'தமிழ் டைம்ஸ்'ஆசிரியர் இராசநாயகம் அவர்களின் மறைவைப்பற்றியும் , அவரது ஆளுமைச்சிறப்பு பற்றியும் முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. ஊடக தர்மம் பேணிய இதழாசிரியர்களிலொருவராக இவரை அடையாளம் காண முடியும்.

எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் செய்தது) 'தமிழ் டைம்ஸ்' ஜூலை 15,2001 இதழில் மீள்பிரசுரம் செய்திருந்தார். இணையத்திலிருந்து கண்டெடுத்து அதனைப் பிரசுரித்திருந்தார். தான் நம்பிய கருத்துகளுக்காக, அவற்றைச் சமரசம் செய்யாத ஒருவராக அவரை நான் இனங்காண்கின்றேன். அவர் இழப்பால் வாடும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.


The Experience of Diaspora to SriLankan Tamil Literary Oeuvre; Changing Landscape and Identities in Tamil Culture. இதனை எழுதியவர் Hildegard Anne Maria,

அவ்வப்போது இணையத்தைத் தேடிப்பார்ப்பதுண்டு. அவ்விதமானதொரு தேடலில் அகப்பட்ட ஆங்கில ஆய்வுக் கட்டுரையிது. சென்னையில் நடந்த ஆய்வரங்கலொன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்களின் புகலிட இலக்கியம் பற்றியது. The Experience of Diaspora to SriLankan Tamil Literary Oeuvre; Changing Landscape and Identities in Tamil Culture. இதனை எழுதியவர் Hildegard Anne Maria, MA English, St.Alosyius College, Mangalore, India

இணையத்திலுள்ள எனது படைப்புகளைப் பலர் தேடிப்படித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகின்றார்கள். உண்மையில் இது இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று. இக்கட்டுரையில் எனது படைப்புகளைப்பற்றியும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

One of the eminent writers, V.N. Giridharan showcases the lives of Srilankan people through his short stories. His exploration into the effects of asylum-seeking as well as immigration in Canada and the most vital and cherished components of traditional Tamil culture and Tamil homeland of Sri Lanka had received international attributions. His books discusses on the consciousness of linkages within the Sri Lankan Tamil diaspora so that, despite being numerically small and geographically dispersed, it has emerged as a vocal and influential force in shaping political developments in Sri Lanka. The diaspora’s economic, cultural, and political importance in relation to the Tamil community in Sri Lanka has also increased. (p. 496)

V.N. Giridharan reveals the altered fibre of a community that has tried to adhere rigidly to the traditional ideals of an idealized Tamil culture in a North American nation that physically serves as home, yet remains insistently alien. Recognizing the ambiguity of the boundaries of diaspora, he presents the plight of the diaspora which cannot still feel a homeland as a place that has to be imagined by nurturing a sense of communal distinctiveness, socially though not geographically. Under these circumstances, the imagination of “home”, however, does not have to take the shape of a particular community rooted in a particular sort of place, whereas modernist theories of nation conceptualize nations as a particular community rooted in a specific place, geography, or physical setting (Billig 1995).


என்னால் புத்தகங்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. வாசிப்பும், எழுத்தும் இல்லாத இருப்பில் ஒருபோதுமே என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று நான் எழுதுகின்றேன். வாசிக்கின்றேன்.

என் பதின்ம வயதின் இறுதிப்படியில் அவர் மறைந்து விட்டார். 77 ஆணிக் கலவரச்சூழலில் நானும் , இளைய தங்கையொருவரும் யாழ்ப்பாணத்தில் ஆச்சி வீட்டில் தங்கி நிற்கும் சூழலில், போக்குவரத்து நிலைகுலைந்திருந்த அச்சூழலில், அராலியிலிருந்து சுமார் எட்டு மைல்கள் நடந்து வந்து எங்களிருவரையும் பார்த்துவிட்டுச் சென்றார். படையினரின் அச்சுறுத்தல் மிகுந்திருந்த அச்சமயத்தில் கடற்கரை வெளியினூடு தனியாகச் சுமார் எட்டு மைல்கள் நடந்து வந்து சென்றிருக்கின்றார். அந்த அன்பை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு இழகும். அதன் பின் இரு மாதங்களில் அவர் எம்மை விட்டுச் சென்று விட்டார்.

அவரை நான் இழந்துவிட்டதாகவே கருதுவதில்லை. காரணம் எப்பொழுதும் என் வாசிப்பில், எழுத்தில் அவர் இருக்கிறார். என் ஆரம்ப எழுத்துகளை ஊக்குவித்தார். விமர்சித்தார். தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர். அதனால் சுதந்திரன் எப்பொழுதும் வீட்டிலிருக்கும். கூடவே அந்தனிசிலின் 'தீப்பொறி'யும் வெளியானபோது வாங்கினார். பின்னர் பதின்ம வயதுகளில் தமிழக அரசியலில் நாங்கள் எதிரும் புதிருமானோம். அவர் கலைஞரின் பக்கம். நான் வாத்தியார் பக்கம். 77 தேர்தலின்போது தமிழக முதல்வருக்கான வேட்பாளர்களான கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் வானொலியில் பேசச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்பொழுது தன்னைக்கூத்தாடி என்று எள்ளி நகையாடிய எதிர்கட்சியினருக்கு 'ஆம் நான் கூத்தாடிதான்' என்று குறிப்பிட்டு எம்ஜிஆர் ஆற்றிய உரையினை அவர் கலைஞர் பக்கமாக இருந்தபோதும் பாராட்டினார். நெஞ்சினைத்தொட்டதாகக் கூறினார்.
அவருக்குக் கிரிக்கட் நேர்முக வர்ணனையைக் கேட்பது மிகவும் பிடிக்கும், ட்ரான்சிஸ்டர் ரேடியோயில் இந்திய அணிக்கும் , ஆஸ்திரேலிய அணிக்குமிடையில் நடைபெற்ற நேர்முக வர்ணனையை அவருடன் நானும் கேட்டேன். சென்னை சேப்பாக்க மைதானமாகவிருக்க வேண்டும்.

இரவுகளில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் அவரது சாறத்தைத் தொட்டிலாக்கிப் படுத்திருந்து விண் சுடர்களை, விரையும் செயற்கைக்கோள்களைப் பார்த்துக் களித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவுள்ளன. ஒரு சமயம் அதிகாலைகளில் அப்போது வானில் காட்சி தந்த வால்வெள்ளியைப் பார்ப்பதற்காக எம்மையெழுப்பிக் காட்டுவார். அவையெல்லாம் பால்யபருவத்து அழியாத கோலங்கள்.
என் இருப்பிருக்கும் வரையில் உன் நினைவு இருந்துகொண்டேயிருக்கும் தந்தையே!கலைச்செல்வியின் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது. அதுவரை கழுத்துறையில் வெளியான ஈழதேவி சஞ்சிகை 58 இனக்கலவரத்துடன் நின்று போகவே, அதனைக் கலைச்செல்வியாகத் தொடர முடிவெடுக்கப்பட்டு , ஈழதேவி என்னும் பெயர் கலைச்செல்வியாக மாற்றப்பட்டு வெளிவரத்தொடங்கியது. முதலாவது இதழிலேயே இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பகுதியாக 'வளரும் எழுத்தாளர் பகுதி' ஆரம்பமாகியுள்ளது. 'வளரும் எழுத்தாளர் பகுதி'யில் வெளியான முதல் ஆக்கம் யாழ்நங்கையினுடையது. எழுத்தாளர் அன்னலட்சுமி ராஜதுரைதான் யாழ்நங்கை என்பது அனைவரும் அறிந்ததொன்றே.

அவரைப்பற்றிய அறிமுகத்தில் கலைச்செல்வி பின்வருமாறு கூறுகிறது: "இராமநாதன் கல்லூரி மாணவிதான் 'யாழ்நங்கை'. சற்று முயன்றால் சிறந்த கவிஞராகலாம். இக்கவிதை சென்ற சித்திரையில் எழுதப்பட்டது.)

'அன்னையின் ஆவல்' என்னும் அக்கவிதை தமிழன்னையின் ஆவலை விபரிக்கும் நல்லதொரு கவிதை. அந்த வயதில் அக்கவிதையின் சிறப்பு என் கவனத்தை ஈர்த்தது. அக்கவிதையைக் கீழே தருகின்றேன்:

 

'தரணியெலாம் முழக்கி மனம் மகிழ்ச்சியுறச் செய்வீர்!' என்று பாடசாலை மாணவியாகவிருந்த சமயம் யாழ்நங்கை இவ்வரிகளை எழுதினார். ஆனால் இன்று உலகமெலாம் தமிழ் கோலோச்சுகின்றது. 'தனியரசு புரிந்திடவே தமிழ் மாது என்னைத்' என்று தனியரசு பற்றியும் யாழ்நங்கை தனது கவிதையில் கூறியிருப்பது இலங்கையிலெழுந்த தனியரசுக்கோரிக்கை பற்றிய வரலாற்றில் முக்கியமானது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.