18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்தபட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப்படுவது அவர்களி டம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண்டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவேயில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.

ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிகளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது.

சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங்களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கீழே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

இன்று குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நல்லொழுக்கம் போதித்துவந்ததை நிறுத்திவிட்டதுதான் என்று அவர் சொல்வதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்தாற்போல் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்:

‘பெற்றோரும் கண்ணை மட்டும் விட்டுட்டு எப்படி வேண்டு மானாலும் அடிங்க’ என்று ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள்’

இது என்ன விதமான சமூகவுணர்வு? ‘இதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பவர்களைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான்: ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்ற அளவில் பெரியவர்கள் ‘தோலுரிக்க’ப் பிறந்தவர்கள் தான் குழந்தைகள்? இது என்ன காட்டுமிராண்டித்தனமான கண்ணோட் டம்; அணுகுமுறை?

அடித்துதுவைப்பதால் குழந்தைகள் நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டுவிட மாட்டார்கள். ஏற்கெனவே குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்களுடைய நலன்கள் சமுக்க-அரசியல் ரீதியாய் புறக்கணிக்கப்படும் நிலையே பெருமளவு நிலவுகிறது. இதில் சமூகப் பிரக்ஞை- மனிதநேயம் தூக்கலாக இருப்பவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால் எப்படி? இதுதான் உண்மையில் அதி ஆபாசமான பேச்சு; ஆதிக்க மனப்பான்மை.

உண்மையான உலகத் தலைவர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்து தல், ஒழுக்கசாலியாக்குதல் என்ற பார்வையை ஒருபோதும் ஆதரித்த தில்லை. காந்தியடிகள் என்ன கூறுகிறார் பாருங்கள்:

தன் வாழ்நாள் முழுக்க குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை, பள்ளிப் பருவ வாழ்க்கையை இனிமையானதாய், பயனுள்ளதாய் ஆக்க பெரு முயற்சி எடுத்த மரியா மாண்டிஸோரி குழந்தைகளை அடிப்பது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்:

குழந்தைகளை அடித்தல் குறித்து மரியா மாண்டிசோரி

குழந்தைகளை அடிப்பது எந்த வகையிலும் அவர்களின் நற்பண்பை வளர்க்காது, மாறாக அவர்களின் சுயமரியாதையைக் குலைத்து எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மரியா மாண்டிசோரி உறுதியாக நம்பினார். தண்டனைகளுக்குப் பதிலாக, குழந்தைகளின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சுதந்திரம் மற்றும் சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுய-ஒழுக்கத்தை (Self-discipline) வளர்ப்பதே மாண்டிசோரி முறையாகும். 

ParentCo. +3

குழந்தைகளை அடித்தல் மற்றும் கண்டிப்பு குறித்து மரியா மாண்டிசோரியின் முக்கிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தண்டனைக்கு இடமில்லை

    பாரம்பரிய பள்ளிகளைப் போலல்லாமல், மாண்டிசோரி முறையில் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு உடல் ரீதியான தண்டனைகளுக்கோ அல்லது அபராதங்களுக்கோ (Punishments) எவ்வித இடமும் இல்லை. 

The Kavanaugh Report +1

    அடிப்பதோ, கண்டிப்பதோ குழந்தைகளிடம் கீழ்ப்படிதலை ஏற்படுத்தாது, மாறாக அது அவர்களின் உள்ளத்தில் கலக மனப்பான்மையையும், எதிர்ப்பையும் மட்டுமே உருவாக்கும். 

ParentCo. +2

சுய-ஒழுக்கத்தை வளர்த்தல்

    உண்மையான ஒழுக்கம் என்பது சுதந்திரத்தின் மூலமே வர வேண்டும். குழந்தைகள் தாமாக முன்வந்து பிறருடன் இணைந்து செயல்படும்போது ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். 

The Kavanaugh Report +1

    ஒரு குழந்தை தனது கவனத்தை ஒருமுகப்படுத்தி, ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, அதுவே அந்த குழந்தைக்கு ஒரு சுய-ஒழுக்கத்தை அளிக்கிறது. 

The Montessori School of the Berkshires +2

அன்பான வழிகாட்டுதல்

    குழந்தைகள் சவாலான நடத்தைகளை வெளிப்படுத்தும்போது, அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான முறையில் அதை வெளிப்படுத்த உதவ வேண்டும். 

Montessori Academy +1

    உதாரணமாக, குழந்தை கோபத்தில் அடிக்க வந்தால், "அடித்தல் தவறு. உனக்குக் கோபம் வந்தால் இந்த மெத்தையை அடிக்கலாம்" என்று மாற்று வழியைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் ஆற்றலை வழிநடத்த வேண்டும். 

Montessori Academy +1

நிபந்தனையற்ற மரியாதை

    "குழந்தைகள் என்பவர்கள் மனிதர்கள், அவர்கள் உரிய மரியாதைக்குரியவர்கள்" (Children are human beings to whom respect is due) என்பது மரியா மாண்டிசோரியின் மிக முக்கியமான பொன்மொழியாகும். 

Goodreads +1

    குழந்தைகளின் சுதந்திரமான செயல்பாடுகளில் பெரியவர்கள் தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்யக் கூடாது. அவர்களின் இயற்கை சார்ந்த செயல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870 – மே 6, 1952)

இத்தாலி யைச்  சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழு வதும் பயன்படுத்த துவங்கி னர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல்  1947 வரை  இந்தியாவிலும் இலங்கையிலும்  பணியாற்றினார்.

உலகெங்கிலுமுள்ள உளவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், கல்வி யாளர்கள் எல்லோருமே குழந்தைகள் மனிதகுலத்தில் எதிர்காலம். அவர்கள் அன்பும் அனுசரணையுமாக, அவர்களுடைய அடிப்படை உரிமைகளும், தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வாழவேண்டியது அவசியம் என்று அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார்கள். 18 வயதுக்குட் பட்டவர்கள் குழந்தைகள் என்ற பிரிவின் கீழ் வருகிறார்கள் என்ற அளவில் அவர்களுடைய பலதரப்பட்ட தேவைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவேண்டியது அவசியம். அடித்துத் தண்டித்தல் எத்தனை ஆகாததோ அதேமாதிரி தான் வார்த்தைகளால் இழிவுபடுத்தலும்.

பள்ளிகள், கல்விக்கூடங்கள் எல்லாம் பிரதானமாக மாணாக்கர்களுக் கானவை. ஆசிரியர் தொழில் என்பது வெறுமே பொருளீட்ட உதவும் வாழ்க்கைத்தொழில் அல்ல. அப்படி பாவிக்கப் படுவதும், அரசு ஆசிரியர் பணி கிடைக்க பெருந்தொகை தரவேண்டி யிருப்பதும், இன்னும் பல காரணங்களும்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியவை. சிறார்களுக் கான ஆபாசவலைத் தளங்களை, இணைய வழி விளையாட்டுகளை நடத்துபவர் யார்? பெரியவர்கள்தானே? அரசியல் பத்திரிகை என்ற பெயரில் துக்ளக் அரசியல்வாதிகளைப் பேட்டி கண்டு எழுதுகிறதே தவிர கல்வியாளார்களையோ, உளவியலாளர்களையோ, மாணாக்கர்க ளையோ எத்தனை முறை பேட்டிகண்டிருக்கிறது? விவாதத்திற்கு அழைத்திருக் கிறது?

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குரிய அளவுகோல்களில் ஒன்று அங்கு குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது. குழந்தை களை அடிப்பது, அவமரியாதையாக நடத்துவது, வீட்டிலும் சரி, கல்விக் கூடங்கள் போன்ற வெளியிடங்களிலும் சரி – சட்டரீதியாய் குற்றம். இந்தக் குற்றத்தை ‘ஒழுக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடா கத் திரும்பத்திரும்ப வலியுறுத்தும் துக்ளக் போன்ற பத்திரிகைகள் ‘இந்தக் குற்றத்திற்குத் துணைபோகின்றன. குழந்தைகளை அடித்துத் திருத்த வேண்டும் என்ற இவர்களின் பார்வையும் போதனையும் கொடுங்கோலர் களின் காட்டுமிராண்டித்தனத்தைவிடக் கொடுமையானது. இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர் சட்டரீதியான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.