'ஈழத்து நூல்களைப் பேசுவோம்' என்னும் முகநூற் பக்கத்தைப் பார்த்தேன். பாராட்டப்பட வேண்டியதொரு முகநூற் பக்கம். இப்பக்கத்தின்  முக்கியமான சிறப்பென்ன?

இலங்கையில் வெளியான பல்வகைத் தமிழ் நூல்களைப்பற்றியும் (புனைவுகள் அல்லது அபுனைவுகள்) அறிமுகம் செய்கின்றார்கள். புதிய , பழைய , அரிய நூல்களை அறிமுகம் செய்கின்றார்கள். இதன் மூலம் இந்நூல்களைப்பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துகின்றார்கள். நாமும் அவை பற்றி அறிய சந்தர்ப்பத்தினை வழங்குகின்றார்கள். இது உண்மையிலேயே வரவேற்கப்படத்தக்கதொரு விடயம்.

இப்பக்கத்தின் இன்னுமொரு முக்கியமான சிறப்பினையும் அவதானிக்க முடிந்தது. இப்பக்கத்தில் நூல்களை அறிமுகம் செய்தவர்களில் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் (ஆண்கள் & பெண்கள்) . அது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. இளைஞர்கள்  இவ்விதம் இலக்கியத் துறையில் ஆர்வத்துடன் செயற்படுவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அந்த வகையிலும் இப்பக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்விதம் இலக்கியத்துறையில் ஆர்வத்துடன் செயற்படும் இளைஞர்களை அறிந்துகொள்ள உதவுமொரு பக்கமாகவும் இப்பக்கம் விளங்குகின்றது.  உதாரணத்துக்கு இப்பக்கத்தில் நூல்களை அறிமுகம் செய்த இளைஞர்கள் சிலரின் பெயர்களை இங்கு அறிமுகம் செய்து வைக்கின்றேன்:

"ரிஷாங்கன் தயாபரன் , லுக்‌ஷாயினி வசீகரன், யோகராஜா கிருத்திகன், சித்திரவேல் அழகேஸ்வரன், கோபி பிரகாஷ், அனுஜன் தேவமலர் சபாநாயகன், தருமராஜா அஜந்தகுமார், மதுஷா சபாநாயகம், குலசிங்கம் வசீகரன், செந்தில்நாதன் சொபிசன், கோகுல ரூபன், பாக்கியராஜ் மிதுஷன், பாலச்சந்திரன் சயந்தன், சிவராஜா விஷாகணன், த.ஆரதி, அழகராஜ் பிரசாந்,  யதுசா விக்னேஸ்வரநாதன், அமிழ்தினி நக்கீரன், ஜிஃப்ரி ஹாசன், சாரங்கன், மாதவி உமாசுதசர்மா, செந்தில்நாதன் கிருத்திகன், பவனீதா லோகநாதன், சப்னாஸ் ஹாசிம், கிருஷ்ணபெருமாள் கிஷாந், பூவிலிங்கம் நேசகரன், விநோதினி உதயகுமாரன், தங்கராசா ஜீவராஜ், அருள்சீலன் ஹரிஷன், இந்திரகுமார் அரன், பேரின்பநாயகம் மயூரன், தேவதர்சன் சுகிந்தன், சுபாஷினி சிவதர்ஷன், யதார்த்தன், சில்வேஸ்டர் டார்வின், தர்சன் பரமேஸ்வரன், கேசவன் பிரண்வேசானந்தா, தெய்வேந்திரன் மிதிலைமாறன், அர்ச்சனா பாலச்சந்திரன், திருமருகன் அமிர்தலிங்கம், கண்ணதாசன் லம்போதரன், சபா தனுஷன், பொன்.இன்னிசைத் தமிழன், சிராஜ் மஷ்ஹூர், டிலோஜினி மோசஸ், துணைவியூர் கேசவன், சந்திரலேகா கிங்ஸ்லி, இரவிச்சந்திரன் கிருஷாந்தன், ஷாதிர், சர்வேஸ்வரன் வில்லரசன், தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ, மதிவதனி குருச்சந்திரநாதன், ராவணா தர்ஷன், இராஜரட்ணம் தனிஷ்ரன், சாரங்கன், சாரதாஞ்சலி மனோகரன், ரக்ஷானா ஷரிபுத்தீன் கோபிஹரன், சுஜன் சுகுமாரன்"

வாழ்த்துகள்.

'ஈழத்து நூல்களைப் பேசுவோம்' : https://www.facebook.com/noolarital/posts/328581542168504