இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகத்துறை எனப் பன்முகப்பங்களிப்பு நல்கிய எழுத்தாளர் அ.ந.கந்தாமியின் கிடைக்கபெறும் ஒரேயொரு நாவல்: 'மனக்கண்; 1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த ஆதரவைப்பெற்ற நவீனம். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வானொலி நாடகமாக எழுத்தாளர் சில்லையூர் செலவராசனால் ஒலிபரப்பப்பட்டது.

அ.ந.கந்தசாமி மலையக மக்களை வைத்துக் 'களனி வெள்ளம்' என்றொரு நாவலையும் தனது இறுதுக்காலத்தில் எழுதியிருந்தார். அது எழுத்தாளர் செ.கணேசங்கனிடமிருந்தது. ஆனால் அதனை செ.க அவர்கள் 83 இனக்கலவரத்தில் தானிழந்த தமது உடமைகளுடன் இழந்து விட்டார். அது இலங்கைத் தமிழ் இலக்கிய உலகுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தற்போது அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலைப் பதிவுகள்.காம் பதிப்பகம் அமேசன் - கிண்டில் மின்னூலாக , எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் முன்னுரையுடன் வெளியிட்டுள்ளது. பதிவுகள் .காம் ஏற்கனவே எதிர்காலச்சித்தன் பாடல்: அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) கவிதைள் அடங்கிய தொகுப்பு! (Tamil Edition) ஆகியவற்றை கிண்டில் & அமேசன் மின்னூல் வெளியீடாக வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அ.ந.க.வின் நாவலான 'மனக்கண்' நாவலை வாங்க


இதுவரை பதிவுகள்.காம் வெளியிட்ட அமேசன் - கிண்டில் மின்னூல்களாக வெளிவந்த அ.ந.கந்தசாமியின் படைப்புகள்:

1. எதிர்காலச்சித்தன் பாடல்கள் (கவிதைத்தொகுப்பு)

2. அ.ந.கந்தசாமி கட்டுரைகள் (14 கட்டுரைகளின் தொகுப்பு)

3. நாவல்: மனக்கண் 

இவையனைத்தையும் வாங்க