குவியம் கனடா – கொலுசு சஞ்சிகைகள் இணைந்து நடத்தும் 2022 ஆண்டின் மனித உரிமை மீறல்கள் சார்ந்த சிறுகதைப் போட்டி

தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் சிறுகதைகள் விபரம்

முதலாம் பரிசு 6000 ரூபா (இந்தியன்)
இரண்டாம் பரிசு 4000 ரூபா (இந்தியன்)
மூன்றாம் பரிசு 2000 ரூபா (இந்தியன்)
நான்காம் பரிசு 1000 ரூபா (இந்தியன்)

ஆறுதல் பரிசுகள் எட்டு ஓவ்வொன்றும் 500 ரூபா (இந்தியன்)

போட்டிக்கான விதிமுறைகள்:

1 யுனிகோட் எழுத்துருவில் 2000 வார்த்தைகளுக்குள் அடங்கிய ஒரு சிறுகதை மட்டுமே கீழ் கண்ட மின் அஞ்சலுக்கு முன் அனுப்ப வேண்டும். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

போட்டி ஆரம்ப திகதி April 4th Monday 2022
போட்டி முடிவு திகதி May 27 Friday 2022
முடிவுகள் நேர்நிகரில் அறிவிக்கும் திகதி July 30th Sunday 2022
நூல் நேர்நிகரில் வெளியிடும் தினம் September 4th Sunday2022

2 சிறுகதையின் அமைப்பு பல வகை மனித உரிமை மீறல். மண்வாசனை கலாச்சாரம், சூழல் அரசியல் சார்ந்ததாக இருக்க வேண்டும் உண்மைக் கதைகளை வைத்து புனைவு கலந்து எழுதலாம். கதையில் வரும் பெயர்கள் உண்மைப் பெயர்களாக இருக்கக் கூடாது.
3 எழுத்தாளரின் உண்மைப் பெயர், அதோடு சேர்த்து விலாசம், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவை சமர்ப்பணக் கடிதத்தில் கையெழுத்துடன் தேதி குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
4 சமர்ப்பிக்கும் கதை இதற்கு முன்பு எந்த இணையத்தளத்திலும் . பத்திரிகை , சஞ்சிகையிலும் பிரசுரிக்கவில்லை என்று உறுதிமொழி தர வேண்டும். போட்டி முடிவுகள் அறிவித்து ஆறு மாதங்களுக்குப் பின்னரே விரும்பினால் கதையை வேறு பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரிக்கலாம் . பரிசு பெறாத கதைகளுக்கு இந்த விதி அமையாது.
5 படைப்பு ஆசிரியரின் சொந்தப் படைப்பு எனவும்,  வேறு மொழியிலிருந்து மொழிபெயர்த்த கதை அல்ல என்றும் உறுதி உறுதி அளிக்க வேண்டும்.
6 எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த கதை பற்றி போட்டி நடத்துபவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது.  பதிலையும் எதிர்பார்க்கக்கூடாது. கதைகள் கிடைத்ததும் கிடைத்தது என்று ஒரு சுட்டு எண்ணுடன் பதில் மின் அஞ்சலில் வரும்.
7 கதை அனுப்ப முன்பு பல தடவை சரிபிழை  பார்த்து எழுத்து இலக்கணப் பிழைகள் இல்லாது பிரதியை word doc யில் ஒரு தடவை மட்டுமே அனுப்பவேண்டும். பல தடவைகள் அனுப்பக்கூடாது.

பி கு
பரிசு பெற்ற கதைகள் ஒரு சிறுகதைத் தொகுப்பு அடங்கிய நூலாகவும்,  மின் நூலாகவும் பரிசு பெற்றவர்களுக்கு 50 விகித சலுகையோடு கொடுக்கப்படும்.  மற்றவர்கள் நூலின் விலை கொடுத்து வாங்கவேண்டும்.

பரிசு பெற்ற சிறுதைகள் மின்னூலாகவும் அதோடு புத்தகமாகவும் வெளி வரும் . நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடத் திட்டம் உள்ளது

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி:  May 27 , 2022

வாருங்கள் புதிய சமுகம் . வரலாறு , சூழல், மரபு சார்ந்த இலக்கியம் படைப்போம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.