கொடகே வெளியீடாக வந்துள்ள வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி அரங்கில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி மயூரி விவேகானந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தார். வரவேற்புரையை ராஜ சிறீதரன் நிகழ்த்தினார். நிகழ்வில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அதிதியாக தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திரு உபாலி லீலாரட்ன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் வாழ்த்துரையை ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தனும், வெளியீட்டுரையை கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும் நிகழ்த்தினர். நயப்புரைகளை சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் கவிஞர் மேமன்கவியும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை ‘சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை’ திரு சிதம்பரப்பிள்ளை சிவம் பிரதம அதிதி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

 நிகழ்வில் நூலாசிரியர் வதிரி சி. ரவீந்திரன் தன் மூத்தவர்களான முன்னோடிகள் திரு சி.க.இராஜேந்திரன் அவர்களையும் திரு .குணசிங்கம் அவர்களையும் மாலையிட்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.

வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய ஐந்தாம் திருவிழா உபயகாரர்கள் சார்பில் முருகேசு பாக்கியராசா நூலாசிரியர் வதிரி சி. ரவீந்திரன் அவர்களை பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இன்னும் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

படைப்பாளிகளும் ஆர்வலர்களும் உறவுகளும் கலந்து சிறப்பித்தமை ஆரோக்கியமாக அமைந்திருந்தது.

பதிவும் படங்களும் :- சு.குணேஸ்வரன்

 kuneswaran thuvarakan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.