கே.வி.மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் மொழியில், சீர்காழி கோவிந்தராஜன் & ஜமுனாராணி குரல்களில் ஒலிக்கும் இந்தப்பாடற் காட்சியில் நடித்திருப்பவர்கள் எம்ஜிஆர் & எல்.விஜயலட்சுமி. பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்: 'கொடுத்து வைத்தவள்'.

இப்படத்தில்தான் எம்ஜிஆரும், எல்.விஜயலட்சுமியும் காதலர்களாக நடித்திருக்கின்றார்களென்று நினைக்கின்றேன். ஏனைய எம்ஜிஆர் படங்களில் எல்.வி ஆடி விட்டுப் போய்விடுவார். 'குடியிருந்த கோயில்', 'எங்க வீட்டுப்பிள்ளை'யைக் குறிப்பிடலாம். இல்லாவிட்டால் இன்னுமொருவருக்கு இணையாக நடித்திருப்பார். 'ஆயிரத்தில் ஒருவ'னில் நம்பியாரின் மனைவியாக நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில்தான் எம்ஜிஆரின் காதலியாக நடித்திருக்கின்றார்.

https://www.youtube.com/watch?v=gvcyB4znN04