வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே!
இசை & குரல் - AI Suno  ஓவியம் - AI)

 பாடலைக் கேட்டுக் களிக்க


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே

சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

நிதிகொண்டு எதனையும்  இங்கு வாங்கலாம்.
நிதிகொண்டு வாங்க முடியாதது அன்பு.
உண்மை அன்பு ஊற்றெடுக்கும் தானாக.
ஊற்று பெருகும் நீர் வீழ்ச்சியாக

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

*********************************************************

வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். 

பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன்  ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றையும் கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும்  மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி  யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி,  பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.

இவ்வருடம் மேலும் புதிய பாடல்களுக்கான காணொளிகள் பலவற்றை வெளியிடவுள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான கருத்துகளும் நிச்சயம் உதவும். நன்றி.