-  இயக்குநர் கே.விஸ்வநாத் -

திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் எனப் பன்முக ஆளுமையாளரான இயக்குநர் கே.விஸ்வநாத் இன்று மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர். தனது திரையுலகப் பங்களிப்புக்காக ஐந்து தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதுகளையும், ஏழு தடவைகள் ஆந்திர மாநில அரசின் விருதுகளையும் , ஏனைய பல விருதுகளையும் பெற்றவர். வாழ்நாள் சாதனையாளர் விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதினையும் பெற்றவர். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா என்பதும் நினைவு கூரத்தக்கது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இத்திரைப்படத்தில் 9 பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடகருக்காகப் பெற்ற முதலாவது இந்திய மத்திய அரசின் தேசிய விருது இத்திரைப்படப் பாடலொன்றுக்குத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடகர் வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான தேசிய விருதினையும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனுக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் இத்திரைப்படம் பெற்றுக்கொடுத்ததும் நினைவு கூரத்தக்கது.

நான் பார்த்த இவரது இயக்கத்தில் வெளியான முதலாவது திரைப்படம் 'சங்கராபரணம்'தான். யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் வெளியாகி வரவேற்புடன் ஓடிய திரைப்படம். சோமையா ஜூலு , மஞ்சு பார்கவியின் சிறந்த நடிப்பு, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவைன் நெஞ்சையள்ளும் இசை , கே.விஸ்வநாத்தின் இயக்கம் இப்படத்தின் பெரு வெற்றிக்குக் காரணம்.

இவரது மறைவுச் செய்தி எனக்கு அன்று ஶ்ரீதரில் 'சங்கராபரணம்' பார்த்த நினைவை மீட்டெடுக்க வைத்தது.  இவரது நினைவாகச் 'சங்கராபரணம்' திரைப்படத்திலிருந்து பாடலொன்றைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=Mxgi3DqOc44

சங்கராபரணத்தின் தமிழ் வடிவம் - https://www.youtube.com/watch?v=klZAqNtVi-M

சங்கராபரணம் _ தெலுங்கு வடிவம் - https://www.youtube.com/watch?v=nOQiVyJuj7M