ஜனவரி 16- 18ம் தேதி வரை சென்னையில் நடந்த  சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 50 நாடுகள் பங்கேற்றன.பிரமாண்டமான ஏற்பாடுகள். துவக்க தினத்தில் 50 தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய திரைக் காட்சிகள் ஒலிபரப்பப்பட்டன. அதில் கொங்கு பகுதியை சார்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம். நாஞ்சில்நாடன்.பெருமாள்முருகன். சுப்ரபாரதிமணியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் .

இவ்வாண்டு மலேஷியா சிறப்பு கவுரவ  நாடாகக் கொண்டதால் மலேசியா எழுத்தாளர்கள், கலைஞர்கள் பெருமளவில் பங்கு பெற்றிருந்தார்கள்.50 எழுத்தாளர்களில் மறைந்தவர்கள் தவிர கலந்து கொண்டவர்கள் மூவர் மட்டுமே. அவர்கள் இமயம், மனுஷ்யபுத்திரன்,  சுப்ரபாரதி மணியன் ஆகியோர் கவுரவப்படுத்தப்பட்டனர்.

ஜனவரி 16- 18ம் தேதி வரை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள்  பல வெளிநாட்டு மொழிகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அந்த நூல்களின் பட்டியல் நீளும். தமிழக அரசு நியமித்திருந்த இலக்கிய முகவர்கள் ( லிட்டரரி ஏஜண்டுகள் ) தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து  வெளிநாட்டினரிடம் அறிமுகப்படுத்தி மொழிபெயர்ப்புத் திட்டத்தில்  கொண்டு வந்து சிறப்பு செய்தனர். திரு. இளம்பகவத் போன்ற உயரதிகாரிகளின் தலைமியிலான பல்வேறு குழுக்கள் சிறப்பாகச் செயல்பட்டன. எழுத்தாளர்கள் தமிழக அரசைப் பாரட்டினர்.
அப்படியான என் தேர்வு பெற்று கையெழுத்தான நூல்கள் கீழே :  

சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி . மொழிபெயர்ப்புத் திட்டத்தில் வெளிநாட்டினர் உடன் கையெழுத்தாகி உள்ள என் நூல்களின் விபரத்தை  என் இலக்கிய முகவர்  மின்ன்ஞ்சலில் தந்துள்ளார்:
Languages the MoUs have been signed:

1. The Coloured Curtain (சாயத்திரை)

Odia
Arabic
Marathi
Malayalam
Turkish

2. Strangers (அந்நியர்கள்)

Marathi
Malayalam
 
3. Faces of the dead (பிணங்களின் முகங்கள்)
 
Macedonian
Turkish

4. 1098

Macedonian
Malayalam

5. தோட்டக்காடு- மலேசியா பின்னணி short stories collection

Malay

6. Password (கடவுச்சீட்டு) மலேசியா பின்னணி நாவல்

Malay



ஒரு தகவலுக்காக:

திருப்பூர் இலக்கிய விருதுகள் 2023 விழா

21/1/24 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை
ஓட்டல் பார்ச்சூன் பார்க் ( ஐடிசி )
அனுப்பர்பாளையம் புதூர் , திருப்பூர்

விருது பெறுவோர் : திருவாளர்கள்

இரா.காமராசு/ பிருந்தாசாரதி / இயக்குனர் கஸ்தூரி ராஜா
அவைநாயகன்/ கணியன்பாலன்/ பூபதி பெரியசாமி/ ஹரணி /க.மாரியப்பன்/ ச.சுப்பாராவ்/ தி.குலசேகர்
அய்யப்பமாதவன்/ஆட்டனத்தி/ லதானந்த்/ மீனாசுந்தர்/
நெய்வேலி பாரதிகுமார்/ புன்னகை ஜெயகுமார்/ தி.துரைசாமி/ க.கோட்டீஸ்வரன் / இரா.அரிகரசுதன்/   
நான்சி கோமகன்/ தீபா சரவணன்/  
ஹேமி கிருஷ்/ சிங்கை மகேஷ்குமார்
 
0

தலைமை: கேபிகே செல்வராஜ் ( தலைவர் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் )

முன்னிலை : சுப்ரபாரதிமணியன்/ தூரிகை சின்னராஜ்/ அமுதஜீவன்

நன்றியுரை: கே பி கே. பாலசுப்ரமணியம்
 ( செயலாளர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் )

வருக.
திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/ கனவு

0

தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் சு. பிரகாஷ் (98436 43590)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.