தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வானியற்பியல் பற்றிய எனது ஐந்து அறிவியற் கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. அவை பற்றிய விபரங்கள்:

1. விளக்கங் காணும் வெளிநேரம் பிரபஞ்சம்! அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 15.9.1991)

2. பிரபஞ்சத்து மாயங்கள்! கரும் ஈர்ப்பு மையங்கள்! விண்ணிலே சூழ உள்ளவற்றைப் பொறிவைத்துப் பிடிக்கும் ஈர்ப்பு வலயங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 10.11.1991)

3. சூத்திரங்களினால் துலங்கும் பேரண்டச்  சூக்குமங்கள்! அச்சை விட்டு விலகிச் செல்லும் பிரபஞ்சக் குடும்பங்கள். - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 8.12.1991)

4. அதிசயமான அடிப்படைத் துணிக்கைகள்! பெளதிகக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தும் அடிப்படை உண்மைகள்!  விசைகளே! பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 2.2.1992)

5. அடர்த்தியுள் ஒளிந்திருக்கும் பிரபஞ்சச் சூனியங்கள்! ஆறுதல் அற்று விரையும் அண்டப் பொருட்கள்! - வ.ந.கிரிதரன் (வீரகேசரி - 5.4.1992)

எனக்குச் சிறு வயதிலிருந்தே வானியற்பியலில் மிகுந்த ஆர்வமுண்டு. அதற்கு முக்கிய காரணம் அப்பா. இரவுகளில் அவர் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அண்ணாந்து படுத்திருந்தபடி விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின் பேரழகில் மூழ்கியிருப்பார். அப்போது அவரது 'சாறத்தை'த் தொட்டிலாக்கி நானும் படுத்திருந்தபடி இரவு வானின் அழகில் மூழ்கிக்கிடப்பேன்.

1990இல் 'டொரோண்டோ பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தில் சிறப்பு மாணவனாக (Special Student) கணிதம், வானியற்பியல் துறைகளில் பாடங்கள் சில எடுத்தேன். ஏற்கனவே பட்டம் பெற்றவர்கள் சிறப்பு மாணவனாகச் சேர முடியும். அதற்கு முன்பே நவீன வானியற்பியல் துறையில் வெளியான பல நூல்களை வாசித்திருந்தேன். அவற்றில் நான் பெற்ற அத்துறை அறிவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்துடன் நான் எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றில் கரும் ஈர்ப்பு மையங்கள் (Black Holes) பற்றிய கட்டுரை 'டொரோண்டோ பல்கலைக்கழகத்தில்' நான் எடுத்த 'Evolving Universe' (பரிணாமமடையும் பிரபஞ்சம்) என்னும் பாடத்துக்காக நான் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை.

இக்கட்டுரைகள் நவீன இயற்பியலின் தூண்களான ஐன்ஸ்டைனின் 'சார்பியற் தத்துவக் கோட்பாடுகள்', கரும் ஈர்ப்பு மையங்கள் (Black Holes), அடிப்படைத்துணிக்கைகள், குவாண்டம் இயற்பியல், விரியும் பிரபஞ்சம் போன்றவற்றை உள்ளடக்கியவை. அவற்றைச் சாதாரண வாசகரும் அறியும் வகையில் எழுதப்பட்டவை.

அப்பொழுது வீரகேசரியின் ஆசிரியராகவிருந்தவர் முனைவர் ஆ.சிவநேசச்செல்வன் அவர்கள்.  அவருடன் எனக்கு எவ்வித அறிமுகமும் இருந்ததில்லை. இருந்தும் கட்டுரைகளை மிகச்சிறப்பாக வீரகேசரியில் வெளியிட்டார். கூடவே அவை பற்றி வெளியான வாசகர் கடிதங்களையும் வெளியிட்டார். அவருக்கு அதற்காக என் நன்றி எப்பொழுதுமுண்டு.இக்கட்டுரைகளை எழுதுவதற்காக நான் வாசித்த, பாவித்த அறிவியல் நூல்களின் பட்டியல்:

1. Frozen Star By George Greenstein
2. A Brief History of Time By Stephen Hawking
3. One Two Three infinity by George Camow
4. Relatively Speaking by Eric Chaisson
5. Black Holes and Warped Space Time by William J.Kaufmann
6. 'Stephen Hawking : quest for a theory of every thing ' By Kitty Fergusson

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.