மோகன்லால் & கனகா நடிப்பில், பாடகர் மினிமினியின் குரலில் ஒலிக்கும்  இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்: வியட்நாம் காலனி. இசை: எஸ்.பாலகிருஷ்ணன்.  மலையாளத் திரைப்படங்களில் விரவிக் கிடக்கும் இயற்கைச்செழிப்புள்ள மண்மணம் தவழும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கூடவே காதல் போன்ற மானுட உணர்வுகளைக் கவிதையாக வடித்திருப்பார்கள். அதுவும் எனக்குப் பிடிக்கும். இப்பாடலும் பாடற்காட்சியும் அத்தகையதொன்றே. நடிகை கனகா சிறந்த நடிகை. அவர் தொடர்ந்தும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடித்து நடிப்பில் பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என்ற உணர்வு இப்பாடலைக் கேட்கையில் , பார்க்கையில் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. பாடகியின் தனித்துவமான இனிய குரல் இதயத்தை மெல்ல வருடிச் செல்கின்றது. கூடவே இசையும்.

https://www.youtube.com/watch?v=scyRSHpEtOI