அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். இன்று காலை தங்கள் பதிவுகளில் அவுஸ்திரேலியா இலக்கியவாதியும் ஓவியருமான திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுதிய தீக்குள் விரலை வைத்தால் - கட்டுரையில் - ரஷ்யா - உக்ரேய்ன் மோதலின் உறைபொருள் - மறைபொருளைப்பார்த்து அதிசயித்தேன். கிறிஸ்டி பல தகவல்களை சொல்லி, இந்த மோதலின் பின்னணியையும் விளக்கியிருக்கிறார்.

இக்கட்டுரை மிகவும் பயனுள்ளது. இது போன்ற ஆக்கங்களும் தங்கள் பதிவுகளில் வெளிவருதல் எமது வாசிப்பு அனுபவத்திற்கு பயன்தரும். கிறிஸ்டியின் ஆக்கம் பரவலான வாசிப்புக்குச்செல்லவேண்டும். இதனை உங்கள் முகநூலில் வெளியிடுங்கள். என்னிடம் முகநூல் இல்லை. அதனால் இந்த வேண்டுகோள். 1985 இல் நான் சென்று நேரடியாகப்பார்த்த சோவியத் தேசம் இன்றில்லை என்பது மிகுந்த வேதனை தருகிறது. தராஷ் செவ்சென்கோவ் என்ற மகாகவியை தந்த பிரதேசம் உக்ரேய்ன். எமது இலக்கிய நண்பர் கலாநிதி விதாலி ஃபுர்னிக்காவை தந்த பிரதேசமும் உக்ரெய்ன்தான். அவர்தான் பாரதியையும் ஜெயகாந்தனையும் ரஷ்யர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அன்புடன்
முருகபூபதி

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.