ரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பு நிகழ்வாக இணையவழி சொற்பொழிவு

தமிழ் நாடு ஓய்வு பெற்ற கண்ணிய மிகு காவலர் திரு அ. கலியமூர்த்தி அவர்கள் உரையாற்ற உள்ளார். இவர் நாடறிந்த, உலகறிந்த மேடைப்பேச்சாளர். 100 நாட்களில் 80 மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி உலக சாதனை படைத்தவர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்க உயர் காவல் துறை அதிகாரியாக சாதனை படைத்தவர். இவர் தனது பேச்சுத் திறமையால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

”ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிந்துவிடும்” என்னும் தலைப்பில் இவரது உணர்வு பூர்வமான சிறந்த தமிழ் சொற்பொழிவு நடைபெற உள்ளது, இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் கேட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

காலம்: 2020. 11. 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை (EST) 11 மணி
தொடக்கம் பிற்பகல் 12.30 மணி வரை.

இணைய வழிகள். (Live)
https://facebook.com/torontotamilchair

அன்புடன்
சிவன் இளங்கோ
416 707 9104

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America (FeTNA)