பெருமதிப்பிற்குரியீர் வணக்கம். கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

தமிழியல் சார்ந்த உயராய்வு மற்றும் பன்னாட்டளவிலான தமிழ் ஆய்வு மையங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக திகழ்ந்துவரும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்துடன் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து செயலாற்றுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்துள் அமைந்துள்ள இந்தத் தமிழ் உயராய்வு மையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்கள் அடங்கிய, ஆய்வு நோக்கில் வகைமைப்படுத்தப்பட்ட ஆய்வு நூலகத்தையும் தன்னகத்துள் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். இது தமிழாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணைநல்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், இம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவர்களுக்கு (முழுநேரம்) ஊக்கத்தொகையும் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த, நவீன கட்டமைப்புடனும் ஆய்வு மேற்கொள்வதற்குரிய அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளுடனும் இம்மையம் அமைந்துள்ளது. எனவே தாங்கள் அறிந்தவரையில், தமிழாய்வில் ஆர்வங்கொண்ட, முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் சிறந்த ஆய்வாளர்கள் இருந்தால் அவர்களுக்கு நம் மையத்தையும், துறையினையும் அறிமுகம் செய்து வைக்கும்படியும், வழிகாட்டும் படியும் கேட்டுக்கொள்கிறோம். தமிழாய்விற்குத் துணைநல்கும் இத்தகவலைத் தங்களுக்குப் பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.

நா. மகாலிங்கம் தமிழாய்வு மையம்

தொடர்புக்கு:
முனைவர் இரா.ஜெகதீசன் (இயக்குநர்) – 99429 86668
முனைவர் சு.வேணுகோபால் (தமிழ்த்துறைத் தலைவர்) – 88259 19553
பேரா. ப.சுடலைமணி (உதவிப் பேராசிரியர்) – 98947 47631
முனைவர் செ.துரைமுருகன் (உதவிப் பேராசிரியர்) – 80989 03282
முனைவர் கோ.சுனில்ஜோகி (உதவிப் பேராசிரியர்) – 91593 83919
கல்லூரி அலுவலக எண் - +91 422 266 1555