நேற்றுக் காலை எனது ஆ(ஒ)க்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனகா கோவிட் -19  தடுப்பூசியினைப்பெற்றுக்கொண்டேன். கடந்த இருபது வருடங்களாக வருடா வருடம் 'புளூ'வுகான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு வருகின்றேன். அவை எவ்வித எதிர்விளைவுகளையும் தந்ததில்லை. இதுவும் அவ்விதமே அமையுமென்ற நம்பிக்கையுண்டு.  இதுவரையில் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படவில்லை.

தற்போது ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்தத்தடுப்பூசி தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அதே நேரத்தில் ஏற்கனவே இந்தத்தடுப்பூசி ஐரோப்பாவில் மில்லியன் கணக்கில் மக்களுக்குப் போடப்பட்டுள்ளதாக அறிகின்றேன். அங்கு பாவிக்கப்பட்ட இத்தடுப்பூசியை அப்பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்று தயாரித்ததாகவும் அறிகின்றேன்.

இங்கு பாவிக்கப்படும் இத்தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி. இதுவரையில் ஐம்பது மில்லியன்கள் வரையில் ஏற்கனவே பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான தடுப்பூசிகளுக்கு எதிர்விளைவுகள் ஏற்பட்டால், அவை மேலும் இத்தடுப்பூசியைச் சிறப்பாக உருவாக்க வழிவகுக்கும். அவ்வகையில் உலகம் முழுவதும் இத்தடுப்பூசியை ஏற்றுக்கொண்ட அனைவரும் ஒருவகையில் பயனான காரியத்தையே செய்கின்றார்கள். இத்தடுப்பூசியின் ஆரோக்கியமான விடயங்கள்: இது சாதாரண வெப்பநிலையில் பாதுகாக்க முடியும். விலையும் குறைவு. இதனால் அதிக அளவில் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். எனவே இதிலுள்ள குறைபாடுகள், எதிர்விளைவுகள்  ஒருவகையில் எதிர்காலத்தில் இதனை மேலும் செழுமைப்படுத்தவே உதவும்.

அகிலத்தைக்  காக்க  வந்த ஆ(ஒ)க்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ரா செனெகாவே நீ வா! வா! வா!
அழிக்க வந்த கோவிட்டே நீ போ! போ! போ!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.