பகுதி 2

ஹைலன்ஸ் கல்லூரி தனது 131வது வருடாந்தத்தை, கடந்த மாத இறுதியில் கொண்டாடிய போது, அதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த கலாநிதி சரவணகுமார், ‘ஹைலன்ஸ் மலையகத்தின் ஒரு முதுசம்’ என்ற அடைமொழியை அதற்கு சூட்டி ப10ரித்து நின்றார்.

உண்மையாக இருக்கலாம். கடந்த சில வருடங்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும், பீடங்களுக்கும் அனுப்பி வைத்த பெருமையை அது போற்றி வருகின்றது. இருந்தும், சென்ற கட்டுரை தொடரில் மிக தெளிவுற சுட்டிக்காட்டப்பட்டதை போன்று, 29 குற்றச்சாட்டுக்களை தன்னகத்தே சுமந்த, மலையக பணிப்பாளர் ஒருவராலேயே, அக்கல்லூரி இன்று அடியோடு சிதைக்கப்பட்டதாய் உள்ளது. (தற்சமயம், கணபதி கனகராஜ் அவர்கள் எடுத்த பெரு முயற்சியின் பலனாய், மேல்நீதிமன்றம் இப்போது தந்துள்ள இடைக்கால உத்தரவின் மூலம், அன்னாரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் பிறிதொரு விடயமாகும் - Writ/7/2023)

இருந்தும், கடந்த மாதத்தில் மாத்திரம் 500-600 ஆசிரியர்களை ஒரே தருணத்தில், இடமாற்றம் செய்து முடித்து, இன்னும் நான்கே நான்கு மாதங்களில் தமது இறுதி பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் நூற்றுக்கணக்கான மாணவ மணிகளை, விழிப்பிதுங்க பரிதவிக்கும் நிலைக்கு தள்ளியுள்ள பெருமை இவ் அதிகாரியையே சாரும் - (இன்னும் இப்பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கின்றது. ஹைலன்ஸ் அதிபர் நிலைமையை சீர்ப்படுத்த தன்னால் இயன்றதை முயன்று பார்த்தாலும் கூட).

ஆனால், விடயமானது, ஹைலன்சின் அத்திவாரமாக அமைந்திருந்த, சர்மேந்திரன் (உயர் இணைந்த கணிதம்) கிருபாகரன் (உயர் பௌதிகவியல்) போன்ற வெற்றிவாகை சூடியிருந்த ஆசிரியர்களை சடுதியாக இடமாற்றம் செய்து முடித்த வக்கிர ஆனந்தங்கள், பொதுவில் மலையக கல்வியை ஆழமாக சிதைத்து விட இக்கொடுஞ்செயலை புரிந்தவர்கள் குறித்த ஒரு அரசியல் பின்னணி கொண்டு, இயங்குவதாகவே தென்படுகையில், வடக்கை போலவே, மலையகமும் இன்று பரிதவித்து நிற்கும் ஒரு சூழலுக்குள் தள்ளிவிடப்பட்டுபோனதா என்ற கேள்வியே மேலெழ செய்கின்றது. (விரிவான தர்க்கங்களுக்குச் சென்ற கட்டுரை தொடரை பார்க்கவும்).

                    - கணபதி கனகராஜ் -

இருப்பினும், செய்திகளோ, நாளாந்தம் எமது ஊடக அணுசரனையில் வந்து குவிந்து, காது செவிடுபட கதறத் தவறியதாகவும் இல்லை:

“மன்னாரில் இருந்து நடைபவணி! மலையக மக்களின் இருநூறாம் வருட, வருகையை நினைவ10ட்டும் முகமாக நடத்தப்படும் நடைபவணியில் - ‘மலையக மக்களின் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை கொடு’ என்ற கோரிக்கையையும் இப்போராட்டக்காரர்கள் உள்ளடக்கி இருந்தனர். நடைபவணி, மதியம் மூன்று மணிக்கு மன்னாரை விட்டு ஆரம்பமானது”. (30.07.2023:தமிழ்வின் உள்ளிட்ட பல்வேறு செய்திகளின் தொகுப்பிது).

அதாவது, ஒரு முனையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிதைப்பு. அதுவும் எம்மவரின் கரங்களை கொண்டே மேற்கொள்ளப்படும் சிதைப்பு!.
அதாவது, தமது கண்களை தாமே குத்திக் கொள்ளும் நடைமுறை. மறுமுனையில், மன்னாரிலிருந்து புறப்படும் நடைபவனி! !! முக்கியமாக மலையக மக்களின் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை கொடு என்ற கோஷத்தையும் தாங்கி பிடித்தப்படி. இத்தகைய பின்னணியில் இலை மறை காயாக மறைந்து இயங்கும் அரசியல் மறை கரங்களின் தன்மைகளை வாதிப்பதே கட்டுரையின் இப்பகுதி முனையும் விடயமாகும்.

புலம் பெயர் அரசியலின் அடித்தளம்:

மிக பரந்த, அரசியலாலும்-மிக ஆழமான பொருளாதார அடித்தளத்தாலும் கட்டப்பட்டுள்ளதாய் கூறப்படும் எமது புலம்பெயர் அரசியலானது, அப்படியே தோற்றம் காட்டினாலும், இதனது சுயாதீன தன்மை என்பது, கூறுமாப்போல் கேள்விக்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. குறித்த இவ்அரசியல் மனோபாவம் அல்லது இவ் ஆழமான பொருளாதார அடித்தளம் ஆகிய இரண்டுமே தமது இருப்பிட நியதிகளால் கட்டுண்டு கிடப்பதாகவே உளது என வெளிப்படத் துவங்கியுள்ள உண்மை, சற்றே ஊன்றிக் கவனிக்கப்படவேண்டிய ஒரு சங்கதித்தான்.

ஒரு மிகச் சிறிய உதாரணமாக, லண்டனில் இருந்து இயங்கக்கூடிய எமது எந்த ஒரு சிறு நிறுவனத்தை எடுத்தால் கூட, அது லண்டனின் ஏனைய நிறுவனங்களோடு ஒப்பிடும் போது அவற்றின் மூலதனம் அல்லது முதலீடுகள் என்பன ஒப்பீட்டளவில் மிக மிக சிறியதாகவே இருக்கின்றது. உதாரணமாக, பொன்னியின் செல்வன் (1), பொன்னியின் செல்வன் (2) போன்றவற்றை படமாக்கிய லைக்காவின் அல்லிராஜை எடுத்துக் கொண்டால் கூட,   2015ம் பதிவின் படி, அவரது வருடாந்த வருமானம் 1.8 கோடி ஈரோவாகவே காணக்கிட்டுகின்றது.

இது போன்றே, ஏனைய புலம்பெயர் நிறுவனங்களின் நிதி நிலைமையையும் நாம் கணக்கிட்டு கொள்ளலாம். ஒரு வட இலங்கை தமிழரின் பார்வையில், இப்பணக்குவிப்பு என்பது, பாரிய ஒன்றாக பார்வைக்கு காட்சி தந்தாலும் இங்கிலாந்தின் பணக்குவிப்புகளுடன் இவை ஒப்பிட்டு பார்க்குமிடத்து பெருமளவிலான மூலதனக் குவிப்பு என் கொள்ளப்பட முடியாததாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால் லண்டனின் பெரும் மூலதனக் குவிப்புகளின் பின்னாலேயே, இச்சிறிய மூலதனக் குவிப்புகளும் இழுப்பட்டு செல்ல வேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆளாகின்றன.

அதாவது, தத்தமது ஆசை, ஆர்வம் என்பவை எப்படித்தான் கிளைபரப்பி இருந்தாலும், அவற்றை முழுமையாக வெளிப்படுத்த முடியாது, எல்லைப்படுத்தி அல்லது தாம் இழுப்பட்டு செல்லக்கூடிய அவ்அந்நிய மூலதனங்களின் அரசியலுக்கு முரண்படாத வகையில் தமது அரசியலை வடிவமைக்கும் நிர்பந்தங்களை இவை கொண்டவையாக இருக்கின்றன என்ற உண்மை மறக்கப்படலாகாது.

விடயம் இவ்வாறு இருக்குகையில், இச்சூழல் எழுப்பும் மறு கேள்வி, புலம்பெயர்ந்த இம்மக்களின் அரசியல் என்பது, இவ்வாறு பெரும் மூலதனங்களின் விதிகளில் சிக்குண்டு, அவற்றிற்கமைய, அமையக்கூடிய அவர்களது அரசியல் மனோநிலை அல்லது மனோபாவம் யாது என்பது கேள்வியாகின்றது.

தமக்கிடையே நெருக்கமான ஒரு வலைபின்னலும் உறவும் ஆழ இருந்திட வேண்டும் என்ற இவர்களின் ஆர்வம் அல்லது இந்த குறித்த மனோபாவம் என்பது தமக்கெதிராக விரோதம் ப10ண்டதாய் நிற்கும் அல்லது தம்மை ஒரு இரண்டாம்தர பிரஜையாய் தள்ளிவிட முனையும் புலம் பெயர் நாடுகளின் மேட்டுக்குடி மனோபாவத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் மனோபாவம் ஒன்றாகவே காணக்கிட்டுகின்றது.

“முப்பது கோடி மக்களின் சங்கமம்” என ஆர்ப்பரித்து எழக்கூடிய ஓர் எழுச்சியின் வகைப்பட்டதே இது என நாம் கூறிக் கொள்ளலாம்.

இதனுடன் இணைந்தாற்போல், தமது அரசியலை தீர்மானிக்க வேண்டியவர்களாய் இருக்கும் எம் மக்கள், தாயகத்தில் இருக்கும் தமது உடன் பிறப்புகள், தாம் அங்கே பட்ட வேதனைகளுக்கு, பலிவாங்க வேண்டிய தமது வெஞ்சினங்களுக்கு, சாதகமான முறையில், அல்லது அதற்கு தீண் போடுபவர்களாக இருக்க கடமை பூண்டவர்கள் என அவாவுறும் ஓர் அரசியல் அடித்தளத்தை மையமாக கொண்டு இயங்க விருப்பம் கொண்டவர்களாகவே காணக்கிட்டுகின்றனர்.

அதாவது, ஓர் அந்நிய நாட்டில் தனித்து போவதின் அபாயத்தை ஆழ உணரும் எம் மக்கள், தம்மை ஒரு நெருங்கிய குழுவினராக வடிவமைத்து கொள்ளும் அதே வேளை, மேற்படி ஆங்கிலேய ஆட்சியின் மேட்டுக்குடி தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழவும் தவறினார் இல்லை என்பது முதல் விடயமாகும். அதாவது, தமக்கென ஒரு  கலாசாரம்-நாகரிகம்-பண்பாடு- இவை ஒன்றும் காணப்படாதவிடத்து, அந்நியப்பட்ட-இன்னும் சரியாக கூறினால் விரோதப்பட்ட ஒரு சூழலில் தனித்து காலூன்றி நிற்கும் இவர்கள் - தாம் ஒரு சமூகமாக – தலை நிமிர்வதற்கான அடித்தளத்தை கட்டுவிக்க அவாவுறுகின்றனர். ஆனால் இவ் அவாக்களின் பின்னணியில்தான், அனேக சந்தர்ப்பங்களில் தமது பலிவாங்கும் மேற்படி உணர்வுகளும் தலைகாட்ட செய்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகின்றது. இதுவே, இங்கே காணக்கிட்டும் இரண்டாம் விடயமாகின்றது.

உதாரணமாக, யதார்த்தம் தோற்றுவிட்டாலும் அரசியல் ரீதியாக எனினும், எமது கனவிடை நாம் வாழ்வதென்பதே என்றென்றைக்கும் புனிதமானது என்றும் மரித்தோரின் நினைவுகளை தாம் என்றும் மறப்பதற்கில்லை-அவர்களின் நினைவுகளை சுமப்பதே எமது கடன் என்பது போன்ற கோரிக்கைகள், இலங்கையின் தற்போதைய நடைமுறை யதார்த்தங்களோடு நேரடியாக பொருந்தி வராது முரண்பட்டாலும் கூட இக்கோட்பாடுகள் உயரிய வலுவுடன் இயங்குதற்குரிய காரணம், இவற்றின் பின்னால் மேற்படி அந்நிய நாடுகளின் தூண்டல்களால் ஏற்படும் அரசியலும், கூடவே, காணக்கிட்டும் இந்த ‘வலைப்பின்னல் நெருக்கமும்’ இதனுடன் இணைந்தாற்போல் இருக்கக்கூடிய, கொடுமைகளுக்கு பலிவாங்கும் உணர்வுகளும் காணக்கிட்டுவதாய் உள்ளன என்பதில் சந்தேகம் கொள்ள முடியாது.

இருந்தும், இப்படி, இம்மக்களின் துயர்களை ஆதாயமாக கொண்டு இயங்கும் இக் கேவல அரசியலின் பின்னால், இதனை இயக்கி அல்லது இயக்க வைக்கும் நலன்கள் எவை எவை என்பது பரிசீலிக்கத்தக்க ஒரு வினாவாகவே தோற்றம் தருகின்றது.

2

புலம்பெயர் அரசியலின் தீவிர முகமானது, இன்று யதார்த்தங்களில் இருந்து கழன்று போன ஒன்றுத்தான் எனும் பட்டறிவு, இங்கே எமது தாயக மக்களிடை தீவிரமாக உணர தலைப்பட துவங்கி, தமிழ் மக்களின் அரசியலையும் அவர்களின் வாழ்நிலையையும் இன்று சிறுத்துப்போக செய்துள்ளது என்பதில் கேள்வியில்லை.

உதாரணமாக வட மாகாண சபையின் நிதிகளை மீண்டும் மத்திக்கு அனுப்பி வைத்து வடமாகாண சபையை வினைத்திறன் அற்றதாக்கும் கைங்காரியமும், மலையக கல்வி நிலையை மலையகத்தவரை கொண்டே சிதைப்பதும், பின்னர் மன்னாரில் இருந்தும் நடைபவணியில் மலையக மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியை கொடு என்று கோ~ம் போடுவதும், இது போலவே மிக அண்மையில் (நேற்று) நடந்தேறிய ஜனாதிபதியின் கலந்துரையாடலின் போது சுமந்திரன் தேர்தல் வேண்டும் என்று கூறுகையில், விக்னேஸ்வரன் ஐயா அவர்கள், கூடாது, முதலில் வடமாகாண சபை மேலும் வலிமை கொண்டதாக ஆக்கப்பட்டு, அதற்கு பின்னரே தேர்தல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று அடிபடுவதும், தெற்கிற்கு சிறப்பான தமா~hக இருக்கின்றது.

சுருக்கமாக கூறினால், நடைமுறை யதார்த்தங்களுக்கு சற்றும் பொருந்திவராத மேற்படி அரசியல் இயக்கம் மேற்படி, தமிழ் மக்கள் அரசியலின் தீவிர முகத்தாலா தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதே பரிசீலிக்கத்தக்க வினாவாகின்றது.

அதாவது, தமழ் மக்கள் அரசியலின் இத்தீவிர முகம் நாளும் உத்வேகம் கொண்டு செயற்படுகையில் இதற்கான உந்துதலை புலம்பெயர் அரசியலின் தீவிர முகமும் எடுத்து தருகின்றது என்பது சிறப்பான கேள்வியாகின்றது.

புலம்பெயர் நாடுகளில் காணக்கிட்டும் இத்தகைய அரசியலுக்கான வேர்களை தேடிப்பார்ப்போமானால், அவற்றை முன்பே குறித்தவாறு பின்வருமாறு நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம்.

    1. தமது சொந்த பொருளியல் நலன்கள் முன்வைக்கக்கூடிய எல்லைப்பாடுகளின் வரையறைகள் ஒருபுறம்.

    2. அந்நியப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள புலம்பெயர் மக்களின் நெருக்கமும் வலைப்பின்னலும் அதற்கான தேவைப்பாடுகளும் மறுபுறம்.

    3. இவற்றுடன் இணைந்தாற்போல், இறுதியில், தாங்கள் அல்லது தம்மவர்கள் முகங்கொடுக்க நேர்ந்த தாயக ஈன கொடுமைகளுக்கு பலிதீர்க்க வேண்டிய வன்மம் மறுபுறம்.

இம்மூன்று காரணிகளும் இணைந்த ஓர் புள்ளியிலேயே, சர்வதேச அரசியலின் இயங்குகைக்கான வெளியும் தனது இறக்கையை விரிப்பதாய் தெரிகின்றது.

அதாவது, ஒரு சர்வதேச அரசியலானது, ஒரு புலம்பெயர் அரசியலுடன் கைக்கோர்க்க கூடிய ஒரு புள்ளி இப்படியாகவே கட்டமைக்கப்படுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால் சர்வதேசம் முன்னெடுக்க கூடிய பொருளியல்-அரசியல் பூகோள நலன்கள்-யாவுமே எமது மக்களின் பிரச்சினைகளுடன் இரண்டறக் கலந்து ஆழ கையாளப்படுவதற்கான புள்ளியின் தோற்றம் இங்கேயே காணக்கிட்டுகின்றது. சில வேளைகளில் இந்நடைமுறை தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கக்கூடும்.

அதனாலோ என்னவோ, எமக்கு “இரு தொப்புள் கொடி உறவுகள் உண்டு” என்று இன்று கண்டுப்பிடிக்கும் நிலைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளதாகவே இருக்கின்றது. ஆனால், இவ்விரு தொப்புள்கொடி உறவுகளால், திருப்தியும் பெருமிதமும் பட்டுக் கொள்வதற்கு பதிலாக இவ்விரு தொப்புள் கொடி உறவுகளுக்கும் இடையிலான முரண் எப்படி எப்படி பரிணமிக்கின்றது-எப்படி எப்படி தோற்றம் கொள்கின்றது என்பதும்- மறுபுறத்தில் தென்னிலங்கை, தன் பங்குக்கு, எத்தனை தொப்புள் கொடி உறவுகளை மௌனமாக இன்று கட்டிக் காப்பதாய் உள்ளது-இவற்றின் தாற்பரியங்கள் யாவை-என்பவற்றையெல்லாம் அறிய நேரின், அது சொல்லுமாப்போல், எமது தமிழ் தேசிய அரசியலுக்கு வளம் சேர்ப்பதாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

3

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, விருப்பு-வெறுப்பற்று எமது சரிதத்தை பின்னோக்கி ஒருதரம் பார்ப்போமேயானால், இதே சர்வதேச அரசியல் என்பதின் பின்னணியிலேயே-இன்னும் சரியாக கூறினால்-அதன் ஒரு மௌனித்த-அல்லது மறைமுக அங்கீகாரத்துடனேயே-தமிழருக்கு எதிரான அத்தனை அநீதிகளும் எமது இலங்கை தீவில் இடம்பெற்று உள்ளது எனும் உண்மை எளிதில் மறக்கப்பட முடியாததாகின்றது.

மலையக மக்களை இங்கிலாந்தே, இலங்கைக்கு இட்டு வந்து தேயிலை, ரப்பர் பெருந்தோட்டங்களை உருவாக்கும்படி இருத்திவிட்டனர் என்பது போக , மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பிலும், அவர்களை நாடற்றவராய் ஆக்கிய நிகழ்விலும் இதே ஆங்கிலேயரின் மறைகரம் செயல்படவே செய்தது என்பதிலும் உண்மை புலப்படவே செய்கின்றது. இதனை இன்று நாம் வசதியாக மறந்துவிடல் ஆகாது என்பதனை எஸ். நடேசன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் தமது நூல்களில் ஆழ பதிந்துள்ளனர்.

இருந்தும், இவ் உண்மைகளை மறைத்து, ஒருதலைபட்சமாக, சிறிமா-சாஸ்த்திரி நாடுகடத்தும் ஒப்பந்தத்துடன் எல்லைப்படுத்தி அதனை மாத்திரம் தூக்கிபிடிக்கும் அரசியல் பார்வை சற்றே குறைவுபட செய்கின்றது என்பதிலும் சந்தேகமில்லை. இதிலும், அதாவது இத்தகைய ஒரு அரசியலிலும் புலம்பெயர் அரசியலின் தீவிர முகமானது எப்படி எப்படி தலைக்காட்டுவதாய் உள்ளது அல்லது செயற்படுவதாய் உள்ளது என நோக்குவதும் சுவாரஷ்யமானதே.

மொத்தத்தில், அன்றைய ஆங்கிலேய அரசியலின் தொடர்ச்சியாய் இருக்கக்கூடிய இன்றைய சர்வதேசத்து அரசியல் என்பது இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, முக்கியமாக, மலையக மக்களை பொறுத்தவரை-அவர்களின் உண்மை நலன்களுக்கு எதிராக இன்றுவரை செயல்படுவதாகவே காணக்கிட்டியுள்ளது எனும் உண்மை அழுத்தி கூறத்தக்கதாகவே இருக்கின்றது.

இத்தகைய ஓர் பின்னணியிலேயே, இன்று மன்னாரில் இருந்து நடைபவனியும் ஆரம்பமாகியுள்ளது என கூறப்படுகின்றது. அதாவது, மலையக கல்வியை ஒருபுறம் சிதைத்து, ஆனந்தமுறும் செய்கையும் மறுபுறம் நடைபவனியை ஆரவாரத்துடன் நடாத்தி வருகின்ற ஒரு வினோதமான அரசியலே இன்று காணக்கிட்டுவதாய் உள்ளது. அதாவது வடக்கின் வட மாகாண சபையை வினைத்திறன் அற்றதாய் ஆக்கிய அதே அரசியல் நடைமுறையின் செயற்பாடு இன்று மலையகத்திலும் காணக்கிட்டுகின்றதாகின்றதா-அப்படி எனில் இதற்கு ஓர் சர்வதேச அரசியலின் அனுசரனை அல்லது பின்புலம் உண்டா அல்லது அது புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்துடன் தாக்கம் கொண்டுள்ளதா என்பது போன்ற கேள்விகள் இன்று மேலெழுவதாக உள்ளது.

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.