எழுத்தாளர் முனைவர் சுனில் ஜோகி பதிவுகள் இணைய இதழில் எழுதிய ஆதிக்குடிவாசிகளான படகர்களை மையமாக வைத்து எழுதிய சிறுகதைகள் தற்போது 'ஓணி ' என்னும் தலைப்பில் சிறுகதைத்தொகுப்பாக வெளியாகியுள்ளது.  தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல மானுடவியல் துறைக்கும்  வளம் சேர்க்கும் கதைகள் இவை. நூலின் அட்டையில் கதைகள் பற்றிய எனது வாழ்த்துக் குறிப்பையும் பிரசுரித்துள்ளார்.

சுனில் ஜோகி அவர்கள் இது பற்றி அனுப்பிய மின்னஞ்சலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.  முனைவர் சுனில் ஜோகியின் முக்கியத்துவம் மிக்க இச்சிறுகதைகளுக்குக் களமாக இருந்ததில் பதிவுகள் மகிழ்ச்சி அடைகின்றது.  நூலை தமிழகத்திலுள்ள 'மலர் புக்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  நூலைப் பெற முனைவர் சுனில் ஜோகியுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

முனைவர் நூல் பற்றி அனுப்பிய தகவல்:

பெருமதிப்பிற்குரிய ஐயாவிற்கு வணக்கம். நீலகிரி படகர்கள் குறித்த முதல் சிறுதைத் தொகுப்பாகத் திகழும் "ஓணி" சிறந்த முறையில் வெளிவந்துவிட்டது. இந்நூலிற்குத் தாங்கள் அளித்த வாழ்த்துரை சிறப்பு வாய்ந்தது. இந்தத் தொகுப்பின் சாரத்தைச் சரமாக்கி கோர்த்ததுப் போன்று விளங்கும் தங்களின் வாழ்த்துரை இந்த நூலின் நோக்கத்தை பெருமளவில் பிரதிபலிக்கின்றன. இத்தொகுப்பில் வெளிவந்துள்ள எழு கதைகளைத் தங்கள் பதிவுகள் இணைய இதழில் வெளியிட்டு உதவியதோடு, இந்நூலிற்கு நல்லதொரு வாழ்த்துரையை அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றிகள் நாளும்.

Dr G.Suniljoghee
Assistant Professor
kumaraguru college of
Liberal Arts and Science,
saravanampatti
coimbatore