ஓவியர் மணியத்தின் வாத்தியாரின் 'மாட்டுக்கார வேலன்' 'கட் அவுட்'டின் தெளிவான புகைப்படமொன்றினை அண்மையில் இணையத்தில் கூகுள் தேடலில் கண்டேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை இணையத்தில் பகிர்ந்துகொண்டவர் யாரென்பது சரியாகத்தெரியவில்லை. அவருக்கும் என் நன்றி.

இப்புகைப்படம் இரண்டு விடயங்களை ஆவணப்படுத்துகின்றது: ஒன்று - ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்'. அடுத்தது: தற்போது இல்லாதுபோன யாழ் ராணி திரையரங்கு. எங்களை அக்காலகட்டத்துக்கே தூக்கிச் செல்லும் காலக்கப்பலாகவும் இப்புகைப்படம் உள்ளது. அவ்வகையிலும் முக்கியத்துவம் மிக்கது. இதனைப் பார்த்ததும் எங்கள் வயதும் பதின்ம வயதாகிவிடுகின்றது. அப்பருவத்துக்குரிய உணர்வுகளால் உள்ளம் நிறைந்து விடுகின்றது.

இந்தக் 'கட் அவுட்' காட்சிக்குரிய இனிய , சுவையான பாடல்: https://www.youtube.com/watch?v=qLOF3vWfoGM