இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்இ இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளைக் கௌரவித்து ஊக்குவிக்கும் பொருட்டுக் கடந்த பல வருடங்களாக 'இரா. உதயணன் இலக்கிய விருதுகளை" வழங்கிவருகின்றனர். கொரோனாப் பரவல் காரணமாக 2020,  2021இ 2022 ஆண்டுகளுக்குரிய விருது வழங்கல் அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது அந்த ஆண்டுகளுக்குரிய விருதுகள் யாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 -ம் ஆண்டுக்குரிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது"க்கு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2021 -ம் ஆண்டுக்கான 'வாழ்நாள் சாதனையாளர் விருது" மூத்த எழுத்தாளர் மலரன்னை அவர்களுக்கும்,  2022 -ம் ஆண்டுக்கான விருது மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனுக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மூத்த எழுத்தாளர் இளங்கோவன் சிறுகதை, கட்டுரை, கவிதை, மருத்துவம் ஆகிய துறைகளில் 21 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அத்துடன் 14 நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். கல்லூரிக் காலம் முதல் சுமார் 36 வருடங்கள் பத்திரிகைஇ வானொலிஇ தொலைக்காட்சி ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். வடக்குக் கிழக்கு மாகாண சபையில் தகவல் - வெளியீட்டுத் திணைக்களம்இ திட்டமிடல் அமைச்சு - ஆளணிப் பயிற்சித் திணைக்களம் ஆகியவற்றில் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை, இந்தியா, கனடா,  ஜரோப்பிய நாடுகளில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்குகள் - மாநாடுகள் பலவற்றில் இவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.

இவரது சிறுகதைத்  தொகுதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பு புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (2012) சிறப்பாக வெளியிடப்பட்டு பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பு சென்னையில் (2014) வெளியிடப்பட்டது.

எழுத்தாளர், பேச்சாளர்,   கவிஞர்,  விமர்சகர்,  ஊடகவியலாளர்,  நடிகர் எனப் பல்துறை ஆளுமைமிக்கஇ 'இளந்தலைமுறைப் பல்கலை வேந்தன்" என அன்று   பராட்டுப்பெற்ற இளங்கோவன் இலக்கிய சமூகப் பணிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஐ. நா. தொண்டராக (UNV - UNDP) பிலிப்பைன்ஸ் நாட்டில் (1983 - 1984) மூலிகை மருத்துவ - சமூக அபிவிருத்திப் பணியாற்றி, மேற்கு மின்டனாவோ மாநில சுயாட்சி அரசின் 'முதல்வர் விருது" உட்பட பல அமைச்சுகளின் விருதுகளையும் பெற்றவர்.

பிலிப்பைன்ஸ் சம்போங்கா (Zamboanga) நகரிலிருந்து வெளியாகும் முன்னணி நாளேடு 'மோர்ணிங் ரைம்ஸ்" (The Morning Times)  இளங்கோவனின் சமூக அபிவிருத்தி - மூலிகை மருத்துவப் பணிகளைப் பாராட்டி ஆசிரியத் தலையங்கம் (1984) எழுதிக் கௌரவித்தது. பிரான்ஸ் - துலூஸ் நகரில் 'இயற்கையும் உடல்நலமும்' என்ற பொருளில் நடைபெற்ற கண்காட்சி - கருத்தரங்கில் (1996) இளங்கோவன் சிறப்புரையாற்றினார். இதனை அறிந்த  பிரான்ஸில் வெளியாகும் முன்னணி நாளேடுகளில் ஒன்றான 'LA DEPECHE' இளங்கோவனைப் பேட்டி கண்டு (1996) 'இன்றைய பிரமுகர்" என எழுதிக் கௌரவித்தது.

இலக்கிய - சமூகப் பணிகளுக்காக இளங்கோவன் பெற்ற விருதுகள் - பரிசுகளில் குறிப்பிடத்தக்க சில... ..

* இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாகத் தமிழ்ச் சங்கம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்பிடம் - 1978
* இலங்கைக் கலையகம் - பிரான்ஸ் வழங்கிய கலை இலக்கிய - சமூகப் பணிகளுக்கான விருது - தங்கப்பதக்கம் - 1992
* இலங்கை இலக்கியப் பேரவை - இலக்கிய வட்டம் - 'இளங்கோவன் கதைகள்" சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது - 2006
* பிரான்ஸ் 'ஆர். ரி. எம். பிறதர்ஸ்" - 22 -வது கலைத்தென்றல் விழா - கலை இலக்கியப் பணிக்கான விருது - தங்கப் பதக்கம் - 2014
* தமிழ்நாடு சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது - 'இப்படியுமா" சிறுகதைத் தொகுதிக்கானது - 2014
* இலங்கை அரசின் கலாபூஷணம் விருது - 2014

இலங்கையில் அன்று 'மக்கள் எழுத்தாளர்" கே. டானியல் தலைவராக விளங்கிய மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிய இளங்கோவன்இ தற்போது 'பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின்" தலைவராகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.