நவீன விஞ்ஞானி

ஈழத்துத்தமிழ் இலக்கியம் மிகவும் பெருமைப்படத்தக்கதொரு அறிவியற் பத்திரிகை 'நவீன விஞ்ஞானி'. வீரகேசரி நிறுவனத்தால் வார வெளியீடாக வெளியிடப்பட்ட பத்திரிகை அது. அறிவியலின் பல்வகைப்பிரிவுகளிலும் குறிப்பாக இரசாயனம், உயிரியல், கணிதம், பெளதிகம், புவியியல், விண்ணியல் , இலத்திரனியல் எனப் பல்வகைப்பிரிவுகளிலும் உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஆக்கங்களைப் போதிய விளக்கப்படங்களைத்  தாங்கி வெளியான பத்திரிகை இது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையை வாசித்தார்கள். 'நவீன விஞ்ஞானி'பத்திரிகையின் 'மாணவர் மன்ற'த்தில் இணைந்து கொண்டார்கள்.  அறிவியல் அறிஞரும், அறிவியற் புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையில் வெளியாகின.

நவீன விஞ்ஞானி

'நவீன விஞ்ஞானி' பத்திரிகையின் பிரதிகளை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். வாசிக்கும்போது புரிந்துகொள்வீர்கள் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகை ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை.

http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.