- சுப்ரபாரதிமணியன் -

தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 78. முதல் நூலை இப்போது வெளியிட்டுள்ளார் நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார்.   .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும்  27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் முதல் கவிதை நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ). எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் உள்ளார். தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு   . என் முகவரி இவரின் 78வயதில் வந்திருக்கும் முதல் நூல் . அதுவும் கவிதை நூல்.

வயது : 78  ( எழுபத்தி எட்டு )
வேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர்
படைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960
புரட்சித் தலைவி சாதனை மலர் 2005
மெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு )
எனது முகவரி ( கவிதை தொகுப்பு )
வீடு : சொந்த வீடு இல்லை.,  வாடகை
வீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது
முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு
தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில்  திருப்பூர் 641 602 ( 77089 89639 )

78 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.

திருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர்.

முண்டாசுப்பட்டி,  சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர்.

இரவிக்குமார் ( திரைப்பட இயக்குனர் ) : என் முகவரி ( கனவு )

மதுராந்தகன் எனக்கு எப்போதும் ஜெயபால் ஐயா தான். அவர் வயதைப்பற்றி குறிப்பிட்டால் சிந்தனைக்கு ஏது வயது என்பார் அந்தவகையில் ஆர்மும் தேடலும் குன்றாத இளைஞரவர்.

எப்போதும் கணக்கிடலங்கா செயல்திட்டம் அவரிடம் இருக்கும், இந்த வாழ்வை மகத்தானபடி செய்துவிடவேண்டுமென்று குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து திரிந்தவர். எந்த ஒரு விஷயத்தை பற்றியும் மனதில் பட்டதை பாசாங்கின்றி ஒரு எள்ளளோடு தெரிவிக்கும் இவரது சுபாவம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுவே பலருக்கும் இவர்மீது விமர்சனத்தை உண்டாக்கிவிட்டது. அதையெல்லாம் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளமாட்டார்.

இந்த நெடியவாழ்வினூடே அவர் அடைந்த மகிழ்வுக்கு இணையாக ஏக்கம், கோவம், ஆசை,நிராசையென எல்லாமே இந்த தொகுப்பில் கவிதைகளாக பதிவாகியிருக்கிறது. இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் சிலவற்றை முதலில் என்னிடம்தான் காட்டியிருக்கிறார். வாழ்வின் கசடுகளுக்கு மத்தியில், அடைந்துவிட சாத்தியமில்லாதவையென்று எதுவுமில்லை என்ற நம்பிக்கையோடு அதை நிந்திக்கடக்கமுயலும் எளிய மனிதனின் அவன் அனுபவங்களின் கூட்டுகலவைதான் இந்த தொகுப்பு.

பாவம் படைப்பிலக்கியவாதிகள் 2

கிருஷ்ணசாமி வயது82. ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர்..நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார்.  ஓய்வு பெற்றபின் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், செய்திகள், சிரிப்புத்துணுக்குகள், ஜோக்ஸ், துணுக்கு கவிதைகள் என் எழுதி பொழுதைப் போக்குபவர். சென்றாண்டில் இதம் மூலம் 30000 ரூபாய் சன்மானம் வந்ததாகச் சொன்னார் . வருடாவருடம் 25,000க்கு இந்த வருமானம் குறையாது,, கொரானா காலத்தில் வெகுஜனப்பத்திரிக்கைகளும் மின் இதழ்களாக மாறிவிட்டதில் வருத்தம். கொரானா தொற்று தினசரி பத்திரிக்கையால் கூடப்பபரவலாம் என்று தினசரி வாங்குவதை நிறுத்தி விட்டார். வாரம்ஒரு முறை அவரின் சிகிச்சைக்கென்று வரும் பிசியோதெரபிஸ்ட் வெவ்வேறு வீடுகளுக்குச் செல்வதால் தொற்று பயத்தால் வர வேண்டாம் என்று சொல்லி விட்டு தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க்கும் வேலையைச் செய்து வருகிறார்.  கொரானா காலம் முடிந்த பின்  நிறைய சன்மானம் தரும் துணுக்கு எழுத்தாளர் வேலை மீண்டும் கிடைக்கும் என்ற கனவில் உள்ளார் . ஒரு படைப்பிலக்கிய வாதி தன் படைப்புகள் மூலம் 30.,000 ரூபாய் பெறும் காலம் தமிழில் வரவேண்டும். குறைந்த பட்சம் ராயல்டி மூலமாவது  கிடைக்கும் என்ற கனவு கூட பழங்கதையாகிவிட்டது

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.