https://www.youtube.com/watch?v=AwazG88Jhug

மானுட உணர்வுகளில் காதல் உணர்வுகள் அற்புதமானவைு. ஏனென்றால் குடும்ப உறவுகள் தவிர்த்து முதல் முறையாக இன்னொருவருடன் உயிரும், உள்ளமும் கலந்து உறவாகும் உறவு , உணர்வு காதல். அவ்வகையில் அது மானுடரின் பருவ வளர்ச்சியில் முக்கியமானதொரு படி.

முதற்காதலோ, நிறைவேறிய காதலோ, நிறைவேறாத காதலோ, ஒரு தலைக் காதலோ அது எவ்வகையாகவிருப்பினும் அக்காதல் உணர்வுகள் மானுட வாழ்வில் முக்கியமானதோரிடத்தைப் பிடித்த உணர்வுகள் என்றால் அது மிகையான கூற்றல்ல. நான் கூறுவது தூய்மையான காதலுணர்வுகளை. அவ்வுணர்வுகளில் தன்னலம் இருக்காது. பழி வாங்கும் வெறி இருக்காது. தன் காதலுக்குரியவரின் மகிழ்ச்சி ஒன்றே நிறைந்திருக்கும்.

காதல் என்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் வரும் 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' பாடல்தான். அப்பாடலை நண்பர்களுடன் இத்தினத்தில் பகிர்ந்துகொள்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=AwazG88Jhug