எனது 'அமெரிக்கா' , சிறுநாவலின் திருத்திய பதிப்பு தனி நூலாக 2019இல் இலங்கையிலிருந்து மகுடம் வெளியீடாக வெளிவந்தது. இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் நியூயோர்க் மாகநகரத்தின் புரூக்லீன் தடுப்பு முகாம் அனுபவங்களை வெளிப்படுத்தும் ஒரெயொரு தமிழ் நாவல்.இதன் முதற்பதிப்பு தமிழகத்தின் ஸ்நேகா மற்றும் கனடாவின் மங்கை பதிப்பகங்களின் இணை வெளியீடாக வெளியான 'அமெரிக்கா' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருந்தது. அது வெளிவந்த ஆண்டு 1996.

இத்திருத்திய பதிப்பின் அட்டைப்படத்தினை வரைந்திருப்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் சி. குணசிங்கம் அவர்கள். 'அமெரிக்கா' தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்த எனது நாவல்களிலொன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்நூலை வாசிக்காதவர்கள் தற்போது எண்ணிம நூலகமான 'நூலக'த்தில் இதனை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: https://noolaham.net/project/802/80111/80111.pdf

* இந்நூலினை 'டொரோண்டோ'வில்  வாங்க விரும்புவர்கள் முருகன் புத்தகசாலையில் வாங்கலாம்.