கிளிநொச்சி கண்டாவளை MOH பிரியாந்தினி கமலசிங்கம் அவர்கள் பற்றிய செய்தியினை முகநூல் முகநூல் வாயிலாக அறிந்தேன். அண்மையில் கிளிநொச்சியில் மாணவர்கள் பலருக்குப் பொய்யாகக் கண்ணில் குறைபாடு உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை விற்கவிருந்த செயற்பாட்டைப் பகிரங்கப்படுத்தியன் மூலம் மேற்படி மருத்துவ ஊழல் நடவடிக்கையில் ஈடுபடவிருந்தவர்களின் மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கின்றார் இந்த மருத்துவர். அது பற்றி முகநூலில் வெளியாகியிருந்த ஊடகச் செய்திகளுக்கான இணைப்புகளைக் கீழே தந்துள்ளேன்.

தற்போது இம்மருத்துவர் உண்மையை வெளிப்படுத்தியதற்காக அவர் மீது மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன. அடியாட்கள் அனுப்பப்பட்டு பயமுறுத்தப்பட்டுள்ளார். அதற்காக அவர் தொலைபேசியில் மிரட்டப்படுகின்றார். அதற்கான இணைய இணைப்பு (JVPNEWS.COM தளத்தில் வெளியானது)

இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய இம்மருத்துவரின் மேல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி( RDHS) அதற்குப்பதில் இம்மருத்துவரை இடமாற்றம் செய்வதற்கு அரசியல்ரீதியில் முயற்சி செய்வதாகவும் மேற்படி செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்ச்சூழல் நீங்கி அமைதி வாழ்க்கைக்கு நாடு திரும்பியுள்ளதாக எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இவ்விதம் இந்தியத் திரைப்படங்களில் வருவதைப்போல் ஊழல் அதிகரித்துள்ள நிலை வருத்தத்திற்குரியது. அதனால் பெண் வைத்தியர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை பாரதூரமானது. இது போன்ற நிலை ஒரு பெண் வைத்தியருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எவ்வித அச்சமுமின்றி மருத்துவர்கள், அரச அதிகாரிகள் தம் கடமைகளைச் செய்யும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் (கிளிநொச்சி பா.உ.உட்பட) , அரசியல்வாதிகள் இவ்விடயத்தை எவ்வகையில் அணுகியுள்ளார்கள் என்பதை அறிய ஆவல்.

இது பற்றி வெளியான மேலதிகத்தகவல்

தகவல் ஆதாரம்: JVPNEWS.COM