அண்மையில் மறைந்த சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் , நண்பருமான எழுத்தாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடன் (ஜெயன் தேவா) ஆகஸ்ட் இறுதியிலும், செப்டெம்பர் ஆரம்பத்திலும் முகநூல் மெசஞ்சர் மூலம் உரையாடினேன். அதிலவர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போதுள்ள சூழலில் முக்கியமானவையாகப் படுவதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி மறைவதற்குப் பத்து நாட்கள் வரையில் சிறுநீரகச் சுத்திரிப்புக்குச் செல்லவில்லையென்றும், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மரண விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென்றும் அறிகின்றேன். அதன்பின்பே அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென்று  தெரிய வருகிறது.

அவருக்கும் எனக்குமிடையில் நடந்த அந்த முகநூல் மெசஞ்சர் உரையாடல் வருமாறு:

Aug 5, 2022, 7:29 PM
ஜெயன் என்ன நடந்தது?

Aug 6, 2022, 3:50 AM

Jeyan Deva
உங்களுக்கு தெரியும் தானே கிரி?  எனது சிறுநீரகப் பிரச்சனை கடுமையாகி விட்டது. 10 அடி தூரம் கூட நடக்க முடியவில்லை.

Aug 6, 2022, 3:42 PM

ஜெயன், நீங்கள் டயலிசிஸ் செய்கிறீர்களா? அங்கு மாற்றுச் சிறுநீரகத்துக்கான திட்டமேதுமில்லையா? இங்கு அதற்காக விண்ணப்பித்து வைப்பார்கள். கிடைத்ததும் பெற்றுக்கொள்வார்கள். உள்ளத்தை உறுதியாக வைத்திருங்கள். இங்கு எழுத்தாளர் குலேந்திரன் டயலிசிஸ் எடுப்பதுடன்  பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றார்.  https://www.youtube.com/watch?v=oV0qPOydAts  (ஏழுத்தாளர் குலேந்திரனும் அண்மையில் மறைந்து விட்டார்)

Aug 6, 2022, 4:08 PM

Jeyan Deva
2 வருடங்களுக்கு முன்பு Transplant register இல் என்னைப் பதிவு செய்தார்கள் கிரி . 3 வருட காலம் waiting என்றார்கள்.  ஒரு விதமான இனவாதம் காரணமாக என்னைத் திடீரென அந்த register இலிருந்து நீக்கிவிட்டார கள் . இப்போது எனக்கு வழங்கப்படும் டயலிஸிஸ் முறையில் கூட என் உடல்நிலையில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய லிதமாகவே செய்கிறார்கள். கடந்த 3 மாதங்களுக்குள் ஒரு சோமாலியனும் ஒரு தமிழரும் இறந்து விட்டார்கள். சோமாலியன் எனக்கருகில் தான் வழக்கமாக டயலிஸிஸ் செய்வான். தனது fistula வைத் திட்டமிட்டு infect பண்ணியதாக ஒரு நர்ஸிடம் சத்தம் போட்டான். அடுத்த 3 நாளில் இறந்து விட்டான். NHS செலவினத்தை மீதம் படுத்தும் Conservative govt இன் திட்டத்துக்கு சிறுபான்மை இனங்களின் மக்களே பலிகொள்ளப் படுகிறார்கள். எனக்கும் Liverpool NHS Trust business Manager க்கும் 2017 இல் ஏற்பட்ட சிறு வாய்த்தகராறு காரணமாக எனது உடல் நிலை திட்டமிட்டு பாழாக்கப் படுகிறது.

Jeyan Deva
லிவர்பூலில் இருந்து லண்டனுக்கு மாறிவிட முயற்சிக்கிறேன்.  அதை உடனடியாகச் செய்ய முடியவில்லை.  10 அடி தூரம் கூட நடக்க முடியவில்லை கிரி.

Aug 6, 2022, 10:56 PM
கேட்கவே வருத்தமாகவிருக்கின்றது ஜெயன். //2 வருடங்களுக்கு முன்பு Transplant register இல் என்னைப் பதிவு செய்தார்கள்// ஏனென்று கேட்டீர்களா?  இது பற்றி உங்கள் பகுதி கவுன்சிலர் அல்லது எம்பி. யாரிடமாவது முறையிடலாமே.

Aug 7, 2022, 12:37 AM

Jeyan Deva
Transplant register இல் பதிவு செய்த பின்னர் தான் ஒவ்வொரு வராக transplant surgery செய்வது தான் நடைமுறை கிரி. ஆனால் சரியான காரணம் எதையுமே எனக்குத் தெரிவிக்காமல் என்னை register இலிருந்து temporarily suspended செய்தது தான் ஏனென்று புரியவில்லை. அது தொடர்பாக எனக்கு ஒரு ஒற்றை வரிக் கடிதம் ஒன்றை மட்டுமே அனுப்பினார்கள்.

Jeyan Deva
MP அல்லது councillor செய்தாக வைத்திய சாலைகளின் சிகிச்சை நடைமுறைகளில் தலையிட முடியாது.  நாம் நீதிமன்றதில் pre- planned medical negligence case போடலாம். அதையும்  நிரூபிப்பது மிகவும் கஷ்டம. எனது மருத்துவத்தைக் கவனிப்பது  ******  (* இப்பெயரை முகநூலில் பாவிப்பதைத் தவிர்த்துள்ளேன்.) என்ற இங்கு பிறந்த பஞ்சாபின வைத்தியர். எனக்கு ஏற்படும் சிக்கல்களை அவர் ஒரு குறிப்பு எழுதலாம் ஆனால் பெரிதாக நர்சுகளின் நடவடிக்கைகளில் தலையிட வாய்ப்பு இல்லை.

Aug 7, 2022, 8:06 AM
மருத்துவத் துறையில் உள்ளவர்கள் தவறிழைத்தால் அவர்களைப்பற்றி முறையிடுவதற்கு வசதிகள் நிச்சயமிருக்கும். அங்கு உங்களை டயலிசிஸ் லிஸ்ட்டிலிருந்து நீக்கியது பற்றி நிச்சயம் முறையிடுங்கள் ஜெயன். அதே சமயம் உள்ளத்தை உறுதியாக வைத்திருங்கள். அது மிகவும் முக்கியம். நல்ல நூல்களை வாசியுங்கள்.

Aug 7, 2022, 12:38 PM

Jeyan Deva
மிக்க நன்றி கிரி. நலமாயிருங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.