- இத்தகவல் இறுதி நேரத்தில் கிடைத்ததால் உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை. ஒரு பதிவுக்காக பிரசுரிக்கின்றோம். - பதிவுகள்.காம் -


வணக்கம்! மணற்கேணி இருமாத இதழைத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது 57 ஆவது இதழ் தயாராகி வருகிறது. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்விதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளியானபோது கதை, கவிதை என படைப்பிலக்கியத்துக்கும் இடம் அளித்திருந்தது. பின்னர் ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் ஒரு ஆய்விதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது.

மணற்கேணியின் ஆய்வுப் பயணத்தை மேலும் காத்திரமாக முன்னெடுத்துச்செல்ல தங்களது ஆலோசனைகளை நாடுகிறோம்.

1. தற்போது இருமாத இதழாக வெளிவந்துகொண்டிருக்கும் மணற்கேணியை இதே கால முறைமையில் தொடரலாமா?

2. தற்போது வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் ஆய்வுச் சூழலை மேம்படுத்த உதவியாக உள்ளனவா?

3. புதிய கோட்பாடுகளை மொழிபெயர்த்து வெளியிடுவது ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படுமா?

4. தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்களே இப்போது பெரும்பாலும் பங்கேற்கும் நிலையை மாற்ற வேண்டுமா? ஆம் எனில் வேறு என்னென்ன துறைகளில் கவனம் செலுத்தலாம்?

இப்படி பல வினாக்கள் நாம் விடைகாண வேண்டியவையாக உள்ளன. மணற்கேணியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிற உங்களது ஆலோசனைகள் எமக்குப் பெரிதும் பயன்படும். எதிர்வரும் 13.07.2022 புதன் இரவு 8 மணிக்கு சூம் செயலி வழியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதில் தாங்கள் பங்கேற்று உங்களது மேலான ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டத்தில் பங்கேற்க இயலுமா என்பதுகுறித்தத் தங்களது இசைவைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இவண்
மணற்கேணி ஆய்விதழ்

அனுப்பியவர்: செல்லத்துரை சுதர்சன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.