* படத்தை இரு தடவைகள் அழுத்தித் தெளிவாகப் பார்க்கவும்.

மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் (Perth) மாநகரில் கலாசூரி இ.சிவகுருநாதனின் ஊடக பணியை கௌரவிக்கும் முகமாக ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.

தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ. சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியா, பேர்த் மாநகரில்
நடைபெறவுள்ளது.

தினகரன் பத்திரிகையில் நீண்ட காலம் பிரதம ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி இ.சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் நினைவாக இந்நூல் வெளியீடு, ஹில்வியூ இன்டர்கல்ச்சுரல் கம்யூனிட்டி சென்டர் மண்டபத்தில், 01/06/2024 மாலை 3.30 முதல் 5.30 வரை நடைபெறும். 1 ஹில் வியூ பிளேஸ், பென்ட்லி, மேற்கு அவுஸ்திரேலியா. (Hillview Intercultural Community Centre, 1 Hill View Place, Bentley, Western Australia) எனும் முகவரியில் நடைபெறும்.

மூத்த தமிழ் எழுத்தாளர், இலக்கிய ஆர்வலருமான டாக்டர் அமீர் அலி தலைமையில் இந்நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் தினகரன் ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக் கொண்டவர்.

இந்நிகழ்வில் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான திரு நிலக்‌ஷன் ஸ்வர்ணராஜா நூலை அறிமுகம் செய்து சிறப்புரை வழங்குவார். அதன்பின் எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி ஜனனி சிவமைந்தன் இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் நூல் பற்றிய சிறப்புரை நிகழ்த்துவார்.

தினகரனில் சிவகுருநாதன் ஆற்றிய பணி பற்றி எடுத்தியம்பும் இந்நூலின் சிறப்புரையை எழுத்தாளரும், நூலக ஆவண காப்பாளருமான திரு.கோபிநாத் தில்லைநாதன் ஆற்றுவார். அத்துடன் டாக்டர். சி. பாஸ்கரநாதன் அவர்களும் இந்நூல் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.

தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை அவரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக நிலை நிறுத்தியது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலின் தொகுப்பாசிரியர் திரு.ஐங்கரன் விக்கினேஸ்வரா நூலின் ஏற்புரையை வழங்குவார்.

இதன் பின் பேர்த் மாநகரில் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, தொகுத்து வழங்கும் புகழ் பெற்ற பாடகரும், இலக்கிய ஆர்வலருமான
திரு. ராஜன் வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் இறுதியாக விழா நிறைவு பெறும்.

இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூல் பேர்த் மாநாகரில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.