- சுப்ரபாரதிமணியனின் ' சிலுவை ' நாவல்  300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர,  கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின்  நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.  சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று  தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல்  சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.  'சிலுவை'  நாவல் சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும்,  நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.  -


( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது.)

என்  'சிலுவை'  நாவல், என் நாவல்களின் பட்டியலில் இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள்

பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது.

கிறிஸ்துவ பாதிரியாக இருந்த எபிரேம் என்ற முதியவரை பனிரெண்டு ஆண்டுகளூக்கு முன் சேவூர் புளியம்பட்டி சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தித்தேன். பைபிளில் வரும் பல நிகழ்ச்சிகள் அந்த தேவாலயத்தின் உள்ளேயிருந்த சுவர்களில் சித்திரங்களாக வரையபட்டும் தூண்களாக அமைக்கப்பட்டு இருந்தன. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவர் அறிமுகமானார. அவர் ஒரு ஆய்வாளர் என்று சொல்லிக் கொண்டார். அவர் சோமனூர் என்ற பகுதியைச் சார்ந்தவர் என்ற வகையில் அவருடைய ஆய்வைப் பற்றி சொன்னார்.. நான் அவரின் சொந்த ஊரான சோமனூர் பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தை சார்ந்தவன் என்ற வகையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நானும் பேசினேன். அவர் ஆய்வாளர் என்ற வகையில் சோமனூர் பற்றி செய்திருக்கிற ஆய்வுகளையும் அவை கிறிஸ்துவ பத்திரிகைகளில் வந்திருப்பது பற்றியும் நிறைய சொன்னார். எனக்கு பெரிய நாவல்கள் எழுத வேண்டிய ஆசை இருந்தது ஆனால் அதற்கான களம் என் மனதில் இல்லை. என் நாவல்கள் எல்லாம் 300 பக்கங்களுக்குள் அடங்கிப் போகும் அளவில் இருந்திருக்கின்றன. இந்த சூழலில் ஒரு பெரிய நாவலை சோமனூரைக் களனாகக் கொண்டு கடந்து போன 300 ஆண்டு சரித்திரத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

நான் வாழ்ந்த மக்கள், நிலம் பற்றி நான் அதிகம் எழுதவில்லை என்னுடைய மூதாதையர்ளின் தொழில் சார்ந்தும் என்னுடைய பரம்பரை சார்ந்தும் அவர்களுடைய அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் நான் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எனவே சோமனூரை பற்றி எழுதுவது என்பது என் மூதாதையர் நிலம் சார்ந்தும், என் மூதாதியர் தொழில் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது என்று பட்டது .அந்த கிறிஸ்துவ பாதிரியார் ஏறத்தாழ ஒரு முதுமை இல்லத்தில் தான் இருந்தார். அவரிடம் இருந்து சில சேகரித்துக் கொண்ட தகவல்கள் நாவல்கள் எழுத உதவினார். பின்னால் அவர் வால்பாறைக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். வால்பாறை போன்ற இடங்களின் சீதோஷ்ணம் அவருடைய உடல்நிலை எப்படி ஒத்துவரும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஆனால் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருந்தேன் அவரை தேடி சென்ற ஒரு முறை அவர் இறந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஆனாலும் அவர் சொன்னபடி இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் தான் சென்று சேர வேண்டும் என்பதால் நான் அதை ஒரு நாவலாக்கும் பணியில் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த நாவலை நான் எழுதினேன்

இந்த நாவல் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுஅச்சிலும் புத்தகமாகவும் வருவது என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது நீண்ட நெடுங்காலமாக இதை எதிர்பார்த்து இருந்தேன். இடையில் வந்த கொரோனா காலம் இந்த தாமதத்தை அதிகப்படுத்தி விட்டது. அந்த வகையில் இந்த நாவல் என்னுடைய நூறாவது புத்தகமாகவும் அமைந்துவிட்டது.

கலாச்சார சரித்திரம் என்பது அரசியல் சரித்திரம் மற்றும் கடந்து போகும்ஆண்டுகளின் நிகழ்வுகளின் தொகுப்புகள் என்றபடி இருக்கும். இந்த கலாச்சார சரித்திர நிகழ்வுகளை ஒரு நாவலுக்குள் கொண்டு வருவது , அந்த மனிதர்கள் வாழ்க்கையை இதற்குள் வைத்துப் பார்ப்பது எனக்கு தேவையானதாக இருந்தது சோமனூர் என்ற பகுதியில் திப்பு சுல்தான் போன்றவரின் வருகை கிறிஸ்தவர்களின் முக்கிய இடமாக இருந்த சத்தியமங்கலம், கொடிவேரி போன்று சோமனூர் விளங்கிய விதம், நெசவாளர் குடும்பங்களின் நிலை, பஞ்ச காலங்கள், மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிய வித்தைகள் என்று தொடர்ந்தது, என் நாவல் பின்னால் இரண்டாவது பாகமாக சோமனூர் மற்றும் கோவை பகுதிகளில் தொழிற்சங்க வரலாற்றுப் பதிவுகளாவும் மாறிவிட்டது. இன்னொரு பகுதியாக நான் அவர்களை திருப்பூருக்கு கொண்டு போனேன்.

காரணம் 10 வயது வரை தான் அந்த செகடந்தாளி கிராமத்தில் நான் வசித்து வந்தேன், தண்ணீர் பிரச்சினை, மேல் சாதி ஆதிக்கவாதிகளின் வன்முறை காரணமாக திருப்பூருக்கு குடி பெயர்ந்த நெசவாளர் குடும்பங்களில் என் குடும்பம் ஒன்றாகிவிட்டது. எனவே என் நாவலைக்கு அங்கு நகர்த்துவதும் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்த அந்த நெசவாளி குடும்பத்தை சார்ந்த ஒருவனின் பொதுவுடமை இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளும் தலைமறை வாழ்க்கையும் என்று தொடர்ந்தது .பின்னால் திருப்பூரில் பின்னலாடை வளர்ச்சியும் நவீன யுகத்தில் மற்றும் உலகமயமாக்களில் தொழிலாளர்கள் நிலைமை என்று தொடர்ந்தது.

என் வாழ்க்கைஅனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டவற்றையும் சோமனூர், திருப்பூர். திருப்பத்தூர் என்று விரிவாக்கிக் கொண்டேன். நினைவுகளை, கலாச்சார பதிவுகளை பகிர்ந்து கொள்கிற அனுபவத்தில் இந்த நாவலை வடிவமைத்தேன், எனது பல படைப்புகளுக்குள் வந்த அமைந்திருந்த பின்னல் தொழிலும் விசைத்தறி தொழிலும் நெசவுத் தொழிலும் இயல்பாகவே இந்த நாவலுக்குள்ளும் வந்துவிட்டன சமீப காலம் வரை. நீண்ட கடல் பயணத்தில் அலைக்கடிக்கப்படுகிற படகு வாசிகள், படகு பயண வாதிகள் போல இருத்தலியல் சிக்கல்களும் வாழ்க்கை மீது மீதான நம்பிக்கையும் மாறி மாறி செயல்பட என் கதாபாத்திரங்கள் அமைந்து விட்டார்கள். அந்த வகையில் நினைவுகளையும் சரித்திரம் சொல்லும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிற வாய்ப்பும் இந்த நாவல் மூலம் ஏற்பட்டதும்

இந்த நாவல் அனுபவங்கள் போல் பல அனுபவங்களும் வாழ்க்கையை கடந்து போக செய்திருந்தாலும் ஒரு பெரிய நாவலையே பதிப்பித்தலில் இருக்கும் சிரமங்களால் இன்னும் ஒரு பெரிய நாவலை எழுதுகிற ஆசையும் இப்போதைக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கை பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டே இருக்கலாம். அது கலாச்சார இயல்புகளூம் மொழியும் மாறிக்கொண்டிருக்கும் தன்மையில் அதை செய்து கொண்டே இருக்கலாம் என்றுதான் எனக்கு இந்த நாவல் வெளியிட்டில் தோன்றுகிறது..

300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.

சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.

அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..நாவலை வெளியிட்ட

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நன்றி,

( ரூபாய் 1200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு) ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.