நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாள்வார் கரவெட்டி மத்தியில் பிறந்து வளர்ந்தவர். நாட்டுக்கூத்தில் வல்லவராக அவர் வளர்ந்த வரலாறு ஈழத்து நாட்டக்கூத்து வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். பாடலுடன்இ ஆடலும் சேர்ந்து வர பொருளுக்கேற்ப பாடி ஆடுவது கூத்தின் பாங்கு. மிக நளினமாக தான் பூண்டுகொண்ட வேடத்திற்கேற்பவே மாறிவிடுகின்ற உன்னத நடிப்பாற்றல் கொண்டவர் அண்ணாவியால் என பிற்காலத்தில் எல்லோராலும் அழைக்கப்பட்டவரும் அறியப்பட்டவருமான நாடக கவிமணி அவர்கள். பாடல்களை இயற்றுவதிலும், அதனை இசையமைத்துப் பாடுவதிலும் வல்லவராக விளங்கினார். பண்டிதர்களும் ஏற்றிப்போற்றும் நிலைக்கு கவிதை யாப்பதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கியவர். கரவெட்டியில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களின் கூட்டங்களில் வாழ்த்துக் கவி இயற்றிப் பாடுவதிலும், அந்தியேட்டிச் சபிண்டீகரணத்தில் தான்எழுதிய கல்வெட்டில் உள்ள பாடல்களை மனமுருகப் பாடுவதிலும் சமத்தராக காணப்பட்டவர். சமத்துவத்தை வலியுறுத்தி சமதர்ம சமுதாயம் அமையவேண்டும் என விழைந்தவர். ஏழை எழியவர்களின் நண்பனாக, பட்டி தொட்டியெங்கும் சென்று கலைப்பணி ஆற்றியவர். அவரால் எழுதப்படும் இறந்தவரைப் பற்றிய நினைவலைகள் பிள்ளைகள் புலம்புவதாகவோ அன்றி மனைவி அல்லது கணவன் புலம்புவதாக அமையும்போது அவை உண்மையிலேயே நிகழ்ந்தவற்றைப் பின்னிப்பிணைந்தவைiயாக யதார்த்தமாக அமைந்திருப்பதற்கு அவர் இருந்த சூழலில் உள்ளவர்கள் அனைவரையும் அவர் நன்கு அறிந்திருந்தார். அவர்களில் வாழ்வில் ஒரு பங்காளராக, பார்வையாளராக அவர் மிக நெருக்கமாகப் பழகிவந்தமை அவரின் சமூகக்கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுவன.

அவர் வாழ்ந்த காலம் இந்தியாவிலிருந்து தாராளமாக நாடகக் கலைஞர்கள் இறக்குமதி செய்யப்பட்டகாலம் மாதக்கணக்கில் தங்கியிருந்த கொட்டகைபோட்டு கூத்துக்களை மேற்கொண்ட காலம் மிகவும் பயிற்றப்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில் எம்.வி.கிருஷ்ணாளர்வார் தன்னிச்சையாகவே கூத்துக்களில் வேடமேற்றி நடித்து அனைவரையும் அவரது நடிப்புத்திறத்தாலே கவர்ந்திழுத்தவர்.

“இந்தியாவில் கல்லடி பட்டு, சொல்லடி பட்டு இருப்பவர்களைப் பெரும்பணச் செலவில் இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களைப் புகழ்ந்து சிந்தாமணி, அந்தமணி, இந்தமணி என்று பெயரிட்டு விளக்குமாறுக்குக் குஞ்சம் கட்டுவது போல நாம் அலைவதை விட நம் நாட்டிலுள்ள கிருஷ்ணாள்வார் போன்ற பெரும் நடிகர்களின் நடிப்பைக் கண்டு நன்றாக மகிழலாம்” என கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் 1926 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதியிருந்தமை தமிழகத்துக் கலைஞர்களைவிட தரம்வாய்ந்த கலைஞர்கள் ஈழத்தில் இருந்துள்ளார்கள் என்பது புலப்படுகின்றது.

அண்ணாவியார் நடித்த முதல் நாடகம் ‘சுபத்திரை’ என்பதாகும். அவரது நடிப்புக்குக் கட்டியம் கூறியது இந்த நாடகந்தான். மிக முக்கியமான பாத்திரத்தில் ஏற்று நடித்தார். இதனால் அந்த நாடகத்தின் பெயரான சுபத்திரை என்பது அவரது பெயருக்கு அடைமொழியானது. ஆழ்வார் என அவருக்கு ஒரு நிரந்திரமான பெயரைப் பெற்றுத் தந்தது. கரவெட்டியில் அவரை அண்ணாவியார் அல்லது சுபத்திரையாழ்வார் என்றுதான் குறிப்பிடுவார்கள் என்பதனை நான் கேட்டுள்ளேன். ஆழ்வாரைப் பற்றி நடிகமணி வைரமுத்து மிகவும் உயர்ந்த மதிப்பை வைத்திருந்தார் என்பது அவரது கூற்றுவாயிலாகவே அறியலாம். நான் இளமையாய் இருப்பதற்கு காணரம் ஆழ்வார் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார் என்றால் அது ஆழ்வார் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மருந்துதான் என்றாராம். அது என்ன என்று கேட்டதற்குஇ “ஆழ்வார் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார், சிரித்துக்கொண்டே கதை சொல்லுவார். சிரிக்கச் சிரிக்கக் கதைசொல்லுவார்” என்று ஆழ்வாரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நடிகமணி வைரமுத்த இளமைப்பருவத்தில் முதன் முதல் நடித்ததைப் பார்த்து நீ ஒரு பெரிய நடிகனாய் வருவாய் என வாழ்த்தினாராம் ஆழ்வார். அதன்படி சிவாஜி கணேசனாலேயே பாராட்டப்பட்ட பெருங்கலைஞனாக திகழ்ந்தார் நடிகமணி வைரமுத்து. அப்படிப் பட்ட பெரும் கலைஞன் ஆழ்வாரின்மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டமைக்கு அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்றால் தவறாகாது.

இந்தியாவில் இருந்து நடாகக் கம்பனிகளை வரவைத்து நடத்திவந்தவர்கள் அந்த நடிகர்கள்தான் சிறந்தவர்கள் எனப் போற்றிப் புகழ்ந்தமையால் அவர்கள் அகங்காரம் தலைக்கேறியவர்களாக தம்மை மிஞ்ச நடிகர்கள் இங்கு இல்லை என்ற நிலையில் இசை நாடகங்களில் தங்களின் வித்தகத்தை காட்டி பெருமை பேசிக்கொண்டார்கள். அவரின் வித்துவச் செருக்கை, கொட்டத்தை அடக்கியவர் எம்.வி. கிருஷ்ணாழ்வார் என்றால் தவறாகாது. புhடல்களை அயத்தம் இல்லாமலே சந்தர்ப்பத்திற் கேற்றவாறு சக்களத்திச் சண்டைக்கான பாடல்களை எதிர்பாரதா விதமாக பாடி தனக்குச் சக்களத்தியாக வந்தவரை ஒரே மடக்கில் திணறவைத்து அவர்களைக் கிலி கொள்ளவைத்தவர். இந்தியாவிலிருந்து வந்த நடிக்கும் நடிகர்ளுக்கு எம்.வி. கிருஷ்ணாள்வாருடன் நடிக்க பயம் கொள்ளும் நிலையைத் தோற்றுவித்திருந்தார் என்றால் அவரின் நடிப்பாற்றலோடு பாடல்களை இசைக்கும் திறனும் மிக்கவராகக் காணப்பட்டார. டாக்டர் சம்புநாதன் அவர்கள் அண்ணாவியாரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “தென்னிந்தியாவில் சங்கரதாஸ் சுவாமிகளால் பயிற்சியளிக்கபட்பட்டு இலங்கையின் பல பாகங்களிலும் எண்ணற்ற நாடகங்களை நடித்துப் பகழ் பெற்ற மீனலோசினி பால சற்குண சபாவினரின் நாடகம் மேடையேற்றப்பட்ட காலத்தல் நம்மூரிலும் ‘சுபத்திரை ஆழ்வர்’ எனப் புகழ் பெற்ற ஒரு நாடக்க கவிமணியும் மிளிர்வதென்றால் அவரின நடிப்பும் நயமிக்க வசனமும் தேனொழுக்குப் போன்ற சாரீரமும் நிசப் பெண்ணைப் போன்ற உடலமைப்பும் இன்னோரன்ன பண்புகளுமே காரணமாகும்” என அண்ணாவியாரின் நினைவு மலரிலே குறிப்பிட்டமை கருத்திற் கொள்ளற்பாலது. நாடகக் கம்பனிகளிலோ அன்றி ஊரவர்களால் மேற்கொள்ளப்படும் இசை நாடகங்களிலோ அன்றி கூத்துகளிலோ பெண்பாத்திரங்களில் ஆண்களே நடிக்கும் நிலைமைதான் இருந்தது. பெண்கள் மேடைகளில் ஏறாத காலமது. எம்.வி.கிருஷ்ணாள்வார் பெண்வேடம் ஏற்று நடித்தால் உண்மையான பெண் என்றே நினைந்து மனதைப் பறிகொடுத்த ஆண்கள் அநேகம்.

இவரது நடிப்பாற்றலைக் கண்ணுற்ற நாடக நடிகை மேதையான செந்திவேல் தேசிகர், கிருஷ்ணாழ்வாரின் திறனைக் கண்டு அவரோடு இணைந்து இலங்கையின் பல பாகங்களிலும் நாடகங்களை ஏற்றினர். அதன் பயனாக கிருஷ்ணாழ்வாரை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் அவரது திறனைக் காட்டவேண்டும் என விரும்பினார். அவரை அழைத்துச் சென்று பல சபா மேடைகளில் நடிக்கவைத்தார். பல தடவைகள் இந்தியாவிற்குச் சென்று வந்தமையால் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக்கொண்டார். அத்தோடு இந்தியாவில் அக்காலத்தில் நிகழ்ந்த விடுதலைப்போராட்ட அலையினால் கவரப்பட்டு விடுதலை வேட்கை கொண்டவராகவும் காணப்பட்டார்.

1931ல் பருத்தித்துறை காட்டிலிக் கல்லூரியில் அவர் ஏற்றிய நாடகத்தில் அவர் எகலப்பொல குமாரகாமி என்னும் பாத்திரத்தில் நடித்ததைப் பார்த்த ஆங்கிலேயர் ஒருவரால் பாராட்டப்பட்டதோடு பத்திரிகையிலும் அதனைப் பற்றி எழுத்தியுள்ளார். 1932ல் மீண்டும் இலங்கைக்கு வந்த செந்தில்வேல் தேசிகர் கிருஷ்ணாள்வார் அவர்களுடன் இணைந்து பல நாடகங்களைப் போட்டார். இவரது நாடகங்களில் பெண்வேடம் ஏற்பதில் கிருஷ்ணாழ்வார் முக்கிய பங்குகொண்டார். இவரது புகழ் தமிழர் வாழும் உலகெங்கும் பரவியது. மலேசியாவில் வாழ்ந்த தமிழர்கள் இவரை அங்கு அழைத்து நாடகங்களை ஏற்ற வைத்ததோடு மட்டுமன்றி அவருக்கு ‘இலங்கைத் திலகம்’ என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவம் செய்யப்பட்டமையும் சிறப்புடையது. இந்தியாவில் அவர் நடித்தகாலத்தில் என்.எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் போன்றோர் கோலோச்சிய காலம் அவர்களோடு இணைந்து நடித்தாரா என்பதற்கான ஆதாரங்கள் அல்லது பதிவுகள் ஏதும் கிடைக்கவில்லை. எம்.ஆர்.ராதாவும் பல நாடகங்களை இலங்கையில் மேடையேற்றியிருந்தார் ஆனால் அவர்களோடு இணைந்து நடித்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கவில்லை.

தேவரயாளி பாடசாலை விழாவில் அண்ணாவியாரால் பழக்கிய நாடகம் எல்லோரதும் பாராட்டைப்பெற்றது எனப்பேசப்பட்டது எனினும் இன்று அதனைப்பற்றி கதைப்பதற்கான சான்றாதாரங்கள் ஏதும் இல்லாமை அண்ணாவியாரைப் பற்றிய தேடலை மந்தமாக்கிய உள்ளது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய நாடகக் கவிமணி எம்.வி. கிருஷ்ணாள்வாரைப் பற்றிய முழுமையான ஆய்வினை மேற்கொள்ளமுடியாமைக்கு பதிவுகள் இன்மையே காரணமாகும்.

தனது தாய்மாமனின் மகளான இலக்குமியைத் திருமணம் செய்து சீதேவி (அவர் சுவகி எனவே ஊரவர்களால் அழைக்கப்பட்டார்) எனும் சற்புத்திரியைப் பெற்றெடுத்தார். அவரைத் தனது சகோதரியின் மகனைத் திருமணம் செய்யவைத்து அவர்பால் யோகேஸ்வரன், புவனேஸ்வரன், யோகம்மா ஆகிய மூவரைப் பேரராகக் கண்டு மகிழ்ந்தார். பேரப்பிள்ளைகள் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவ்விதமே உறவினரின் பிள்ளைகளையும் நன்கு மதித்து அன்புபாராட்டி வந்தார். பேரன் பொறியியலாளர் யோகேஸ்வரன் அவுஸ்திரேலியாவிலும், புவனேஸ்வரன் நெதர்லாந்திலும், யோகம்மா கனடாவிலும் வாழ்ந்துவருகின்றனர்.

கவிமணி கிருஷ்ணாள்வார் பற்றி அவரது நடிப்பாற்றலையும், கவிபுனைந்து பாடும் ஆற்றலையும் தனது இளமைக் காலத்திருந்தே அருகிருந்து கேட்டவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள். அவர் அண்ணாவியாரைப்பற்றிக் குறிப்பிடும்போது “இயல்பான நடிப்பாற்றலும், இனிமையான சாரீரமும், அழகான சரீரமும் கொண்ட அண்ணாவியாரிடம் அற்பதமான கவித்துவ ஆற்றலும் நிரம்பியிருந்தது” என்ற குறிப்பிட்டுள்ள அவர் மேலும் “கவிஞர் கிருஷ்ணாழ்வார் சரமகவிகள், வாழ்த்துப்பாக்கள், வரவேற்புப்பாக்கள், இறைவன் துதிகள் முதலான பலவற்றைப் பாடியுள்ளார். பலவகையான பாக்களை இவர் பாடிய போதிலும் இவரது சரமகவிகள் தனித்துவமும் சிறப்பும் மிக்கவையாகக் காணப்படுகின்றனன. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றிலே நின்று நிலைக்கக்கூடியவையாக இவரது சரமகவிகள் அமைந்துள்ளன”

பேராசிரியர் சிவலிங்கரா அவர்கள் கிருஷ்ணாள்வாரின் சரமகவிகளில் எடுத்துக்காட்டாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் தந்ததை பண்டிதர் த.பொ. கார்த்திகேசு அவர்களின் கல்வெட்டில் இவர் பாடிய பாடலை எடுத்துக்காட்டியுள்ளார். அது கரவெட்டியின் இயல்பு நிலையை எடுத்துக்காட்டுகின்றது.

"பார்ப்பனர்கள் வேதவொலி பரவுமோர்பால்
பகர்புராணக் கதைகள் படிப்பதோர்பால்
ஏர்ப்பகடு துரக்குமொலி யெடுவதோர் பால்
இளஞ்சிறுவர் நிரைமேய்க்கு மிகையதோர்பால்
கார்க்குழலார் காளையர்கள் காதலோர்பால்
குணக்காயர் கலைலயயிற்றுங் கழக மோர்பால
போர்க்கரிய கண்ணைவளம் பொலிவதோர்பால்
பிறங்கிடுபொன் கரவையெனும் பெரியநாடே”

வதிரியைப் பிறப்பிடமாக் கொண்ட பெரியார் சூரனைப் பற்றி பாடிய சரமகவிகளில் ஒன்று பின்வருமாறு அமைந்துள்ளது அதன் சந்தச்சிறப்பு அவரது கவித்துவத்தின் அழகு இளையோடிக் கிடக்கின்றது. சூரன் வாழ்ந்தகாலத்தில் யாழ் மாவட்டம் சாதிவெறியில் உச்ச நிலையைக் கொண்டிருந்தது. அவற்றைத் தன்னடக்கத்தோடு செயற்படுத்தித் தம்மைச் சார்ந்தவர்களுக்கு விடியலைத்தேடிக் கொடுக்க சூரன் எதிர்கொண்ட சவால்களை எல்லாம் நன்கு அறிந்தவர் அண்ணாவியார். சூரன்மீது மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தார் என்பதற்கு அவரது ஆழ்மனப் புதையலாக அமைந்தது இந்தப் பாடல்.

மிடிநெருக்க வைதீகம் மிகநெருக்க
மிஸனரிமார் கழகங்கள் மேல்நெருக்க
முடிநெருக்கக் குடிப்பிறந்த முதியோர்தங்கள்
முற்றுறாப் பணியென்னும் முறைநெருக்கப்
படிநெருக்க இடையறா முயற்சியாலே
பணிமுடித்த நெருந்தகையார் சூரனார்க்குக்
கொடிசிறக்கப் புகழ்பாடிக் கூடியாடிக்
குவலயத்தே விழாவெடுத்துக் குலவுவோமே!

அவரது பாடற்சிறப்பினை பல்வேறு தனிப்பாடல்களாலும் அறியக்கிடக்கின்றது. நவரத்தினசிங்கம் பாக்குநீரணையைக் கடந்ததை வாழ்த்தி அவர் பாடிய வாழ்த்துப்பாவிலும் இந்தச் சந்ததைக் காணலாம். “வங்கமலி பொங்குகடல் சங்கொலி முழங்;கிடும்” என்னும் பாடல் கம்பனை ஒத்த கவிவளத்தை அவர் கொண்டிருந்தார் என்பதனை உணர்த்துகின்றது. பள்ளிக் கல்;விமைய தனது 9வது வயதில் நிறுத்திவிட்டு நாடகப் பயித்தியமாக அலைந்த கிருஷ்ணாழ்வார் கற்றுக்கொண்டவை அதிகம். கவிதை யாக்கும் பாங்கில் மட்டுமன்றி தனது குரல் வளத்தாலும் இசைவளத்தாலும் இசைப்பதிலும் தன்னிகரற்றவராக விளங்கினார். அவர் கலையுலகிற்கு ஆற்றிய பணி அளப்பரியது. அவற்றை தேடிப்பெற்று ஒன்றுதிரட்டி பதிவாக்கவேண்டும். அவரது நினைவாக நூற்றாண்டு விழா கொழும்பில் பேராசிரியர் சிவத்தம்பியின் பேராதரவோடு 1998ல் எடுக்கப்பட்டது. சிவத்தம்பியவர்கள் அண்ணாவியாரின் வீட்டிற்கு மிக அண்மையில் பிறந்து வளர்ந்தவர். அவரைப்பற்றி நன்கு அறிந்தவர். அவர் ஊருக்கு வந்தால் அண்ணாவியாரைக் கண்டு குசலம் விசாரிக்காமல் விடுவதில்லை. கல்விமான்களாலேயே நேசிக்கப்பட்டவர். அண்ணாவியாரின் அயலவர் மன்னவன் கந்தப்பு. பண்டிதர். ஆண்ணாவியாரிடம் கவிதை நயம்பற்றிக் கலந்துரையாடுவதற்காக அவரிடம் அடிக்கடி வருவார். காலத்தைக் கடந்தும் எம்.வி.கிருஷ்ணாழ்வார் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இதுவரை எம்.வி.கிருஷ்ணாள்வாரின் நாடகம், கூத்து, மற்றும் கவிதைகள், பாடல் பற்றிச் சுருக்கமாகக் கவனித்தோம். அவரது பன்முக ஆளுமைகளில் தேங்கிக்கிடந்தது அவரது கவிகட்டும் ஆற்றல். சரமக கவிகளை இறந்தவர் களுக்கான அந்தியேட்டிக் கிரியையின்போது நூலாக்கிப் பாடுவது யாழ்ப்பாணத்து மரபு. இந்த மரபில் கரவையில் நீண்டகால அனுபவமும் ஆற்றலும் கைவரப்பெற்றவராக அனைவராலும் அணுகப்பட்டு புலம்பல்கள், நினைவுமீட்டல்கள் ஆக அவரால் பாடப்பட்ட கவிதைகள் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. அவர் அவற்றைப் பாடும்போது அதன் உட்பொருளை அனைவரும் விளங்கும் வண்ணம் உணர்வு பூர்வமாகப் பாடுவது வழக்கம். அவரது புலமையை நன்கு அறிந்த கற்றறிந்தவர்கள் அவரைப் பாராட்டி உரையாற்றியும் எழுதியும் உள்ளனர். கலாநிதி சிவலிங்கராஜா அவரது ஊரவர். இளமைக் காலந்தொட்டே கிருஷ்ணாழ்வாரை நன்கு தெரிந்தவர் மட்டுமன்றி அவரது பரம ரசிகராகவும் இருந்துள்ளார். அவர் கிருஷ்ணாழ்வாரின் கவிச் சிறப்பைப்பற்றிக் குறிப்பிடும்போது “நிதி நிர்ணய வெண்பாக்களைத் தொடர்ந்து இடம்பெறும் ‘மரபுகிளர்த்தல்’ என்னும் பகுதியைப் பெரும்பாலும் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தத்திலேயே பாடுவார். சிறுபான்மையாக அறுசீர், எண்சீர் விருத்தங்களிலே பாடுவதுமுண்டு. பெயர்ப் பட்டியலாக அமையும் இப்பகுதியிலே கவித்துவ ஆற்றலுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு மரபு வட்டத்தினுற்ளே “வாய்பாபட்டு” ரீதியாக அமைவது திவிர்க்க முடியாதது. எனினும் ஆங்காங்கே கவித்துவம் வாய்ந்து சொற்களையும் சொற்றொடர்களையும் இப்பகுதியிலே கூடப் புகுத்திவிடுவார்” என்பதுற்கு உதாரணமாக பின்வரும் பாடலை எடுத்க்காட்டுகின்றார்:

பாவாணர் கவிதனக் கெட்டாத கவினுடைய
பார்திபன் கந்தைய வேள்
பாருலக வாழ்வுமா சாலமென் றுன்னியே
பற்றுமுற்றுந் துறந்தே
பாதிமதி சோதிநதி யாதிவதி நீதிபதி
பதாம்புயம் பற்றினரோ!’

மனைவி, பிள்ளைகள், கணவன், மகள், மகன், தாய், தந்தை எனப் புலம்பல் அல்லது பிரலாபம் என்னும் நிலையில் அவர் யாத்த பாடல்கள் உயிர்த்துடிப்படையன. மனைவி புலம்புவதாக அவர் 1950 களில் எழுதிய ஒரு பாடலை உதாரணமாகக் காட்டுகின்றார்:

ஒருநாளு முன்னை மறவேன்பிரிந்து ஒருநாளியேனும் மகலேன்
திருவாய் மெழிந்த மொழியன்றிவேறு திருவாசகத்தை மதியேன்
மருவாருமுனது திருமேனி யன்றிமறுமாதர்மேனி தழுவேன்
குருவாணையென்ற துரையே யின்றென்ன குறைகண்டுமாண்ட தவமே”

திருமணத்தின் போதும் இணைந்து வாழ்ந்தபோதும் கணவன் மனைவி யரிடையே இடம்பெறும் புரிந்துணர்;வின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துவிடுகின்ற வாழ்வின் ஓடம் தொடரும் என நம்பியிருக்க ஒருவர் இடையில் மரணித்துவிட்டால் ஏற்படும் மனவேதனை, துயரம் அடக்கமுடியாதது. ஆதனைத் தத்ரூபமாக எடுத்துக்காட்டும் பாங்கு எம்.வி. கியின் சிறப்புடைமை எனலாம்,

வெளிநாட்டில் உள்ள ஒரு மகன் தாயின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத அவல நிலையை எடுத்து மிக நயமாகக் எடுத்துக் காட்டுகின்றது பின்வரும் விருத்தம்:

‘அந்தியத்தில் அருகிருந்து பணிசெய்யாமல்
ஆணைத் தெடுத்து மடிதாங்கிப் பாலூட்டாமல்
சிந்துகனி வாய்மொழியைக் கேட்டிடாமல்
திருமுகத்தைக் கண்ணாரப் பார்த்திடாமல்
தந்தியெனும் துட்டயெமன்சாற்றி வந்த
சாவோலை கண்டுமனம் தத்தளித்தோம்
வந்தடையும்மார்க்கமின்றி வாடிநொந்தோம்
வையயத்தி லென்செய்வோம் வருந்தினோமே”

வாலைக் குமரப் பருவத்தில் மகள் இருக்க அவளது திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்ட தந்தையை நினைத்து மகள் துயர மடைவதனை இயல்பாக எடுத்தக்காட்டும் பாங்கு சிறப்பு உடையதாகவே அமைகின்றது:

வாசமுறும் நீர்மூழ்கி வாகாயலங்கரித்து
பாசமுறுந் தோழியர்கள் பாங்காய்ப் புடைசூழ
நேசமறும் தாலியுடன் நிற்பதை நீகாணாமல்
பூசலுறும் பாடையிலே போனதென்ன பப்பாவே!
சோதி பெற நன்றாகச் சோடித்த காரேறி
வீதிவரும் பவனிமேதினியிற் காணாமல்
காதிற் பறைகேட்கக் கட்டியபூம் பாடையிலே
நீதியின்றிப் போய்மறைந்தாய் நெறியோ வென்பப்பாவே!

பேரப்பிள்ளைகள் பிரலாபம் மிகவும் கவிநயம் ததும்பும் பாக்களால் அவர் தந்து கேட்போரை மனமுருக வைக்கும் பாங்கு அலாதியானது:

முற்றத்து மண்சோறாய் மூ;னறூமற் காயடுப்பாய்
புற்றியபா வட்டையிலை பாற்கறியாய் - பெற்றவித்துச்
சாப்பிடவாஅப்பா சமைத்த தாறுதென்று
கூப்பிடுவ தாரையினிக் கூறு!

ஆழக் குழிகிணறாய் அங்கே தடிநாலிற்
சூழத் துலாநிறுத்தித் தொல்சிரட்டை – வாளியாய்
கோலிக் குளிக்கவப்பா வாவென்று மண்ணீரை
ஆருக்கு வார்ப்போ மினி!

என உதாரணம் காட்டும் பேராசிரியர் சிவலிங்கராஜா “யாழ்பபாணத்துக் குடும்ப உறவுச் சூழலை படம் பிடித்துக் காட்டுவது போல அமையும் இவரு புலம்பல் கவிதைகளிலே சமூக விழுமியங்களும் பொருந்தி இரப்பதைக் கவனிக்கலாம்.” எனக்குறிப்பிடுவது அக்காலத்து குடும்பப் பிணைப்பு பெற்றோர் பிள்ளைகள் உறவுஇ அதில் தாக்கம் கொண்டுள்ள உளவியல் தாக்கம் என்பனவற்றைப் படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.

இறைவணக்கம். நாட்டுவளம், ஊர்ச்சிறப்பு, இறந்தவர் வரலாறு என்பனபோக பிரலாபம் அல்லது புலம்பல் இடம்பெற்று அந்தத்துயரத்தை அனுபவித்து கண்ணீர் பெருக்கி நிற்கும் நிலையை நிவர்த்தி செய்யும் பாங்கில் அமையும் தேற்றம் மிகவும் சிறப்புப் பெறுவதனைக் காணலாம்:

அவரது தேற்றங்களில் ஒன்று:

பட்டமரம் தளிர்விடுத்துப் பூப்பதுண்டோ
பகலவனார் திசைமாறி யுதிப்பதுண்டோ
விட்டவுடல் தன்னிலுயிர் வருவதுண்டோ
விழுந்த மலர் பூங்கொடியிற் சேர்வதுண்டோ
மட்டவிழும் மலர்க்கூந்தல் வேசிமாரக்கு
மகிழ்ந்தளித்த பொன்மீண்டும் பெறுவதுண்டோ
அட்டதிசைபுகழ் திருக்கந்தையா வுக்காய்
அழுவதென்னோ துயர்விடுத்திங் காறுவீரே!

என்பது எவ்வளவு கருத்தாழம் கொண்டதோடு சமூக நிலையையும் இயற்கையையும் எடுத்தாண்டு ஆற்றித் தேற்றும் பாங்கு சிறப்புடைத்து.

“ஈழத்து இசை நாடக மேதை’ என்னும் அவரது நினைவிதழில் அவுஸ்திரேலியாவிலிருந்து திருமதி சிவகாமி செந்தையா ஆசிரியை அவர்கள் “கரவை கண்ட கவிமணி” எம்.வீ கிருஷ்ணாழ்வார் நினைவலைகள் என்னும் தலைப்பிலான கவிதைகளில் முதலாவது கவிதை பின்வருமாறு அமைகின்றது.

பொன் கொழுக்கும் இலங்கை வள நாட்டினிலேஇ
புகழ்மணக்கும் பாழ்நகரின்வரவையிலே
சன்னெறி தினம் வளரும் நாடகத்திலேஇ
நல் லுருப்படிக ளாக்க்pயவர் கவிமணியே
தென்னிந்தியக் கலைஞருடன் சேர்ந்துறவாடி.
திறன்மிக்க நாடகத்;தின் உச்சியிலேறிஇ
பன்னுதிரு வேடம்பல் தாங்கிநின்றவ்
வெற்றியின்மேல் நாடகத்;தில் வெற்றிகண்டவர்.

எம்.வி.கிருஷ்ணாழ்வாரின் கவிதைகள்இ நாடகங்களை எல்லாம் கண்டு களித்தவர் சிவகாமி என்பது அவரது கவிதையின் ஊற்றுக்கு அவரது பட்டறிவே காரணம் எனலாம். சிவபாமி அவர்கள் ஆசிரியையாக கடமையாற்றியவர் என்பதும் இன்று அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யதார்த்தன் எனப் பெயரிய கவிஞர் திரு, சிதம்பரப்பிள்ளை கரவையைச் சேர்ந்தவர். அவர் எம்.வி. கிருஷ்ணாழ்வாரை இளமைக்காலமுதல் நன்கு அறிந்திருந்தவர். பழகியவர், உறவாடியவர் அவரது பெருமைகண்டு பெருமிதம் பூண்டவர். கம்பராழ்வாராக எம்.வி. கிருஷ்ணாழ்வார் வேடம்போட்டமை பற்றி அவர் குறிப்பிடும்போது கம்பரின் வேடம் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. பாகவதரைப்போன்று தலையை வளர்த்திருந்த கிருஷ்ணாழ்வாரின் முகவமைப்பும் அதற்குப் பொருத்தமானதாக அமைந்திருத்தமையால் தத்ரூபமாக கம்பராகவே பாத்திரத்தில் தோன்றி இப்படித்தான் கம்பர் இருந்திருக்கின்றார் என்பதனை மக்கள் மனதில் பதியவைத்தவர் என்பதனை யதார்த்தன் பின்வரும் பாடலால் படம்பிடித்துக்காட்டுகின்றார்.

கம்பனுக்குச் சிலையெடுக்கக் கண்கண்ட கருவின்றி
கண்ட கண்ட கற்பனையில் கம்பனுருக் காணாமல்
அம்பிகா வதியில்வரு கம்பனாய் நீநடிக்கும்
அரிய செய்தியினைக் கேட்டு அனைவருமே அங்குற்று

நம்மாழ்வார் காட்டு மந்தக் கம்பனே கம்பனென்று
நயமுடனே சிலைவக்க நாட்டமுற்றார் என்றவொரு
தம்பிமுதற் றாதைவரை கற்பனை செய்கதை தன்னை
இன்றுவரை கேட்டிருந்து இறுமாப் படைந்திருந்தோம்.

எனக் கம்பனை ஆழ்வாரில் கண்டதாக உருவகிக்கின்றார் யதார்த்தன். யதார்த்தன் ஆழ்வாரின் நாடகங்களைக் கண்டும், அவர் பாடிய பாடல்களை நேரடியாகக் கேட்டும் பட்டுத்தெளிந்தவர். அவரது வாய்மொழி சிறப்பிடம்பெறக்காரமாயிற்று. இவ்விதமே அவர் கிருஷ்ணர் வேடம்போட்டமையால் அவரை கிருஷ்ணாழ்வார் என அழைக்கத்தொடங்கினர் என்பதனையும் அவர் எடுத்துக்கூறியுள்ளார். நெல்லண்டையில் பல அண்ணாவிமார் இணைந்து “பவளக்கொடி” நாடகத்தை மேடையேற்றினர். ஆதில் ஆழ்வாருக்கு கிருஷ்ணர் வேடம் போடப்பட்டது. தத்ரூபமாக கிருஷ்ணராகவே காட்சிளித்த ஆழ்வாரைக் மேடையில் பார்த்தவர்கள் தம்மை மறந்து எழுந்து நின்று கோவிந்தா, கிருஷ்ணாஇ கண்ணா என குரலெழுப்பி வணங்கினார்களாம். அன்றுமுதல் ஆழ்வாரை ஒட்டிக்கொண்டது கிருஷ்ணர் என்னும் நாமம் அதனால் கிருஷ்ணாழ்வார் என அழைக்கப்பட்டார். அதனை யதார்த்தன் அவர்கள் பின்வருமாறு கவிதையில் யாத்துள்ளார்.

வில்லெடுத்த விசயனுக்கு வதுவை செயு மதவனாய்
விண்ணவரும் வியப்படைய வியன்வேட மதுதாங்கி
நெல்லண்டைப் பதியினிலே நீகாட்சி தருவேளை
நெக்குருகி மக்கள் குழாம் நெருமாலைக் கண்டார்போல்

எல்லவனே உனைவணங்கி வேண்டிடுவார் வரங்களெனில்
வேறென்ன வேண்டுவதோ விளம்பிடவுன் கலைலத்திறனை
பலலவரும் புகழ்ந்துன்னைக் கிருஷ்ணாழ்வார் என்றழைத்துப்
பாராட்ட நாமெல்லாம் பார்துக் களித்தோமே.

என அவரின் புகழைப்பாடிப் பெருமை கொள்கின்றார் யதார்த்தன் என்றால் எம்.வி. கிருஷ்ணாழ்வாரின் நடிப்பு எத்துணை சிறப்புற்றிருந்தது என்பது வெளிப்படை.

நகைச்சுவையாகப் பாடுவதிலும் வல்லவர் எம்.வி. கிரு~;ணாழ்வார். புhடசாலை மாணவர்களுக்காகத் தயாரித்த நாடகங்களில் ஒன்று “குடியே குடிகேடு” என்பதாகும். அதில்சீவல் தொழிலாளியாக வரும் ஒரு வேடத்தில் நடடித்தவருக்கான பாடலை பின்வருமாறு எழுதிப் பாடவைத்திருந்தார்.

சோக்கான தென்னங்கள்ளு
சொக்க வைக்கும் எந்தன் கள்ளு
சோதித்துப் பார்த்துக் குடிக்க வாருங்கோ ஐயா
சூறையாட்டி விழுத்தாவிட்டால் கேளுங்கோ ஐயா - சோக்கான
பாழ்படுவார் சீவும் கள்ளு
பாழான கலப்புக் கள்ளு
நாள்முழுதும் குடித்தாலும் வெறி
நாடிடுமோ ஐயா
நான் தருவேன் குடித்துக் காசை
தாருங்கோ ஐயா - சோக்கான

கொப்பாட்டன் பாட்டன் எங்கள்
கோந்துறுவும் மாந்துறுவும்
துப்பாமற் சீவிப் புகழைத் தாவினோம் ஐயா
இப்போதும் எங்கள் குலப் பெயர் ஏற்றம் தான் ஐயா
-சோக்கான

என்பது அவர் எழுதி இசையமைத்துப் பாடி நடிக்கவைத்த பாடல் யதார்த்தமான நிலையை எடுத்துக் கையாண்டு அவர் எழுதிய பாடல்களை அனேகம். புவளக்கொடி நாடகத்திலும் அவர் அக்காலத்தில் சமுதாயத்தில் நலிந்துகாணப்பட்ட சாதி ஒடுக்குமுறையைச் சாடுபவராகவே காணப்பட்டார். பறையறைவோனாக வந்து நடித்துப் பாடிய பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.

புலையன் புலையன் என்று பேசுறீர் - சும்மா
போடா வாடா என்று ஏசுகிறீர் - நீதிக்
கலை கற்றவர் போலப் பேசுகிறீர்
காலடி கண்டாலும் கூசுகிறீர்
வெள்ளிக் கிழமைவி ரதம்பி டிக்கிறீர்
வேண்டுமட் டும்மாட்டைக் கொன்றுபு சுக்கிறீர்
- புலையன்
கள்ளுச் சாராயம் கொள்ளக்கு டிக்கிறீர்
கண்டப டிபுலால் உண்டுகொ ழுக்கிறீர்
தீயசெய் கையெல்லாம் உம்மிடத் திலே
வீணிற் கொடுமைகள் எம்மிடத்திலே – என்ன . . .
………………………………………..

தீட்டிருக்குது ஆண்டே வேறு எம்மிடத்திலே
- புலையன்

சாமியா டும்போது யாரையா? – பறை
கொட்டிமு ழக்குவது யாரையா?
நீடிய வான்முடி கூடிய மன்னரும்
ஆடி அடங்கிடும் வேளையிலே
கூடிமு ழக்கிக்கு டும்பச மேதராய்
வாடிய ழுவீர்ம யானம்வ ரைக்கும்
செத்தபி ணம்என்று சீஎன்று தள்தளுறீர்
சீராக எம்மிட் தந்துநீ றாக்கிறீர்
தீயை மூட்டுமுன்
ஓடுகி றீர்வீடு தேடுகிறீர் - அங்குத்
தேறிப்பு சித்துக் கொண் டாடுகிறீர்
- புலையன்

நாயும் நரியும்பி டுங்காமல் - பிணம்
நாற்றம்எ டுத்தும ணக்காமல்

அங்கம்நீ றாக்குவது நாங்களோ – வீணில்
அதிகாரம் செய்வது நீங்களோ.
- புலையன்

இப்பாடலை உண்மையிலேயே குலத்தொழிலாக் கொண்டவன் பாடியிருந்தால் அக்காலதத்துச் சமுதாயம் சும்மா விட்டுவைத்திருக்காது. ஆனால் அண்ணாவிப் புலயன் ஆச்சே பார்த்துக் கைதட்டிச் சிரித்தவர் பலபேர். ஆட்டம் போட்டவர் பலபேர். உண்மையை உணர்ந்து உள்மனம் பொங்கியவர்கள் பலபேர். இவருக்கேன் இந்தக் கீழ்சாதியினருக்கு வக்காலத்து வாங்கும் எண்ணம் என்று அலுத்துக்கொண்டவர்கள் ஒரு சிலர். தனது நடிப்பாற்ற லாலும்இ பாடுந்திறத்தாலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராக ஆக்கிக்கொண்டவர் அவர். அவ்வித திறன்மிக்கவர் அண்ணாவியார். ஆவரை வீதியில் கண்டால்கூட மதித்து மரியாதை செலுத்தாதவர்கள் யாரும் இல்லை எனலாம். ஏன் சிலர் பயந்தும் இருந்தார்கள் காரணம் நேரடியாக ஏசியே விடுவார். தவறுகளைச் சுட்டியும் காட்டுவார். தனக்கு எது சரியெனப் படுகின்றதோ அதனை யாரும் தடுக்கமுடியாது. செய்தே தீருவார்.

மிக்க ஆளுமை கொண்ட படைப்பாளராக., நடிகராக, நெறியாளராக அவர் மேற்கொண்ட பணிகள் அளவிலடங்கா. அவர் வாழும்போதும் பாராட்டப்பட்டா மரணித்த பின்னரும் நிலைத்து நிற்கின்றார். இக்கலைஞனின் கலை ஞானம் போதியளவிற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.




























*******************************************
நயினை மான்மியம்

வித்துவான் சரவமுத்துச் செல்லத்துரை அவர்களின் தெளிவுரை


அவையோருக்கும் இந்த காணொளி வாயிலான உரையாடலைத் தொடர்ந்து நடத்திவரும் ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தினருக்கும் சிறப்பாக வைத்தியக்கலாநிதி இராமநாதன் லம்போரன், அதன் ஆலோசகராக இருந்து வழிநடத்திவரும் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் என்னை இந்த நூலலாப்பற்றி உரையாற்ற ஊக்குவித்த முன்னைநாள் வடக்கக் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மதிப்பிற்குரிய க.சண்முகலிங்கம் அவர்களுக்கும் எனது மனமார்த்த நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்வதோடு இந்த உரையைச் செவிமடுக்கவந்துள்ள அனைந்து அன்பகூர் உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள்.

நயினை மான்மியம் என்பது நயினையினது மான்மியம் என விரித்துப் பொருளுணரப்படும். மான்மியம் என்பதுசிறப்பு, மகிமை, பெருமை என்னும் பொருட்களை உணர்த்தி நிற்கின்றது. பொதுவாக தலப்பெருமை கூற எழுந்த ஒன்றாகவே உள்ளது. வடமொழியில் மஹாத்தமியம் என்னும் சொல் மருவி ‘மான்மியம்’ என வழங்கிவருகின்றது என்பது அறிஞர்களின் கருத்தாகும்.


தல புராணங்களை அடியொற்றியதாக எழுந்த மான்மியங்களே நீண்டகாலமாக நிலைத்து வந்துள்ளன. எடுத்துக்காட்டாக சிதம்பர மான்மியம், காவேரி மான்மியம் என்பன இடத்தின் அல்லது பொருளின் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.


மான்மியம் என்ற பெயரில் பெருந்தொயையாயன நூல்கள் ஈழத்து அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. ஆறுமுக நாவலர் அவர்களால் சிதம்பர மான்மியம் எனும் நூல் எழுதப்பட்டுள்ளது. நா.கதிரவேற்பிள்ளை அவர்களால் கருவூர் மான்மியம் (1906ல்-மீள்பதிப்பு வல்வை ஆவணக்காப்பம் 2012) எழுதப்பட்டுள்ளது. கதிர்காம மான்மியம் என்னும் நூல் 1954ம் ஆண்டு அ.சின்னையா என்பவரால் எழுதப்பட்டுள்து. எக்.எக்.சி நடராசா அவர்கள் 1962ல் மட்டக்களப்பு மான்மியத்தையும் 1971ல் காரைநர் மான்மியத்தையும் எழுதியுள்ளார். மாரியம்மன் மான்மியம் பண்டிதர் ஆ.சபாபதி அவர்களால் 1972 எழுதப்பட்டுள்ளது. வட ஈழமறவர் மான்மியம் காவலூர் கவிஞர். ஞா.ம.செல்வராசா அவர்களால் எழுதப்பட்டுள்ளது.


கடவுள் வணக்கத்தில் காப்பு உட்பட 17 செய்யுட்கள் இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து 11 செய்யுட்களாலான பாயிரம் இடம்பெறுகின்றது. மொத்தமாக 1061 பாடல்களை நாகமணிப்புலவர் இயற்றியுள்ளார் எனக்குறிப்புக்கள் உள. உரையாசிரியர் பன்மொழிப் புலவர் சரவணமுத்து செலர்லத்துரை அவர்களால் உரை எழுதப்பட்ட நூல் 23.ஓகஸட் 2014இல் ஸ்காபுரோ ஐயப்பன் ஆலாய

மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.


அந்தவெளீட்டை ஊடகவியலர் எஸ்.விக்கேனஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கியமையும் அதற்கான ஆய்வோட்டத்தை பேராசிரியர் ந.சுப்பிரமணியன் மேற்கொண்டதும் நினைவில் உண்டு. இலக்கண பாரம்பரியங்கள் என்பது யாது என்பதை உணர்ந்தும் படைப்பாக நியினை மான்மியம் திகழ்கின்றது. நயினை நாகமணிப்புலவரின் கவித்தும் மகத்துவம், நுண்ணாற்றல் என்பன இந்நூலின் வாயிலாக வெளிப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்திய வர்த்கருக்குக் கணக்கப்பிள்ளையாக இருந்த நாகமணிப்புலவர் அவர்கள் இத்தன்மையான ஒரு நூலை எங்ஙனம் யாத்தார் என்பது அனைவரினதும் உள்ளதில் எழும் வியப்புமிக்க வினாவாகவே அமைந்துவிடுகின்றது. ஆசியர் கையாளும் யாப்பமைதி, அவற்றைக் கையகப்படுத்தும் லாவகம், கற்பனைத்திறன், மரபு வழி வந்த கவிமரபினை நிகர்த்து நிற்பதனைக் காணலாம். கம்பனைப்போல், வள்ளுன் போல் யாங்கணும் கண்டத்தில்லை என்னும் பாரதியின் கூற்றினை நிகர்த்த ஒரு பெரும் புலவராக மாறிவிட்டார் இந்தக்கணக்கப்பிள்ளை. அவர் கையாண்டுள்ள இலக்கியப் பாரம்பரியம் நயினையம்பதியின் அருளாட்சி நல்கும் நாகபூசணியின் சிறப்பியல்புகளைத் தொகுத்துத் தந்தாலும் அதற்பு அடியெடுத்துக்கொடுத்த தேவார முதலிகளான அப்பர், சம்பந்தர், ஆளுடைபிள்ளை மற்றும் மணிவாசகரை நினைந்து உட்புகுவது இந்த நூலின் தனித்துவமாக அமைகின்றது.

பாட்டுடை நாயகியாக நயினை நாகபூ~ணி அமைந்தாலும் புலவர் அவர்களை இறை பக்திக்கு வளப்படுத்திய தேவார திருவாசங்களை அருளிய நால்வரையும் மட்டுமன்றி இறை அட்டபாலகரையும் முன்னிருத்தி நூலை உருவாக்கியுள்ளமை தெற்றெனத் தெரிகின்றது.

நயினை நாகபூஷணியம்மை மீது பாடப்பட்ட நயினை மான்மியம் மட்டுமன்றி அவர் யாத்தளித்த தனிப்பாடல்கள், நிரோட்டகயமக அந்தாதி, வழிநடைச்சிந்து என்பன எனின் தவறாகாது.


நூலுக்குள் புகுவதற்கு முன்னர் நயினாதீவு பற்றி ஒரு கண்ணோட்டத்தை வீசிச் செல்வது பொருத்தமானது என எண்ணுகின்றேன்.


நயினாதீவு


யாழ் தீவகற்பத்தின் மேற்காக அமந்த சப்பதீவுகள் என்ப்படுவனவற்றுள் ஒன்றாக நயினாதீவு காணப்படுகின்றது. பூம்புகாரில் இருந்து 30 காத தொலைவில் உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. நாக நயினார்தீவு என வையாபாடல் குறிப்பிடுகின்றது. வட இலங்கையின் சப்பத தீவுகளுட் தனித்துவமும், மகத்துவமும், மகிமைமயும் மகோன்னதமும் மிக்கது மணிபல்லவம் எனப்படுவதும் நயினாதீவாகும். நாற்புறமும் சமுத்திரத்தாற் சூழப்பட்ட தெய்வீக நலஞ்சிறக்கப் பலசமய வழிபாட்டுத் தலங்களைக் கொண்டியங்கும் சர்வமத சந்நிதி எனப் போற்றப்படுவது நயினாதீவாகும். மணிபல்லவம் பற்றிய செய்திகள் மணிமேகலையில் காணப்படுகின்றன. நாகமணியினைப் பெற்றுக்கொள்ள சோழமன்னனின் மீகாமன் வந்து பெற்றுச் சென்றதாக வரலாறு சீவகசிந்தாமணியில் இடம்பெறுவதனை நாகமணிப்புலவரும் விபரிக்கத் தவறவில்லை. நாகதீபம் எனப் பௌத்தர்களாலும் நயினை என சைவர்களால் அழைக்கப்படும் நயீனாதீவு பழம் பெருமை கொள்ளுவதற்கு அங்கு காணப்படும் வரலாற்று ஆதரங்களாக பொளத்த வழிபாட்டுத் தலமாகவும் அம்பாளின் அறுபத்து நான்கு பீடங்களுள் ஒன்றாக அமைந்துள்ளதாகம் நாகமணிப்புலவர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். நாகர்களே இலங்கையின் ஆதிக்குடிகள் என்பதனை யாழ்பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சி.பத்மநாதன் அவர்கள் ஆதாரபூர்வத்தோடு எடுத்துரைத்துள்ளமை நாகதீவின் இருப்பையும் தொன்மையையும் வலியுறுத்துகின்றது. நயினாதீவிற்குக் காலத்திற்குக் காலம் பல்வேற பெயர்கள் வழங்கி அழைக்கப்பட்டுள்ளன. நாகதீபம், நாவல்தீவு, நாவலன்தீவு, மணிநாக தீவு, பிராமணர்தீவு, மணித்தீவு, மணிபல்லவத்தீவு, நரித்தீவு, பூந்தோட்டம், சம்புத்தீவு எனப்பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒல்லாந்தரும் ஹார்லெம் என அழைத்துள்ளனர்.


“நயினாதீவைப் பற்றிப் பல ஜதீகங்களுள. அத்தீவிலுள்ள நாகேஸ்வரி ஆலயத்தைப்பற்றியுள்ள ஐதீகங்களும் மிகப் பல. இவ்வாலயம் இங்கு எப்பொழுது தோன்றியது? எவ்வாறு விருத்தியாகிப் புகழ்பெற்றது? என்னும் இன்னோரன்ன வினாக்களுக்கு ஆராச்சியாளர் திருப்பதியடையக்கூடிய விடை கூறும் சரித்திர நூல்கள் இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. எனவே கர்ண பரம்பரையாக வழங்கும் கதைகளைக் கொண்டும் பிற்காலத்தவர் ஆங்காங்கு எழுதிய குறிப்புக்களைக் கொண்டும் இத்தலத்தின் வரலாற்றை ஊகிக்கமுடியுமேயன்றி நிதார்த்தமாக அதுபற்றிக் குறிப்பிடத் துணியவொண்ணாது” என குல. சபாநாதன் அவர்கள் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுவது கருத்திற்கொள்ளற்பாலது. குலோதர, மகோர சகோதரர்களுக்கிடையே மணியாசனம் தொடர்பாக மூண்ட சண்டையைத் தீர்த்து வைக்க புத்தபிரான் வந்ததாக பௌத்த நூல்களான மாகவம்வம், சூழவம்சம் என்பன குறிப்பிடுகின்றன. மாநாய்கன் இவ்வாலயத்தை கட்டுவித்தான் எனவும் கருதப்படுகின்றது.


நாகமணிப்புலவர் பற்றி(1880-12-23)-


நயினை மான்மியத்தைப்பற்றிச் கூறுமுன்னர் அதனை இயற்றியளித்த வரகவி நயினை நாகமணிப்புலவரைப்பற்றித் தெரிந்துகொள்ளுதல் முக்கியமாகும்.

நயினையில் கதிரேசபிள்ளை நாகமுத்துத் தம்பதியினருக்கு மூத்த மகவாக 1880ல் நாகமணிப்புலவர் அவர்கள் பிறந்தார். அவர் ஆரம்பக்கல்வியை வீரகத்தி ஆசிரியரின் திண்ணைப்பள்ளியில் பெற்றுவந்தார். அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தில்லையம்பல வித்தியாசாலையில் சேர்க்கப்பட்டுதன் பயனாக அங்கு கற்பித்த சோமசுந்தர ஐயரிடம் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொண்டார். தந்தையாரின் ஆட்டு மாட்டு வளர்ப்புக்கு ஒத்தாசையாக இருக்கும் காலத்தல் தந்தையிடம் இராமாயணம், மகாபாரதம் போன்ற வற்றை அறிந்துகொண்டார். பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட அவர் யாழ்ப்பாணத்தில் கணக்பப்பிள்ளையாக பணியாற்றினார். 1901ல் சின்னம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இயல்பாகவே இருந்த ஆர்வம் காரணமாக கவிதைகளைப் பாடி வந்துள்ளார். இக்காலகட்டத்தில் நயினாதீவில் இருந்து யாழ்பப்பாணம் வரும் வழியில் உள்ளவை பற்றியும் தான் பணியாற்றிய வர்த்தகர் வல்லிபுரத்தின் மேன்மையைக் கருத்திற்கொண்டு அவரைப் புகழ்ந்துரைக்கும் வழியாகப்பாடப்பட்டதே “வழிநடைச்சிந்து” எனப்படும் பாடல்கள். மனைவிக்கு வழிகாட்டுவது போல வர்த்தகர் வல்லிபுரம் அவர்களால் கட்டப்பட்ட மடத்திற்கான ஆற்றுப்படுத்தலாக அமைந்துள்ளது அந்தச் சிந்தியல் எனலாம்.


அவரை தனது நகைக்கடையின் கணக்காளராக வைத்திருந்தவர் பரோபகாரியன வர்த்தகர் வல்லிபுரமம். அவரது மனைவி இறந்த நினைவாகக் கட்டப்பட்ட அந்த மடத்தைப்பற்றியது அந்தப்பாடல். சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருச்செந்தூர் நிரோட்டகயமக அந்தாதியை பாராட்டிய தென் இந்தியவர்த்தகர்கள் இந்நூல்போல் யாராவது ஈழத்தில் இயற்றியுள்ளனரா? என புலவரிடமே கேட்டுள்ளனர். அவர் அதனை ஒரு சவாலாக ஏற்று நயினை நிரோட்டக அந்தாதியை இயற்றினார் எனப்படுகின்றது. இந்நூலுக்கு இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் கவிஞர் ம.வே.பசுபதி அவர்கள் புத்துரையும், பொழிப்புரைம் எழுதியுள்ளார்.


வழிநடைச் சிந்தில் அவர் “சத்திரத்தைப் பார்ப்போம் பெண்ணே எட்டிச்

சந்றே நடவாய் கண்ணே . . . .. எனத் தொடங்கி

நயினாதீவில் இருந்து வத்தைமூலம் காரைநகர் வந்து பின்னர் யாழ்ப்பாணம் வரும் வழி பற்றி இடங்களையும் செய்திகளையும் தொழில் முறைகளையும் விபரித்துப் பாடுவது நயப்புடையது.

பெண்யைக் குருத்துகள் பூட்டி வலை

பெண்கள் இழுக்கின்ற பாட்டி இதில்

வண்ணக் கயல் கொண்டை இறாலும் நல்ல

மாதர் பிடிப்பதற் கேலும்”

என்றும்

போக்கிரி அந்திராசி கோளால் முன்னம்

பூதனுயிர் தன்னை வாளால் வெட்டும்

தூக்கு மரக்காடு பாராய் அதோ

தோன்றுது ஓட்டுமடம் வாராய்.

என மிகச் சுவையாகப் பாடியிருப்பதனைக் காணலாம்.


அதனைத் தொடர்ந்து நயினை அம்பிகையைப் பற்றி பாடப்பட்டதே “நிரோட்டக யமக அந்தாதி” எனப்படும் பாடல்கள். இறைபக்தி சொட்டும் புராண வரலாற்றைத் தொட்டுச்செல்கின்றது நிரோட்டக அந்தாதி’ 1930ம் அண்டு புலவர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்நூல் அச்சேற்றப்பட்டுள்ளது. 20 சதம் என அந்நூலில் பதியப்பட்டிருந்தது. புலவர் இந்திய வர்த்தகர்களோடு தொடர்புகொண்டிருந்தமையால் அவரும் அடிக்கடி இந்தியா சென்றுவரும் பேற்றறையும் பெற்றார்.


நயினை மான்மியம் எழுதப்பட்டு பூரணமடைந்த நிலையிலும் அதனை அவர் இருக்கும் வரை அச்சேற்றப்படவில்லை என்பது தெளிவு.


திருமணத்திற்குப்பின்னர் இவர் நயினாதீவில் குடியமர்ந்ததோடு மட்டுமல்லாது ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட கிராமச்சங்க தலைவராகவும் இறக்கும்வரை இருந்துள்ளார். உள்ளுர் பிணக்குக்களைப் பக்கம் சாராது நிதானமாகத் தீர்க்கும் நீதிமானாகவம் அவர் திகழ்ந்துள்ளார். நீதி, நியாயம், சமத்துவம் என்பனவற்றைப் பின்பற்றி வாழ்ந்த ஒரு பேரறிஞரக மக்களால் மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு கிராமத்தலைவராக அவர் வாழ்ந்துவந்துள்ளார்.


தமிழ்பேராசிரியர் சதாசிவம் அவர்கள் தனது “ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்னும் நூலில் நயினை நாகமணிப்புலவரைப் பற்றிப் பதிந்ததோடு அவரது மான்மியத்தில் இடம்பெறும் பூம்புகார்ச் சருக்கம் பற்றி பாடல்களைப் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இரட்டடை அர்த்த்தத்தில் சிலேடை கவிபாடுவதில் வல்லவராகவும் புலவர் அவர்கள் திகழ்ந்துள்ளார் என்பதற்கு அவர் பாடிய பாடல்களே சான்றாக உள்ளன. பண்டைய சங்க இலக்கியங்கள்போன்று ஆழமான தமிழ்க் கருத்துக்களை உள்ளடக்கிய சொற்களாலான செய்யுட்களாகவே அமைந்துள்ளன. சாதாரணர்களால் இகுவில் புரிந்துகொள்ளமுடியாத சொற்கட்டு நிறைந்ததாக அமைந்துள்ளது அவரது புலமைமிக்கச் செய்யுட்கள்.


V.S.S.K சுருட்டுப் பிரபலமாக இருந்தவேளை புலவரிடம் விஎஸ்எஸ்கே கிடைக்குமா எனக் கேட்டுள்ளனர். அது அவருக்கு வேசியெனக் கேட்டுள்ளது. என்ன வேசைச் சுருட்டோ எனக்கேட்டுள்ளார். அதைக்கேட்டவர்கள் வேசைக்கும் சுருட்டுக்கும் தொடர்புண்டோ எனக் கேட்டுள்ளனர். அதனை வசனத்தில் சொல்லவா அல்லது பாட்டில் சொல்லவா என்று கேட்டுள்ளார். சரி பாட்டித்தான் சொல்லுங்களேன் எனக் கேட்டனர். உடனே

எட்டிப்பிடித்தலால் ஏந்தி முதத்தமிடுதலால்

கட்டவிழ்த் திதழ்வாயிற் கவ்வுதலால் – மட்டற்ற

ஆசைத்தீ மூட்டுதலால் ஆன புகைச் சுருட்டை

வேசைப்பெண் என்றேன் விரை

என்று வெண்பாவிலேயே பதில் தந்தார் என்றால் அவரது மதிநுட்பம், கவிகட்டும் அற்றல் எத்தகையது என்பதைப்பற்றி விபரித்துத்தான் சொல்லவேண்டுமோ? அது புலனாகும். நயினை மான்மியத்தில் ஈழம்ணடலச் சருக்கத்திலேயே ஏழு செய்யுட்கள் இத்தகைய சிலேடைகளாகப் பாடப்பட்டுள்ளன.


நாகமணிப் புலவர் பற்றி பலர் புகழ்து பாடியுள்ளனர் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்பது பொருத்தமாக அமையும் என்பது எனது எண்ணம்:

திரு விளங்கு நயினையந் தீவகத்து வாழும்

தேவியொரு நாகபூஷணி தன்மீதே

கருவிளங்கு முயிர்கள் படித்தின்பமேவக்

கணி நிரோட்டய மகவந்தாதி செய்தான்

பெருவிளங்கு கலைகளெல்லாம் தெளியக்கற்றோன்

பெரிதுகவி யியற்கையினிற் பாடும் நாவான்

தரு விளங்கு கரமுடையான் நீதி மிக்கோன்

சகம் போற்றும் நாகமணிப் புலவன்றானே.

என புலவர் காலத்தில் வாழ்ந்த கல்வியாளர் புன்னாலைக்கட்டுவன் ஶ்ரீ சி.கணேசையர் பாடியுள்ளார். ஆனால் அவர் நயினை மான்மியத்தின் முதல் பதிப்பிற்குத் தந்த உரையில் இலக்கண இலக்கியங்களில் அதிகம் பயிற்சி யில்லாதாயினும் இளமை தொட்டுப் பாடுஞ் கக்தி இவருக்குத் தானேயுண்டானமையால் இவரை வரகவியென அழைப்பர்” எனக்குறிப்பிட்டுள்ளார்.


பேராசிரியர் பெரும் புலவவோருமுன் பேசுதடி

சேராயகம வந்தாதி நயினையிற் றேவிதன்மேல்

ஆராத காதலுடன் புனைந்தான் வெள்ளலார்ப் பொருட்டு

வாரீசமின்னுறை நாவுடை நாகமதிநயந்தே

எனச் ஶ்ரீமான் வை.இராமநாதன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளமையும் அவரது பெருமை பேசுபவை.


“கிரந்தத்தில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் சில முன்னேச்சரத்தில் கிடைத்துள்ளன. புலவரவர்களின் ஆராயச்சிக் குறிப்பகளாக அவை காணப்படுகின்றன. அனலை தீவின் தென் பகுதியாக விளங்கும் புளிந்தீவு பற்றிய செய்திகளும் அதில் இடம் பெறுகின்றன. அங்குள்ள நாகதம்பிரான் ஆலயத்தை நாகேஸ்வரன் யோயில் என்றும், அங்குள் தீர்த்தம் நாகமாமிர்தம் என்றும் அத்தீர்த்தத்தல் ஒரு மண்டலம் (நாற்பது நாள்) நீராடினால் பிரமத்தி தோஷம் நீங்கும் என்றும், அங்கு அமைந்துள்ள அயலத்தில் சிங்கையாரியச் சக்கரவர்தியாக விளங்கிய பரராசசேகரன் திருப்பணி வேலைகள் செய்வித்தனன் என்றும் கூறும் குறிப்புக்கள் காணப்படுகினறன” என பண்டிதர் வித்துவான் குமாரசாமி அவர்கள் புலவரைப் பற்றிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். புலவரவர்கள் நிரோட்டயமக அந்தாதி, வழிநடைச்சிந்து, புகையிரத விபத்து போன்ற பொருந்தொகக்பாடலகளையும் பாடியுள்ளார் என்பதனையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை. வித்துவான் குமாரசாமி அவர்கள் எனது ஆசான் என்று கூறுவதில் பெருமையடைகின்றேன்.



“ஈழத்துப்புலவர் சரிதம்’ எழுதிய திரு. குலசபாநாதன் அவர்கள் “19ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களுள் நியினை வரகவி நாகமணிப்புலவரும் ஒருவர்” என எழுதியுள்ளார்.


கலாபூஷணம் சி.அப்புத்துரை அவர்கள் எழுதிய ‘இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ் புலவர் வரலாறு” என்னும் நூலின் முதலாம் பாகத்தில் புலவரின் சரிதத்தை யும் அவரது பங்களிப்பையும் பதிவாக்கியுள்ளார்.


புலவர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஈழத்தின் தமிழ்ப்பணி கொண்ட பெரும் மகான்கள் வாழ்ந்த காலம் என்றோ கொள்ளவேண்டும். சி.வை.தாமோரப்பிள்ளை அவர்கள் இப்புவி வாழ்வை நீங்கிய காலமும் புலவரின் திருமணமும் ஒரே அண்டில் (இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. காரை நகர் நாகுமுத்துப் உரையாசிரியர் க.வேற்பிள்ளை, காசிவாசி வெச்திசாதையர், வல்வை வைத்திலிங்கம்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப்புலவர், வித்துவான் பூபாலபிள்ளை, கொக்குவில் சபாரத்தினமுதலியார், வேலணைப் பேரம்பலப்புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, பாவலர் துரையப்பாபிள்ளை, வித்துவ சிரோன்மணி சி.கணேசையர், வித்துவ சிரோன்மணி பொன்னம் பலபிள்ளை, கோபால கிருஷ்ணபாரதியார், சுவாமி விபுலாநந்தர், முத்துக்குமாரத ஆச்சாரிய சுவாமிகள், குருகவி மகாலிங்கசிவம் போன்றோர் இவர் காலத்தவர்களாம். வேலணை, நயினாதீவு, புங்குடுதீவு, காரைநகர் போன்ற தீவுப்பகுதிகளில் கல்விச் செல்வம் பட்டி தொட்டியெங்கும் பிரகாதிதத்தமைக்கான பெருந்தொகையான இலக்கியங்கள் பக்தி மார்க்கமாகவும் சமுகநோக்கிலும் பீறித்துவரத் தொடங்கின. இக்காலகட்டத்தில் ஐயேராப்பியரின் வருகையும் இதற்கு தூபம்போட்டுவளர்த்தது எனலாம். ஆலயங்கள் போர்த்துக்கீச மற்றும் ஒல்லாந்தர்களால் இடிக்கப்பட்டமையும் நீண்டகாலமாக மக்கள் நெஞ்சங்களில் புதையுண்டிருந்த தாக்கங்களும் கவிதைகளால் பிரமித்ததில் வியப்பில்லை. ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலை வேட்கை மிக்க கவிதைகள் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்தமையை இதற்கு உதாரணமாக் கொள்ளலாம் என்பது எனது துணிபு.


முகாந்திரம் தி.சதாசிவ ஐயர்1882-1950 இவர்காலத்தவர் மட்டுமல்ல தமிழ் மொழி வளர்ச்சிக்காக வண்ணார் பண்ணைச் சைவப்பிராகச வித்தியாசாலையில் கல்விப்புலமையார்களை ஒன்றுசேர்த்து “திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்’ எனப்பபெயரிட்டு 1921.10.17 அன்று நிறுவினார். அந்தக் கூட்டத்திற்கு அப்போதைய வித்தியாதரிசியாக விளங்கிய ஏவான்ஸ் என்பவரை அழைத்து அவரின் மூலமே செய்தமையும் அவரது சாணக்கியாகக் கொள்ளப்படடுகின்றது. அதில் சோமசுந்தரப்புலவர், சுண்ணாகம் குமாரசாமிப்புலவர், பண்டிதர் வே.மாகலிங்கசிவம், விபுலாநந்;த அடிகள், நவனீத கிருஷ்ணபாரதியார், சுண்ணாகம் குமாரசாமிப்புலவர் போன்றோர் அங்கம் வகித்து தமிழ்ப்பணியாற்றினர். இவ்வமைப்பு தமிழ்ப்புலவமையாளர்களை வழிப்படையவும் ஈடுபாடு கொள்ளவும் வைத்தது.

இவர் காலத்ததிலேயெ கல்லடி வேலன், வேலணை பேரம்பலப்புலவர் போன்றோர் வாழ்ந்தார்கள். “நயினை மான்மியம் எனும் இந்நூலை வெளியிடும் தமி;ழ் அன்பர்களுக்கு என் நன்;றியும் வாழ்த்தும் உரியன. நயினை நாகமணிப் புலவர் அவர் காலத்தில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி மிளிந்த ஒரு வரகவியாவார்” என முமைனவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளமை ஈன்று சான்று பகர்கின்றது. புலவர் தனக்கு தாய்வழி உறவு எனவும் குறிப்பிடுகின்றார்.

வேலணை உச்சந்தொட்ட கல்வியாளர்களைக் கெண்டிருந்தமையை அதன் வரலாறு எமக்கு உணர்த்துகின்றது. இந்தியாவின் உயர்ந்த நிலையில் இருந்த ஶ்ரீனிவாச சாஸ்திரிகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்த ஜேம்ஸ் னன்ஸ்மன் என்பவர் வேலணணையை அடியாகக் கொண்டவர் என்பதோடு பல்வேற ஆளுமைகளை உருவாக்கிய ஊராகவும் விளங்குகின்றது. சவாதானி கதிரவேற்பிள்ளை மற்றும் ஜேம்ஸ் ஹென்ஸ்மனும் யாழ்ப்பாணத்தின் மரபையும் பண்பாட்டையும் இந்தியமக்களுக்கு உணர்த்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேம்ஸ் ஹென்ஸ்மன் வேலணையை அடியாகக் கொண்டவர் அவர் இந்தியாவில் இருந்தகாலத்தில் ஶ்ரீனிவாச சாஸ்திரி அவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்றுத்தந்தவர் என்பது பெருமைக்குரியது. ஶ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் இந்திய அரசில் புகழ்நாட்டியவரக்ளுள் ஒருவர். அவ்வேளை பிரித்தானிய பிரம அமைச்சராக இருந்த சேர். வின்சன்ற் சேச்சில் மேற்கொண்ட ஆங்கிலத் தவறைச் சுட்டிக்காட்டியவர்.


இக்காலகட்டத்தில் கணக்கர்களாக பணியாற்றிய கல்வியாளர்கள் கவிதைளை யாக்கும் நிலைக்கு உந்தப்பட்டார்கள். அதன்விளைவாக பலர் இறையருட்பாடல்கள், கும்மி,நிரோட்டகயமக அந்தாதி போன்றனவும், கும்மி, ஊஞ்சல் விருத்தங்களும் பெரும்பாலான ஆலயங்களில் இடம்பெறவும் வழிவகுததனர்.


நாகமணிப்புலவர் பிறந்தவளர்ந்த நயினாதீவு வரலாற்றுச்சிறப்ப மிக்க இடமாக புரணாணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றிலும், மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களிலும் இடம்பெற்றமையும் தொடர்ச்சியான புலமைமரபு காணப்பட்டமையாலும் புலவரவர்கள் இயல்பாகவே கவிதைகட்டுவதற்கான இயல்வை வளர்த்துக்கொள்ளத்தக்க களமாக அமைந்தமை காணரமாக அமைந்துள்ளது.

முச்சகமுந் தனியளிக்கும் அருண்மழை

தோய்ந்தன குழலும் முது நீர்க்கஞ்சத்து

அச்சனைய திருமுகமுங் கருவிழியும்

வெண்ணகையும் ஆம்பல் வாயும்

கச்சணியும் இளமுலையும் மலர்க்கரமும்

சிற்றிடையும்கனகத் தாளும்

பச்சுருவுந் திகழமணி அரங்கில் வளர்

சுந்தரயைப் பணிதல் செய்வாம்

நாகமணிப்புலவரது புலமைக்கு பலராலும் எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்படும் பாடல்களுள் ஒன்றாக இப்பாடல் இடம்பெறுவதனைக் காணலாம்.


உரையாசிரியர் வித்துவான் சரவணமுத்து செல்லத்துரை அவர்கள்


நயினை மான்மியம் அனைத்து மரபுகளையும் உள்ளடக்கிய ஒரு காவியமாக உள்ளதாக அதற்கு உரை எழுதிய நாகமணிப்புலவரின் ஊரவரும் பன்மொழிப்புலவருமான வித்துவான் சரவணமுத்து செல்லத்துரை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வித்துவான் செல்லத்துரை அவரகள் கனகரத்தினம் வித்தியாலயத்தின் அதிபராகவும் பின்னர் புங்குடுதீவு பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் விளங்கியவர்.


2013ம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட உரை நூலில் சில மாற்றங்களையும் வேறுபாடுகளையும் அவதானிக்கமுடிகின்றது. முதலாவது பதிப்பில் 600 பாட்களே இடம்பெற்றுவிட இப்பதிப்பில் 1030 பாடல்கள் இடம்பெறுகின்றன. தொலைந்துவிட்டது எனக்கருதப்பட்ட ஏட்டுப்பிரதிகளும் கையெழுத்தப்பிரதிகளும் கிடைக்கப்பெற்றதே அதற்கான காரணம் ஆகும். நயினை மான்மியம் 1061 பாடல்களால் ஆனது என வாழ்த்துரையில் புலவரது பூட்டன் வ.க.பரமலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


அவர் எழுதிய மான்மியப் பாடல்கள் சில கணக்குப் பதிவேட்டில் இடம்பெற்றிருப்பதையும் அப்பதிவேட்டிலர் 1913 தொடக்கம் 1916 வரையான கணக்குக்கள் காணப்படுவதாகவும். அவை அனைத்தும் பல்வேறு இடங்களிலம் வர்தகத்தில் ஈடுபட்ட சங்குப்பிட்டி, எருக்கலம்பிட்டி, மன்னார், ஊர்காவற்துறை போன்ற இடங்களின் முஸ்லிம்வர்தகர்களின் கணக்கள் எனக்கண்டு அவர் சில பக்கங்களில் 1926-1927ம் அண்டுக்கான சில குறிப்புக்களும் காணப்படுவதோடு இருநூற்றிற்கு மேற்பட்ட பக்கங்களில் மான்னியப்பாடல்களும் இடம்பெற்றுள்ளன. அவரைஒரே வகையான பென்சிலால் எழுதப்பட்டுள்ளன என்பதனையும் உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.


2005ல் வெயியீடு செய்யப்பட்ட நயினை மான்மியத்தில் 450 பாடல்களைத் தொதகுத்து வெளியிட்டுள்ளதாக அதன் தொகுப்பாசிரியர் மகாதேவா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2013ம் ஆண்டு தானே உரை எழுதி 1034 பாடல்களைக் கொண்டதாக வித்துவான் சரவணமுத்து செல்லத்துரை அவரகள் தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். உரையாசிரியர் வித்துவான் செல்லத்துரை அவர்கள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் போன்று அவரது உரை அமைந்துள்ளது என்பது மனோன்மிணம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் அறவாணன் அவர்கள் பண்டைப்புலமையை எடுத்துக் காட்டும் ஒரு படைப்பு என புகழ்ந்து உரைதந்துள்ளார்.


உரையாசிரியர் பாளி, சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கில, தமிழ் மொழிகளில் புலமைமிக்கவர். அவர் தனது உரைக்கு உரைகல்லாக காளிதாசரன் சந்தோச காவியத்திலிருந்தும் குமாரசம்பவம் மாக காவியத்திலிருந்தும் எடுத்துக்காட்டுக்களைக் காட்டியிருப்பது தொல்காப்பியப் பனுவலுக்கு உரைதந்து நச்சினார்கினியம் போன்றதாக அமைந்துள்ளது என்பது கல்வியியலாளர்களது கூற்று.

புலவர் அவர்களது பிறந்த நாளை மிகத் துல்லியமாகக் கணிப்பதற்கு கொக்குவில் மெய்கண்ட சாஸ்திர நிலையத்துடன் தொடர்பு கொண்டு தனது ஐயத்தைத் தீர்த்துக்கொண்டதாக உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.


நயினை மான்மியம்


நயினை மான்மியத்தினைப் பின்வருமாறு சருக்கங்களாக அவர்பாகுத்துப் பாடியுள்ளார்.

இந்நூல் கடவுள் வணக்கம் பாயிரம் நீங்கலாக 16 சருக்கங்களைக் கொண்டாத அமைக்கப்பட்டுள்ளது.


1. ஈழமண்டலச் சருக்கம் 82

2.தல விசேட சருக்கம் 133

3.மூர்த்தி விசேடச் சருக்கம் 163

4.தீர்த்த விசேடச் சருக்கம் 211

5.விழாவணிச் சருக்கம் 269

6.சேடன் அர்ச்சனைச் சருக்கம் 290

7.மகாமணிச் சருக்கம் 390

8.புகார்ச் சருக்கம் 499

9.உவவணச் சருக்கம் 582

10.மணிபல்லவச் சருக்கம் 750

11.பீடிகைச் சருக்கம் 794

12.நாகர் வாதச் சருக்கம் 861

13.பாத்திரச் சருக்கம் 882

14.ஆபுத்திரச் சருக்கம் 913

15. ஊர் அம்பலச் சருக்கம் 969

16 புண்ணியராச தரிசனைச் சருக்கம் 1017



நூல்முகம்

1.கடவுள் வாழ்த்து வணக்கம் மொத்தம் 17 செய்யுட்கள்


சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவரும் கம்ப ராமாணத்தில் கம்பரும் கடவுள் வணக்கம் இயற்றியதை ஒப்பவே நாகமணிப்புலவரு நூன்முகத்தில் புகுமுன் தருகின்றார்.

உலக மாக்கலும் ஓம்பலும் வீக்கலும்

மலமாக மறைப்பதும் மாழ்வதும்

குலவுமூலக் குடிலைய தாகினோன்

சலசமாமலர்த் தாளிணை யேத்துவாம்.


உலகங்கள் அனைத்தையும் தோற்றமுறச் செய்தும் தனுகரணங்களோடு கூடிய ஆம்மாக்கள் அவற்றின் அனுபவிக்கும் பொருட்டும் நிலைபெறச் செய்தும் அனைத்திற்கும் அருளலைப் புரிந்தும் ஆணவம் ஆதியாய மலங்கள் ஒடுங்கும் வண்ணம் மறைத்தலையருளியும் இறுதியாங் காலம், அழித்தற் கருத்தியத்தினையாற்றித் தானே தனியாய் விளங்கும் சிவனது கமலபாதங்களை வணங்கவோமாக என உரையாசிரியர் சரவணமுத்துச் செல்லத்துரை அவர்கள் விளக்கமுறத் தந்திருக்கின்றார்.


மூவா முதலா உலகம் ஒரு மன்றும் ஏத்தத்

தாவா இன்பம் தலையாயது தன்னின் எய்தி

ஓவாது நின்ற குணத்து ஒள்நிதிச் செல்வன் என்ப

தேவாதி தேவன் அவன் சேவடி சேர்து மன்றே

எனத் திருத்தக்கதேவர் பாடியுள்ளமையையும்


உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே


எனக் கம்பர் பாடியுள்ளமையையும் வரகவி நாகமணிப்புலவரின் இறைவணக்கக் காப்புப்பாடலும் ஒத்தனவாக அமைவதனைக் காணமுடிகின்றது.

இங்கு வரகவி நாகமணிப்புலவரின் கவியாற்றல் புலமை தெளிவாகின்றது. ஆழ்ந்து அவிந்து அடங்கிய சான்றோன் எனப் போற்றப்படுதற்கு அவரிடம் காணப்பட்ட நுண்மான் நுண்புலம் என்றே கொள்ளப்படவேண்டும்.


காவியம் ஒன்று பாடுதற்குத் துணிந்த நயினை நாகமணிப்புலர். நயினையில் வீற்றிருக்கும் அருட்கடல் நாகபூஷணியின் பால் காவியத்தைப் புனைய அவரது உறவினரான செல்லப்பா வேண்டிக்கொண்டமைக்கு அயை பாடப்புகுந்தவேளை நூன்மரபிற்கேற்ப நுளைவாயிலாக வாழ்த்து வணக்கம், வருபொருளுரைத்தல், மூன்றில் ஏதாவதொன்றோடு ஆரம்பிக்கவேண்டும் என்னும் இலக்கண மரபிற்கேற்ப முதலிலே கடவுள் வாழ்த்துச் சருக்கத்தைப் பாடியிருக்கின்றார். மேற்சொன்ன காப்பு நீங்கலாக 16 செய்யுட்களை கடவுகள் வாழ்த்தாகப் பாடியுள்ளார். அவை ஒவ்வொன்றும் அவர் மனங்கொண்ட இறைமாட்சியோடு சமயகுரவர்களையும் இதயத்திருத்திச் செய்யப்பட்வையாம்.


கடவுள் வாழ்த்து

விநாயகக்கடவுள், சபாநாயகம், பரமசிவ வணக்கம், பராசக்தி, சிவகாமியம்மை, சுப்பிரமணியக் கடவுள், வயிரவக் கடவுள், வீரபத்திரக் கடவுகள், திருநந்திதேவர், வீரவாகுதேவர், திருஞானசம்பந்தசுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்;தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள், சரஸ்வதிதேவி, சண்டேசுவர நாயனார் எனப் பதினாறு விருத்தப் பாக்களால் வணக்கத்தைப் பாடி முடித்து பின்னர் கதைக்குள் புகுகின்றார்.


விநாயகக் கடவுள்


நீரகத்து புவனமெலாந் தனதாக்கித்

தலைமை பெறீஇநின்ற தெய்வத்

தாரகத்தி னுருவாகுந் தன்மை தனைத்

தெரித்திடுவான் றந்தியாகிப்

பாரகத்து வினைக்காட்டுத் திரணெரித்துக்

கருணைமதம் பாய்ச்சுந் தூய

வீரகத்தி விநாயகனைச் செம்மனத்தம்

புலத்திறைஞ்சி வினைக டீர்ப்பாம்


என வினாயக வணக்கத்தோடு 16 பாடல்களை மேற்சொன்ன கடவுளர்க்கும் ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோருக்கும் பாடியுள்ளமை அவரது சமய அறிவையும் ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகின்றது.


அவையடக்கம்

அடுத்து அவையடக்கம் எனத் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளாத அடக்கத்தோடு எழுதப் புகுவதாகவே நான்கு செய்யுட்கள் அமைந்துள்ளன. பாடறியேன், படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன், ஏடறியேன் என்னும் பாடலை நினைவு படுத்துவதாக அவரது அவையடக்கத்தில் தன்னை ஏதுமறியாத குழந்தையாகவே காண்பிக்கின்றார். குறைகள் இருப்பினும் பெரியோர் பொறுப்பர் என்பதனால் பாடுகின்றேன் என அவர் துணிந்தமை அவரது அடக்கத்தைப் பறைசாற்றுகின்றது.


சின்ன மக்கள் செயுமணற் றிற்றியி

லன்னை தந்தைய ராய்சுவை நோக்கிடா

ரென்னவும் பரையின் சரிதத் தினிற்

பின்ன மோநில ரென்னவும் பேசுகேன்.


குழந்தைகள் மண்வீடு கட்டி விளையாடுவதனையும் அவர்கள் சகக்கும் உணவினையும் பெற்றோர் சுவைத்துப்பார்க்காதது போன்று தான் எழுதப்புகும் நயினை அம்மையின் பெருமை கூறுமிடத்து தனது எழுத்தில் உள்ள குறைகளைப் பெரியோர் நிறைவாக் கொள்வர் எனத் தன்னை ஒரு எழுதப்புகும் ஒரு குழந்தை யாகவே கருதித் தொடர்கின்றார். அதாவது சிறியோர் செய்த சிறுபிழைகளை யெல்லாம் பெரியோர் பெரிய மனதுடன் பொறத்துக்கொள்வார்கள் என்பதனை முன்வைத்து எழுதப்புகுவதனைக் காணலாம்.


எண்ணெடுத் தியல் யாப்பி லக்கணங்

கண்ண கத்தினுங் கண்டறி யேனிவட்

பண்ணு மிக்கவி பார்த்திடு மேலையோர்

திண்ண மக்கணி செய்வர்நற் சிந்தையால்


எனத் தான் முறைப்படி யாப்பு, அணி, இலக்கணங்களை முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பதனை எடுத்துரைக்கின்றார். இதனைப் பாரதியார் தந்தையாரிடம் இருந்து செவிவழி வாங்கியவையே அவரைக் கவிஞராக்கிற்று என்பதனை ஒத்ததாகவே புலவரது வராற்றோடு அவரது தந்தையார் வயல்வேலைக்கும் மந்தைமேய்ப்பிற்கும் அழைத்துச் செல்லும் வேளை சொல்லிக் கொடுத்தவையே இவரது ஆளுமையை வழிநடத்தின எனக் கொள்ளமுடிகின்றது.


விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதுபோன்று அவரது 14வது வயதில் அவர் வளர்த்த ஆடுகளில் ஒன்று ‘தில்லையன்’. அந்த ஆட்டுக்குட்டி இறந்தபோது அதற்காக ஒரு பாடலையே பாடிவிட்டார். “நன்மைபெறு ஜய வருட அதனிலே நாள்தேதி பதினைந்திலே’ எனத்தொடங்கி ‘புனையரவு மதியுமணி கயிலைநாதனின் பொன்னடியை மேவினானே’ எனப்பாடியிருந்தார்.


பாயிரம்

கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம் ஒரு சைவப் பெருங்காப்பியமாகத் திகழ்கின்றது என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர். பாப்பு, கடவுள் வாழ்த்து, அவைடயக்கம், ஆறு, நாடு, நகரப்பாடல்களும், பாயரப்படலமும் ஆரமபத்தில் அணிவகுத்து வருவன ஆகும். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பதால் க்ச்சி விகட சக்கர கணபதி;யை அடுத்துத் தாம் அருச்சித்துவந்த காஞ்சி செவ்வேள் குமரமையும் காப்புப்பாடலில் வணய்குகின்றார். சிவன், உமாதேவி, திருமால், ஆகியவர்களோடு நந்தி தேவரும் கடவுள் வாழ்த்தில் இடம்பெறுகின்றார்” என கந்தபுராணப் பயிரம் பகர்கின்றது. இதே பாயிர அமைப்பையும் கடவுள் வணக்கத்தையும் நயினை நாகமணிப்புலரின் மான்மியத்திலும் காணமுடிகின்றது.


பாயிரத்தை அறிவதன்மூலம் நூல்பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதனை உரையாசிரியர் பெருமதிப்பிற்குரிய வித்துவான் பன்மொழிப்புலவர் சரவணமுத்து செல்லத்துரை அவர்கள் குறிப்பிட்டு

“ஆயிர முகத்தா னமைந்ததாயினும்

பாயிரமில்லது பனுவலின்றே” என்பதனைத் தனது உரையில் குறிப்பிட்டு நயினை மான்மியத்திற்கு பாயிரம் வரையப்பட்டுள்ளதைப் பெருமைப்படுத்துகின்றார். பாயிரம் என்பது வரலாறு அல்லது முகவுரை எனப் பொருள்படும். பாயிரம் 1.பொதுப்பாயிரம் 2. சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும். பாயிரத்திற்கு ஆக்கியோன் பெயர், நூற்பெயர், களம், காலம் காரணம் போன்றவை அமைந்திருக்கும். இவ்விடத்தில் சில நூல்களின் பாயிரத்தைப் ஒப்புநோக்குவது நாகமணிப்புலவரின் புலமையை புடம்போடுவதாக அமையம்:


தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் இயற்றிய பனம்பாரனார்


வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே.

என நூலின் முகத்தில் குறிப்பிடுவதனைப் போன்று பாயிரத்தை செய்யப் புகுந்துள்ளார் நாகமணிப்புலவர் என்பதனைக் காணமுடியும்.


    பிரணவத்தின் பெரும்பொருளாகி யெங்

கரணமுற்றுங் கலந்தவன் றாண்மலர்

சரணமுற்று மென் சற்குரு நாதனின்

கிரணமுற்ற சொற்கேட்டுங் களத்து கேன்.

எனத் தொடங்கி அடுத்த பாடலில்

அகண்டபரிபூரண சச்சிதானந்த நித்திய சித்தா காசத்திற்


………………………………………………… நந்திக் கருளினுரைத் தானன்றே


என கைலயங்கிரியில் உமையைவளுக்கு பதிணெண் புராணங்களையும் உரைத்து அவற்றில் இடம்பெற்ற சிலவற்றை ஆடல்வல்லான் தனது காவலான திரு நந்திதேவருக்கு உரைத்தமை பற்றி விபரிக்கின்றார் புலவர். என்னே புலவரின் ஆளுமை, ஆற்றல் என வியக்க வைக்கின்றன பாடல்கள்.


4. வெல்லப் பாகென வேண்டுமிந் நூற்கதை

செல்லப் பாவெனுந் தெண்மதிக் கேண்மையோன்

சொல்லப் பாவின்றொகைக் கெனச் சொல் கின்றே

னல்லப் பாவலர் போலு நயப்பினால்.


ஞானம் பெற்றவரும் எமது உறவினருமான செல்லப்பா என்னும் பெயருடைய யோகியார் இக்காவியம் பாகினை ஒத்ததாக பொருள், சொல், ஓனை, அலங்கார இனிமைகள் பெற்றனவாக அமையவேண்டும் என வேண்டிக் கொண்டமைக்கு அமைய புலவர்களைப் பின்பற்றி யானும் பாடுகின்றேன். என அவரைப்பாட வைத்தவர் பற்றியும் குறப்பிடுகின்றார்.


ஆற்று மிக்கதை யன்பொடு நித்தலுஞ்

சாற்று கின்றவர் தண்பொருள் விண்டுளோர்

ஏற்ற கேள்விய ரேவின ரிம்மையின்

பேற்றி னோடரும் பேரின்ப மதெய்துவார்.


இதனை தினமும் பாடுவோரும் பாடக் கேட்போரும் இம்மையில் சகல பேறுகளையும் பெறுவதோடு மறுமையில் பேரின்பப் பொருவாழ்வும் பெறுவர் என இதனால்வரும் பயனை எடுத்துரைக்கின்றார். தேவார திருவாசகங்கள் போன்று இவற்றை ஓதும் பயனும் உரைக்கப்பட்டுள்மையை காணமுடிகின்றது. அதனைத் தொடர்ந்து


2005 பதிப்பில் இடம்பெறாத பாடல்

11. தாவில் பாயிரம் சாற்றின மிங்கினிக்

கோவி லம்பிகை கொண்டிடு மப்பதி

மேவு சீரும் விமலைதன் மேன்மையு

மோவி றீர்த்தமு மோர்சிறி தோதுவாம்.


இதைத் தொடர்நது முதலிலே நயினாதீவுத் திருத்தலம் அமைந்துள்ள நாட்டின சிறப்பையும் அதன் மேன்மையும் ஓயாது சுரக்கின்ற தீர்த்தம்பற்றியம் சிறிது ஓதுவோம் எனத் ஈழமண்டல்ச் சருக்கத்தினை இயற்றப்புறப்படுகின்றார்.

1.‘ஈழமண்டலச் சருக்கம்’ 50 பாடல்களாலானது. இது முதலாவது அதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது.


மலைவளமுந் தருவளமும் வயல்வளமுங் கடல்வளமு

நிலை பெறுமந் திரவிலங்கை நெடும்பதியின் பெருமை யெலாங்

கலைவலவன் மீகனுமுன் கழறரிதென் றுரைத்துள னேல்

அலைவுறுநெஞ் சடையேனன் றதுவுநினைந் திடலாமோ


மலை, வயல், நதி, குளம், காட்டு வளங்கள் பற்றியெல்லாம் சிறப்பித்துப் பாடியுள்ளமை அவரது புலமையை வியந்து நோக்க வைக்கின்றது.


பந்தமெலா மகற்றியசம் பந்தருச் சுந்தரருந்

தந்துளதே வாரமெனுந் தமிழ்மறையிற் றனிபுகழ

வந்தமாகே தீச்சரமு மணி கொளிக்கும் திரையொலிக்கஞ்

சிந்துறை கோணாசலமுந் திகழ்வதிலங் காபுரமே

என தேவாரங்கள் பாடப்பட்ட திருத்தலங்கள்நிறைந்தது எமது நாடு என்பதனை உணர்ச்சி ததும்பத் தந்துள்ளார்.


ஈழ வளநாடு தேவருலகிலும் மேன்மையாகப் போற்றப்பட்டது என்பதனை


தென்னாட்டுந் தருவானப்பாற்றிருநாட்டு நிலவளத்தான்

மின்னாட்ட நவநிதியால் விளைநாட்டு மதலையான்

மன்னாட்டு மரம்பைகளான் மதிநாட்டும் புலவர்களாற்

பொன்னாட்டின் மிகுந்ததெனப் புகழ் நாட்டுந் தனியீழம்


யாழ்ப்பாணத்துச் சிறப்பை எடுத்துரைக்கும்போது


வித்தைக் கடைதெரி விறலாரும்

முத்திக் குறுநெறி முயல்வாரும்

பத்திக் குறமுறை பயில்வாரும்

எத்திக் கினு முள திந்நாடே


எனவும் யாழ்ப்பாண மக்கள் கலையார்வம் பக்தி மிக்கவர்கள் என்பதனை


ஈற்றில கலைத்திற லிதனோடே

நீறு முகத்துறு நிலைநாட்டுந்

நாறு மலர்த்தொடை நாவல்லோன்

ஆறு முகச்சுடர் அது கொண்டே


6. கேட்போர் தஞ் செவி யரித்துப் பெரிதாக்கிக் கிலேசத்தா (மெய்மறந்த)

(ஆ)லாட்போய வுடம்பினித்தே யறிவுட்டு மமுதன்ன

சேட்போய் வருணகிரி திருப்புகழ்மா லையினேத்துங்

காட்போய வேலனிருங் கதிரையுமுற் றுள தீழம்


என அருணகிரி நாதராற் பாடப்பட்ட திருப்புகழின் மகிமையினை உரைப்பதோடு அவராலேயே பாடப்பட்ட கதிரமலை முருகனை உடைய நாடு என்று சிறப்பித்துக் கூறுகின்றார். அத்தோடு மிகுந்தலை, சிவனொளிபாதமலை, கிரிகாலப்பொத்தை, குடகுமலை, கிக்கிலிமான் கண்டை, திக்கால மலை, புகழ்மிக்க கீரிமலை, திரிகோணமலை, குடக்காலை, தொடராய் அமைந்துள்ள கொனமல கண்டை, தோட்டப்பாலை, பேதுறுதால காலமலை, கொலப்பற்றின்கால், நமனகுலகண்டை, போன்றன உன்னன என அவர்குறிப்பிடுவதனைக் காணமுடிகின்றது.

நல்ல மாணிக்க கங்கை மகாபலி கங்கை மாறாக்

கல்லெனுங் கழினிகங்கை காலுகங் காசின் கங்கா

மல்லுறு நீலகங்கை வளவகங் காகா லோயா

சில்லெனு மகாகிண்டி தேதுறோ யாக்க ளோடும்


என எடுத்துரைத்திருப்பது அக்காலத்து மக்களது மனங்களை படம்பிடித்துக்காட்டுவதாக அமைகின்றது.


15. வித்தினிற் பயிர்செய் தளித்தவை


முத்தொழிலைப் புரிகின்ற வெவ்வேறு கடவுளர் கள் இயற்றும் தொழில் போல ஈழத்தவர்கள் பயிரிட்டு, காத்து அறுவடை செய்யும் தொழில ஈழத்தவர் செய்த தேவர்களைப் போல வாழ்கின்றனர் எனப் பாடுகின்றார்.


உயர்ந்து வளர்ந்த மரங்கள; ஆலயங்களில் வாகனம் காவவும், கப்பல் கட்டவும் வெவ்வேறு வகையான தேவைகளுக்கான கருங்காலி, விண்ணாங்கு, புன்னை, மருதம், முதிரை, செம்பாலை, சண்டலை, தேவதாரு, வளை, சாமலை விருட்சம் போன்றனவற்றோடு கனிகள் தரு மா, பலா, வாழை, மாதுளை தோடை, அரம்பை, போன்றவற்றின் தேவையான கனிகள் போக மீதமானவை ஆற்றில் கலந்து மீன்களுக்கும் உணவாக கிடைக்கும் சிறப்பு மிக்க நாடு எங்கள் நாடு எனவுரைக்கின்றார்.


மலைநாட்டில் கிடைக்கும் இரத்தினக் கற்கள், பாசடசாலைகளில் வானிலலாபற்றிக் கற்கும் மாணவர்கள் கூடியிருப்பது பற்றியும், கானகத்தில் காண்பபடும் பறவைகள், விலங்குகள் பற்றியும் மிக நயமாக உவமைகளளோடு எடுத்துக்கையாண்டுள்ளார்.


மாடமாளிகைகள் பற்றியும் நகரத்தில் தொடர்ந்து ஒளியூட்டும் மின் அலங்காரம்பற்றியும் குறிப்பிடும்போது இரவு அச்சம் இல்லாத நிலையை எடுத்துக்காட்டுகின்றார்.


புகையிரதப் பிரயாணம்பற்றியும் அவர் குறிப்பிடாமல் இல்லை.

பல்லமுதமெனுமூடைப் பணடமமா னிடர் விலங்கு பலவு மேற்றிச்

சொல்லுமன வேக மறத் தொத்தபல பண்டிகளைச் சுழுவா யீர்க்குங்

கொல்லியல் சக்கரங்களியந் திரங்களைநீராவியெனுங் கொடுங்கால் சுற்ற

வெல்லை யுறப்பதித்தமரத் திருதலைத் தண்டூரந்துபகை பிரத மாதோ.


நகரத்தில் கனரக வாகனங்கள் பேரிரிசைச்சலுடன் செல்வதும் மக்களின் ஓசைக்கும் குறைவே இல்லாமல் நகரம் காணப்படுகின்றது.


ஆகாயவிமானங்கள் கழுகுகளையே பயந்து ஒதுக்கச்செய்யும் விமானங்களின் பறப்புக்களும் அடிக்கடி நிழ்கின்றது இவை பயத்தினால் தங்கள் துணைவியரையெ மறக்கச் செய்யும் பயத்தினை ஏற்படுத்துகின்றன.


2.தல விசேடச் சருக்கத்தில்

“பாருடன் புகழ்திகழ் சிகாமணிபோதற்

படிந்ததந் தன் நயினையம்பதியே

நயினை நாகபூசணி அமைவிடத்தை ஆதிசேரடன் பாற்கடலில் பள்ளிகொள்ளும் நிலையினைஒத்ததாக அதன் பெருமையினைக் குறிப்பிடுகின்றார். சப்ததீவுகளில் நடுநாயகமாக விளங்குவதனையும் மணித்தீபம், நாகதீபம், நயினார்தீபம், என்ற பெயர்கள் வந்த காரணங்கள் பற்றியும் தீவின் நிலவளம், நீர்வளம் என்பனபற்றி அழகாக விபரிக்கின்றார்.


முன்பு நாகபூசணி ஆலவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருந்தார் என்பது வரலாறு. அவர் வீற்றிந்த மரத்தின் வேர்கள் அடிமுடிகாணமுடியாவாற பாதாளம் வரையும் சென்றுள்ளதாகவும் வானுற வளர்ந்திருந்தது என்பதனையும் எடுத்துக்கூறி வர்ணிக்கின்றார்.


ஈட்டவல்ல துபல்வகைப் பூகமுமூட்டி

ஊட்டவல்ல துபல்லவைப் போகமுமூட்டி

காட்ட வல்லவிப்; பரைபதி காட்டியொண் கயிலை

நாட்டவல்லது நாகநாகேஸ்பரி நகரம்


நகமண்ணியம்மை திருமஊஞ்சற்பா ஓதுவார் இராமச்சந்திரர்காலமுதல் ஓதி வரர்படுகின்றது. யாத்தவர் பெயர் தெரியவில்லை 1949ல் பதிப்பிக்கப்பட்டுள்து. 20 சதம்.

இப்பகுதியில் சிலேடை அணி நயத்துடன் உள்ள ஒரு பாடலை நோக்குவோம்

அறந்தின மாற்றரில்லை அனைவர்க்கு மாற்றா ரில்லை

உறுந்ததி கடையா ரில்லை ஒருத்தரங் கடையா ரில்லை

சிறந்திட செய்வாருண்டு திறலுறச் செய்வா ருண்டு

பிறந்திடக் களிப்பாருண்டு பெறுபவர் களிப்பா ருண்டு


தினம் தருமம் செய்யாதாரில்லை, அனைவருக்கும் மாறானவர்கள் இங்கு இல்லை எனவும், உறும் ததி கடையார் இல்லை என்பது தயிர் கடையாதார் யாருமே இல்லை என்பதோடு ஒருத்தர் அங்கு அடையாதார் இல்லைஎனவம் சிறப்பாகவும் திருத்தமாகவும் செய்வார் உண்டு என்பதோடு இற்றடியில் பிறக்கும் போது இன்பம் மக்களைப் பெற்றவேளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோர் இங்கு உள்ளனர் எனவும் இரப்போர்க்கு கொடுப்போரும் இங்கு உண்டு எனப் பொருள்படப் பாடியுள்ளார். என்றால் அவரது புலமை எத்தககையது என்பது சொல்லித்தான் தெரிதல் வேண்டுமோ.


3.மூர்த்தி விசேட சருக்கத்தில்


சீரியர், முனிவர்கள், சித்தர்க்ள் வாழ்த்த வாரியர் வாழ்த்த வளர்மணித் தீபத்தில் அமைந்த சாம்பவித் திருநாமத்தை கொண்ட அம்பிகை அடியவரக்ளின் வேண்டுதலை வேண்டியாங்கு செய்பவள் என மனமுருகிப் பாடுகின்றனர் எனப்பாடுகின்றார்.


ஆழிவெண் டிரைக்கை தன்னால்

அணிவளைக் குழவி தாங்கி

மாழையங் கரைச் செஞ்சாலி

மஞ்சமேற் றவழ வேற்று

மீழமார் தீபத்தான்றோ

ரிதயமே யுணரும் வித்தா

மேழுல களித்த வன்னை

யெழந்தருள் கின்றா ளன்றே


பெற்றதாலன்னை பெறுமுயிரனைத்தும்

பேணலாலன்னை பெற்றிவோர்

உற்றதாலன்னை விரும்பியவனைத்தும்

உதவலாலன்னை யெக் கலையுஞ்

சொற்றதாலன்னை உலகொடுவானுஞ்

தொழுதலால் அன்னை யென்றென்றும்

புற்றதாங் கருண பொழிதலாலன்னை

பராபரை நாகபுடணி யாள்.

கோயிலுட்புறத்தில் வரையப்பட்டுள்ள பெருமையைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடப்படுகின்றது. அன்னை என்னும் சொல்லை மிக நுட்பமாகக் கையாண்டுள்ளமை காதுகளுக்கும் இனிமை பயக்கின்றன.


4.தீர்த்த விசேடச் சருக்கம்

இதில் நாகதீப தீர்த்த வரலாறும், அது கங்காதீர்த்தத்திலும் சிறப்பு உடையதென்பதும் அதில் தீர்த்தமாடினால் உடலில் உறுபிணி அகன்று புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறுவர் என்கின்றார்.

ஆகுநல் லமுத முண்டா ரமரரு மாடுந் தீர்த்தம்

மோகம தெல்லாந் தீர்த்த முனிவர ராடுந் தீர்த்தம்

சேகுறு மொண்பான் கோடி சித்தர்க ளாடுந் தீர்த்த

நாகர்க ளாடந் தீர்த்த மாகுமிந் நாக தீர்த்தம்


5.விழாவணிச் சருக்கம்

நாகபூக்ஷணி அம்மையின் விசேட மகோற்சவ காலத்தில் காணப்படும் ஆரவாரம் மக்களின் பரபரப்பு வருவோரை எதிர்கொள்ள மக்கள் செய்யும ஆயத்தங்கள், அன்னதான வசதிகள் என்பனவம் எடுத்துக் கூறப்படுகின்றது.


திருவிழாவ தென்ற செய்தி சிந்தையிற் செவிப்பட

பெருகு ளார்வ முற்றவப் பெருந்தலத் தீந்துளார்

கருவளாய தும்புரண்டு கண்பிழ்கு மென் செய்யுந்

தெருவாளர் பர்ந்த செய்கை செப்புகன்ற தொப்பதோ


6.சேடன் அர்சனைச் சருக்கம்


பாம்பணையில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆதிசேடனுக்கு நயினைநாகபூசணியின் சக்திபீட்த்தின் சிறப்பினை எடுத்துக்கூறி அவளைத் தரிசித்து உய்யும் மார்க்கத்தையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது பாடல். இதனால் உந்தப்பட்ட ஆதிசேடன் நீந்திக் கரைசேர்ந்த வரலாறம் அதனன்க கண்ட கழுகு அதனைக் கொன்று உணவாக்க முயலுவதனையும் அதனால் அங்குள்ள ஒரு கல்லின்கிழ் ஆதிசேடன் மறைந்திருப்பதும். அந்த ஆதிசேடனை கடல்வழியாகச் சென்ற வர்த்தகன் ஒருவன் பாதகாப்பதுமான வரலாற்றைப் பின்னிப்பிணைத்துள்ளார். இதனால் வணிகனின் வீட்டில் நவரத்தினங்கள் இரவோடிரவாகக் கொட்டிக்கிடந்ததும் அதனால் கோயிலைக் கட்டுவித்த வரலாறும் பாடப்பட்டுள்ளது.


7.மகாமணிச் சருக்கம்

சோழ மன்னனின் தூதுவன் நாகரத்தினம் பெறவந்த அரச தூதுவன் அங்கு வந்து அம்பிகையின் மணிபீடத்தைக்கண்டு வணங்கி வழிபட்டு அருள்பெற்றதனைப் பற்றி விபரிக்கின்றார்.

உள்ளத்துணர்வார்க்கு குணர்வாகி யுறைவாய் நின்சீறடி போற்றி

விள்ளங் கரிதாம் சத்தமிகளாய் விரிந்தாய் நின்சீறடி போற்றி

அள்ற் பறிவிக் கடல்கடப்பார்க் கருள்வாய் நின்சீ றடியோற்றி

எள்ளிற் றயில மெனவுலகோ டிரந்தாய் நின்சீறடி போற்றி.


மண்ணே யானா யுனக்கபயம் மருந்தே யானா உனக்கபயம்

கண்ணே யானா யுனக்கபயம் கதிரே யானா யுனக்கபயம்

பெண்யே யானா யுனக்கபயம் பறிவே யானா யுனக்கபயம்

விண்ணே யானா யுனக்கபயம் விதியே யான யுனக்கபயம்


இங்கு பக்தி ரசம் பீறிட்டுப்பாய்வதனை அவதானிக்க முடியும்.


8புகார்ச் சருக்கம்

கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகிக்கு எட்டல் , மதுரைமாநகர் எரித்தல் போன்றவற்றோடு மாதவி கோவலனை நினைந்து மனம் நொந்துவருந்தும் காட்சிகள் இடம்பெறுகின்றன.


9.உவவணிச் சருக்கம்

கோவலன் இறந்த செய்திகேட்டு மாதவி துயரற்று மனமுடைந்து அழுது புலம்புவதைப் பலவர் எடுத்துக் கையாண்டுள்ளார்.


நேரோடும் பலபகலென் மனையிருந்து

பிரியுமன்று நெடுநாணில்லேன்

ஊரோடும் பிரிந்தவளைத் தெரந்துறுவல்

வருந்தேலென்றுறுதி சொற்றாய்

பாரோடும் விசும்புதொழப் பத்தினிதனுடன்

றேவர் பதியிற் போந்தாய்

ஆரோடு புகன்றழுதென் மனத்துயரஞ்

சிறிதகற்றி யமருவேனான்.


10. மணிபல்லவச் சருக்கம்


இரவு வேளை சுதாமதியை மணிமேகளை சந்தித்து தனது கவலைகளை உரைத்தல் கோவலன், மாதவி, கண்ணகி பிறப்பின் வரலாற்றைக் குறிப்பிடுவதோடு மணிமேகலையின் பிறப்பும் அவளது முற்பிறப்புக் கணவனின் கதைகள் செய்யுள்களில் பண்டைய வரலாற்றை எடுத்தியம்பி நாககக்கும உள்ள தொடர்பும் கூறப்படுகின்றது.

11. பீடிகைச் சருக்கம்


இலங்கையில் நாகர் அரசு இடம்பெற்றிருந்தமை நாகர்களின் தோற்றம் என்பனபற்றி இங்கு விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

மதுவுண்டு, ஆடிப்பாடிக் களித்திருந்தனர் நாகர்கள் எனக்குறிப்பிடுகின்றார்.


12.நாகர் வாதச் சருக்கம்


நாகர்கள் வணங்கிய பெருமையும் இந்திரன் கண்ணூறு கழித்த வரலாறும் இடம்பெறுகின்றது.


13.பாத்திரச் சருக்கம்


அழியாவரம் பெற்ற சூரினின் வரலாறு, மன்மதன் உருவியல் மாற்றமடைந்த தினத்தில் ஆறுமுகன் தோற்றமும் சூரனை அழிப்பதற்கான வரமும் நல்கப்படுகின்றது. மலையரசன் மகளாக உமை அவதாரம் என்பன பதிவாகியுள்ளன.


14. ஆபுத்திரச் சருக்கம்

அறவண அடிகளிடம் செல்ல மணிமேகலை அன்னை மாதவியோடு உரையாடுதல், மணிமேகலாதெய்வம் தோன்றி உரிய மந்திரங்கள் மூன்றை வழங்கியமை, பீடிகை குறித்து உரைத்தமை போன்றன இச்சருக்கத்தில் இடம்பெறுகின்றன.ஆபுத்திரன் வேள்விக்காக கொண்டுசெல்லப்பட்ட மாட்டை இடைமறித்தல் போன்ற செய்திகள் பலவும் பின்னிப்பிணைக்கப்பட்டள்ளன.


பத்தும் பொறுசூத்துப் பெறுசூம்பொழுதிற் பாடும்

பொறுத்துப் பிறர்பொறுக்காக்

கத்தும் பொறுத்து மடியின்மலங் கலினைப்

பொறுத்து வளர்த்தவர்கைக்

குத்தும் பொறுக்குந் தருத்தயைக் குடித்தே

மயலைக் கொண்டவரிற்

சித்தம் பொறுக்கா மதுநுகர்ந்த தானுணவே

மகமுஞ் செய்திடுவீர்


15. ஊர் அம்பலச் சருக்கம்

புண்ணிய ராசனின் பண்டைச் சிறப்பும் அவனதுபிறப்பின் வழியும் குறிப்பிடப்படுகின்றது. மணிமேகலை புண்ணியராசனை அழைத்து அவனது முற்பிறப்பைக் கூறுதல். முனிவரிம் சென்று புண்ணியராசன் குழந்தையைப் பெற்று வளர்த்தல் போன்றன காணப்படுகின்றன.


16. புண்ணியராச தரிசனச் சருக்கம்


நாட்டுச்சிறப்பு


காய்மாண்ட தெங்கின் பழம்விழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தென் தொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங் கனிசிதறிஇ வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங் கதம் என்று இசையால் திசை போய துண்டே


கம்பராமாயணம் மருதவளம்

வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் - மாநீர்க்

கரம்பு எலாலம் செம்பான் மேதிக் குழி எலாம் கழுநீ;ர்க கொள்ளை

பர்பு எலாம் பனம் சாலிப் பரப்ப எலாம் அன்னம் பாங்கர்க்

குரம்பு எலாம் செந்தென் சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்


நயினை ஸ்ரீநாகபூ~ணயம்மை பிள்ளைத்தமிழ் (1977)


கரவை வ.சிவராசசிங்கம் இயற்றியது

குறிப்புரை கரவை க. கணபதிப்பிள்ளை

குமரன் பதிப்பகம். கொழும்பு


நயினை ஊஞ்சல் - வண்ணை ம. அமரசிங்பப்புலவர்

நயினை நாகம்பிகை பதிகம்

நாகை திருவிரட்டை மணிமாலை;

திருநாகதீபப் பதிகம் - வேலணை தம்ப உபாத்;தியாயர்


ஸ்ரீநாகபூ~ணி அந்தாதிமர்லை - நயினாதீவுச் சுவாமிகள்


நுpயினை நிரோட்ட யமக அந்தாதி

நுயினை மான்மியம் - வரகவி நயினை நாகமணிப் புலவர். 1930ல் வி.கே.ரி. சுப்பிரமணியம் அவர்களால் பதிக்கப்பட்டது.


நயினாதீவு நாகேஸ்வரியம்மை பதிகம் - வரகவி முத்துக்குமாருப் புலவர்


நயினை நாகாம்பிகை பதிகம் -நியினை வ.கு. சரவணபவன்


மனோன்மணி மாலை - யோகி சுத்தானந்தபாரதியார் -நாகேஸ்வரி பதிகம்


நாகராஜேஸ்வரி திருவிரட்டை மணிமாலை - நயினை வே. செல்வநாயகம்


நயினை நாயகி தோத்திரம் - வை.சி.வைத்தியலிங்கம்


நயினை நாகம்மாள் பதிகம் -நயினi நாக சண்முகநாதபிள்ளை


நயினை நாகேஸ்வரப்பதி ஸ்ரீ நாகபரமேஸ்வரியம்மை தோத்திர விருத்தம் -நயினை இசைமணி ஆ.மு.சுப்பிரமணியம் -1967


நாகபூ~ணியம்மை திருவூஞ்சற்பா -நயினை சு.ஐயாத்துரைச்சோதிடரால் பதிப்பிக்ப்பட்டது. 1949


நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் கட்டுரைகள் தொகுப்பு -வாசீகக் கலாநிதி, சித்தாந்த பண்டிதர், கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், முதுநிலை விரிவுரையாளர், சுப்ரகமுவ பல்கலைக்கழகம்


    நயினாதீவு செம்மனத்தம்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தோத்திரப் பதிகம்

    நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர...

    நயினாதீவு நாகபூசணி அம்பாள் பெருவிழாக் காலத்தில் அளித்த நயினை அம்பாள் பாடல்கள்

    நயினாதீவு நாகபூசணி ஸ்தலவரலாறும் தோத்திரத்திரட்டும்

    நயினாதீவு நாகம்மாள் (ஒரு தொகுப்பு நூல்) 2003

    நயினார்தீவு நாகபூஷணியம்மை திருவூஞ்சற்பா ஏசல் எச்சரிக்கை பராக்கு லாலி கப்பற்பாட்டு...

    நயினை நாகபூஷணி அம்பாள் பவனிவரும் புதிய பொற்தேர்க் கீர்த்தனை

    நயினை நாகபூஷணி ஆலய வரலாறும் அருட்பாமாலையும்

    நயினை நாகபூஷணியம்மை பிள்ளைத்தமிழ்

    நயினை நாகேஸ்வரப்பதி ஸ்ரீ நாகபரமேஸ்வரியம்மை தோத்திர விருத்தம்

    நயினை மான்மியம்

    நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன்

    நயினை ஸ்ரீ நாகாம்பிகை அந்தாதி

    நயினைத் திருத்தலங்களும் நாகம்மை கீர்த்தனங்களும்