மேனாட்டில் அறிவியல் அறிஞர்கள் சாதாரண வாசகர்களுக்காக மிகவும் சிக்கலான அறிவியல் விடயங்கள் பற்றியெல்லாம் மிகவும் எளிமை8யான மொழியில், அனைவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் நூல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார்கள். உதாரணத்துக்கு ஸ்டீபன் ஹார்கிங்கின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' நூலைப்பற்றிக்கூறலாம்.  இது போன்றதுதான் பேராசிரியர் இரா. முரளி தனது 'சோக்ககிரடீஸ் ஸ்டுடியோ' 'யு டியூப் சானல்' மூலம் பகிர்ந்து வரும் காணொளிகள்.

கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் கோட்பாடுகள் பற்றி, ஆன்மிக, அறிவியல் கோட்பாடுகள் பற்றியெல்லாம் அவர் உருவாக்கிப் பகிர்ந்துவரும் காணொளிகள் இவ்விதமானவை. சாதாரண வாசிப்பும், அறிவியற் தேடலும் மிக்க ஒருவருக்கு இக்காணொளிகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தரக்கூடியவை. மார்க்சியம், நவீன உளவியல், நீட்சேயின் சிந்தனைகள், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், புத்தரின் சிந்தனைகள், பல்வகைப்பட்ட நவீன இலக்கியக் கோட்பாடுகள் (உதாரணத்துக்கு ஒன்றாக இருத்தலியற் சிந்தனைகள் பற்றிய காணோளியைக்  குறிப்பிடலாம்.)

இவரது காணொளிகள் எவருக்கும் மிகவும் இலகுவாகப் புரியக்கூடியவை. மிகவும் சிக்கலான தத்துவங்களைப் பற்றிய இவரது அறிமுகக் குறிப்புகள்  ஆழமானவை, ஆனால் எளிமையானவை.  தேடலும், வாசிப்பார்வமும் உள்ள எவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய யு டியூப் சானல் பேரா முரளியின் 'சோக்கிரடீஸ் ஸ்டுடியோ'

இவரது ''சோக்கிரடீஸ் ஸ்டுடியோ'  காணொளிகளைப் பார்க்க: https://www.youtube.com/@SocratesStudio/videos

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.