நூலின் பெயர் - 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்'
வெளியீடு - சமூகம் இயல் பதிப்பக, 317 பெரிந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹோம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 2022

- வரதராஜப் பெருமாள் புத்தக அறிமுக வெளியீடு: (கனடாவில் டிசம்பர் 04, 2022 மாலை நடைபெற்ற நிகழ்விற்கு தலைமைத் தொகுப்புரை ஆற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை  (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.  அவரது முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   சமூக, அரசியல் செயற்பாட்டாளர் அ.வரதராஜா பெருமாள் பொருளியல் துறை அறிஞர்களில் ஒருவர். இலங்கையின் பொருளாதாரம் பற்றிய அவரது கருத்துகளை அனைவரும் அறிவதும் அவசியம். இலங்கைப்பொருளாதாரம் பற்றிய நல்லதொரு புரிதலை இந்நூல் தருவதால் இது போன்ற நூல்களின் வருகை தற்போதுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் அவசியம். - பதிவுகள்.காம் -


ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில், அடுத்ததாக நிச்சயம் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டே தீரும் என்ற சமூக விஞ்ஞானப் பார்வை ஆய்வாளர்களிடம் உள்ளது. இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுட வர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மட்டும் மாற்றி விட்டுள்ளது.

இதற்கு அடுத்த படி நிச்சயமாக வர்க்கங்களே அற்றதொரு சமுதாய அமைப்புத்தான் உருவாக முடியும். பொதுவுடமைச் சமுதாய அமைப்பு ஒன்றே அத்தகையதொரு அமைப்பாகவிருக்க முடியும்.  பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம் உருவாகும் சோசலிசம் கால ஓட்டத்தில் வர்க்கங்கள் அற்ற சமுதாயமான கம்யூனிசம் உருவாகும். அத்தகைய சமுதாய அமைப்பில் பொருள்முதல்வாதிகள் கூறுவதுபோல் இறுதியில் அரசு உலர்ந்து உதிர்ந்து காணமல் போகும். அப்போது மானுடத்தில் சகலரும் சமமான உரிமைகளை பெற்று வாழ்க்கையைத் தொடருவர். இதுதான் பொருள் முதல்வாதம் என்ற இயங்கியல் சமூக விஞ்ஞானம் ஆகும். இது கருத்து முதல்வாதத்தை முழுமையாக மறுதலிக்கும் விடயமாகவும் இருக்கும். ஆனால் அத்துடன் மானுட வர்க்கத்தின் சகல பிரச்சினைகளும் தீர்;ந்து போய்விடுமா என்ன? என் கேள்விகள் நவீன காலத்து பொருளாதார வல்லுனர்கள் கேள்விகளாகவும் எழுப்பி நிற்கின்றனர். இதனைத்தான் மாக்ர்ஸ், ஏங்கல் இணைந்து மூலதனம் என்று எழுதிய புத்தகத் திரட்டில் கூறி நிற்கின்றனர்.

இந்த மூலதனம் என்ற புத்தகம் ஐரோப்பாவில் மையம் கொண்டு எழுதப்பட்டாலும் முழு உலகிற்கும் மனித குலத்திற்கும் அன்றும் இன்று என்றும் பொருந்தி நிற்கும் சமூக விஞ்ஞானம் ஆகும். பொருளாதாரம் யாரின் கையில், யாரின் அதிகாரத்தில் உள்ளதோ அவர்களே அந்த சமூகத்தின் ஆட்சி அமைப்பை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள். அதனால் உலகின் பெரும் பகுதி மக்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்திடம் இந்த பொருளாதாரத்தின் அதிகாரம் இருந்தாக வேண்டும் அது தன் வளர்ச்சில் போக்கில் அடக்கி ஆளம் அதிகாரம் அற்றதாக போவதற்கு வர்க்கம் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கியே தீரும.; இது சமூக விஞ்ஞானத்தின் உண்மைகள். இதனை வேகப்படுத்துவதற்காக போராட்டங்களை செயற்பாடுகளை இந்த முற்போக்கு வர்க்கம் தலமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமக்கான வரலாற்றுக் கடமையாகும். இதற்கு நாம் வாழும் சூழலில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புகள் விஞ்ஞான பூர்வமாக அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் வரதராஜப் பெருமாளின் இலங்கையும் அதுசார்ந்த ஏனைய நாடுகளின் பொருளாதாரம் பற்றி இந்த ஆய்வுப் புத்தகம் பாரிய பங்களிப்பை செய்திருப்பதாக நான் உணர்கின்றேன்.

இந்தப் போராட்டப் பாதையில் நாம் கடந்து செல்லும் போது கடந்த நூறு வருடங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இலங்கையை மையப்படுத்தி ஒரு பொருளாதார வரலாற்றுப் பதிவாக எழுதியுள்ளார் தோழர் வரதராஜப்பெருமாள்.  இதற்குள் இருக்கும் புள்ளி விபர எண் கணக்கிற்குள் நான் துல்லியமாக எனது பேச்சை கொண்டு செல்லவில்லை. மாறாக அதற்குள் இருக்கும் பொதுப் போக்கைப்  பேச விளைகின்றேன். பொருளாதாரம் அது யாரின் கையில் இருப்பது இதற்கான அதிகாரம் என்று வந்து விட்டால் ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்று வந்துவிடும் எனவே இதற்குள் அரசியல் இல்லை என்று எப்படிக் கூற முடியும் வர்க்கம் இரண்டு இருக்கும் வரை அரசும் அரசியல் இல்லாமல் போகமுடியாது.

மார்க்சின் மூலதனம் அவரது 40 ஆண்டு கால உழைப்பு ஆகும். அடுத்த இரண்டு பகுதிகளைப் படித்து, திருத்தி, எழுதி, சரி செய்தார் அவரின் நெருங்கிய சகா நண்பர் ஏங்கல்ஸ்.  இந்த விலை மதிக்க முடியாத பணியைப்பற்றிக் கருத்துத் தெரிவித்த லெனின், ‘மூலதனத்தின் இரண்டாவது மூன்றாவது பாகங்களை வெளியிடுவதன் மூலம் ஏங்கல்ஸ் தன் நண்பராகிய மாமேதைக்கு ஒரு கம்பீரமாக நினைவுச் சின்னத்தை எழுப்பி விட்டார்' என்று அதன் மூலம் அந்த நினைவுச் சின்னத்தின் மீது தன்னை அறியாமலேயே தனது பெயரையும் அழிக்க முடியாத வகையில் பொறித்துவிட்டார். உண்மையில் இவை மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப் படைப்பாகும்’ என்று எழுதினார் லெனின். 4 பாகங்களைக் கொண்ட மூலதனம் 1954 - 1961 இல் சோவியத் யூனியன் வெளியிடப்பட்டது.

மார்க்சின் கல்லறையின் முன்னால் தனது இரங்கல் உரையை நிகழ்த்திய ஃபிரட்றிக் ஏங்கல்ஸ் 'எவ்வாறு சார்ல்ஸ் டார்வின் உயிர்ப் பொருள் இயல்பின் விருத்தி விதியை எவ்வாறு கண்டறிந்தரரோ அவ்வாறே மனித குல வாழ்வின் வரலாற்றின் இயங்கு விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.  அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம் என்பனவற்றில் ஈடுபடுவதற்கு முதல் மனித இனம் உண்ணவும் அருந்தவும் தங்கியிருக்கவும் உடுக்கவும் வேண்டும் என்ற எளிய உண்மையைக் கண்டறிந்தார். எனவே மனித வாழ்க்கைக்கு உடனடி அவசியமான பொருள் சார்ந்த வகை முறைகளின் உற்பத்தியும் அதன் விளைவாக ஒரு காலப் பரப்பில் பெறப்பட்ட பொருளியல் வளர்ச்சியுமே அரச நிறுவனங்களினதும் சட்டக் கருத்தாக்கங்களதும் கலைகளதும் ஏன் மதங்கள் பற்றிய சிந்தனைகளதும் அத்தியாயமாக அமைந்த'தெனவும் 'முன்னையவற்றில் அடிப்படையிலேயே பின்னவை விளக்கப்படவேண்டும்' என்றும் கூறினார். இதனை நான் வரதராஜப்பெருமாளின் இந்தப் புத்தகத்தில் நான் காண்கின்றேன்.

'அது மட்டுமல்ல, இன்றைய முதலாளிய உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளிய சமுதாயத்தையும் ஆளும் சிறப்பு விதியையும் அவர் கண்டறிந்தார். எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளிய பொருளியலாளர்களும் சோசலிச விமர்சகர்களும் இது வரை இருளில் வழி தேடிக் கொண்டிருந்தார்களோ அது உபரிமதிப்பு என்பதை கண்டறிந்து ஒளியைப் பாய்ச்சியவர் மார்க்ஸ் ஆவார்'. இங்கும் இலங்கையின் பொருளாதாரத்தி மீட்டெடுப்பதற்குரிய ஒளிப் பாய்சுவதற்குரிய செயற்பாடுகளை இந்த புத்தகம் செய்திருக்கின்றதாக நான் உணர்கின்றேன்.

மார்க்ஸ் 'மூலதனம்' என்ற படைப்பில் அவரது பொருளியற் கோட்பாட்டிற்காகவே மிகவும் அறியப்பட்டவராவார். மூலதனத்தின் முன்னுரையில் 'நவீன சமுதாயத்தின் (அதாவது முதலாளிய சமுதாயத்தின்) இயக்க விதியை அதன் தூய வடிவில் வெளியாக்குவதே இந்த நூலின் இறுதியான இலக்கு' என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டார்.  முதலாளித்துவ ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான நிதி நெருக்கடி மோசமாகியுள்ள இன்றைய சூழலில் மார்க்ஸ் உலகிற்கு வழங்கிச் சென்றுள்ள 'மூலதனம்' படைப்பு மீண்டும் ஒரு முறை தனது முக்கியத்துவத்தை நிரூபித்து நிற்கின்றது. அது போலவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான வழி முறைகளை வரதராஜப்பெருமாளின் இந்தப் புத்தகம் கூறி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக என்னால் பார்க்கப்படுகின்றது. அதனால் வரதராஜப்பெருமாள் பற்றி வரலாற்றுக் குறிப்பு வரலாற்றில் இவ்வாறுதான் பதியப்படும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு.

மிகச் சிலரே அதுவும் அண்மைக்கால பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி கட்டுரைகள் புத்தகங்கள் பேச்சுகள் என்று நிகழ்த்தியுள்ள நிலையில் இதற்கு போதுமானவளவு நேரத்தை செலவிட்டு இந்த புத்தகம் எழுதியிருப்பது மனித குலத்தின் விடுதலை மீது சிறப்பாக இலங்கை வாழ் மக்கள் மீதான அவரது கரிசனையை எடுத்தியம்பி நிற்கின்றது. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாட்டாளி வர்க்கம் அதிகமாக நிறுவனப்பட்டிருந்த ஐரோப்பிய சூழல் மாதிரியை தொழில் வளர்ச்சி, தொழிலாசாலைகள் தொழிலாளி வர்க்கம் நிறுவனப்படாமல் இருந்த ஆசிய, இலங்கை, தென் அமெரிக்க நாடுகளுக்கு ஐரோப்பிய மாதிரியை நாம் அப்படியே உபயோகிக்க முடியாது. அதற்கு முதலில் இலங்கை, தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க மூன்றாம் உலக நாடுகளின் பொருளதார, தொழிலாளர் வர்க்கத்தின் நிலமைகள் ஆராயப்பட வேண்டும். அந்த வகையான ஒரு ஆய்விற்கு இந்த புத்தகம் ஒரு ஊசாத்துணை நூலாக அமையும் என்பது என்பார்வை. இன்னும் எழுதப்பட வேண்டியதும் பார்க்கப்பட வேண்டி விடயங்கள் என்று பலதும் இருந்தாலும் இது ஒரு ஆரம்பம் மட்டும் அல்லாது அதற்கும் அப்பால் சென்று பலதையும் பேச விளைகின்றது.

சுய சார்புப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதை அடிப்படையாக கொண்ட பொருளாதார செயற்பாடுகளை இலங்கை அரசு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கொண்டிருக்கவில்லை. காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பும் பிரித்தானியர்கள் கையாண்ட தங்கியிருக்கும் பொருளாதார செயற்பாடுகளையே இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்படுத்தி வந்தன. இடதுசாரிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியினர் உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு காலமான 1970 தொடக்கம் 1977 வரையிலான காலத்தில் மட்டும் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தது.  1977 இல் அமெரிக் டாலர் ஒன்றி மதிப்பு இலங்கை ரூபாவில் 8 ரூபாய் அளவில் இருந்த பொருளாதாரச் சுட்டி இன்று திறந்த பொருளாதாரம் என்ற தங்கியிருக்கும் பொருளாதாரம் சுய சார்பு பொருளாதாரத்தை கவனத்தில் எடுக்காத செயற்பாடுகளினால் ரூபாய் 350 மேல் வந்திருப்பதை நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும். இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறு மிக நீண்ட காலமாக சீரழிவுப்பாதையில் சென்றுள்ளது என்பதை இதிலிருந்த நாம் உணரமுடியும்.

அபிவிருத்தியை உற்பத்தியை நோக்கிய செலவினங்களுக்கு பதிலாக தேவையற்ற அதிகளவு ஆளணிகளுக்கு சம்பளம் வழங்குதல் அதற்கான கருவிகள் வழங்களைப் பாதுகாத்தல் என்ற யுத்த காலத்து செயற்பாடுகளை யுத்தம் முடிவுற்ற பின்பும் தொடரும் போக்கும், பெருந்தொகையான லஞ்சப் பணத்தைப் பெறக் கூடிய துறைகளான கட்ட நிர்மாணத்துறை பெருந்தெருக்களை அமைத்தல் என்பனவற்றல் கடன் வாங்கிச் செயற்படுத்தப்படும் செயற்பாடுகளில் இருந்த அக்கறை உள்ளுர் உற்பத்திகளை அதிகரிப்பதில் செலவு செய்வதில் அதிக நாட்டங்களை அரசுகள் காட்டவில்லை. இவற்றால் எம் நாட்டில் கிடைக்கின்ற வழங்களின் அடிப்படையிலான பண்ட உற்பத்திகளை அதிகரிப்பதற்குரிய வாயப்;புகளை அதிகம் ஏற்படுத்தப்படவில்லை என்பதை இந்த புத்தகம் புள்ளிவிபர அடிப்படையில் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

 - நூலாசிரியர் பொருளியல் அறிஞர் அ.வரதராஜா பெருமாள் -

வளமான வாழ்வு என்று இல்லாவிட்டாலும் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வாழ்க்கை தரத்தை கொண்ட  மலையக மக்களின் வாழ்வில் இருந்து எவ்வாறு வினைத்திறன் மிக்க உழைப்பை வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியும். அடுத்த நாள் உயிர் வாழ்வதற்குரிய ரொட்டித் துண்டுகளை வீசியதாகவே அவர்களின் வருமான வரம்பு இருந்து கொண்டே இருக்கின்றது.  அதுதான் மலையகத்தில் நிலத்தின் அளவு அதில் ஈடுபடும் மனிதவளத்தின் அளவு அதனால் பெறப்படும் விளை பொருட்களின் அளவு இவற்றிடையேயான  எண் கணிதங்களின் அடிப்படையில் தேயிலைச் செய்கை அதி இலாபகரமானது அல்ல என்பது இந்தியா கென்யா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இருப்பதை அறிய முடிகின்றது. இதனை வினைத் திறன் மிக்கதாக மாற்றுவதும், கூடவே மக்கள் தமது தேவைகளுக்கான உணவுப் பொருட்களை செய்வதற்கு வளவுடன் கூடிய வீடுகள் என்று சிறு நிலங்களை பகிர்ந்து அளித்து இதன் மூலம் ஒரு சமநிலையை பேணி ஆக்கத் திறன் கூடியதாக மலையகம் மாற்றப்பட வேண்டும் என்பது அவசியமானது.

இதற்குள் அவர்கள் சிறுப்பான்மை தமிழ் பேசும் மக்களாக இருப்பதுவும் கூடவே இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கூலிகள் என்ற மேலாதிக்க மனப்பான்மை அரசியலும் பாரியளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒரு பலமிக்க குரல் உள்ள வாக்குரிமை உள்ள சமூகமாக இவர்கள் உருவாகுதல் ஆட்சி அதிகாரச் சூத்திரங்களை மாற்றலாம் என்ற பயப்பிராந்து இலங்கையை ஆண்டு வரும் அரசுகளிடம் தொடர்ந்தும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனால் வினைத்திறனை ஒரு அளவிற்கு மேல் கொண்ட செல்வதில் அரசுகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்ற பார்வையை என்னால் பார்க்க முடிகின்றது.  இதனையும் மீறித்தான் மலையக மக்கள் கல்வியில் அண்மைக் காலங்களில் முன்னேறி வருவதை நாம் அவதானிக்க வேண்டும்.

குடிசனப் பரம்பல் அதுவும் பேச்சுரிமை உள்ள குடியரிமை உள்ள ஆளும் அரசைத் தீர்மானிக்கும் சக்திகளாக முடியாத குடியிருப்பு முகவரியற்ற லயன் வாழ்கையை தொடர்ந்து பேணுவதற்குரிய பேரினவாத செயற்பாட்டையும் அதற்கு ஒத்துச் செயற்படும் முதலாளித்து மலையக தொழிற்சங்ககளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவும் அங்கு நிலத்திற்கும் ஆளணியிற்கும் இதன் அடிப்படையிலான விளைச்சலின் அளவை குறிப்பிடும் வினைத்திறன் குறைந்து காணப்படுவதற்கு முக்கிய காரணி ஆகின்றது. கூடவே உலக சந்தையில் எண்ணை விலைய அதன் உற்பத்தியாளர்கள் தீர்மானிக்கும் பலமான கூட்டமைப்பை கொண்டிருப்பது போல் தேயிலை உற்பத்தி விலையை தீர்மானிக்கும் அமைப்பு பலமாக இல்லை.  மாறாக தேயிலை விலையை அதனை வாங்குபவர்கள் தீர்மானிக்கும் நிலையே உலக சந்தையில் உள்ளதும் என்ற விடயம் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமான விடயமாக பார்க்க முடிகின்றது. எமது மலையகம் மாதிரியான தரை அமைப்பு வாழ்வியலைக் கொண்ட போத்துக்கல் நாட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தேயிலைக்கு பதிலாக அங்கு கிறேப்ஸ், ஓறெஞ், ஒலிவ் என்பன செய்கை பண்ணப்படுவதும் அது அங்கு பொருளாதார மேம்பாட்டிற்கு அதிகம் உதவுவது. இதில் இருந்து தயாரிக்கப்படும் போதை மதுவிற்கு உடல் ஆரோக்கிய உணவு எண்ணை குளிர்பானங்கள் உலக சந்தையில் இருக்கும் கிராக்கி காரணமாக இருக்கின்றன. இதற்கு காரணம் தேனீர் அருந்தால் ஒருவர் இரு என்றால் இருப்பார்.... ஆனால் மது அருந்தாமல் ஒருவரால் இருக்க முடியுமா என்ற அந்த போதை அளவு கோல் இங்கு விலைகளை தீரமானிப்பதில் இருக்கும் கேள்விகளை மாற்றி அமைக்கின்றது.

சீவனோபாயத்திற்காக விவசாயத்தில் ஈடுபட்ட மக்கள் கால ஓட்டத்தில் இதில் ஏற்பட்ட உபரி விளைச்சல்ளை விற்று தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டனர் என்ற போக்கு இலங்கை விவசாயத்திற்கும் பொருந்தி இருந்தாலும், இந்த விளைச்சல்களை கொள்வனவு செய்தல் பாதுகாத்தல் சந்தைப்படுத்தல் முடிந்தால் உள்ளுருக்குள் மறு விநியோகம் செய்தல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் என்ற கூட்டுறைவுச் செயற்பாடுகளை இலங்கையில் பாரியளவில் தற்போது இல்லை. நில காலங்களில் இது வலுவாக இருந்தன என்பதையும் அது 1970 தொடக்கம் 1977 வரை என்பதையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

ஓரளவிறகு 12 மாதமும் பயிற் செய்கை பண்ணக் கூடிய வானத்தை பார்க்காமல் நிலத்தடி, நில மேல் நீர் வழத்தை தன்னகத்தே 60 சதவிகிதத்திற்கு மேல் கொண்டிருக்கின்றது இலங்கை. இதில் இருந்து பயிற்செய்கை பண்ணப்படும் நிலத்தின் அளவு இதில் ஈடுபடும் ஆளணிஅளவு இதில் இருந்து பெறப்படும் விளைச்சல் என்பனவற்றை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் இருப்பதுவும் இந்த புத்தகம் சுட்டிக் காட்டுகின்றது.

1960 களில் இலங்கையில் அறிமுகப்படுத்திய 'பசுமைப்புரட்சி' அதுவரை அதிகம் இயற்கைப் பசளைகளை கால் நடைகள் இன்னபிற வழிகளில் பெற்று பாவித்து வந்து விவசாய தொழிலை மெது மெதுவாக இயற்திரங்கள் மூலம் இல்லாது ஒழித்து இன்று தங்கியிருக்கும் அதுவும் அதிகம் இரசாயன உரங்களில் அதுவும் உள்ளுரில் உற்பத்தி செய்யாத இறக்கு மதியில் தங்கியிருக்கு நிலையிற்கு கொண்டு சென்றிருக்கின்றது. இதன் தொடர்சியாக அதிக இரசாயன உரப் பாவனை நிலத்தை மலடாக்கியது மட்டும் அல்லாது கிருமிநாசினிகளும் நிலத்தடி நீரில் கலந்து சிறு நீரகப் பாதிப்புகளை அதிகம் வட மத்திய மாகாணங்களில் ஏற்பட்டிருப்பதை நாம் புறந்தள்ள முடியாது. இது இந்த புத்தகத்தில் அதிகம் பேசப்படாத விடயமாக சூற்றுச் சுழல் விடயமாக என்னால் பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் ஏனைய மகாணங்களுக்கும் அளவு ரீதியாக குறைவாக இருந்தாலும் பொருந்தித்தான் இருக்கின்றது.

இச் செயற்பாடுகள் எமது நிலங்கள் வினை(ளை)த் திறன் குறைந்தவையாக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களாக நாம் பார்த்தாக வேண்டும். இதே மாதிரியாக நில வளத்திற்கு சற்றும் குறையாமல் கடல் தொழிலுக்கான நீர்வளம் சூழ்ந்த நாடாக இருந்தும் கருவாடு போன்றவற்றை இறக்குமதி செய்யும் அளவில் இருப்பதற்கான காரணம் எனது வளங்கள் அயல் நாடுகளால் சூறையாடப்படுவதும் இருக்கும் வளங்களை சரியான முறையில் சூற்றுச் சூழல் பாதுகாக்கப்படாமல் கையாளுதல் என்ற முறையிற்கு நவீனமயமாக்கப்படாத செயற்பாடுளுமாக காரணங்கள் ஆகி நிற்கின்றன.

20 ம் நூற்றாண்டிற்குரிய கல்வி முறையும் தொழில்சார் அறிவியலை அதிகம் வளர்க்கும் கல்வித் தொகுப்புகளும் இல்லாத இலவசக் கல்வி வெறும் பட்டங்களைப் பெற்று பட்டறிவை விடத் தாழந்தும் நிற்கின்றது. கல்வி முறையில் பாரிய மாற்றமும் அதனால் பெறப்படும் துறைசார் நிபுணத்துவவும் எமது நாட்டின் வளங்களை வலுவாக்கி பண்ட ஆக்கங்களின் வினைத்திறனை அதிகரிக்க புதிதான ஊற்பத்திகளை உருவாக்குவதற்குமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

நன்றி - சிவா முருகுப்பிள்ளையின் முகநூற் பக்கம்.