- பதிவுகளில் (ஜூன் 2004 ) தான்யா  கவிஞர் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்னும் தொகுப்பை விமர்சித்துக் கட்டுரையொன்றை 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வைத்து...  ' என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். இது பெரியதொரு விவாதத்தைக் கிளப்பியது. விவாதத்தில் சூடு பறந்தது. விவாதத்தில் செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) , எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் , எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன்,  எழுத்தாளர் அநந்திதா (வினோதினி) - யாழ்ப்பாணம்,  எழுத்தாளர்  நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோர் பங்குபற்றினர்.  தானியாவின் கட்டுரைக்கான எதிர்வினைகளின் தொகுப்பிது. -


தான்யாவின் கட்டுரை  தொடர்பான சில கருத்துக்கள்!  - செல்வி .வ. உருத்திரா (மட்டக்களப்பு, இலங்கை) -
 
'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதாகள்'  எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக்  இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது 'பெண்' சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் 'பெண்' போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.
 '
அரசுசார்பற்ற தொண்டு நிறுவனமான சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் (இல.20 டயஸ் லேன் மட்டக்களப்பபு ) ஒரு வெளியீடாகவே  'பெண்'  சஞ்சிகை வெளிவருகின்றது. இதற்கு இந்நிறுவனத்தின் வெளியீட்டுப்பிரிவு இணைப்பாளர்  சே.விஜயலட்சுமி பொறுப்பாக உள்ளார். இவருக்கு முன்னைய காலங்களில் இணைப்புக்குழு உறுப்பினர்களிலிருந்து ஒவ்வொருவராக  தொகுத்தளிக்கும் பொறுப்பை ஏற்று 'பெண்' வெளிக்கொணரப்பட்டது. இதனடிப்படையிலேயே  பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் 'பெண்' சஞ்சிகையின் இதழ்களான 2.2 4.1 5.2 6.2  ஆகியவற்றுக்கு ஆசிரியராக இருந்துள்ளார் அன்றி 'பெண்' சஞ்சிகை என்பது பேராசிரியர் சித்ரலேகா மெளனகுருவினது தனிப்பட்ட வெளியீடுகள் அல்ல. தான்யா  இது பற்றி போதிய விளக்கமின்றியே அக்குறிப்பினை வரைந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

சித்ரலேகா அவர்கள் 'சொல்லாத சேதிகள்', 'சிவரமணி கவிதைகள்' ஆகிய இரு நூல்களையும் பதிப்பித்துள்ளார். 'சொல்லாத சேதிகள்' கவிதைகளில் சிவரமணியின் இரு கவிதைகள் உள்ளன. அவ்விரு கவிதைகளும் இந்நுரலிலேயே முதல் முதல் பிரசுரமாயுள்ளன. வையகத்தை வெற்றி கொள்ள என்ற கவிதையும் ஒன்று. அது சிவரமணியினுடையது. பறத்தல் அதன் சுதந்திரத்தில் சன்மார்க்காவின் பெயரில் பிரசுரமாயுள்ளது. இத்தவறுக்கு ' பறத்தல் அதன் சுதந்திரத்தின்'  ஆசிரியர்களே பொறுப்பு அன்றி சித்ரலேகா அல்ல. அவ்வப்போது போதிய தேடலின்றி அஜாக்கிரதையாக பதிப்பாளர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒருவரை பாத்திரமாக்குவது எந்த வகையிலும் தா;மமாகாது.

செல்வி சிவரமணி கவிதைகளில் (தாமைரைச் செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.) தான்யா குறிப்பிட்ட கவிதை பற்றிய போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாமரைச்செல்வி பதிப்பகத்தின் வெளியீடு குறித்து தான்யா எழுதும் போது அதனைப் புரட்டிப் பார்த்தாவது எழுதியிருக்கலாம். இல்லையேல் சித்ரலேகா மெளனகுருவினால்  'செல்வி சிவரமணி கவிதைகள்'  தொகுப்பில்  'சிவரமணியின் வாழ்வும் கவிதையும்'  பற்றிய ஒரு  குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அதில் சிவரமணியினால் நேரடியாக தரப்பட்ட கவிதைகள் எவை? வேறு சஞ்சிகைகளில் பிரசுரமாகியவை எவை? என்பன போன்ற விரிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன.
 
அவ்வாறு இருந்தும் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு தெளிவு படுத்த வேண்டும் என தான்யா குறிப்பிட்டிருப்பது எதனை என்பது எமக்குத் தெளிவாகவில்லை.  அது மட்டுமன்றி சித்ரலேகா மெளனகுரு பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு உடையவர். அவ்வாறு இருந்தும் இத்தகைய பெயர் மாறாட்டங்களில் அஜாக்கிரதை உடையவர் என தான்யா குறிப்பிடுவதன் அடிப்படை எது என்பதை தான்யாவே எமக்கு தெளிவு படுத்த வேண்டும்.

அது மட்டுமன்றி சிவரமணியின் கவிதைகளில் 'பெண்' சஞ்சிகைகளில் வெளிவந்தது  தொகுதி 2 இலக்கம் 2 இல் உள்ள ஒரு கவிதையே.  தான்யா குறிப்பிடும் அஜாக்கிரதையான அளவிற்கு  'பெண்'  சஞ்சிகையில் எத்தனை கவிதைகள் சிவரமணியினுடையது வெளிவந்தன என்பது தான்யாவுக்கே வெளிச்சம்.

ஆனால் சிவரமணியின் கவிதை வரிகளில் ஒன்றான  'தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளளேன்' என்பதை மகுட வாசகமாக கொண்டே (முன்அட்டை) |பெண|; சஞ்சிகை வெளிவருகின்றது இதில் மறுப்பேதும் இல்லை. இதனையே தான்யா அவர்கள் 'கண்டெடுத்தேன்','கண்டெடுத்தேன்'  என சித்திரலேகா மெளனகுரு அவர்கள் குறிப்பிடுவதாக அர்த்தப்படுத்தி எழுதியிருக்கலாம். தான்யா அவர்கள் குறிப்பிடும் கண்டெடுத்துப் போடும்படியான சிவரமணியின் கவிதைகள் எத்தனை  'பெண்'  சஞசிகையில் வெளிவந்தது என்பது தான்யாதான் வெளிப்படுத்த வேண்டும்.
                                
தமிழ் எழுத்துலகில் பெண்கள் எழுதுதல்  என்பதே ஒரு  குறிப்பிடத்தக்க விடயம். ஆண்கள் தங்கள் இலக்கிய இருப்புக்களை உறுதிப்படுத்த எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் நேர ஒதுக்கீடு,   வாசிப்பு (குடும்ப பொறுப்பு இல்லாது) .போன்ற முயற்சிகளின் காற்பங்கு கூட எழுதிய எழுதி வந்த எழுதப் பழகி விட்டுவிட்ட பெண் எழுத்தாளர்கள் குடும்பத்துள் நுழைந்ததும் முன்னெடுப்பதில்லை. முன்னெடுத்த ஓர் சிலர் தவிர மூத்த பெண் எழுத்தாளர்களில் (தற்போது எழுதுவதைக் குறைத்துக் கொண்ட)  அனேகா; குடும்பத்துள் வேறு வடிவங்களில்   தாயாய், மனைவியாய், தொழில் நிலையத்து பணியாளராய்  தங்களை பங்கிட்டுள்ளனர் .இத்தகைய தம் நிலைகளை முறியடித்து எழுத வந்துள்ள பின்னர் பெண்கள் எதி;ர்கொள்ளும் பிரச்சனைகள் பல...
                                 
தான்யா குறிப்பிட்டு குறை கூறும் பட்டியலிடல் அக்கறையீனம் என்பனவற்றை ஒரு பொருட்டாக  நாம் கருதி கருத்துக்கள் எழுதும் காலம் அல்ல இது. பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அநீதிகளும் மிகுந்த பகுத்தறிவான அறிவியல் யுகத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொத்த இலக்கிய சூழலிலும் கூட குழுநிலை வாதம் இருக்கிறது. புதிதாய் ஓர் சிற்றிதழாவது வந்து விட்டால்- புதுக்கவிதை மாதிரி பெயர்களையும் வா¢சைப்படுத்தியிருப்பார்கள.; எத்தனை சிற்றிதழ்கள் வெளிவருகின்றதோ அத்தனையிலும் அப்பட்டியிடல் இருக்கும்.

அவர்களின் கொள்கைகளையும் ஒருவர் மற்றொருவரின் படைப்புக்களையும் மாறி மாறி விமர்சனம் செய்வதையும் வைத்துக் கொண்டே சில சிற்றிதழ்களை வருடக்கணக்கில் நகா;திச் செல்லக் கூடிய நிலமை வருமளவிற்கு இன்றைய படைப்டபுலகம் (அனேகமாக ஆண்களை கொண்டிருப்பவைதான்.) காணப்படுகிறது.

ஆபூர்வமாக ஆண்களுக்கு நிகரான (தங்களை அத்துறைகளில் நிபுணர்களாக கருதும் அளவில் உள்ளவர்களுக்கு) எழுத்துக்களோடு வெளிவரும்போது சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்திரி கவிதைகளுக்கு வரும் 'பெண் மொழி' தொடர்பான எதிர்ப்புக்கள் போல் எதையாவது எழுதிக்கிழித்து விவாதித்து குப்பையாக்கி தங்களுக்கு (குழுக்கொள்கை வாதங்களுக்கு) புறம்பானதாக ஆக்கி ஒதுக்கிவிடும் மனோபாவம்தான் படைப்புலகில் இன்னும் நிலைபெற்றுள்ளது.
                   
தமிழ்நாட்டை பொறுத்தவரை புனிதமானதாகருதப்படும் இறைபாடல்களில் கூட (சித்தா; பாடல்களில்) இல்லாத பதப்பிரயோகங்களா? முகம் சுளிக்கும் பெண் உறுப்புக் குறியீடுகள்  எத்தனை ? எத்தனை ? இவற்றை எல்லாம் இந்தியா டுடேயில் எழுதியவர்கள் |பக்திப்பெருக்கோடு| நோக்கினார்களா? அப்படி நோக்கியதனால் தானோ யோனி, முலைகள், போன்ற பதங்ளை ஆபாசமாக விரசமாக ஆண் கவிஞர்களுக்கும் ( மூத்த  கவிஞர் அப்துல் ரஹ்மானுக்கு கூட) அருவருப்பாக சமூகச் சீரழிவாக தோன்றியிக்கிறது.?

 எனவே பெண்களுக்கெதிரான வன்முறைக் கலாசாரத்தை சமூகத்தில் ஒரு சாரார் ஏதோ சொல்லி நியாயப்படுத்தவது போல் பெண்களின் எழுத்து மொழிக்கெதிரான வன்முறைகள் தலை தூக்கி உள்ளதையே தான்யா  போன்றோரின் இத்தகைய விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.
 
எனவே 'பனுவலை'ப் பொறுத்தவரை பெண்களின்; படைப்புக்கள் தொடர்பான விமர்சனத்தையோ அறிமுகத்தையோ தருவது மிகச் சொற்பமாக உள்ள  நிலையில் தான்யா போன்றோரது தொடர்பற்ற விதத்தில் அமைந்துள்ள நோக்குகள் குறிப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதோடு 'பனுவல்'  இன்னும் அதிகமான யதார்த்த நிலை இலக்கிய நிகழ்வுகளையும் அதிலும் குறிப்பாக பெண்கள் படைப்புக்கள் தொடர்பான ஆக்கங்களை பக்கச்சார்பற்று அதிகரிக்க வேண்டும் என்பதையும்இப்படியான விமர்சகர்களுக்கு  வேண்டுகோளாக  முன்  வைக்கின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


செல்வி உருத்திராவின் மறுபெயர் சித்ரலேகா மெளனகுருவா?  - தான்யா-
 
எதை எதை எழுதவேண்டும் எவற்றை பிரசுரிக்கவேண்டும் என்று ஒரு விமர்சகருக்கும் பத்திரிகைக்கும் சில நிபந்தனைகள் இட்டிருக்கிறார் செல்வி உருத்திரா அவர்கள்.  எனது வாசிப்பையோ எழுத்தாளர்கள் குறித்த எனது பிரம்மைகளையோ எனது விமர்சனத்தில் நான் எழுதவில்லை.  செல்வி உருத்திரா அவர்களைப்போல் ஒருபட்சமாக சிந்திக்கவும் இல்லை.   ராஜ்மார்த்தாண்டனையும் மாலதி மைத்ரேயியையும் ஒரே தளத்தில் வைத்து விமர்சிக்க முடியும்.  அவர்களது அஜாக்கிரதையை சுட்டிக்காட்ட முடியும்.  சித்ரலேகா மெளனகுரு ஒரு எழுத்தாளர் என்பதோ சமூகசேவகி என்பதோ கலாநிதி என்பதோ எனது விமர்சனத்துக்கு முக்கியமானதாக நினைக்கவில்லை. எனது விமர்சனத்தில் கூட சித்ரலேகா மெளனகுரு அவர்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன் ஆனால் செல்வி உருத்திரா அவர்கள் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு என்று எழுதியிருந்தார்கள் இதன் மூலம் அவர் எதை முக்கியப்படுத்துகிறார் முன்நிலைப்படுத்துகிறார் என்பது தெளிவாகவே புரிகிறது.  நான் சித்ரலேகா அவர்கள் எழுதிய சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற குறிப்பை வாசிக்காமல் எழுதியதாய் எழுதி, கூடவே “பெண்” சஞ்சிகை அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தால் வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.   இவற்றைச் சுட்டிக்காட்டிய உருத்திரா அவர்கள் கூடவே எந்த எந்த இதழ்களுக்கு சித்ரலேகா அவர்கள் தொகுப்பாசிரியராக இருந்தார் என்பதையும் எழுதியுள்ளார்கள்.  எழுதுவதில் முனைப்பாக இருந்த செல்வி உருத்திரா அவர்கள் பார்க்கத் தவறியது அவற்;றில்தான் சிவரமணியின் கண்டெடுக்கப்பட்ட கவிதைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதை.  நான் இந்த எதிர்வினையை எழுதும்போது கூட, ஏன் செல்வி உருத்திரா அவர்கள் எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.   சித்ரலோகா மெளனகுரு அல்லது சன்மார்க்கா அவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விக்கு எதற்காக நடுவில் ஒருவர் அதுவும் புரியவில்லை.  ஏன் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு பேரசிரியர் அல்லாதவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்களா?

செல்வி உருத்திரா அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இது தான்: சிவரமணியின் கவிதைகள் கண்டெடுக்கப்பட்டள்ளது என்று மொட்டையாக பிரசுரிப்பதில் உள்ள பிரச்சினைகளையே நான் எழுதியிருந்தேன்.  எனக்குத் தெரிந்து சிவரமணி கவிதைகள் அரசுடமையாக்கப்படவில்லை, யாரும் கண்டெடுத்துப் பிரசுரிக்கலாம் என்பதற்கு.  குறிப்பிட்ட பெண் இதழின் கெளரவ மற்றும் ஆசிரியராக உள்ளவரையே ‘கண்டெடுக்கப்பட்ட” கவிதைகளுக்கு பொறுப்பாக்க முடியும், அதனடியில் பெயர் போடாத பட்சத்தில்.  அதிலும் சிவரமணி ஈழ அரசியலிலும் சரி  ஈழ இலக்கியத்திலும் சரி  முக்கியமான பிம்பம்.  அவருடைய கவிதையை கண்டெடுத்தது என மொட்டையாக போடமுடியாது.  அவரின் கவிதைகளுக்கு யாரும் ஏகோபித்த உரிமை கொண்டாட முடியாது, அது, “சிவரமணி – வாழ்வும் கவிதையும்” என குறிப்பு எழுதியவராய் இருந்தாற்கூட!

சித்ரலேகா அவர்கள்; பொறுப்பான இடத்தில் இருப்பதால், கவிதைகள்  யாரால் எப்படி எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பதைப் போட வேண்டும், அதுவே பதிப்பு அறம்.  அதை அவர் செய்திருக்கவில்லை.  இதை விடுத்து சித்ரலேகா மெளனகுரு எதை செய்தார் எதை எதைத் தொகுத்தார் அல்லது என்ன செய்கிறார் என்பதை அட்டவணைப்படுத்தவேண்டிய தேவையேதும் எனக்கு இருக்கவில்லை அது செல்வி. உருத்திராவிற்கு நிறையவே இருப்பதாயப் படுகிறது.

ஈழத்தின் மிகமுக்கியமான பெண் கவிஞையின் கவிதை பொறுப்பற்று  பிரசுரிக்கப்பட்டள்ளது இது குறித்து மேன்மை தாங்கிய சித்ரலேகா மெளனகுரு அவர்கள் எதுவுமே தெரிவிக்கவில்லை ஆனால் அந்தப் பிழையை ஆழியாள் அவர்கள் காலச்சுவடு இதழில் எழுதிய போது அதன் தொகுப்பாசிரியர்களான மாலதிமைத்ரேயி, க்ருஸாங்கினி ஆகியோர் அது தங்களது அஜாக்கிரதை இல்லை அது 15 வருடமாக ஈழத்து படைப்பாளிகளின் அஜாக்கிரதை என்கிறார்கள்.  இவற்றுக்கும் சித்ரலேகா மெளனகுரு அவர்கள் பதில் தரவில்லை.  இதற்கான பதிலை தாங்கள் தர முடியாது தெளிவு படுத்தவும் முடியாது, மாறாக, சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற கட்டுரையையும் அவரது கவிதைகளையும் அடிக்கடி கண்டெடுத்துப் பிரசுரம் செய்யும் பணியையே சிவரமணியையும் சிவரமணியின் கவிதைகளையும் நன்கு அறிந்த(!) சித்ரலேகா மெளனகுருவால் செய்ய முடியும்.  இது பற்றி எந்த அக்கறையும் இல்லாது இலக்கியம் வாசிப்பு என்று எந்த தீவிரமும் அற்று பெண்கள் வாழ்க்கைபற்றி அவர்கள் இன்னல்கள் பற்றியே அதிகமாக சிந்திக்கும் உருத்திரா அவர்கள் -மெனக்கெட்டு- எனக்கு எதிர் வினையாற்றியது மிகப்பெரிய விடயமே.  ஆனால் சித்ரலேகாவின் உத்தியோக பி.ஏ யாக அவர் அல்லாதபட்சத்து அது அவசியமற்றது.

அக்கறையீனங்களை பொருட்டாக கருதி கருத்துக்கள் தெரிவிக்க முடியாது பெண்களின் வாழ்க்கையைப் பற்றி அக்கறை காட்டும் செல்வி உருத்திரா எதன் அடிப்படையில் என் பொறுப்பற்றஇ அறிவற்ற விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றினார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு விமர்சனத்தை எழுதும்போது எங்கெல்லாம் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுகிறது எவ்வளவு விகிதத்தில் இடம் பெறுகிறது என்று புள்ளி விபரத்தை எழுத வேண்டும் என்று உருத்திரா அவர்கள் எதிர்பார்க்க இயலாது.  அடக்குமுறைகள் ஏற்படுகிறது அதே போல் அதிலிருந்து பல படைப்பாளிகளும் உருவாகிறார்கள்.  அவர்களின் படைப்புக்கள் பலவிதமான வெளிப்பாடுகளையும் உருவாக்குகிறது.  அதை விடுத்து இது எல்லாம் பெரிய விடயமா என்பது போன்று உருத்திரா அவர்கள் எழுதியுள்ளார்கள்.  இவர் எழுதியது போல் பார்த்தால் எந்த பெண்களும் எழுதக் கூடாது மற்றும் யுத்த காலத்தில் எதற்கு இலக்கியம் என்று போர்க்களத்தில் நிற்பவர்களிடம் கேட்பார்கள் போலும்.

கடைசியாக நான் எப்படி விமர்சனம் எழுதவேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள்.  எனது விமர்சனம் முறிகிறதா அல்லது ஒரே சீரில் இருக்கிறதா என்பதையெல்லாம் நான்தான் தீர்மானிக்கவேண்டும். உங்களுக்கு இலகுவாக புரியும் விதமாக, சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.  விமர்சனம் நீங்கள் எழுதுவது போன்றே இருக்க வேண்டும் என்றில்லை.  நான் எழுதிய ஏனையவற்றை விடுத்து சித்ரலேகா மெளனகுருவை விமர்சித்ததையே முக்கியமாக எழுதியிருந்தீர்கள்.  எனது நோக்கம் அக்கறையீனங்களை சுட்டிக்காட்டுவதே அதை நான் செய்திருந்தேன்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள், அக்டோபர் 2004 இதழ் 58


Regarding dhanya's articles on  women who write poetry! - Latha Ramakrishnan -

As I am not a regular visitor to browsing-centres and also as most of these centres do not have tamil fonts downloaded i can type this letter  not in tamil, much as i wish to do so, but only in English. Regarding Dhanya's observations on issues pertaining to women who write poetry  she is correct in pointing out that there have been women writing in the 80s too but without trying to highlight the fact that they are women writing poetry. These women were writing on various issues  in their own way. Afterall, no one can  dictate to a poet as to what he or she shoud write. Whatever affects a poet he or she gives vent to it in his or her poetry. But sadly, this basic idea of poetry is overlooked and  all the limelight is focussed on only a select few women who write  poetry. And, more often than not their writings are considered above criticism and  any obervation on these writings are branded male-chauvenistic and highhanded. It is not correct to say that pop-magazines and small-magazines  are decrying them. For, it is the small-magazine circle which has always stood for them by publishing their poems and by writing about them continuously. Pop-magazines are known to decry the initiatives of small-magazines for  reasons too well known. The fact is that  the small magazines hailed these select few as the harbingers of  women-writing in tamil which is not all that true. As said earlier, women writing poetry  is not all that new.

And, Mr.Rajamarthandan's list, like any other list highlights some women who write poetry and half-heartedly mentions several others belonging to Tamilnadu. These things happen always. When the fact being that the writers of small-magazines strive and go on working against all odds, it is wrong to say that women writing poetry  face undue  suppression. On the other hand  as things stand today it is comparitively easier for women in this field to gain attention and recognition. More so, when, of the ten or so only four are five  are oft-quoted or highlighted. I write under the pseudonym 'rishi' and my views, being in the field can be wantonly  misinterpreted as jealousy or some such thing but I care a  damn. Certain things have to be said. Taken out of context any line can sound schoolmasterish. But as a poet committed to the cause of small magazines and poetry and one who has never tried to grab any limelight  and one who has never resorted to pronouncing sweeping statements can't mr.brammarajan write his views on  the poetry of any woman? For that matter any discerning reader has the freedom to air his or her views. That doesn't make one a fascist or  fundementalist. But that is exactly how such reviewers  are projected paired alongwith those who  decry women maliciously  and with ulterior motives.

In fact I feel that  the whole issue came to be because there were some who kept on quoting these 'select few'  hailing them as penning the ultimate poetry. So much eulogy is bound to bring in adverse comments. And, all  the adverse comments are not unethical or oppressive. It is argued that centuries after centuries women who took to writing were suppressed. May be true, but then history is twofold - the history of the past and the history of the present. The past injustices meted to women in the field of literature are 'things of the past.'. Today , being ten against hundred ( and, four or five being the select few among the ten) the survival and the limelight  are easier to reach for women than for men who write good poetry. Before concluding, it should be stated that mr.brammarajan always maintains that there is something called women-poetry and it was he who alongwith his friend Sivakumar ,translator  and co-author of meetshi, the prestigious small magazine of the yesteryears convened a two-day symposium for women in the field of literature.

And, I didn't take part in it  saying that such bracketing as women-writers is unnnecessary and that it only helps to satisfy the ego of some men. And i sincerely feel that such exclusive status does help some women in gaining  attention and recognition. And this exclusive status has driven some women who are involved in creative writing to  voice those 'dry slogans such as  men are evil forces  and mothers are the saviours of the  world and that all men are aggressors  man's body is a dead thing while the woman's can create magic etc, etc- slogans that even the dry-leftists have long discarded. Today's world and its power-system exploit and oppress men also in numerous ways. I remember the words of ms.srilatha swaminathan  an activist whom i chanced to meet when i participated in an All-India Women's Conference held in Patna in the 90s( i was invited to participate as an observer and a translator) who said that this divide between men and women was used by the landlords to exploit the working class all the more. Lot more to say on this issue. Still, i stop for the  time-being.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


NadchaththiranIn Response to Latha Ramakrishnan...  - Nadchaththiran Chevinthianne

Latha Ramakrishnan’s thoughtless response is shocking and shameless. Because her prosaic language of the old Colonial English has a lot of pathetic jargons and her voice is ultra conservative. Her arguments are flawed and incoherent. She didn’t understand Thanya’s article at all. Let us analyse some of her comments.

1. “it is wrong to say that women writing poetry face undue suppression. On the other hand  as things stand today it is comparitively (sic) easier for women in this field to gain attention and recognition.”

2. “can't Mr.Brammarajan write his views on  the poetry of any woman? For that matter any discerning reader has the freedom to air his or her views. That doesn't make one a fascist or  fundementalist. (Sic) But that is exactly how such reviewers  are projected paired alongwith those who  decry women maliciously  and with ulterior motives.”

3. “It is argued that centuries after centuries women who took to writing were suppressed. May be true, but then history is twofold-the history of the past and the history of the present. The past injustices meted to women in the field of literature are 'things of the past.'. Today , being ten against hundred ( and, four or five being the select few among the ten) the survival and the limelight  are easier to reach for women than for men who write good poetry.”

4. “Today's world and its power-system exploit and oppress men also in numerous ways.”

As you can read through these you can see Latha Ramakrishnan is representing Mr. Pramarajan and male chauvinism thus playing a defence barrister.

Women who are writing poetry in women - language do face harassment and organised assaults. Tamil Nadu is the hot bed for these attacks as it is   still more or less has the value system of a Feudal society.  Sri Lanka including its Tamil regions is more modernised than Tamil Nadu. (An intriguing way to explain the difference between feudal and a modernised society is through Concubine Keeping and Womanising. A successful chief minister of Tamil Nadu can be an active Concubine Keeper whereas a successful president of Sri Lanka can be career womaniser.). There has been a boom of feminist literature in Tamil for some years. Many of the women writers have been under active attack from Male chauvinism. Salma, Kutty Revathy, Uma Maheswary are a few victims to name. ( Ambai had been a constant target of abuse and harassment for decades because of her writings and convictions)  In fact the review written by Premmarajan for Kutty Revathy’s collection is a “civilised” way of an assault on women- writing.  Saying that it is easier for women to get attention and recognition is an out of perspective statement. All that attention and recognition women get these days  (if any) are those they deserve and had been denied them for centuries.
 
Freedom of expression can be often abused.  We can still allow people to say things like “ Tamils are the second class citizens of Sri Lanka”   “ Women are less intelligent than men as their brain size is half the size of a men” “ India is for Hindus only”. When a lot of people adopt these dangerous convictions, it is not good for the welfare of the humanity.  What Mr. Prammarajan dictates in his review to Revathy’s collection are exactly fascist and fundamentalist statements.  Brammarajan doesn’t have breast, clitoris, or G-spot. In his lifetime he is never going to experience a multi- orgasm. Then why is he trespassing into the foreign territory of female sexuality? It is simply none of his business.
 
Latha Ramakrishnan should be clear of the distinction between the women who are writing and the women who are writing in feminist or women language. Both are not the same. Ramanich Chandran, Anuradha Ramanan or even Latha Ramakrishanan may well fit into the first category.  These “women” writers wouldn’t be suppressed, as they do not challenge male chauvinism.  In fact they are very much encouraged by the male lobby.
 
Things like racism, male chauvinism did exist in history and they are concrete facts. You cannot write things like “ May be true” “ May be true Hitler annihilated some six million Jews”.  Can we say, “May be Latha Ramakrishnan is a woman”?  Of course she is a woman.

“Today's world and its power-system exploit and oppress men also in numerous ways.”  -Latha Ramakrishnan.

Can Ms Ramakrishnan give any evidences for this statement? To me this statement looks like something written by a year 10 student. Men are exploited nowhere in the world because they are men. However women are.  

I want to ask Ms Ramakrishnan a few questions.

Q1. Why penis is not removed from a living man in any culture whereas clitoris is removed from a living woman in some African culture? (Please, do not equal this to male circumcision. Because it is the penis, which is homologous with the clitoris and not the male foreskin.)

Q2.  As for male “womaniser” what is for female?  OR Why is “Nymphomaniac” a politically incorrect word whereas “womaniser” is not?  OR As for female “Nymphomaniac” what is for male?

Q3. Why men are not used in prostitution and 99.99% of the prostitutes are women? (I am not classifying male under 18 children, used in prostitution as men) OR Why It is only less than 0.0000001% of brothels where man is the service provider and woman is the client.

Q4. Why even in the first world countries women corporate executives are earning less than their male counterparts?

Q5. Why in most of the countries half of the Members of Parliaments are not women and why US has never produced a female president?

I have no hesitation to call Latha Ramakrishnan, a part time woman agent, working as an advocate of Male chauvinism..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிவுகள், ஆகஸ்ட் 2004 இதழ் 56 -மாத இதழ்


Nalayiniஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்..  -  நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து ) -

பெண் எழுத்தாளரை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளர். மற்றது திருமணத்திற்குப் பிந்திய பெண் எழுத்தாளர். இவர்களுள் திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளரின் வருகை அதிகமாக இருந்தாலும் அதன் காலப்பகுதி மிக குறைவாகவே காணப்படுகிறது. காரணம் பெண்ணின் திருமண வயதென்பது பதினெட்டிலேயே ஆரம்பித்து விடுகிறது. இதனால் திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளரின் கால எல்லை மிக குறைவே. பல பெண் எழுத்தாளர்கள் திருமணத்தின் பின் மெதுமெதுவாக தமது எழுத்துப்பணியை முடித்துக்கொள்வதையே காணக் கூடியதாக உள்ளது. சில பெண்எழுத்தாளர்களே திருமணத்தின் பின்னும் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் கணவன் பிள்ளைகள் வேலை வீட்டு வேலை என அவர்களின் நேரம் மிக குறைந்து வருவது கண் கூடே. இதனால் காலப்போக்கில் அவர்களின் கையில் இருந்த பேனா மூலையில் முடங்கி விடுகிறது என்பது பெருந்துயரே. ஆனாலும் சில பெண்எழுத்தாளர் திருமணத்தின் பின்னும் எழுதிவருகிறார்கள். அதில் பெரும்பகுதியினர் குடும்ப வாழ்வைத் தொலைத்தவர்களாக தனித்து வாழ்ந்து கொண்டு எழுத்தை தொடர்பவர்களாக இருப்பது கண் கூடே. ஏன் ஒளவையாரை எடுத்தக்கொண்டாலே தனித்த மனிசியாக இருந்ததாகவே வரலாறு கூறுகிறது.

பெண் எழுத்தாளர் குடும்பத்தில் இருந்து பிரிந்து எழுத்தை தொடங்குவதற்கான காரணங்களை ஆராய்கிறபோது பல அதிர்ச்சிமிக்க தகவல்கள் கிடைத்தன. கணவனின் அனுசரணை ஒத்துழைப்பு இன்மை. கணவனின் சந்தேகப்பார்வை . எழுதும் எழுத்தின் மீதான விமர்சனமின்றி அந்த பெண் எழுத்தாளர் மீது சந்தேகத்தோடு வைக்கும் வாசகரின் விமர்சனம். இத்தகைய தன்மையால் ஒரு உணர்வு மிக்க பெண் எழுத்தாளியால் கணவனோடு இருந்து எழுத முடியாமல் போகிறது . இதனால் அந்த பெண் எழுத்தாளி விவாகரத்தை பெற்றுக்கொண்டு தனித்து நின்று எழுத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.

சமூகத்தின் எழுந்தமான விமர்சனத்தால் சந்தேகப்பார்வையால் மனம் துவண்டு தற்கொலை செய்தபெண் எழுத்தாளரும் உளர். அதேபோல் பேனாவை தூக்கி எறிந்து விட்டு குமுறும் மனதுடன் வாழும் பெண் எழுத்தாளரும் உளர். ஏன் சில பெண் எழுத்தாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவங்களும் உள. எத்தனை வேதனைகளுள் ஒரு பெண் எழுத்தாளர்  வளரவேண்டி உள்ளது.

ஆண் எழுத்தாளருக்கு இத்தனை துன்பமும் கிடையவே கிடையாது. சிந்தனை மலர மலர அவர்கள் எழுத வேண்டியது தான். வேலைப்பளுவோ அன்றி குடும்ப அக்கறையோ தேவையில்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள். அங்கே ஆண் எழுத்தாளர் வைத்தது தான் சட்டம். மனைவி எதையுமே கேட்க மாட்டாள். அவள் தனது கணவனின் முன்னேற்றத்திற்கும், தனது குடும்பத்திற்குமாக மாய்ந்தே போவாள். இதை விட அது அந்த ஆணின் தொழில் என வேறு பிதற்றிவிடுவதும் உண்டு.

ஆண் எழுத்தாளர் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப்போகலாம். அது கருத்தோடு நோக்கப்படும். விமர்சனம் அந்த ஆணையோ அல்லது அவனின் குடும்பத்தையோ சாடாது. எழுத்தோடு மட்டுமே நின்று கொள்ளும்.  ஆண் எழுத்தாளன் ஒருவன் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எதையும் எழுதலாம். கற்பனையில் கூட தனது சிந்தனைக்குள் கொண்டுவந்து வார்த்தையால் வடித்து விடலாம்.

அது சமூகத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறான் என கூறும் வாசகர் கூட்டம் ஒரு பெண் எழுத்தாளர் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எழுதிவிட்டால் அவளே அதை செய்ததாக குற்றச்சாட்டு வைத்து விமர்சனத்தை தந்துவிட்டுப்போகிறது. இதனால் ஒரு பெண் எழுத்தாளரால் உள்ளதை சமூகத்தில் கண்டதை அதனால் தனக்கு ஏற்பட்ட மன உணர்வுகளை எழுத முடியாதுள்ளது. ஏதோ சடைந்து சாக்குப்போக்குச்சொல்லி எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

ஆண்களுக்கு மட்டுமா காதல் உணர்வு உள்ளது பெண்களிற்கும் தானே.ஒரு பெண் எழுத்தாளினி காதல் உணர்வை காமத்தை சமூக வரம்பு மீறல்களை எழுத பயப்படுகிறாள். சமூகம் தவறாக எடுத்து விமர்சித்துவிடுமோ என. இந்த நிலை மாற வேண்டும். ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்கின்ற பார்வை மாற்றப்படவேண்டும். அப்போதான் பெண் எழுத்தாளினியாலும் நல்லதை படைக்க முடியும். பெண் எழுத்தாளினி குடும்பத்தை விட்டு பிரிகிறாள் என்பது வேதனையே. அங்கு கணவனின் புரிந்துணர்வு அற்ற நிலையில் வெளியேறுதல் என்பது தவிர்க்க முடியாததாகிறது. ஏன் இன்னும் சில பெண் எழுத்தாளர்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி எழுத்தை தொடரும்போது அங்கு ஒரு ஆண் அவளை திருமணம் செய்ய முன்வருகிறபோது அதற்குஸ் சம்மதித்து திருமணத்தை அவனுடன் ஏற்படுத்திக்கொள்கிறாள். இங்கு அவள் மீண்டும் ஒரு தவறைச் செய்ய முனைகிறாள் என்பது கண் கூடே. புதிய கணவனுக்கும்,பின்னைய நாளில் அந்த பெண் மீது அவள் எழுத்தின் மீதான விமர்சனங்களால் சந்தேகம் குடிகொள்ளாது என்பதில் என்ன நிச்சயம்?!! அங்கு மீண்டும் அவளால் இன்னோர் பிரிதலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.அல்லது பேனாவை தூக்கி எறிந்துவிட்டு குடும்பம் கணவன் என ரண மனதுடன் வாழவேண்டி வருகிறது

சில பெண் எழுத்தாளர்கள் பிரிந்து தனித்திருந்து குழந்தைகளை கவனித்தக்கொண்டு எழுத்தை தொடர்பவர்களாக இருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது. ஆனாலும் பல மன உளைச்சலுக்கு ஆளாகிவருவது உண்மையில் தவிர்க்க முடியாததே. காரணம் தனது எழுத்தோடு தன்னால் ஒன்றித்து வாழமுடியவில்லையே என்கின்ற தவிப்பு கட்டாயம் இருக்கும். அதனால் அவளால் தொடர்ந்து நல்லதை சமூகத்திற்கு தரமுடியாதுள்ளது.

ஆண் எழுத்தாளன் ஒருவன்  ஒரு பெண் எழுத்தாளினி விட்ட அத்தனை தவறுகளையும் செய்தாலும் இந்த விமர்சகர் சமூகம் எதையுமே கூற தலைப்படாது. மனைவி சரியில்லை என கூறி அந்த பெண்ணின்மேல் பழியைசுமத்திவிடுவதையும் காணக் கூடியதாக உள்ளது. உண்மையில் ஒரு பெண் எழுத்தாளினியால் மட்டுமே சமூக நோக்கொடு பலதை தரமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன். காரணம் தாய்மைக் குண இயல்பு சமூகத்தில் குடும்பத்தில் அதிக அக்கறை உடையவள் பெண். ஆதலால் ஒரு பெண்ணால் மட்டுமே நிச்சயம் பல நல்லதை இந்த உலகத்திற்கு தரமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன். இத்தனை துன்ப துயரங்களில் இருந்து பெண் எழுத்தாளரை காப்பது எப்படி?!! ஆண்கள் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும், அவர்களிற்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும் அவர்களின் திறமையை வளர்ப்பவர்களாகவும் பெண்ணின் எழுத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவளைமேலும் பல படைப்புக்களை படைக்க செய்பவர்களாகவும். வேலைப்பகிர்தலை புரிந்துணர்வுடன் பகிர்பவர்களாகவும் அத்தனை தவறான சமூக விமர்சனங்களில் இருந்தும் அவளை பாதுகாத்து கொள்பவர்களாகவும் தைரியம் ஊட்டுபவர்களாகவும் இருத்தல் எத்தனை தேவை தெரியுமா?

அத்தோடு வாசகர்கள் தமது விமர்சனத்தை அந்த பெண் எழுத்தாளிமேல் திணித்து அவளின் குடும்ப அங்கத்தவரை கணவனை அவளின் குடும்பத்தை பிள்ளைகளின் எதிர்காலத்தை மொத்தத்தில் அவளின் வாழ்வை எழுத்தை கனவுகளை சிதைத்து அவளை முடமாக்காது தமது விமர்சனத்தை அவள் எழுதும் எழுத்தின் மீதானதாக வைக்கப் பழக வேண்டும். அப்போ தான் ஒரு பெண் எழுத்தாளினி நிலைக்க முடியும் பலதை சமூகத்திற்கு தரமுடியும். நாம் ஆண் எழுத்தாளரைப்போல் வாழ விரும்பவில்லை. எம்மை சமூக குடும்ப அக்கறையுள்ள உணர்வுள்ள எழுத்தாளர் என கூறுங்கள் அதுவே போதும். எம்மை முடமாக்க நினைத்தால் நான் மேலே எழுதிய சமூக சீரழிவுகள்தாம் அதிகம் தொக்கும். அல்லது பெண் எழுத்தாளரே இல்லாது அழிந்து போய் விடுவார்கள். ஒரு ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்பர். ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின்  தாய் தந்தை அன்பான சகோதரர் அன்பான ஆளுமை மிக்க கணவன் நல்ல பிள்ளைகள் உள சுத்தியோடு நல்ல விமர்சகன் . ஆனாலும் இவர்கள் எல்லோரிலும் பார்க்க திட்டித்தீர்க்கும் விமர்சகரே அதிக பங்கு வகிக்கிறார்கள். இன்னும் எழுது எழுது என கூறுவது அவர்களே.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


BEING A PART-TIME AGENT OF MALE CHAUVENISM IS BETTER THAN BEING A FULL-TIME PSEUDO-FEMINIST!   Latha Ramakrishnan

'Whatever you see, you only see what you want to see. Whatever you hear, you only hear what you want to hear.' -This is  how I interpret Mr.NadchaththiranChevinthianne's ,  observation that my voice is ultra-conservative. While calling my language- prosaic and of the old colonial English, he still makes use ofmost of my letter  to fill his rejoinder the remaining part  of which is filled up by datas! So much so, his letter has  no room  for his own  English to  compare and evaluate! Anyhow, I should thank him for giving my exact lines in his letter thereby giving the readers a chance to judge for themselves the truth and validityor otherwise of  what I,ve said. Who ever said that women don't suffer? We are talking of women writing poetry, and that too in small magazines, in particular. What Ms.Dhanya has said it is for her to clarify. Why should Mr.Chevinthianne butt in and speak on her behalf?

In small magazine circle, as things stand today, women, especially a select few are projected in various ways as the ultimate poets or the harbingers of feminist poetry. This glorification  with no compare and contrast study or critical evaluation of their  poetry understandably brings in adverse criticism and also an impartial critical evaluation of their poetry is very rarely coming  forth and even if it does it is nipped in the bud  with such clichés  as fundementalism , fascism etc. Magazines vie with one another to have the interviews of these  women writing poetry in their pages, but, the upcoming, promising poets of the opposite sex and their struggles in the literary field and in the social and psychological arena of survival are not given due attemtion or coverage. And, these select few women who write poetryfor whom the response is overwhelming to the point of keeping them on a pedastal(today when  even actresses come out with specs and sans make-up and don'thesitate to disclose their date-of-birth  Mr.Annakannan of Amudhasurabi  in his interview  of Ms.Malathy Maithri  had exclaimed that  the poet's first collection of poems has  the year of her birth in block letters in  the very first page which is very revolutionary!) , , and their poetry above criticism, the brickbats are but very few, that too from expected circles. I am not saying that they are not writing good poetry but I object to their being glorified as the ultimate poets and the pioneers of women poetry. And, also I object to the  constant sidelining of other poets, mainly their contemporaries of the opposite sex, who pen real good poems but don't get get  even a flicker of the limelight.

I know very well the difference between women writing and feminist writing and I don't have to be taught by the all-knowing Mr.Chevinthianne who knows clitoris, g-spot and what not! Let me remind him that a male doctor knows about them better than many a female. Be it eve-teasing,nay, torturing or rape and gang-rape, the men   close to the victim suffer greater stress than may be even a woman who is a stranger to the girlconcerned, or, who reads about the gruesome  happening in a newspaper.Take the case of the hostage crisis? What for the men are being held as captives? For their being men? Or, for their not being women? This is what I mean when I say that the power system of today oppress the men also in numerous ways.A man with real progressive outlook would never use such terms as Concubine. But, Mr.Chevinthianne uses. And, his implications are very clear. Being away fromboth Srilanka and India he can afford to use such phrases as concubine-keeper and career-womanizer without any second thought about the possiblerepercussions they would have  back home and down here. Will a woman President convert America from being malignant to being benign?  I am forwarding here the full text of Mr.Brammarajan's critical evaluation of Kutti Revathy's second collection "Mulaigal". He gives an open statement  that his views bear no moralisticconnotations.

To my knowledge his critical evaluations would always be ably substantiated (we may agree with it or not, that is a different issue) and  he wouldnever indulge in vicious, personal attack. And, we can just take them as one of the many view-points  and leave it at that instead of attributing ulteriormotives.( But, what I see as the politics of it is that when it comes to ms.malathy maithri why Kalachuvadu  is not coming forth with such  critical evaluation?) There was another critical evaluation of the said poem-collection of Ms.Kutti Revathi by mr.Rani-thilak , another upcoming poet. But, sadly by the time an interview of his appears he would well  be in his forties or even fifties. How maliciously Mr.Nadchaththiran Chevinthianne makes much ado about my usage of 'may be'. May be I am a woman- may be I am a eunach. It has no relevance to the issue at hand. But, decrying the usage  of 'may be' in one breath  the next instant he says' Anuradha Ramanan or even Latha Ramakrishnan may well fit into the first category, that of women  who do not challenge male-chauvenism.

Here, he uses the term 'even' in the same meaning as 'may be'. It is very clear that he has not read my pieces. Much as I hate to blow my own trumpet I am forced to do so, to  makethis friend see reason. Here is my poem which was published in the 1997 Dhinamani Kadhir   Special Issue on Literature. It is a widely read  magazine but therewas not a word of protest against it.

So, please think twice before claiming that Srilanka including its Tamil regions is more modernized than TamilNadu. Suchcomparisons and sweeping statements are unwarranted. When Anuradha Ramanan came into the field she was just 26, left  with her two girl children coming from amiddle class family and with  just an s.s.l.c or so to her credit  she had her share of struggles. And when she was writing akind of memoirs there was heavythreat from a politically strong woman social -worker. And, what a great  hue and cry her prize winning short-story 'Sirai' caused! It was about a young wifeof an orthodox Brahmin  raped and left in the lurch by the husband. As a punishment to the wrong-doer she goes and stays in the house of the rapist. He repentand when he dies she, seeing in him a better human being than her husband refuses to  go back to her husband even when the latter comes to take her withhim.

At that time also I wrote an article in "Kanaiyazhi' to the effect that it was wrong on the part of the author to have overlooked the fact that the husband was also a victim of the social set-up and  have turned a rapist,  a hero.With this piece of information I'm sure Mr.Chevinthianne  will have no hesitation  in calling me a full-time agent of male-chauvenism!  But, seriously speaking, I'm giving this piece of information to drive home the point that writers like Anuradha Ramanan cannot be waved away just like that as pro-men. It is just that they don't believe in the kind of feminism which thrive on decrying the whole lot of men as oppressors and fundamentalists. And, Ms.Sivasankari's very first short-story 'Avargal Paesattum" dealt with the horrible way a woman with no issues is treated in social functions and ceremonies.What about Vaasanthi, Usha Subramanian, Thilagavathi, Sivagami, Bama, to name a few? But, Mr.Nadchaththiran can give the name of Ambai alone. Though I have great respect for her writings still I can't but say that a good number of her writings do sound like aesthetically articulated slogans. All the same, in her detailed interview in "Panikkudam" authoured by Ms.Kutti Revathi    Ms.Ambai has this to say:-

And, I'm forwarding Ms.Bama's and Ms.Sivagami's observations on women writing poetry of the body and its sexuality.( courtesy; 'Pudhiya Puthagam Paesudhu' and Theera Nadhi, respectively). Just because they opine so is it right to call them advocates of male-chauvenism? Mr.Nadchaththiran has a lot to ponder over. And, in the field of Poetry has he ever cared to know who are all the other women writing and how long they have been in the field and what at all theywrite? Vathsala, Vaigaichelvi Renganayaki, Ilampirai, Kanimozhi , Ira.Meenakshi, Thirisadai, Vennila, Mu.Sathya , Sathara Malathy (In fact Sathara is the name of the place where she lives but then for many the name Malathy stands for Malathy Maithri), Thamizhachi, Azhagu Nila and many more.

And, many of them  are there in the field for long. But, in one of the recent issues of Pennae Nee, Ms.Kutti Revathi says 'first I was alone facing the assaults and brickbats -now there are Salma, Uma Maheswari and others----( the pages enclosed). But, Salma and Uma Maheswari have come into the field long before Ms. Revathi and how happy I felt when I came to know from her Ms.Salma's interview in Anandha Vikatan that she was the same Rajathi  penning such poignant poems in "Nigazh' and Suttum Vizhich chudar' and  who just disappeared from the scene one fine day, for it lent strength to my conviction that the creative urge in a person can never be suppressed or strangulated.  Is it not tampering with facts?  When they find fault with the male poets for not including their names in the pages of history that they pen in terms of the growth and evolution of neo-Tamil poetry  they should atleast have the courtesy to mention the names of their contemporaries and  predecessors , belonging to their sex. But, they make it a point to mouth such names as Sylvia Plath, Kamala Das, Emily Dickenson, Akhmatova (and their list is pathetically  short) and not a name from the Tamil land, for, then their claim that feminist writing in Poetry has begun with their advent. And, this is a blatant lie, to say the least.

And, the fact being that almost all the menfolk of the small magazine circle stood and stand by these women whenever they face the wrath of the vested interests ,many of these women poets make it a point to decry men as a whole. And  much of the protest  came as a result of  the ongoing campaign that this alone is poetry and women writing about their body alone are real poets and all the others are hypocrites. There is no need for me to prove my credentials to Mr.Nadchaththiran Chevinthianne. But, still I've written such a detailed letter to make him realize that facts are not to be over-simplified or tampered with. At this junture I  want to  refute the observation of some people like Poet Rajamarthandan that women began to pen poetry here, with the poems of the Srilankan women poets(Tamil) giving the required impetus. We have our own inner compusions and urge to turn us into poets, please. Before concluding, I would like to point out- please , let not Mr.Nadchaththiran Chevvinthianne think that I am saying this to be in his good books- I,ve never cared to  be in the good books of any- -thatMs.Thilagabama's condemnation of the poems in the recent issue of  Kalachuvadu is uncalled for. She is decrying almost all the sensitive poets of TamilNadu right from Kalapriya   to Shankararamasubramanian.And, hers is indeed the tone of a moralist. Her views that have appeared in Pennae Nee did not confine themselves to the poems alone .( the page enclosed).  And, what does she mean by that oft-repeated 'Ull mana Vakkaram'? Day in and day out we come across so many actual 'vakkarams' around us. Sukumaran's poem  which she  has decried is in fact a poignant piece dealing with a man's anguish in having to copulate with an unwilling spouse.

Sugirtharani's poems have powerful similes and images   such as-----'pasiya kattraazhai kooraai/virigindrana en viralgal-'koor theetiyakalaal/narukkappatta thoppull kodi poel/thuruthik kondirukkiradhu/nam udhadugalukkidaiyil muththam'------And, the very first line of her very first poem " Mayirgal siraikkaadha en nirvaanam/azhikkappaadha kaadugalaip poela/ gambeeram veesugiradhu',  to my readerly text is in fact a rebellious voice of protest against the gigantic hoardings and advertisements which glare at you from high above even in busy junctions and at traffic signals, showing young women with their arms lifted uu so showing their their thoroughly shaven, shining armpits  with jingles underneath to the effect that men want silk-skinned females. And, when the institution of marriage plays havoc in many a woman's lives by which a woman has to sleep with a man who is a hundred percent stranger to her and whose image of an ideal wife is built by these hoardings and such other things the physical andpsychological trauma of it all find a release in the lines of verses thus. And, I need not tell that the poems of Ms.Sugirtharani  is not to be taken as her own personal experience. Writer Jeyaprakasam has observed in one of her recent interviews that any irrelevant description is vulgar and obscene. Ofcourse, he was referring to Mr.J.P.Chanakya's short-story Aangal Padithurai. While his observation  is sound, even here we can say that irrelevance is a highly relative term. If many a reader get a 'readerly text' which is irrelevant, having pseudo-value, then the text and such texts will not  stand the test of time.Therefore, without even giving a chance but trying to nip in the bud itself such approaches in style and content  is not good for the multi-dimensional growth of literature. At the same time Mr.Perumal Murugan's display of thefoul saying  which he had come across on the inside walls of a public lavotary serves no purpose. The man who had written it there obviously didn't want to  getidentified. When that being the case why   lend some importance to it?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


லதா ராமகிருஷ்ணன் கட்டுரை தொடர்பாக....    - அநந்திதா (வினோதினி) - யாழ்ப்பாணம் -

நான் இலங்கை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு பெண்.  சிறு சஞ்சிகைகள் மட்டுமன்றி  தமிழ் இலக்கிய இணையத்தளங்களிலும் சஞ்சRIத்துப்படிப்பதுண்டு. 'பதிவுகள்' இதழில் வெளியாகியிருந்த திருமதி லதா ராமகிருஷ்ணன் நட்சத்திரன் செவ்விந்தியனுக்காக எழுதிய கடிதத்தில் இலங்கையையும் அதன் தமிழ்ப்பிரதேசங்களையும் பற்றிக்குறிப்பிடுகையில் இலங்கையையும் அதன் தமிழ்ப்பிரதேசங்களையும் தமிழ் நாட்டை விட நாகRIகம் குறைந்தவையென்கின்ற தொனிப்பட எழுதியிருக்கிறார். இது அவரது அறியாமையையே காட்டுகின்றது.

அவர் இலங்கை பற்றியோ அன்றி அதன் தமிழ்ப்பிரதேசங்கள் பற்றியோ என்ன தெரிந்து வைத்திருக்கிறார் அல்லது அறிந்து வைத்திருக்கிறார்?  இங்கே என்ன நடக்கிறதென்று அவருக்குச்  சிறிதளவேனும் தெரியுமா?  இலங்கைப்பிரச்சனையை வைத்துக்காசு பார்க்கும் திரைப்படங்களுருவாக்கும் இந்தியாவின் ஒரு பிரஜை தானேயவரும்?  எமது நாடும தன் தமிழ்ப்பிரதேசங்களும் தங்களுக்கேயுரிய ஏதோவொரு விதத்தில் நாகரிகமடைந்து தானிருக்கின்றன. தமிழிதழுக்குத் தமிழிலேயெழுத முடியாத ஒருவர் (அவரது கருத்துப்படி நாகரிகமடையாத இலங்கையிற் கூட தமிழ் எழுத்துருவை படியிறக்கஞ் செய்து அதை எழுத்துருக்கோப்பில் சேர்த்து தமிழில் கணனியில் எழுதி இணைப்பாக அனுப்புகிறோம்)  இலங்கை பற்றியும் அதன் தமிழ்ப்பிரதேசங்கள் பற்றியும் இந்த மாதிரித்தன்பாட்டில் விமர்சிப்பது கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.