17.04.2021 அன்று மாலை 6 மணிக்கு நண்பர்கள், வசந்தாவும் மாறனும் மற்றும் அவந்திக்காவின் பள்ளி நாள் ஆகிய மூன்று சிறுவர் சிறுகதைகள் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது. தற்கால கொரோணா சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு இணைய முற்றத்தில் Team செயலியூடாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந் நிகழ்வில் மௌன அஞ்சலி, வரவேற்புரை,சுடர் வணக்கம், மங்கள விளக்கேற்றல், நூலாசிரியர்கள் அறிமுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து நூல்களுக்கான மதிப்பீட்டுரைகள் பல இலக்கிய ஆளுமைகளால் ஆற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து நூல்கள் வெளியீடு இடம்பெற்றன. நூல்களை நூல்களின் துணைக்கதாசிரியராகிய யோகராணி கணேசனின் துணைவரும் மற்றும் படைப்பாளர்களாகிய கனிசா கணேசன், கஸ்வினி கணேசன் மற்றும் கேவின் கணேசன் ஆகியோரின் தந்தையுமாகிய கணேசன் செல்லப்பா வெளியிட்டு வைத்தார்.

இந் நிகழ்வில் சிறுவர் சிறுகதைகளை ஒலி ஒளி வடிவில் வாசித்தும் கேட்டும் மகிழ்வதற்கான இணையத்தளமும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அந்த இணையத்தளத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும் https://book.annai.no/#/book-list/stage1

பல சிறார்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு வெளியீடு செய்யப்பட்ட சிறுவர் சிறுகதைகள் நூல்கள் பற்றித் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தமை இந் நிகழ்வில் குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையிலிருந்து வன்னியூர் கவிராயர் வழி வந்த கவிஞர் நாவண்ணனின் புதல்வியும், வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும், சிறுவர் இலக்கி்ப் படைப்பாளருமாகிய திருமதி நெலோமி அன்ரனி குரூஸ் கலந்து கொண்டு கருத்துரையாற்றியமையும் இந் நூல்களுக்கு மேலும் சிறப்புச் சேர்த்திருந்தது.

Yogarani Ganesan - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.