- சுப்ரபாரதிமணியன் -

” பொழுதுபோக்கு அம்சங்களை மீறி வாழ்க்கையின் அனுபவப் பிரதிபலிப்புகளை திரைப்படங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களை வழிநடத்தும் நெறி முறையில் வெகுஜன திரைப்படத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது..உலகம் திரைப்படம் சார்ந்த கலைஞர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது. கல்வி, அரசியல், பெண்கள் முன்னேற்றம் போன்ற விசயங்களைத் திரைப்படங்கள் முன் நிறுத்தி வெளிவர வேண்டும். வங்காளமும், கேரளாவும் அந்த வகையின் முன்னோடிகளாக இருந்த காலம் மீறி தமிழகமும் இப்போது முன்நிற்பது ஆரோக்யமானதாகும். “ என்று திரைப்பட விழாவைத்துவக்கி வைத்துப் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராஹிம் ( இன்ஷா அல்லா ) குறிப்பிட்டார்.

திரைப்பட விழாவில் இயக்குனர் சென்னை ஆர் பி அமுதன்  பேசுகையில்        “  ஆவணப்படங்கள் நடைமுறை சமூகத்தின் மனச்சாட்சியின் குரல்களாக இருப்பவை. கற்பனைகலப்பு இல்லாதவை. சக மனிதனோடு உரையாடும் தன்மை கொண்ட அவை தத்துவார்த்தரீதியான உரையாடலையும் முன்வைப்பவை.  சமூகவியலைப் பதிவு செய்யும் பொறுப்பு ஒவ்வொரு திரைப்படக்கலைஞனுக்கும் உள்ளது “  என்றார்.

உலகப் புகழ் பெற்ற  குறும்படங்கள்/ ஆவணப்படங்கள்/ உலகத்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் : ” இன்றைய தலைமுறை  கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக பொறுப்புணர்வுகளைத் தரும்  அநீதியோடு சமரசம் செய்யாத  எழுச்சி மிகு உணர்வுகளைத் தரும் நல்ல திரைப்படங்கள்  உரூவாக்கப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது., அதற்கு திரைப்படம் சார்ந்த முறையான ரசனையும் கல்வியும் தேவைப்படுவதை உணர்ந்தே இவ்வகைத் திரைப்பட விழாக்கள் நட்த்தப்படுகின்றன” என்றார்

திருப்பூர் கனவு திரைப்படச்சங்கம் இந்த திரைப்பட விழாவை நடத்தியது . ஏஞ்சல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் தினகரன், கல்லூரி நிர்வாகி வினோத்குமார் ஆகியோர்  கலந்து கொண்டனர். விவாதங்களில்  எழுத்தாளர்கள் துருவன் பாலா, வழக்கறிஞர் சாமக்கோடாங்கி இரவி, உதவி இயக்குனர் பி ராஜ் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். .விழாவை எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன். , திரைக்கதையாசிரியர் கதிர்,  குறும்பட இயக்குனர்கள் கவுசிக், வெங்கட், ஜியோ உள்ளிட்டோர் ஒருங்கிணைத்திருந்தனர்

திரையிடப்பட்ட சில படங்கள் பற்றி

1. திருப்பூர் : “ டாலர் சிட்டி “ ஆவணப்படம்
இயக்குனர் ஆர்.பி. அமுதன் .77 நிமிடங்கள்,, & * அமுதனின் புதிய ஆவணப்படம் : என் சாதி

2. : இன்ஷா அல்லாஹ்.-முழு நீளத் திரைப்படம் ( இதுவரை திரையரங்கில் திரையிடப்படாதது) 25 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றது  திருப்பூர் தயாரிப்பாளர் : சாகுல் ஹமீது.
திரைக்கதை & இயக்கம்: பாஸ்கரன்.
கதை: தோப்பில் முகம்மது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.