உயிர்மை 100ஆவது இதழ் வெளியீட்டு விழா அருமை நண்பர்களே! ‘உயிர்மை’ இதழ் தனது நீண்ட பயணத்தின் இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. வரும் டிசம்பர் 1 ஆம்தேதி ‘உயிர்மை’யின் 100ஆவது இதழ் வெளிவருகிறது. டிசம்பர் 1 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் (மாவட்ட மைய நூலகம், (LLA BUILDING),735, அண்ணா சாலை, சென்னை-2) நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பிதழின் முதல் பிரதியை இந்திரா பார்த்தசாரதி வெளியிட, எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். எங்களது இந்தப் பயணத்தை வலிமையும் அர்த்தமும் உள்ளதாக்கிய ‘உயிர்மை’- ‘உயிரோசை’ வாசகர்கள் இந்த நிகழ்வில் நேரடியாகவோ மானசீகமாகவோ பங்கேற்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்களின்றி இந்தப் பயணத்தின் ஓரடியும் சாத்தியப்பட்டிருக்காது.

இந்த நூறாவது இதழ் 208 பக்கங்களில் சிறப்பிதழாக வெளிவருகிறது. தமிழகத்தின் 100 முக்கியமான படைப்பாளிகள் 100 முக்கியமான கலை, இலக்கியம், கலாச்சாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பெரும் சிறப்புப் பகுதி ஒன்று இதில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கூடங்குளம் விவகாரம் தொடர்பாக பொய்களைத் தோலுரிக்கும் இன்னொரு சிறப்புப் பகுதியை அ.முத்துக்கிருஷ்ணன் தொகுத்துள்ளார். இன்னும் பல முக்கியமான ஆக்கங்களும் உணடு.

அதே நிகழ்வில் இன்னொரு அமர்வாக சீனு ராமசாமியின் ‘காற்றால் நடந்தேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது.

இயக்குநர் மகேந்திரன்,பேரா. சுப. வீரபாண்டியன், தமிழச்சி தங்கபாண்டியன், பவா. செல்லத்துரை, ஷாஜி, இயக்குநர் ராம் ஆகியோர் உரையாற்றவிருக்கின்றனர்.

உங்கள் வருகை எங்களை வலிமைப்படுத்தும் பேரன்பாக இருக்கும்.
தொடர்புகளுக்கு

uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
website:www.uyirmmai.com

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.