பெப்ரவரி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை (15-02-2011) காலை 10.00 மணிக்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வளாகத்தில் கணனிக் கற்கைக்காக அமைக்கப்பட்ட விசேடமண்டபத்தின் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கணனிக் கற்கை நிலையத்திற்குத் தேவையான தொகை ரூபா 25 இலட்சம் பெறுமதியான 30 கணனிகளையும்  அதற்குரிய தளபாடத் தேவைகளையும் கனடா பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கியிருந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மகாஜனா கல்வி அபிவிருத்தி நிறுவனம் முன்னின்று உழைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார். மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்கள் கடல் கடந்து சென்றாலும் கல்லூரி மீது அவர்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், குறிப்பாக கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் காலத்திற்கேற்ற இந்த உதவியை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதோடு மட்டுமல்ல அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கல்லூரி அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார். நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கற்றுக் கொள்வதில் மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் என்றும் பின் நிற்கக்கூடாது என்ற கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதங்கத்தை நிறைவேற்றி வைப்பதில் தான் பெருமை அடைவதாகத் கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. சாந்திநாதன் தனது பதில் உரையில் குறிப்பிட்டார். இப்படத்தில் இக்கல்லூரி அதிபர் சிவமலர் அனந்தசயனன், நாகமுத்து சாந்திநாதன் ஆகியோரைக் காண்கிறீர்கள்.

Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>