நண்பர் குகதாசன் மறைந்து ஐந்தாண்டுகளைக் கடந்து விட்டன. அவர் யாழ் இந்துக் கல்லூரிக் கனடாக் கிளையினரின் கலைவிழா மலரின் இதழாசிரியராக விளங்கிய சமயம் அவருடனான  அறிமுகம் ஏற்பட்டது. மலருக்குப் படைப்புகள் நாடி என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். பின்னர் அவர் பூநகரான் என்னும் பெயரில் கனடாவிலிருந்து வெளியான பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதி அனைவருக்கும் அறிமுகமானார். அரசியல் ஆய்வாளராக கனடாத் தமிழ் ஊடகங்கள் மத்தியில் நன்கறியப்பட்டவராகவும் விளங்கினார்.

அவரது மகளும் அவர் வழியில் ஊடகத்துறையில் புகுந்து இன்று கனடாவின் புகழ்பெற்ற செய்தி ஊடகங்களிலொன்றான CTV நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அவர்தான் அபி குகதாசன் (Abby Kuhathasan) என்று அண்மையில்தான் அறிந்தேன். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உபஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றிய செய்தியொன்றினை வழங்கிக்கிகொண்டிருக்கும் இணைய இணைப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகளைச் *சான்றோள் எனக்கேட்ட தந்தை"  என்று குகதாசன் இன்றிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். வாழ்த்துகள் அபி குகதாசனுக்கு.  இத்துறையில் மேன்மேலும் சிறந்திட,உயர்ந்திட வாழ்த்துகள்.

https://www.youtube.com/watch?v=Damcym3eMkM

*சான்றோர் பொதுப்பெயர். சான்றோன் என்பது ஆண்பால். 'சான்றோள்' என்பது பாவனையில் இல்லை. இருந்தாலும் இப்பதிவுக்காக உருவாக்கப்பட்ட சொல். கவிதையில் சில சொற்களைப்பாவிப்பதற்கு அவை வழக்கை மீறியவையாகவிருந்தாலும் கவிஞர்களுக்கு அனுமதி உண்டல்லவா. அவ்விதமே இச்சொல்லும் இங்கு கையாளப்பட்டுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.