நடிகை சிலுக்கு சிமிதா பற்றி முகநூலில் செய்திகளைப் பார்த்தபின்னர்தான் புரிந்தது இன்று, செப்டம்பர் 23,  அவரது நினைவு தினமென்று.

அம்மா கனடாவுக்கு வந்த புதிதில் பாலச்சந்தரின் 'கையளவு மனசு'  தொலைக்காட்சித் தொடரை விரும்பிப் பார்ப்பா. அதில் கதாநாயகன் பிரகாஸ்ராஜ். நல்ல குணமுள்ள கதாநாயகன். அந்தப்பாத்திரமும், நடிகை கீதாவின் பாத்திரமும் அம்மாவுக்குப் பிடிக்கும்.
சிறந்த நடிகரான பிரகாஸ்ராஜை வில்லனாக்கி விட்டது தமிழ்ச் சினிமா. அதுதான் சிலுக்கு சிமிதாவுக்கும் நடந்தது. சிறந்த நடிகையான சிலுக்கைக் கவர்ச்சி நடிகையாக மாற்றி விட்டது தமிழ்ச் சினிமா.

சிறந்த நடிகர்கள் எந்தப் பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார்கள். பிரகாஸ்ராஜ், சிலுக்கு சிமிதா இருவருமே தமிழ்ச் சினிமா  தமக்குத்  தந்த வேடங்களில் சிறப்பாக நடித்தார்கள்.

இங்குள்ள முதலாவது  காணொளி வித்தியாசமான  காணொளி மட்டுமல்ல. நடிகை சிலுக்கு சிமிதாவின் ஆளுமை பற்றியும் நமக்கு அறியத்தருகின்றது. இதில் சிலுக்கு சிமிதாவுக்கு 'டப்பிங்' குரல் கொடுத்த கலைஞர் ஹேமமாலினி என்பர் தன் அனுபவங்களை விபரிக்கின்றார்.

அடுத்த காணொளி 'அலைகள் ஓய்வதில்லை'யில் நடிகை ராதாவின் அண்ணியாக , அண்ணன் தியாகராஜனின் மனைவியாக நடித்திருக்கும் சிலுக்கு சிமிதாவின் மறக்க முடியாத நடிப்பை வெளிக்காட்டுகின்றது. இன்று வரை 'அலைகள் ஓய்வதில்லை' அண்ணியாக நடித்திருக்கும் சிலுக்கு சிமிதாவின் நடிப்பை மறக்க முடியவில்லையென்பதே அவரது நடிப்பாற்றலுக்கு நல்லதோர் உதாரணம். நடிகை சாவித்திரி போல் சிறந்த நடிகையாக வரவேண்டுமென்ற சிலுக்கு சிமிதாவின் (விஜயலட்சுமி) ஆசை நிறைவேறாது போனாலும் தான் நடித்த வேடங்கள் மூலம் இன்றும் நினைவில் நிற்கின்றாரே சிலுக்கு சிமிதா. அதுதான் அவரது வெற்றி.

மூன்றாவது காணொளி அவரை  தமிழ்ச்சினிமா உலகுக்கு சிலுக்காக அறிமுகப்படுத்திய 'வண்டிச் சக்கரம்' பாடல்.

'டப்பிங்' கலைஞர் ஹேமமாலினியுடனான நேர்காணல் - https://www.youtube.com/watch?v=DEpJNRyOuuE
'அலைகள் ஓய்வதில்லை'  காட்சி - https://www.youtube.com/watch?v=e

'சிலுக்கு' என்னும் பெயரைத் தந்த 'வண்டிச் சக்கரம்' பாடல் - https://www.youtube.com/watch?v=8mDxki1x6Ro

இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு