ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு அரசியலில் பெண் ஒருவர் முக்கிய இடத்திலிருந்திருக்கின்றார் என்பதே வியப்பூட்டுவது. சாணக்கியம் நிறைந்த அரசியல் மதியூகியாக, அரசியல் ஆலோசகராக இப்பெண்மணி அன்றே விளங்கியிருக்கின்றார். அப்பெண்மணி யார்? இந்நேரம் நீங்கள் அவர் யாரென்பதை ஊகித்திருப்பீர்கள். அவர்தான் குந்தவைப்பிராட்டியார். முதலாம் இராசராச சோழனின் அக்கா குந்தவைப்பிராட்டியார். பொன்னியின் செல்வன் முதலாம் இராசராசனின் சகோதரியான குந்தவையார்தான் வாணர்குலத்து வீரனும், நாவலின் கதாநாயகனுமான வந்தியத்தேவனின் மனைவியாராகத் திகழ்ந்தவரும் கூட.

இவரைப்பற்றிய கல்வெட்டுகளில் 'ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்' என்றும் 'பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி' என்றும் இவர் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். முதலாம் இராசராச சோழன் தனது அக்காவான குந்தவைப்பிராட்டியார் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவன். தஞ்சைப்பெரிய கோயிலின் நடு விமானக் கல் மீது தான் கொடுத்தவற்றை வரைந்திருப்பதோடு அருகில் அக்கா குந்தவை கொடுத்தவற்றையும் வரைந்திருக்கின்றான். வந்தியத்தேவனைப்பற்றியும் தஞ்சைபெரிய கோயிற் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.

இவரைப்பற்றிய எனது 'வ.ந.கிரிதரனின் நேரம்' 'சான'லில் வெளியாகியுள்ள காணொளி:

https://www.youtube.com/watch?v=GKmT9gFAZZQ

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.