கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் ஏப்ரில் 13. அவரது நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது பாடலொன்று - 'தூங்காதே தம்பி தூங்காதே.'. 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்தாழம் மிக்க பாடல். 'நாடோடி மன்னன்'  எம்ஜிஆரின் இயக்கத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த திரைப்படம்.  எம்ஜிஆரின் திரையுலகில் முக்கிய மைல் கல் 'நாடோடி மன்னன்'. இதில்தான் அவர் சரோஜாதேவியை முதன் முதலாகத் தன் திரையுலக நாயகியாக அறிமுகப்படுத்துகின்றார்.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முற்போக்குக் கவிஞர். பொதுவுடமையைப் பாடிய கவிஞர். வர்க்க விடுதலையை நாடிய கவிஞர். அவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா'.  'நாடோடி மன்ன'னில் இடம் பெற்றுள்ள 'சும்மா இருந்த நிலத்தைக் கொத்தி' பாடலும் அவரது முக்கியப் பாடல்களிலொன்று.

முற்போக்குக் கருத்துகளைப் பாடிய கவிஞர் சிறந்த காதல் பாடல்களையும் தந்திருக்கின்றார். 'கல்யாணப்பரிசு' திரைப்படத்தில்வரும் 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' பாடலை இயற்றியவரும் இவரே.

https://www.youtube.com/watch?v=96GCbiFETLU