யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர் சோமசேகரசுந்தரம் விசுவலிங்கம் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
 
சோமசேகரசுந்தரம் மாஸ்டரின் மாணவர்களில் ஒருவனாகக் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்பில் எங்கள் வகுப்பு ஆசிரியராகவும், பிரயோக கணித ஆசிரியராகவும் இவரிருந்தார். இவர் மாணவர் எவரையும் கண்டித்து நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், அன்புடன் பழகுவார். எங்கள் காலத்தில் இவ்விதம் மாணவர்களுடன் மிகுந்த நட்புடன், அன்புடன் பழகிய ஒரே ஆசிரியர் இவராகத்தானிருக்கும். சில சமயங்களில் தன் உணர்வுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார். இவரை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது இவரது இந்த ஆளுமைதான்.
 
இன்னுமொரு விடயம்.. இவர் எந்தச் சிக்கலான கணக்கையும் எப்படியாவது தீர்த்து விடுவார். அதனைத் தீர்ப்பதற்குள் கரும்பலகை முழுவதும் சூத்திரங்களால் நிறைத்து விடுவார். அவற்றைப் பிரதிபண்ணுவதற்கு அவருடைய வேகத்துக்கு இணையாக நாமும் இயங்க வேண்டும். தவறினாலோ முறையாகப் பிரதி பண்ணத்தவறி விடுவோம். இவரது மறைவு பற்றிய செய்தி இவை அனைத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தன. இவர் பிரிவால் வாடும் அனைவருடன் நானும் துயரைப் பகிர்ந்துகொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.