1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமைப்பு. இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, இளையோர் தொழிற்கல்வி ஆகிய துறைகளில் ஆறு உபகுழுக்களை அமைத்து இயங்கத்தொடங்கியுள்ளது. இதற்காக இவர்கள் இணையத்தளமொன்றினையும் உருவாக்கியுள்ளார்கள்.
 
இவ்வமைப்பு தற்போது மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தைப் பின்தங்கிய பிரதேசமாக அடையாளம் கண்டு அப்பகுதி மாணவர்களுக்கு உதவும் செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதுபோல வேறு பல திட்டங்களையும் தற்போது பொறுப்பேற்று நடைமுறைப்படுத்தி வருகின்றது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு 46 மாதம் ரூபா 750 வழங்கும் திட்டம், முன் பள்ளி மேலதிக உதவித்தொண்டர் ஆசிரியர்கள் 10 பேருக்கும் மாதம் ரூபா 3,500 வழங்கும் திட்டம், நன்கு படிக்கும் ஐந்து உயர்வகுப்பு (A/L) மாணவர்களுக்கு Tablet வழங்கும் திட்டம் மற்றும் வறுமையான குடும்ப நிலையில் வாழும் 26 பாடசாலைகளில் கல்வி கற்கும் 719 மாணவர்களுக்கு Pen Drive வழங்கும் திட்டம் எனப் பல திட்டங்களை மேற்படி மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திட்டம் உள்ளடக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒராயம் அமைப்பு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். இணையத்தளத்துக்கும் சென்று பாருங்கள். நிதிப் பங்களிக்க விரும்பினால் PayPal மூலமும் நீங்கள் பங்களிக்க முடியும். அவ்விதம் பங்களிக்க விரும்பினால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரியைப் பாவியுங்கள். மேலுள்ள மின்னஞ்சலுக்கு e-transfer மூலமும் நீங்கள் நிதியளிக்க முடியும், மேலும் எவ்வெவ்வகைகளில் பங்களிக்க முடியும் என்பதை அறிய விரும்பும் எவரும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
 
 
 ஒராயம் அமைப்பின் இணையத்தளம்: https://www.oraayam.org அதனுடன் தொடர்புகொள்வதற்குரிய மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.