'ஈழத்;து வரலாற்றில் 1940-கள் முதல் 1970-கள் வரையான காலகட்டம் அரசியல்இ இலக்கியத்துறைகளில் குறிப்பிடத்தக்க காலமாகும். மார்க்சிசச் சிந்தனைப் பரவலும் நவீன இலக்கிய விழிப்பும் ஏற்பட்ட காலமாகும். அன்று புதிய எழுச்சி ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டிலும் அத்தகைய எழுச்சி - மாற்றத்தை நோக்கிய பாய்ச்சல் ஏற்பட்டது. இலங்கையில் அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்; தோற்றமும்இ இலக்கியச் செழிப்பும்இ முன்னோக்கிய பாய்ச்சலும் நடந்தது. அந்தக் கருத்துகளை உள்வாங்கியதாலும்இ குடும்பச் சூழ்நிலையும்இ எழுத்தாளர் கே. டானியலுடன் ஏற்பட்ட தோழமையும்;இ சமூகத்தில் உறவாடிப் பெற்ற அனுபவங்களும் இளங்கோவனை இலக்கியத்துறையில் விருட்சமாக வளர உதவியிருக்கிறது. அவரிடம் நிறைந்துள்ள அனுபவப் பொக்கிஷங்களைப் படைப்புகளாக அவர் மேலும் எழுத்தில் பதிந்திட வேண்டும்."

இவ்வாறுஇ மூத்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான க. வாசுதேவன் பாரிஸ் மாநகரில் கடந்த ஞாயிறு மாலை (07 - 12 - 2025) நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கலைஞர் கே. பி. லோகதாஸ் இந்நிகழ்வில் பேசுகையில்இ 'ஈழத்தில் அன்று மார்க்சிசச் சிந்தனையோடு கலை இலக்கியத்துறையில் தீவிரமாகச் செயற்பட்டவர் இளங்கோவன். சித்த ஆயுர்வேத மருத்துவத்துறையிலும் புகழ்பெற்றவர். ஐ. நா. தொண்டராகத் தெரிவுசெய்யப்பட்டுப் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு வருடத்திற்கு மேலாக மூலிகை மருத்துவப் பணிபுரிந்து பாராட்டுகளும் விருதுகளும் பெற்றவர். 'இளந்தலைமுறையில் ஒரு பல்கலை வேந்தன்" என அவர் பாராட்டுகள் பெற்றார்" எனக் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் என். கே. துரைசிங்கம் பேசுகையில்இ 'இலக்கியத்துறை மட்டுமல்லாது ஊடகத்துறையிலும் இளங்கோவன் தொடர்ந்து இயங்கியவர். அவரின் எழுத்துநடை சிறப்பானது என்பதை பத்திரிகைத் துறையினர் அறிவர். மூத்த சகோதரர்களைப் பின்பற்றி இத்துறைகளில் ஈடுபட்ட அவர் அறிஞராகப்இ பல்தகமையாளராக விளங்குகிறார்" என்று கூறினார்.

எழுத்தாளர் பொலிகையூர் கோகிலா இளங்கோவனின் இரு சிறுகதைத் தொகுதிகள் குறித்துப் பேசுகையில்இ 'ஒரு சிறுகதைத் தொகுதியில்இ ஈழத்தில் போர்க் காலத்தில் அவர் பெற்ற அனுபவங்கள்இ கண்டறிந்த விடயங்கள்இ துன்ப துயரங்களின் வெளிப்பாடுகளைச் சிறந்த எழுத்துநடையில் தந்துள்ளார். மற்றச் சிறுகதைத் தொகுதியில்இ புலம்பெயர்ந்த மண்ணில் எம்மவர் வாழ்க்கைக் கோலங்கள்இ சீரழிவுகள்இ அலைந்துழலும் பாடுகள் எல்லாவற்றையும் பார்த்த கொதிப்புகள்இ சீற்றங்களைக் கதைகளாகப் படைத்துள்ளார்" என்றார்.

அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளர் கே. உதயகுமார் பேசுகையில்இ 'முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிஇ தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களின் வெற்றிகள்இ இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் இளங்கோவன் எழுதியவை சிறந்த பணியாகும். அவை எல்லாம் ஆவணங்களாகும்" எனக் குறிப்பிட்டார்.

தமிழ்மொழி ஆசிரியராகவும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் விளங்கும் பிரியா லவன் பேசுகையில்இ 'பத்மா இளங்கோவனின் சிறுவர் இலக்கிய நூல்கள் வாசிப்புத்திறனை பிள்ளைகளிடம் கொண்டு செல்ல உதவக்கூடியவை. பாட்டிமாரெல்லாம் இன்று தொலைக்காட்சியிலும் கைத்தொலைபேசியிலும் மூழ்கிக் கிடக்கச் சிறார்களுக்கு யார் தமிழ் போதிப்பதுஇ கதை சொல்லிக்கொடுப்பது..? பத்மாவின் கதைப் பாடல்கள் மற்றும் கணக்குப் பாடல்கள்இ நாலுவரியில் நறுக்காய்ச் சொல்லிய கருத்துகள் யாவும் பராட்டத்தக்க படைப்புகளாகும்" என்றார்.

அரசியல் இலக்கியச் செயற்பாட்டாளரான க. தேவதாஸ் 'மக்கள் எழுத்தாளர் கே. டானியல்" என்ற நூல் குறித்துப் பேசுகையில்இ 'டானியலுக்கும் இளங்கோவனுக்குமான அரசியல் - இலக்கியத் தோழமை உணர்வை யான் நன்கறிந்தவன். டானியலின் அரசியல்இ தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள்இ இலக்கியப் பணிகள் யாவற்றுக்கும் இளங்கோவன் பல வருடங்கள் உறுதுணையாகச் செயற்பட்டவர். அவர்களது சமூகப் பணிஇ அர்ப்பணிப்புகள் மகத்தானவை. டானியல் வாழ்வின் இறுதி நிமிடம்வரை உடன்நின்;ற இளங்கோவனின் தோழமை உணர்வு பாராட்டுக்குரியது" என்று குறிப்பிட்டார்.

கலை இலக்கியச் செயற்பாட்டாளர் க. முகுந்தன் பேசுகையில்இ 'இளங்கோவன் படைப்புகள்" நூல் ஒரு பாரிய தொகுதியாகும். இத்தொகுதியில் 16 சிறுகதைகள்இ 75 கட்டுரைகள்இ பல கவிதைகள்இ தமிழர் மருத்துவம் குறித்த விளக்கங்கள் - மூலிகைகளின் பயன்பாடுகள்இ நேர்காணல்கள்இ முன்னுரைகள்இ முகநூல் குறிப்புகள் - பத்தி எழுத்துகள் என விடயங்களைத் தொகுத்து இளங்கோவன் தந்துள்ளார். அவரது சிறுகதைகள் யதார்த்தபூர்வமானவை. கவிதைகளும் அவ்வாறே. ஆவணமாகப் பேணப்பட வேண்டிய கட்டுரைக் குறிப்புகளைத் தந்துள்ளார். இத்தகைய படைப்புகளை மேலும் சமூகத்திற்கென அவர் தரவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

எழுத்தாளர் சோபாசக்தி பேசுகையில்இ 'இளங்கோவன் எழுத்துகளைச் சிறுவனாக இருக்கும்போதே படிக்க ஆரம்பித்தேன்;. சர்வதேச ரீதியாகக் கம்யூனிசப் போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தின. புதிய மக்கள் இலக்கியத்தை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தின. இலங்கையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. தந்தையென நான் போற்றும் கே. டானியலின் உற்ற தோழர் இளங்கோவன். சென்னையில் அடுத்த மாதம் வெளிவரவுள்ள டானியலின் ஆறு நாவல்களின் புதிய பதிப்புகள் இளங்கோவனின் முன்னுரையுடன்தான் வெளிவரவுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

கலைஞர் குணபாலன் வாழ்த்துரை வழங்கியதோடு 'இளங்கோவன் படைப்புகள்" நூல் சிறப்புப் பிரதியும் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர்களான வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

பத்மா இளங்கோவனின் 'சிறுவர் தமிழ் அமுதம்இ சிறுவர் இலக்கிய நுட்பங்கள்இ சிறுவர் கதைப் பாடல்கள்இ பாலர் கதைப் பாடல்கள்இ கொரோனாவின் தடங்களில்;.." ஆகிய ஐந்து நூல்களும்இ வி. ரி. இளங்கோவனின் 'இளங்கோவன் படைப்புகள்இ ஈழத்து இலக்கியச் சிற்பிகள்இ வெயிலும் பனியும்இ போர்க்காலக் கதைகள்இ மக்கள் எழுத்தாளர் கே. டானியல்" ஆகிய ஐந்து நூல்களும் நிகழ்வில் வெளியிடப்பட்டன.

நாள் முழுவதும் இருந்த மழைத்தூறலையும் பொருட்படுத்தாது கலை இலக்கியப் படைப்பாளிகள்இ இலக்கிய அபிமானிகள்இ வாசகர்கள் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட  பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]