நான் எழுத்தாளர்களின் நூல்களுக்கு எழுதிய ஏழு அணிந்துரைகளை உள்ளடக்கிய மின்னூல் 'வ.ந.கிரிதரனின் அணிந்துரைகள்' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற்பதிப்பாக வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள்.

இம்மின்னூலில் அடங்கியுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' (பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய அணிந்துரை.
2. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை.
3. 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் தமிழினி ஜெயக்குமாரனின் நூலுக்கு எழுதிய அணிந்துரை. சிவகாமி பதிப்பக வெளியீடு.
4. தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக எழுதிய அணிந்துரை.
5. நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய அணிந்துரை. 'விஜே பப்ளிகேஷன்ஸ்' வெளியீடு.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை. -
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது) நாவலுக்கு எழுதிய அணிந்துரை.

மின்னூலை அமேசனில் வாங்க