- ஊர்க்குருவி -

எம்ஜிஆரைப் பட்டிதொட்டியெங்கும் அறிமுகப்படுத்தி, மக்களின் உள்ளங்களில் அவரைத் தங்கள் வீட்டுப்பிள்ளையாக உணர வைத்த பெருமைக்குரியவை கருத்துகள் நிறைந்த அவரது திரைப்படப் பாடல்களே. ஆரோக்கியமான கருத்துகளை உள்ளடக்கியுள்ள பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கையில் அவற்றில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகள் ஆழமாகக் கேட்பவர் உள்ளங்களில் சென்று படிந்து விடுகின்றன.வாழ்க்கைச் சூழலால் வாடிக்கிடக்கும் உள்ளங்களில் நம்பிக்கையை, இன்பத்தை, எழுச்சியை வாரி இறைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பவை இப்படியான ஆரோக்கிய உணர்வுகளைத் தூண்டும் பாடல்களே. எம்ஜிஆரின் திரைப்படங்களில் நான் விரும்பிப் பார்ப்பது கேட்பது எல்லாம் இவ்வகையான பாடல்களையே.

எம்ஜிஆர் திரைப்படங்களின் மிகவும் முக்கியமான , ஆரோக்கியமான அம்சமாகக் கருதுவது கருத்தாழம் நிறைந்த அவரது படப்பாடல்களையே. இந்த நல்ல அம்சம் அவரது திரைப்படங்களின் ஏனைய அம்சங்களையெல்லாம் ஓரங்கட்டி விடுகின்றது. வாழ்வின் வெற்றிக்காக நூற்றுக்கணக்கில் வெளியாகும் நூல்கள் செய்யும் ஆரோக்கியப் பணியினை அவரது கருத்து நிறைந்த திரைப்படப் பாடல்கள் செய்கின்றன. அதனால் ஆரோக்கியமான சமுதாயப் பயன் மிக்கவை.

* இங்குள்ள புகைப்படத்தில் எம்ஜிஆருடன் இருக்கும் சுட்டிகள்: குட்டி பத்மினியும், ஶ்ரீதேவியும். 'நம்நாடு' திரைப்படத்தில் வரும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' பாடற் காட்சி.

https://www.youtube.com/watch?v=jRkJP_HCSq8