழ், 14.03.2020, ப.6)

முழுமையாக வாசிக்க